மதீனா(சவூதி அரேபியா):இஸ்லாத்திற்கு கடும் எதிர்ப்பாளராக திகழ்ந்த நெதர்லாந்து நாட்டின் அரசியல் தலைவரான அர்னுட்ஃபான் டூன் சவூதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு வருகை தந்துள்ளார். இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் ஃபித்னா என்ற திரைப்படத்தை தயாரித்த நெதர்லாந்தில் பிரசித்திப்பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர் கிரீட் வில்டேர்ஸின் கட்சியில் அர்னுட்ஃபான் டூன் முக்கிய தலைவர் ஆவார்.
இஸ்லாத்தையும், இறுதித்தூதரையும் அவமதிக்கும் ஃபித்னா என்ற திரைப்படத்தை தயாரிப்பதில் கிரீட் வில்டேர்ஸுக்கு உதவியர்களில் முக்கியமானவர் அர்னூட்ஃபான் டூன் ஆவார். இஸ்லாத்தைக் குறித்தும், முஹம்மது நபியைக் குறித்தும் ஆழமாக படித்ததை தொடர்ந்து கடந்த மாதம் டூன் இஸ்லாத்தை தழுவியிருந்தார். ஃபித்னா திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பே டூனுக்கு இஸ்லாத்தைக் குறித்து படிக்க தூண்டியது.
மதீனா மஸ்ஜிதில் இரண்டு இமாம்களுடன் சந்திப்பை நடத்திய டூன், புனித உம்ராவை நிறைவேற்ற மக்காவுக்கு புறப்பட்டார்.நெதர்லாந்து நாட்டின் பாராளுமன்றத்திலும், ஹேக் நகர சிட்டி கவுன்சிலிலும் உறுப்பினரான டூன், டிவிட்டரில் தான் இஸ்லாத்தை ஏற்றதை அறிவித்திருந்தார். க்ரீட் வில்டேர்ஸின் வலதுகரமாக செயல்பட்ட டூனின், இந்த அறிவிப்பை பலரும் நகைச்சுவையாக கருதினர். ஆனால், தனது நிலைப்பாட்டை உறுதிச் செய்யும் வகையில் சிட்டி மேயருக்கு டூன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவரதுமனமாற்றம் உறுதிச் செய்யப்பட்டது.
இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டது குறித்து டூன் கூறியது:’இஸ்லாத்தைக் குறித்து மோசமான பல கதைகளையும் நான் கேட்பதுண்டு.கட்சி தலைவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் இஸ்லாத்தைக் குறித்து விரிவாக ஆராய நான் தீர்மானித்தேன். தொடர்ந்து திருக்குர்ஆனையும், முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையையும், ஹதீஸையும்(நபிகளாரின் போதனைகள்) ஆழமாக படித்தேன். இதன் மூலம் சத்தியத்தை உணர்ந்துகொண்டேன்.இஸ்லாத்தை நான் தழுவியது குறித்து நெதர்லாந்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்துள்ளன.’இவ்வாறு டூன் தெரிவித்தார்.
-thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment