மொராக்கோ: இஃவானுல் முஸ்லிமீனை தொடர்ந்து எகிப்தின் இதர எதிர்கட்சியினரையும் போராட்ட எதிர்ப்புச் சட்டம் பிரயோகித்து ராணுவம் ஒடுக்குவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது.
ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய ஏப்ரல் 6 இயக்கத்தின் தலைவர் முஹம்மது ஆதில் உள்ளிட்ட 6 பேரை ராணுவம் கைதுச் செய்தது. அவர்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த ராணுவம், ஆறுபேரையும் கடுமையாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் ஆதில் தவிர 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.
அலா அப்துல் ஃபதாஹ், அஹ்மது மஹர், அஹ்மத் தவ்மா ஆகிய மனித உரிமை ஆர்வலர்களையும் ராணுவம் புதிய சட்டங்களின் பெயரால் ஏற்கனவே கைதுச் செய்திருந்தது.
நீதியும், பாதுகாப்பு ஏஜன்சியை நவீனப்படுத்துவதையும் கோரும் நபர்களை ஒடுக்கும் தந்திரமே மனித உரிமை ஆர்வலர்களை ராணுவம் சிறையில் அடைக்கும் நோக்கம் என்று மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் இயக்குநர் ஸாரா லேவிட்ஸன் கூறுகிறார்.
இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக கடுமையான அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்ட உள்துறை அமைச்சகம் தற்போது இடதுசாரி மனித உரிமை ஆர்வலர்களை குறி வைப்பதாகவும், விமர்சகர்களை பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற செய்தியை மனித உரிமை ஆர்வலர்களை ஒடுக்குவதன் மூலம் ராணுவ அரசு அளிப்பதாகவும் லாரா எச்சரிக்கிறார்.
அலா அப்துல் ஃபதாஹ், அஹ்மது தவ்மா ஆகியோரை அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டி கடந்த நவம்பரில் எகிப்திய ராணுவ சர்வாதிகார அரசு கைதுச் செய்தது. போலீஸ் மற்றும் ராணுவத்தின் நடவடிக்கைகளை அப்துல் ஃபதாஹ் கடுமையாக விமர்சித்து இருந்தார். போராட்ட எதிர்ப்புச் சட்டத்தின்படி கைதுச் செய்யப்பட்டவர்களிடமிருந்து கடுமையான அபராதத்தையும் ராணுவம் வசூலிக்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment