ஈரான் : ஈரானில் ஏற்ப்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. இதில் ஈரானில் உள்ள இரண்டு கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு ஏற்ப்பட்ட நில நடுக்கத்தில் இது வரை 32 பேர் இறந்துள்ளதாகவும், 850 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஈரானின் பெஷாரில் அமைந்துள்ள அணு உலையில் எந்த பாதிப்பும் ஏற்ப்பட்டதாக தகவல் இல்லை. இந்நில நடுக்கமானது பெஷாரின் தென்கிழக்குப் பகுதியில் 96 கி.மீ தொலைவில் இருக்கக்கூடிய காகி எனும் நகரத்தில் ஏற்ப்பட்டது.
UAE : இதை தொடர்ந்து அமீரகத்திலுள்ள துபாய், சார்ஜா, அபுதாபி மற்றும் அருகாமையிலுள்ள நாடுகளாகிய தோகா, மனாமா, பஹ்ரைன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் ஒரு சில இடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டது. அதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணிபுரிந்துக் கொண்டிருந்த அனைவரும் வெளியேறிவிட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment