Tuesday, April 30, 2013

தலைகுனிந்ததோ பெண்! இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்..............!


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த இரண்டு நாட்களாக ஜீதமிழில் கண்ட உறைய வைக்கும் சம்பவம் என்னை இன்று இந்த உண்மை நிகழ்வை எழுத தூண்டியது..இது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நல் நோக்குடன்....இன்றைய சூழ்நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் முன்னேறி வருகின்றனர் என்பதில் ஒரு விதம் மகிழ்ச்சி இருந்தாலும், மறு புறம் அது பல விதங்களில் தீயதை தருகிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

Monday, April 29, 2013

இராமநாதபுரத்தில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்!


இராமநாதபுரம் : வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் 26.04.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பணிமனை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்டின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இபுராஹீம் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜ்மல் ஷரீப் தொகுத்து வழங்கினார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஹசன் அலி மற்றும் சலீம் , SDPI மாவட்ட செயலாளர்களான செய்யது இபுராஹீம் மற்றும் அப்துல் ஜலீல் , திருவாடனை தொகுதி தலைவர் சஹீர்தீன் , செயலாளர் ரியாஸ் அஹமது , இராமநாதபுரம் தொகுதி செயலாளர் ஷேகு இபுராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலப்பாளையத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய முழு கடை அடைப்பு மற்றும் தர்ணா போராட்டம் - பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு



நெல்லை : பெங்களூர் குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புஹாரி உள்ளிட்ட 3 முஸ்லீம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் மேலப்பாளையத்தில் 27.04.2013 அன்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு (பாப்புலர் ஃப்ரண்ட் , எஸ்.டி.பி.ஐ ,த.மு.மு.க , ம.ம.ம.க, தக்வா ஜமாத் ,இந்திய தவ்ஹித் ஜமாத்,ம.ம.க ,சிறுபான்மையினர் அறக்கட்டளை,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பல இயக்கங்கள்) சார்பாக ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Sunday, April 28, 2013

அசம் கான் அவமதிப்பு: ஹார்வர்டு பல்கலைகழக உரையையும் விருந்தையும் புறக்கணித்த அகிலேஷ் யாதவ்


அகிலேஷ் யாதவ்நியூ யார்க் : உத்தரபிரதேச மாநில அமைச்சர் அசம்கானை அமெரிக்க விமான நிலையத்தில் சோதித்து அவமானப்படுத்தியதால் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஹார்வர்டு பல்கலைகழக உரையையும் விருந்தையும் புறக்கணித்துள்ளார். 

அசம் கான் வழமைக்கு மாறாக பாஸ்டன் விமான நிலையத்தில் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தன் அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உரையை புறக்கணித்தார்.

கண்ணூர் சம்பவம்:குஜராத் மாடலில் அப்ரூவர்களை தேடும் கேரள போலீஸ்!

0 (1)
கண்ணூர்(கேரளா):கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பயிற்சி மேற்கொள்வதாக கூறி கைதுச் செய்ததுடன், அங்குள்ள கட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறி நாட்டு வெடிக்குண்டுகளையும், வாட்களையும் செட்டப் செய்து ஊடகங்களுக்கு காட்சிக்கு வைத்தது கேரள போலீஸ்.
பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கட்டிடப் பணி நடந்துகொண்டிருந்த கட்டிடத்தில் கைதுச் செய்யப்பட்ட இளைஞர்கள் மீது போலீஸ் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதால் அப்ரூவர்களை உருவாக்க கேரள போலீஸ் முயற்சியை துவக்கியுள்ளது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் அப்ரூவர்களை உருவாக்கும் அதே மாடலை கேரள போலீஸும் பின்பற்ற துவங்கியுள்ளது.

Saturday, April 27, 2013

உண்மையில் கண்ணூரில் வெடிக்குண்டுகள் தயாரிப்பவர்கள் யார்?


கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ‘ஆரோக்கியமான தேசம்! ஆரோக்கியமான சமூகம்!’ என்ற பிரச்சாரத்திற்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களை ஆயுத பயிற்சி மேற்கொள்கின்றார்கள் என்று அவதூறாக சித்தரித்து அவர்கள் மீது UAPA (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து கைது செய்தது கேரள மாநில போலீஸ். பின்னர் இக்கைது படலத்தின் பின்னணியில் நேற்று மாநிலத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் அரசின் பாரபட்சமான போக்கும், போலீஸின் வஞ்சகமும் அரங்கேறியது. 

பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் கைது:கோழிக்கோட்டில் கமிஷனர் அலுவலகம் முற்றுகை


பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள் "  21 பேர் ஆரோக்கியமான மக்கள் - வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களை கண்ணூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது மட்டும் அல்லாமல கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சி.பி.எம்(மார்க்சிஸ்ட் கட்சி) மையங்களில் இருந்து பெருமளவிலான வெடிப்பொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றிய வேளைகளில் போலீசும், ஊடகங்களும் காண்பிக்காத வரம்புகடந்த ஆர்வமும், வேகத்தையும் அச்சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் கண்ணூர் நாராத் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைதுச்செய்த மிகவும் சாதாரணமானதொரு சம்பவத்தில் வெளிப்படுத்துவது ஏராளமான சந்தேகங்களை எழுப்புகிறது.

போலீஸ் நடவடிக்கையின் பின்னணியில் உயர் மட்ட சதி!-பாப்புலர் ஃப்ரண்ட்!


கோழிக்கோடு: கேரள மாநிலம் கண்ணூரில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 21 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைதுச் செய்ததை தொடர்ந்து அரங்கேறும் போலீஸின் நடவடிக்கைகள் ஓரவஞ்சனையும், ஜனநாயக விரோத செயலாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக உயர்மட்ட அளவில் நடக்கும் சதித்திட்டத்தின் அண்மை உதாரணம் தான் போலீஸ் நடவடிக்கை மூலம் வெட்ட வெளிச்சமானதாக கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சாரம் டெல்லியில் துவங்கியது!



புதுடெல்லி: சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாறு துயில் கொள்ளும் டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் இந்நிகழ்ச்சி துவங்கியது.

Friday, April 26, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் போலீஸ் பயங்கரவாதம்: வெட்ட வெளிச்சமான ஓரவஞ்சனை!!

PFI condemns arrest and raids at Narath
கோழிக்கோடு:கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ‘ஆரோக்கியமான தேசம்! ஆரோக்கியமான சமூகம்!’ என்ற பிரச்சாரத்திற்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களை ஆயுத பயிற்சி மேற்கொள்கின்றார்கள் என்று அவதூறாக சித்தரித்து அவர்கள் மீது UAPA (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து கைது செய்தது கேரள மாநில போலீஸ்.

கேரளா கைது சம்பவம்: பின்னணியில் இருக்கும் சதியை பாப்புலர் ஃப்ரண்ட் உணர்ந்தே உள்ளது



புதுடெல்லி: கேரள மாநிலம் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள் " ஆரோக்கியமான மக்கள் - வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களை கண்ணூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சதி திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டறிந்துள்ளது. இது குறித்து தேசிய போது செயலாளர் O.M.A. சலாம் கூறும் போது, அரக்கத்தனமான U.A.P.A கருப்பு சட்டத்தை காரணமில்லாமல் முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறை பாரபட்சமாக திணித்துள்ளது. இது முஸ்லிம் இளைஞர்கள் மீதான காவல் துறையின் தெளிவான வெறுப்புணர்வை காட்டுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் பள்ளி செல்வோம்[School Chalo] பேரணி


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 25 ஏப்ரல் 2013 அன்று பள்ளி செல்வோம் [School Chalo] என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை புது டெல்லியில் செங்கோட்டை முன்பு வெகு விமரிசையாக தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொது செயலாளர் O.M.A. சலாம் தலைமை தாங்குவார். மேலும் பல முக்கிய பேச்சாளர்கள் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவார்கள். 

இதில் 6-14 வயது வரை உள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வியின் நிலை, நாட்டில் படிப்பறிவில்லாதவர்களின் விபரம் மேலும் கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை இப்பேரணி வலியுறுத்தும்.

பெங்களூர் குண்டு வெடிப்பில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!



நெல்லை: பெங்களூர் குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புஹாரி உள்ளிட்ட 3 முஸ்லீம் இளைஞர்களை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததையும், கோவை, மதுரை மற்றும் நெல்லையில் தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சி சார்பில் இன்று 25.04.2013 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Thursday, April 25, 2013

தமிழக முஸ்லிம் இளைஞர்கள் கைது - இஸ்லாமிய கூட்டமைப்பினர் கண்டனம்!



சென்னை : பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் வாழும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தவேண்டும் என தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட பைக் மூலம் கடந்த 17ம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 10 க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக தனிப்படையினர் தமிழக போலீசார் உதவியுடன் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த இளைஞர்களை கைது செய்து பெங்களூர் அழைத்து சென்றனர். மேலும் கிச்சான் புகாரி என்ற இளைஞரையும் கைது செய்தனர். இவர் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளிலிருந்து விடுதலை பெற்று, தற்போது இவர் சிறையிலிருந்து விடுதலையாகும் அப்பாவி இளைஞர்களின் மறுவாழ்விற்காக உதவி செய்து வருகிறார்.

புதுவலசையில் "பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி பயிலகம்"


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக "பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி பயிலகம்" இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்டின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் சகோ. ஹபீப் நவாஸ்கான் அவர்களால் கடந்த செவ்வாய் (23.04.2013) கிழமை மாலை 5 மணியளவில் துவக்கி வைக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோரதரர் ஹமித் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை மற்றும் முஸ்லிம் முன்னேற்ற சங்க நிர்வாகிககள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த நிகழ்ச்சியினை புதுவலசை சகோ.ரிஸ்வான் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள்.

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் : நடுநிலையான புலனாய்வு விசாரணை தேவை, சரியான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை



கடந்த ஏப்ரல் 17ம் தேதி பெங்களூரில் குண்டு வெடித்தது. 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது மனித இனத்திற்கு எதிரான குற்றம். வன்மையாக கண்டிக்கத்தக்கது. குண்டுவெடிப்பு சம்பத்தப்பட்ட வழக்கின் விசாரணை ஒரு சார்பாக இல்லாமல் நடுநிலையாக நடக்க வேண்டும். இதுவரை நாட்டில் நடைபெற்ற அநேக குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் சங்க பரிவார இயக்கங்களே காரணம் எனபது ஊர்ஜிதம் செய்யப்பட உண்மை. இதை இந்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அவர்கள் காவி பயங்கரவாதம் என்று சுட்டிகாட்டியுள்ளார்.

Wednesday, April 24, 2013

இஸ்லாத்தை தழுவிய நெதர்லாந்து இஸ்லாமிய எதிர்ப்பாளர் மதீனா வருகை!

van droon
மதீனா(சவூதி அரேபியா):இஸ்லாத்திற்கு கடும் எதிர்ப்பாளராக திகழ்ந்த நெதர்லாந்து நாட்டின் அரசியல் தலைவரான அர்னுட்ஃபான் டூன் சவூதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு வருகை தந்துள்ளார். இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் ஃபித்னா என்ற திரைப்படத்தை தயாரித்த நெதர்லாந்தில் பிரசித்திப்பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர் கிரீட் வில்டேர்ஸின் கட்சியில் அர்னுட்ஃபான் டூன் முக்கிய தலைவர் ஆவார்.

கொலை வழக்கில் காவல்துறையினருக்கு 156 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

கொலை வழக்கில் காவல்துறையினருக்கு 156 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பிரேசில்:  பிரேசிலில் சிறைக் கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்காக 23 காவல்துறையினருக்கு தலா 156 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் சாவ்பாலோ நகரில் உள்ள மத்திய சிறையில் சிறைக்குள் நடைபெற்ற கலவரத்தில் கைதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் சண்டையும், தீவைப்பு சம்பவமும் நிகழ்ந்தது.

Sunday, April 21, 2013

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக பெண்களுக்கான "இலவச தையல் பயிற்சி பயிலகம்"


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை இலவச மருத்துவ உதவிகள், இலவச சட்ட உதவிகள், இலவச குறு மற்றும் சுய தொழில் பயிற்சி மற்றும் வழிகாட்டி முகாம்கள், இலவச கல்வி உபகரணங்கள், கல்வி உதவி ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேசிய மற்றும் மாநில   அளவில் சிறப்பாக செய்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுதுறை சார்பாக புதுவலசையில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் சிறுமிகள் கற்பழிப்பு: யுனிசெஃப் கவலை!


இந்தியாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஐ.நா. சபையின் கண்காணிப்பில் இயங்கி வரும் ‘யூனிசெஃப்’ (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) கூறியுள்ளது.
இது தொடர்பாக யூனிசெஃப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடந்த சில நாட்களாக டெல்லியில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை பார்க்கையில் வீதிகளிலும், பள்ளிகளிலும், பணியிடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக துரித நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.

உலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்-வடகொரியா


கொரியா தீபகற்ப பகுதியில் போர் மூளும் சூழ்நிலையை வடகொரியா ஏற்படுத்தி வருகிறது. இதனை முடிவிற்கு கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஐ.நா. பொருளாதாரத்தடையை நீக்கவேண்டும். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சில நிபந்தனைகளையும் அது விதித்துள்ளது.

இதற்கு அணுஆயுத நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக, வடகொரியா தெளிவான அறிக்கைகள் வெளியிடவேண்டும் என்று அமெரிக்கா கூறியது. இந்நிலையில், உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அணுஆயுத நடவடிக்கைகளை முதலில் நிறுத்தவேண்டும். 

மத நல்லிணக்கத்தை பற்றி பேச இந்து முன்னணிக்கு அருகதை இல்லை-- சிறுபான்மை கமிஷன் தலைவர் பிரகாஷ் அவர்களின் முயற்சியை திசை திருப்பும் ராமகோபாலனுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்



தமிழக சிறுபான்மை கமிஷன் தலைவர் பிரகாஷ் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சிறுபான்மை சமூகங்களிடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டு தமிழக அரசுக்கு தனது பரிந்துரை மற்றும் அறிக்கையினை அனுப்பி வருகின்றார். அதன்படி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சங்க பரிவார இயக்கங்கள் சிறுபான்மையினருக்கு தொடர்ந்து இழைத்து வரும் அச்சுறுத்தல் குறித்து ஊட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Saturday, April 20, 2013

விளையாட்டு விருது கிடைக்கவேண்டுமெனில் ஆர்.எஸ்.எஸ், ஜமாஅத்தே இஸ்லாமியில் தொடர்பு இருக்க கூடாது!

For awards, Rajasthan sportspersons made to sign affidavits stating 'no link with opposition parties'
ஜெய்ப்பூர்:விளையாட்டுத்துறையில் விருது அளிப்பதற்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளது. விருதுக்குபரிந்துரைக்கப்படவேண்டுமெனில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ராஷ்ட்ரீய சுயம் சேவக்கிலோ, ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பிலோ உறுப்பினராக இல்லை என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது.

Thursday, April 18, 2013

லெஃப்டு டு ரைட் - டிக்ளைன் ஆஃப் கம்யூனிஸம் இன் இந்தியா’- புதிய நூல் வெளியீடு!



டி.ஜி.ஜேக்கப் எழுதி எம்பவர் இந்தியா ப்ரஸ் (Empower India Press) வெளியீடான ’லெஃப்டு டு ரைட் - டிக்ளைன் ஆஃப் கம்யூனிஸம் இன் இந்தியா’ (Left to Right - Decline of Communism in India) என்ற நூல் கல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய இரு இடங்களில் ஏப்ரல் 14 , 2013 அன்று வெளியிடப்பட்டது.

புது டெல்லியில் இந்தியன் இஸ்லாமிக் கல்சுரல் செண்டரில் நாவலாசிரியரும், ஜாமிஆ ஹம்தர்த் பல்கலைக்கழக பேராசிரியருமான இஷ்தியாக் டானிஷ் நூலை வெளியிட்டார். நூலை வெளியிட்ட இஷ்தியாக் கூறுகையில்,’இந்தியாவில் கம்யூனிசத்தின் உண்மையான நிலையை இந்நூல் அடிக்கோடிட்டு காண்பித்திருக்கிறது.ரஷ்யா, சீனா நாடுகளில் இருந்து கம்யூனிசத்தை அதே நிலையில் இந்தியாவில் இறக்குமதிச் செய்ய முயன்றதே இங்கு கம்யூனிஸத்தின் பரிதாபகரமான நிலைமைக்கு காரணம்’ என்று தெரிவித்தார்.

மதுரையில் நீதி கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் - பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் பங்கேற்பு



மதுரை : மதுரையில் வெடிகுண்டு என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்து சிதர்வதைக்கு உள்ளாக்கபடுவதை கண்டித்து 18.04.13 அன்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நசுருதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொது செயளலாளர் காலித் முஹம்மது, மறுமலர்ச்சி முஸ்லிம்லீக் நிறுவனர் அ.ச.உமர் பாருக், SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் பி.அப்துல் ஹமீத், ஐ.என்.டி.ஜே. மாநில செயலாளர், மக்கள் ஜனநாயக கட்சி கே.எம் .செரிப் , கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் பக்ருதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் இலியாஸ், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பஈ, மதுரை மாவட்ட முன்னால் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ராஜா ஹசன் அலி ஆகியோர் கலந்து கொண்டு காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர் .

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு:மேல் முறையீட்டில் தாமதம் குறித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மன்னிப்புக் கோரியது!

Babri Masjid demolition case-CBI tells Supreme Court it is clueless over delay in filing appeal against Advani and others
புதுடெல்லி:இறையில்லமும், இந்தியாவின் வரலாற்றுச் சின்னமுமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட சங்கபரிவார தலைவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிப்பு கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியுள்ளது. தாமதமாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததை மன்னித்து ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீதியை நிலைநாட்ட முடியாத வகையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். கொடிய தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் விசாரணையை எதிர்கொள்ளாமலேயே தப்பிக்க வாய்ப்புள்ளது என்று சி.பி.ஐ தனது மனுவில் கூறியுள்ளது.

Wednesday, April 17, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்கான கருத்தரங்கம்!



சென்னை: இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மற்றும் அரசு படையினருக்கு இடையே நிகழ்ந்த இறுதிக்கட்டப்போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டனர். மிகக் கொடிய மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்ட சம்பவங்களை சேனல் 4 என்ற பிரிட்டன் தொலைக்காட்சி அலைவரிசை உலகிற்கு அம்பலப்படுத்தியது. இச்சம்பவம் உலக தமிழர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது.

இந்நிலையில் சிங்கள புத்த பாசிச சக்திகள் தமிழர்களை அடுத்து தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை குறி வைக்க துவங்கியுள்ளனர். முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலம், கலாச்சாரம், வணிக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் சிங்கள புத்த பேரினவாத குழுக்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

ஒரு தீமை சட்டபூர்வமாக அரங்கேறுகிறது!


மது: தீமைகளின் உறைவிடம்.  இது நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று பல கேடுகளை உண்டாக்குகிறது.   

இது உண்டாக்கும் நோய்கள்: உணவு குழாயை அரிக்கிறது, ஜீரண உறுப்புகளின் ஆற்றலை குறைக்கின்றது, வயிற்றில் புண்ணை  ஏற்படுத்தி, இதுவே பிற்காலத்தில் புற்று நோய் உண்டாக காரணமாக மாறுகிறது.

மேலும், கலீரல் பாதிப்பை உண்டாக்கி, மூளையை செயலிழக்க செய்கிறது, இதயத்தை வலுவிழக்க செய்கிறது, ரத்த குழாய்களை சேதமடைய வைக்கிறது, மறதியை உண்டாகிறது.  இப்படி படிப்படியாக மனிதனை கொல்லும் பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச்சட்டையின் காவிப்புத்தி !


தில்சுக் நகர்
டந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத் நகரில், தில்சுக் நகர் எனுமிடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் இறந்துபோனார்கள்; ஏறத்தாழ நூறு பேர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை தொடங்கும் முன்பே, இன்னும் சொல்லப்போனால் குண்டுவெடிப்பில் இறந்து போனவர்களையும் காயமடைந்தவர்களையும் அப்புறப்படுத்தும் முன்னரே, “அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காகவே இக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும்; இந்தியன் முஜாஹிதீன் என்ற முசுலீம் தீவிரவாத அமைப்புதான் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாகவும்” மைய அரசு, மாநில அரசு, போலீசு, உளவுத் துறை, பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைத்து நிறுவனங்களும் ஒரே குரலில் அடித்துக் கூறின.

குண்டு வெடிப்பு: ஈராக்கில் பாராமுகம் – பாஸ்டனில் பரபரப்பு!

ராக்கில் ஏப்ரல் 15, 2013 திங்கள் கிழமை நடந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 55 மக்கள் உயிரிழந்தனர். அமெரிக்க இராணுவம் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு நடக்கவிருக்கும் முதல் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த கொடூர தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

சதாம் ஹூசைன் தலைமையிலான அப்போதைய ஈராக் அரசாங்கம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து கடந்த 10 ஆண்டுகளாக ஈராக்கை ஆக்கிரமித்திருந்தது.

Tuesday, April 16, 2013

விபத்தில் துடித்த குடும்பத்தினருக்கு உதவ மறுத்ததால் இருவர் பலி! வீடியோ இணைப்பு


15 -Jaipur_tunnel_accident-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2.8 கிலோ மீட்டர் நீள குகைப்பாதை உள்ளது. ஆக்ரா மற்றும் உத்தரபிரதேசத்துடன் ஜெய்ப்பூரை இணைக்கும் இந்த பாதையில் நேற்று பிற்பகல் சென்ற இருசக்கர வாகனம் மீது, லாரி மோதியது. இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்ணும், அவரது மகளும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். அந்த பெண்ணின் கணவரும், மகனும் பலத்த காயம் அடைந்தனர்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு அத்வானியுடன் முலாயமும் உடந்தை – பேனி பிரசாத் வர்மா பரபரப்புக் குற்றச்சாட்டு!

advani mulayam
லக்னோ:சமாஜ்வாதிக் கட்சி தலைவர் முலாயம் சிங் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா. பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியுடன் முலாயம் சிங்கும் இணைந்தே பாபரி மஸ்ஜிதை இடிக்க சதித்திட்டம் தீட்டினார் என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
லக்னோவில் நேற்று(திங்கள் கிழமை) மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா கூறியது: அயோத்தியில் பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் பூஜைகள் செய்வதற்காக ரத யாத்திரையை அத்வானி தொடங்கினார். அந்த யாத்திரைக்கு அப்போது முதல்வராக இருந்த முலாயம் சிங் மறைமுகமாக உடந்தையாக இருந்தார். ஆனால், பூஜைகள் செய்வது ரதயாத்திரையின் நோக்கம் அல்ல. மாறாக, பாபரி மஸ்ஜிதை இடிப்பதுதான் நோக்கம்.

Monday, April 15, 2013

குழந்தை தொழிலாளர்களை பள்ளியில் இணைப்போம் - பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு தீர்மானம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஏப்ரல் 13,14 ஆகிய தேதிகளில் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார்.மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹமது வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.தேசிய செயலாளர் M.முகமது அலி ஜின்னா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த செயற்குழுவில் கீழ்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1.பள்ளி செல்வோம் பிரச்சாரம் - GO TO SCHOOL

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பள்ளி செல்வோம் பிரச்சாரம் கடந்த பலவருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த வருடம் மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் இந்த பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தின் துவக்க நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெறுகின்றது. அதை தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களை கண்டறியும் சர்வே எடுப்பது , அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சிப்பது ,மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க இச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன் அடையும் விதத்தில் ஜூன் மாதம் பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 14, 2013

ஸ்வீடனில் பாங்கு சொல்ல அனுமதி !


நாத்திகர்களால் ஆத்திகர்களின் பல வழிபாட்டு தலங்கள் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டன. அவை நூலகங்களாகவும் அரசு அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டன. நாத்திகத்தில் மன அமைதி கிடைக்காத பலர் இன்று ஆத்திகத்தின் கதவை தட்ட ஆரம்பித்துள்ளனர். ஸ்வீடனில் உள்ள ஃபித்ஜா மசூதியில் இனி வரும் காலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ஒலி பெருக்கி மூலம் அதான் (தொழுகைக்கான அழைப்பு) கொடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதி கிடைத்துள்ளது. இனி பள்ளியின் மினாராக்களில் பாங்கின் அழைப்பொலி அந்த அழகிய நகரை அலங்கரிக்கும்.

சென்னையில் இலங்கை தமிழர் வாழ்வுரிமை கருத்தரங்கு- பாப்புலர் ப்ரண்ட் ஏற்பாடு


இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்கான கருத்தரங்கு ஒன்று சென்னை எழும்பூர் கென்னட் லேன் ஹோட்டல் சிங்கப்பூரில் வைத்து ஏப்ரல் 16 அன்று மாலை 4.15 மணிக்கு நடைபெற உள்ளது.

இதை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா  அமைப்பு நடத்துகிறது. இதில் இந்த அமைப்பின் முன்னால் தேசிய தலைவர் E.M. அப்துல் ரஹ்மான் மற்றும் மாநில தலைவர் இஸ்மாயில், மாநில பொது செயலாளர் காலித் முஹமத், மாநில பொருளாளர் ரசீன், நெல்லை மாவட்ட தலைவர் முபாரக், மாநில செயல்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். 

Saturday, April 13, 2013

முஸ்லிம்களை தோற்கடிக்க கனவு காணும் வெளிநாட்டு தமிழர்கள் - விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது


(Gtn) முஸ்லிம்களை தோற்கடிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டுமென புலி ஆதரவு புலம்பெயர் தமிழர் கோரியதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

ஈராக்கின் பொக்கிஷங்களை திருடும் அமெரிக்கா!

US looted thousands of Iraqs cultural treasures-Iraqi archaeologist
ஈராக்கின் வரலாற்று பொக்கிஷங்களை அமெரிக்கா திருடி சென்றுள்ளதாக அந்நாட்டின் தொல்பொருள் ஆராச்சியாளர் ஒருவர் தெரவித்துள்ளார். ஈராக்கின் தேசிய அருங்காட்சியத்திலிருந்து 35,000 த்திற்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய பொக்கிஷங்களை அமெரிக்கா எடுத்துச் சென்றுள்ளதாக தொல்பொருள் ஆராச்சியாளரான இஹ்சான் பாத்தி பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Friday, April 12, 2013

உலக நாடுகளின் அடிமை தேசம்!


இந்தியாவின் நீதி துறை ஏதோ நாட்டு நலனில் அக்கறை உள்ளது போல் அடிக்கடி திடீர் அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தும்.

சில நேரங்களில் தங்களுக்கு சம்மந்தம் இல்லாத விசயத்தில் கூட மூக்கை நுழைத்து அறிவுரை வழங்கும் அல்லது விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லும். அத்தனையும் கடைந்தெடுத்த நாடகமே.

மக்களின் எதிர்ப்பை, போராட்டங்களை வலுவிழக்க செய்ய ஆட்சியாளர்களின் கைகூலிகளாக உட்ச்ச நீதிமன்றம் செயல்படுகின்றது. தங்களை நல்லவர்கள் என்று காட்டி கொள்ள சில உப்பு, சப்பில்லா விசயங்களை கையில் எடுத்து  கொள்வதும், தேவையான விஷயங்கள் வரும்பொழுது வெகுஜன விரோத  தீர்ப்புகளை வழங்குவதுமே சுப்ரீம் கோர்ட்டின் வாடிக்கை.

Thursday, April 11, 2013

Google Earth’க்கு போட்டியாக ஈரான் வெளியிடுகிறது ‘Islamic Earth’! 3D மேப்பிங்!!


Google Earth மூலம் வெளிநாட்டு உளவுத்துறைகள் தமது நாட்டுக்குள் உளவு பார்க்கின்றன என நீண்ட காலமாக கூறிவந்த ஈரான், தமது சொந்த தயாரிப்பான ‘Islamic Earth’ முப்பரிமாண மேப்பிங் சேவையை தொடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது, இதன் வேலைகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டன என தெரிவித்துள்ள ஈரானிய அரசுக்கு பகுதி சொந்தமான மெஹ்ர் செய்தி ஏஜென்சி, ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மொஹமெட் ஹசன் நாபி இதை உறுதிப்படுத்தியுள்ளார் என்கிறது.

கீழ‌க்க‌ரை அருகே எஸ்.டி.பி.ஐ சார்பில் ம‌துக்க‌டைக்கு பூட்டு போடும் போராட்ட‌ம்!

கீழக்க‌ரை அருகே வ‌ண்ணாங்குண்டு ஊராட்சியில் ஊரின் ந‌டுவில் மூன் ம‌ழைய‌ர் ப‌ள்ளி எதிரே அர‌சு டாஸ்மாக் ம‌துக்க‌டை உள்ள‌து.இதை அக‌ற்ற‌ க்கோரி அப்ப‌குதி மக்க‌ளுட‌ன் இணைந்து எஸ். டி .பி .ஐ ப‌ல்வேறு போர‌ட்ட‌ங்க‌ள் நட‌த்தியும் எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் இல்லை.

இத‌னால் இன்று எஸ் டி பி  ஐ சார்பில் டாஸ்மாக் கடையை மூடி பூட்டு போடும் போராட்ட‌ அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து.இத‌னால் அங்கு கீழ‌க்க‌ரை டிஎஸ்பி சோம‌சேக‌ர் த‌லைமையில் இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் உள்ளிட்ட‌ ஏராள‌மான போலீசார் குவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர்.இத‌னால் அப்ப‌குதியில் ப‌ர‌ப‌ர‌ப்பு நில‌வி வ‌ந்த‌து.

விமானநிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கேரள மாநில துணை தலைவரை கைதுச் செய்த போலீஸ்!-போராட்டத்தை தொடர்ந்து விடுதலை!


கொச்சி:கேரள மாநில சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் துணைத் தலைவர் முவாற்றுப்புழா அஷ்ரஃப் மெளலவி. இவர் 10 தினங்கள் வளைகுடா நாடான கத்தருக்கு சென்றுவிட்டு நேற்று கொச்சி நெடும்பாச்சேரி விமான நிலையம் வழியாக நாடு திரும்பினார்.
நேற்று காலை விமான நிலையத்திற்கு வந்த அஷ்ரஃப் மெளலவியை எமிக்ரேசன் பிரிவு கைதுச் செய்து உள்ளுர் காவல் துறையிடம் ஒப்படைத்தது. அஷ்ரஃப் மெளலவியை போலீஸ் தேடிவருவதாகவும், இவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், எந்த ஏஜன்சி லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் முவாற்றுப்புழாவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட அஷ்ரஃப் மெளலவியை மதியம் 12.30 மணியளவில் போலீஸ் நிபந்தனையின்றி விடுதலைச் செய்தது. கத்தருக்கு செல்லும் வேளையில் அஷ்ரஃப் மெளலவிக்கு விமான நிலையத்தில் எவ்வித இடையூறும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்த சன்னியாசிகளின் தாக்குதல்:பீதியில் மியான்மர் முஸ்லிம்கள்!

myanmar muslims
யங்கூன்:தீவிர தேசியவாதிகளும், கலவரக்காரர்களுமான புத்த சன்னியாசி குழுக்கள் மியான்மரின் தலைநகரான யங்கூனில் தங்களது இனவிரோத நடவடிக்கைகளை வலுப்படுத்தியதை தொடர்ந்து அந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
முஸ்லிம்களை தனிமைப்படுத்தவேண்டும்!அவர்களுடனான உறவை துண்டிக்கவேண்டும்! என்று பிரச்சாரம் செய்து வரும் ’969’ என்ற புத்த சன்னியாசி கும்பல்மியான்மரில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

Wednesday, April 10, 2013

ஈரானில் நில நடுக்கம் – UAE யில் அதிர்வு!

Iran earthquake felt in UAE and Arabian Gulf
ஈரான் : ஈரானில் ஏற்ப்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. இதில் ஈரானில் உள்ள இரண்டு கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு ஏற்ப்பட்ட நில நடுக்கத்தில் இது வரை 32 பேர் இறந்துள்ளதாகவும், 850 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஈரானின் பெஷாரில் அமைந்துள்ள அணு உலையில் எந்த பாதிப்பும் ஏற்ப்பட்டதாக தகவல் இல்லை. இந்நில நடுக்கமானது பெஷாரின் தென்கிழக்குப் பகுதியில் 96 கி.மீ தொலைவில் இருக்கக்கூடிய காகி எனும் நகரத்தில் ஏற்ப்பட்டது.

இந்திரா காந்தி வீட்டு பணியாளர் அமெரிக்க உளவாளி! அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ்!


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் எமர்ஜென்சியை கொண்டுவந்த போது, அவரது நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக, பிரதமரின் வீட்டிலிருந்த பணியாளர் ஒருவரே அமெரிக்காவுக்கு உளவாளியாக செயல்பட்டார் என்பது, விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள் ஒன்றில் அம்பலமாகி உள்ளது!

Tuesday, April 9, 2013

“ஜார்ஜ் பெர்னாண்டஸ் சி.ஐ.ஏ.விடம் பணம் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தார்” -விக்கிலீக்ஸ்


விக்கிலீக்ஸ் போட்டுள்ள அடுத்த குண்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அரசுக்கு எதிராக கலவரங்களை நடத்த சி.ஐ.ஏ.விடம் பணம் கோரினார், பணம் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தார் என்பது! இதனால், குறிப்பிடத்தக்க அளவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊடகங்கள் முஸ்லிம்களை தீய சக்திகளாக சித்தரிக்கின்றன – மார்க்கண்டேய கட்ஜு!

Markanday_Katju_1395117f (1)
ஹைதராபாத்:பொறுப்பற்ற ஊடக பணியின் மூலமாக ஊடகங்கள் முஸ்லிம் சமுதாயத்தை தீய சக்திகளாக சித்தரிப்பதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
தி ஹிந்து பத்திரிகை சார்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட ‘”Reporting Terror: How Sensitive is the media?” என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினார் கட்ஜு. அப்பொழுது அவர் கூறியது:பாரபட்சமான அணுகுமுறைகளால் தாங்கள் அநீதிக்கு ஆளாக்கப்படுகிறோம் என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே அதிகரித்து வருகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியீடு!


Press Conference Photo - 1st List of SDPI & BSP Candidates Released @ Bangalore
  கர்நாடக சட்டமன்றத்தேர்தல் வரும் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ , பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதனையொட்டி எஸ்.டி.பி.ஐ மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்கள் பெங்களூரில் ஒன்று கூடி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். மொத்தம் உள்ள 240 தொகுதிகளில் முதல் கட்டமாக பகுஜன் சமாஜ் கட்சி 93 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ 17 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளனர். 

Sunday, April 7, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாணவர் உயிர‌ழ‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் !பேராசிரிய‌ர் கைது!


கீழ‌க்க‌ரை தனியார் கல்லூரி மாடியில் இருந்து, மாணவர் விழுந்து இறந்த வழக்கில், ஆங்கில துறை தலைவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேலப்புதுக்குடி சீனி அப்துல் மஜிது மகன் சமீமுதீன், 24. கீழக்கரை தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

மியான்மர், இலங்கைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் கையெழுத்து சேகரிப்பு!

Campus Front begins signature campaign against oppression of Muslims in Myanmar, Sri Lanka
புதுடெல்லி:முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டுப்படுகொலை நடக்கும் மியான்மரையும், தமிழர்களை இனப்படுகொலைச் செய்துவிட்டு அடுத்து முஸ்லிம்களின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை இந்தியா வலுவாக கண்டிக்கவேண்டும் என்று கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கையெழுத்து சேகரிப்பை நடத்தியது.டெல்லி பல்கலைக் கழகம், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

Saturday, April 6, 2013

பாலியல் குற்றங்களில் நம்பர் 1 இராணுவம் எது?

மெரிக்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் நான்கு பேர், பணியிடத்தில், இராணுவ அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் அவர்கள் மேல் ஏவப்பட்ட பாலியல் தாக்குதல்களைப் பற்றிய அதிர்ச்சியுட்டும் அனுபவங்களை, அண்மையில் நடந்த செனட் விசாரணையில் பகிர்ந்து கொண்டனர்.  அமெரிக்க இராணுவ நீதிமுறைகளை கேள்விக்குள்ளாக்கி, அதை மாற்றி அமைக்கவும் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள், ஒரு ஆண். ‘இராணுவ சட்ட விதிகள், பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர்த்தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களை தொடுத்து, குற்றவாளிகளை தண்டனை ஏதுமின்றி தப்பிக்க உத்திரவாதம் செய்தன’ என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெளிநாட்டினருக்கு எதிரான சவூதி சட்டம் - நிறுவனங்களுக்கு 2 மாதம் கெடு?

வெளிநாட்டினருக்கு எதிரான சவூதி சட்டம் - நிறுவனங்களுக்கு 2 மாதம் கெடு?

ரியாத்: சவூதி அரசின் வெளிநாட்டு பணியாளர்களுக்கு எதிரான புதிய சட்டத்தின் காலக் கெடுவை 2 மாதகாலம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சவுதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, 25 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பதால், அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நிதாகத்  சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருக்கிறது.  இதனால் அங்கு பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வேலைக்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

சவுதி  அரசின் இந்த நடவடிக்கையால் மொத்தம் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும், இதில் பெருமளவில் இந்தியர்கள் பாதிக்கப் படுவார்கள் என்றும் கூறப் படுகிறது.

மணிப்பூர்:என்கவுண்டர்கள் போலியானது – உச்சநீதிமன்ற விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்!

Manipur encounters fake, says SC probe panel
மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட 6 என்கவுன்ட்டர்களும் போலி என உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எந்த குற்றப் பின்னணியும் இல்லாத 12 வயது சிறுவன் உள்பட 6 பேர் என்கவுன்ட்டர் முறையில் கொல்லப்பட்டனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மணிப்பூரில் 2000-க்குm மேற்பட்டோர் போலி என்கவுன்ட்டர் முறையில் கொல்லப்பட்டனர். ஆனால் இவை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

Friday, April 5, 2013

முஸ்லிம்கள் இனப்படுகொலையை கண்டித்து ,டெல்லியில் பர்மா தூதரகம் நோக்கி SDPI பேரணி


miyanmar embassy mutrukai
 பர்மாவில் புத்த பாசிஸ்டுகளால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை நிறுத்தக்கோரி பர்மா தூதரகம் நோக்கி SDPI கட்சியின் சார்பில் இன்று (5.04.2013) மாபெரும் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது . இந்த பேரணியின் போது பர்மாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை நிரந்தரமாக தடுக்க இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

Dua For Gaza