பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை இலவச மருத்துவ உதவிகள், இலவச சட்ட உதவிகள், இலவச குறு மற்றும் சுய தொழில் பயிற்சி மற்றும் வழிகாட்டி முகாம்கள், இலவச கல்வி உபகரணங்கள், கல்வி உதவி ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேசிய மற்றும் மாநில அளவில் சிறப்பாக செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுதுறை சார்பாக புதுவலசையில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ்கான்
அவர்கள் வரும் (23.04.2013) செவ்வாய் கிழமை மாலை இந்த இலவச தையல் பயிற்சி முகாமை தொடங்கி வைக்கிறார்.
சுமார் 2 மாத காலங்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் தையல் கலை பற்றிய அனைத்து முறைகளும் பெண் ஆசிரியரை கொண்டே முற்றிலும் இலவசமாக சொல்லி கொடுக்கப்பட இருக்கிறது. இதில் கலந்து கொண்டு பயன் பெற விரும்புவோர் மற்றும் இதர தகவல்களுக்கு கீழ் காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு: +91 97 864 864 27.
0 கருத்துரைகள்:
Post a Comment