லண்டன்: இஸ்ரேல் குடியேற்றக்காரர்களுடன் இணைந்து செயல்படக் கூடாது என்று பிரிட்டீஷ் அரசு தன் வர்த்தகத் துறை நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் அளித்துள்ளது. குடியேற்றத்தை ஆதரிக்கும் நடவடிக்கைக்களுக்கு துணை போகக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
குடியேற்றக்காரர்களுடன் இணைந்து திட்டங்களை நிறுவனங்கள் துவக்கினால் பிரிட்டீஷ் அரசு ஆதரிக்காது. சட்ட ரீதியாக இஸ்ரேலுக்கு சொந்தமில்லாத பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடக்கூடாது.
அப்பிராந்தியத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளிலும் பிரிட்டீஷ் நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது. குடியேற்றப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதை ஊக்குவிக்காமலிருக்க இத்தகைய பொருட்கள் மீது தனியாக லேபல் ஒட்ட வேண்டும் என்றும் பிரிட்டீஷ் வர்த்தகத் துறை வலியுறுத்தியுள்ளது.
Source: Thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment