Sunday, December 15, 2013

இந்திய வங்கிகளில் கேட்பாரற்ற தொகை எவ்வளவு?

 கணவரோ மனைவியோ இறந்துவிட்ட பின யாராலும் உரிமை கோர இயலாத நிலையில் பெருந்தொகை வங்கியில் இருப்பில் உள்ளதாகவும்,
அதை எடுக்க உதவும்படியும் உங்களுக்கு நைஜீரியாவிலிருந்து அல்லது ஏதேனும் ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்து மின்னஞ்சல்கள் வந்திருக்கிறதா?

உண்மையில் இவ்வாறு இந்தியவங்கிகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் தொகை ரூ. 3,652 கோடி என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். கடந்த 2012 டிசம்பர் இறுதி நிலவரப்படி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாத நிலையில் உள்ள வைப்புத் தொகை ரூ.3,652 கோடியாக உள்ளது. இவ்வாறு 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் முடங்கியிருக்கும் எல்லா கணக்குகள் பற்றிய விவரங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகள் மத்திய மைய (ரிசர்வ்) வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
பொதுத் துறை வங்கிகளில் ரூ.3,237 கோடி கேட்பாரற்று கிடக்கிறது. தனியார் வங்கிகளில் ரூ.340 கோடியும், வெளிநாட்டு வங்கிகளில் ரூ.75 கோடியும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள கேட்பாரற்ற தொகையில் 15% பாரத ஸ்டேட் வங்கியில் இருக்கிறதாம். தனியார் வங்கிகளில் உள்ள 340 கோடிகளில் ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் 101 கோடி கேட்பாரற்று உள்ளதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza