பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 25 ஏப்ரல் 2013 அன்று பள்ளி செல்வோம் [School Chalo] என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை புது டெல்லியில் செங்கோட்டை முன்பு வெகு விமரிசையாக தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொது செயலாளர் O.M.A. சலாம் தலைமை தாங்குவார். மேலும் பல முக்கிய பேச்சாளர்கள் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவார்கள்.
இதில் 6-14 வயது வரை உள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வியின் நிலை, நாட்டில் படிப்பறிவில்லாதவர்களின் விபரம் மேலும் கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை இப்பேரணி வலியுறுத்தும்.
இன்னும் மதம், ஜாதி, நிறம், பாலினம், பொருளாதார நிலை கடந்து கல்வி உரிமைச் சட்டத்தினுடைய ஒளியில் இப்பேரணி நடைபெறும். இந்த பிரச்சாரத்தில் ஏப்ரல் - ஜுன் வரை பாப்புலர் ஃப்ரண்ட் 1,00,000 கல்வி உபகரணங்களை தேவையான மாணவர்களுக்கு இந்தியா முழுவதும் வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 2013 ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 26,000 கல்வி உபகரணங்கள் ஏழை மாணவர்களுக்கு மேற்கு வங்காளம் மற்றும் மணிப்பூரில் வழங்கப்பட்டுள்ளது.
பலகீனமான பிரிவினரை பலப்படுத்துவதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் சிறிய மற்றும் பெரிய திட்டங்களை கொண்டு அவர்களை பலப்படுத்துகிறது. இதில் முதல் கட்டமாக விழிப்புணர்வை உருவாக்கவும், சுயமாக முடிவெடுக்க கூடிய திறனையும் அவர்களுக்கு உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் சலுகைகள் மற்றும் திட்டங்கள் எவருக்கு உண்மையில் தேவையோ அவர்களுக்கு பெற்றுத் தந்துள்ளது.
இப்படிக்கு,
அன்சாருல் ஹக்,
மக்கள் தொடர்பு அதிகாரி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
0 கருத்துரைகள்:
Post a Comment