Friday, August 31, 2012

குமரி:ஹிந்துத்துவா தீவிரவாதத்தை மூடிமறைக்க பொன். ராதாகிருஷ்ணன் நடத்திய போராட்ட நாடகம்!

ஹிந்துத்துவா தீவிரவாதத்தை மூடிமறைக்க பொன். ராதாகிருஷ்ணன் நடத்திய போராட்ட நாடகம்!
நாகர்கோவில்:முக்கடல்களைப் போலவே முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என மூன்று சமூகமும் நல்லிணக்கத்தோடு கைக்குலுக்கி வாழ்ந்த மண் குமரி மாவட்டம். 1982-ஆம் ஆண்டு நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம் இம்மூன்று மதத்தினர் இடையே நிலவிய நல்லிணக்கத்திற்கு விழுந்த முதல் அடியாக மாறியது.
1993-ஆம் ஆண்டு மணலிக்குழிவிளை என்ற பகுதியில் கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டுத்தலம் நள்ளிரவில் ஹிந்துத்துவா பாசிச சக்திகளால் இடித்து தள்ளப்பட்டது. இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது. அடுத்து வந்த காலக்கட்டங்களில் வட நாட்டிலிருந்து தமிழகத்திற்கு ஏற்றுமதிச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வன்முறையைத் தூண்ட பாசிஸ்டுகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறியது. இந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்தபவர்கள் ஹிந்துமுன்னணி, பா.ஜ.க சங்க்பரிவார பாசிச கும்பலாகும்.

முர்ஸியின் கண்டனம்: அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் சிரியா வெளிநடப்பு!

Mursi slams Syrian regime in Iran speech
டெஹ்ரான்:சிரியா சர்வாதிகார அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி வெளியிட்டார். அரசின் மோசமான நடவடிக்கைகளின் எதிர் விளைவுதான் சிரியா எழுச்சிப் போராட்டம் என மாநாட்டில் முர்ஸி சுட்டிக்காட்டினார். ஜனநாயக நடைமுறைக்கு அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால், முர்ஸியின் உரைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த சிரியா பிரதிநிதிக்குழு மாநாட்டில் இருந்து வெளிநடப்புச் செய்தது. சிரியாவில் இரத்தக் களரியான கலவரங்கள் தொடருவதை முர்ஸி விரும்புவதாக சிரியா பிரதிநிதிக் குழு குற்றம் சாட்டியது.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: பாஜக எம்.எல்.ஏவுக்கு 28 ஆண்டு சிறை! வி.எச்.பி பயங்கரவாதிக்கு ஆயுட்கால சிறை!

Naroda Patiya- 28 yrs jail for Maya Kodnani, Bajrangi gets life term till death
அஹமதாபாத்: குஜராத்-நரோடா பாட்டியா இனக் கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், வி.ஹெச்.பி பயங்கரவாதி பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய வரலாறு காணாதா மாபெரும் இனப்படுகொலையில் ஈடுபட்டனர்.  ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

Thursday, August 30, 2012

ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு பெண்களின் அழகு குறித்த கவலையாம்! – மோடியின் மூடத்தனத்திற்கு குவியும் கண்டனங்கள்

Everything Modi Said on Malnutrition
புதுடெல்லி:ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு காரணம் பெண்கள் தங்கள் அழகைக் குறித்து கவலைப்பட்டு உடலை வருத்திக் கொள்வதால் உருவாகிறது என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி கூறிய முட்டாள் தனமான கருத்திற்கு பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் வறுமையின் காரணமாக, குழந்தைகள் உள்பட ஏழை எளிய மக்கள் ஊட்டச் சத்துக் குறைவினால் அவதியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மரணங்களும் நிகழ்கின்றன. பொதுவாகவே ஊட்டச் சத்துக் குறைபாட்டை யாரும் வேண்டுமென்றே வரவேற்க மாட்டார்கள். இது பள்ளிக்கூட சிறுவனுக்கு கூட தெரிந்த விஷயம். ஆனால், சங்க்பரிவாரத்தின் அரசியல் பிரிவான பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் பதவிக்காக கனவு காணும் நரேந்திர மோடியின் குழம்பிப் போன மூளைக்கு இது கூட தெரியாதது ஆச்சரியமில்லை. ஏனெனில் மூளையை மொத்தமாக மதவெறிக்கு குத்தகைக்கு விட்டுள்ள மோடிக்கு இம்மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவது இயல்பே.

Wednesday, August 29, 2012

அஸ்ஸாம் நிலையை நேரில் கண்ட பின் பாப்புலர் ஃப்ரண்டின் அறிக்கை

அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கீழ் கண்ட அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி, எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலானா காலித் ரஷாதி மற்றும் தன்னார்வ தொண்டு இயக்கமான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷனின் தொண்டூழியர்களோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் நிவாரண முகாம்களுக்கு ஆகஸ்ட் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்ட‌ பின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தால் ஆயிரக்கணக்கான வங்காள மொழி பேசக்கூடிய முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று வரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோக்ரஜார், சீரங்க், துபாரி, பொங்கைகோன் ஆகிய மாவட்டங்களில் போடோ இனத்தீவிரவாதிகளால் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் வசித்து வந்த பல முஸ்லிம் குடும்பங்கள் 200 கி.மி தொலைவில் இருக்கின்ற நிவாரண முகாம்களுக்கு துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர்.

சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு: மஹராஷ்ட்ரா மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!

Sohrabuddin trial likely to be shifted to Maharashtra
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் போலீசாரால் போலி என்கவுண்டரில் கொலைச் செய்யப்பட்ட சொஹ்ரபுதீன் ஷேக் கொலை வழக்கின் விசாரணையை மஹராஷ்ட்ரா மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியும், முன்னாள் அமைச்சருமான அமித் ஷா, தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் மாநிலத்துக்கு செல்லவும் நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர் உள்பட 32 பேர் குற்றவாளிகள்! – சிறப்பு நீதிமன்றம்!

Naroda Patia case-Former Gujarat minister and Babu bajrangi, 31 others convicted
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரோடா பாட்டியாவில் நடத்திய கோரத்தாண்டவமான கூட்டுப் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Monday, August 27, 2012

என்று முடிவுக்கு வரும் இந்தச் சிறுபான்மை வேட்டை?

என்று முடிவுக்கு வரும் இந்தச் சிறுபான்மை வேட்டை
டெல்லி:நாடு முழுவதும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.
ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும் இந்தப் பிரச்சாரத்தை முன்னிட்டு அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
“அரசுக்கு எதிராக வேலை செய்பவர்கள், கலவரத்தில் ஈடுபடுபவர்கள், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்பவர்கள், பெண்களையும், குழந்தைகளையும் சித்திரவதை செய்பவர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் தண்டிக்கப்படவில்லை. நான் ஒரு முஸ்லிம் என்பதனாலேயே இங்கே துன்பப்படுகின்றேன்.”

Sunday, August 26, 2012

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பெர்மூடா முக்கோண’ மாய மறைவுகள்: பகுதி-5!

இறுதிப் பாகம்

முதலில் தொலைந்து போன 5 விமானங்களும், அதைத் தேடச் சென்ற மற்றுமோர் விமானமும், 6 விமானங்களிலும் இருந்த 27 பேரும் எந்தவொரு சுவடுமில்லாமல், மாயமாக மறைந்தே போயிருந்தார்கள்.
அமெரிக்க விமானப்படை விமானங்களின் மறைவுபற்றி ஆராய விசாரணைக்குழு  ஒன்றை அமைத்தது. அதில் விமானப்படை அதிகாரிகள், ஏவியேஷன் வல்லுனர்கள், விண்வெளி விஞ்ஞானிகள், ஆராய்சியாளர்கள் என்று பலர், இந்த விமானங்கள் மறைந்ததற்கு ஒவ்வொரு விதமான தியரிகளைச் சொன்னார்கள்.
விமானப்படை அதிகாரிகளால் கூறப்பட்டது, “முதலில் அனுப்பப்பட்ட 5 விமானங்களும் வானில் ஒன்றுடன் ஒன்று மோதி வீழ்ந்திருக்கலாம்” என்பதாக ஒரு சாத்தியம்.
அப்படி நடந்திருந்தால், மோதிக் கடலில் விழுந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் எங்கே? இறந்தவர்களின் உடல்கள் எங்கே? தேட அனுப்பப்பட்ட விமானம் எங்கே? என்று விசாரணைக்குழு கேட்ட கேள்விகளுக்கு, விமானப்படை அதிகாரிகளிடம் பதில் இல்லை.

அஸ்ஸாம்:இனக்கலவரங்களில் பலியானவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள்!

Muslims and Tribes were most killed assam ethnic riots
புதுடெல்லி:அஸ்ஸாம் நிகழ்ந்த இனக் கலவரங்களில் பழங்குடியினரும், முஸ்லிம்களும் அதிகமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். 1993-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த ஐந்து இனக்கலவரங்களில் 303 பழங்குடியினரும், 197 முஸ்லிம்களும், 95 போடோக்களும் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் அரசின் புள்ளிவிபரங்களை அவுட் லுக் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
தற்பொழுது அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ள கலவரத்தில் இதுவரை 56 முஸ்லிம்களும், 17 போடோக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து இனக்கலவரங்களில் மூன்று முஸ்லிம்களையும், இரண்டு பழங்குடியினரையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் எஸ்.டி.பி.ஐ – மு.க.ஸ்டாலின் பாராட்டு!

எஸ்.டி.பி.ஐ சார்பாக நடந்த ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி.
சென்னை:ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) சார்பாக நேற்றைய தினம் இரவு சென்னை பெரியார் திடலில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.  மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், துணைத் தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.செய்யது இப்ராஹீம், ஜி.அப்துல் ஸத்தார், வி.எம்.அபூதாஹிர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பெர்மூடா முக்கோண’ மாய மறைவுகள்: பகுதி-4!


பாகம் நான்கு

ஐந்து விமானங்களும் அதிலிருந்த 14 பேரும் மாயமாக மறைந்து போனது அமெரிக்க விமானப்படையில் பெரிய குழப்பத்தை உருவாக்கியது. மாயமாக மறைவதற்கு முன் ஒரு விமானி, “எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன” என்று கூறியதன் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.
மாயமாக மறைந்த விமானங்களை தேடிச் செல்லவும், மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும், அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இப்போதுள்ள முக்கிய கேள்வியே, எங்கே போய் தேடுவது? விமானத்தை செலுத்திய விமானிகளுக்கே, தாம் எங்கே பறந்து கொண்டிருந்தோம் என்பது தெரியவில்லை.

மதுரை: சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்கியது!Friday, August 24, 2012

சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற அமைப்பே கிடையாது: ஊடகங்களின் பொய் அம்பலம்!

DEU Brauchtum Liebe Bruecke
திருவனந்தபுரம்:சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற பெயரில் இந்தியாவில் எவ்வித அரசு உளவுத்துறை அமைப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அஸ்ஸாம் மாநில மக்களுக்கு எதிராக எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி செய்திகளை பரப்பி பீதியூட்டியது பாப்புலர் ஃப்ரண்டும், பங்களாதேஷின் ஹூஜி அமைப்பும் தான் என்று செய்தியை பரப்புரைச் செய்த ஊடகங்களின் பொய் அம்பலமாகியுள்ளது.
சைபர் தாக்குதல்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை திரட்டி மத்திய அரசுக்கு அறிக்கையை அளிப்பது கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆகும். நேசனல் டெக்னிகல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் என்ற இன்னொரு அமைப்பும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரண்டு ஏஜன்சிகளின் கீழ் மேற்கூறிய சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற அமைப்பு செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே இல்லாத அமைப்பின் பெயரால் அவதூறுச் செய்தியை பரப்பியதன் பின்னணியில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பெர்மூடா முக்கோண’ மாய மறைவுகள்: பகுதி-3!

பாகம் மூன்று

கேப்டன் ஸ்டீவரின் குரல், தரை கட்டுப்பாட்டு மைய ரேடியோவில், “எங்களது விமானங்கள் எந்த பொஸிஷனில் பறக்கின்றன என்பதை புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்” என்று கேட்டபோது, கீழே இருந்தவர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி ஏற்பட்டது.

வடகிழக்கு மாநிலத்தவர்களை பீதியில் ஆழ்த்திய பிரச்சாரம்: ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்களுக்கு தடை!

CAG raps atomic authority for sleeping over nuclear safety
புதுடெல்லி:வடகிழக்கு மாநிலத்து மக்களை பீதியில் ஆழ்த்தி அவர்கள் கூட்டமாக வெளியேறக் காரணமான வதந்தி செய்திகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு தடைச்செய்த 20 சதவீத இணையதளங்களும் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்களுக்கு சொந்தமானவை என்று டைம்ஸ் ஆஃப் நாளிதழ் கூறுகிறது.
துவக்கத்தில் சோஷியல் நெட்வர்கிங் இணையதளங்கள் மூலமாக பாகிஸ்தான் இந்தியாவில் பீதியை கிளப்பி கலவரத்தை தூண்டுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அஸ்ஸாமில் நடந்த கலவரத்தின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உளவுத்துறை கடத்திய விமானம்:பகுதி-3!

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் திட்டமிட்டு நடத்திய விமானக் கடத்தல் 3 பாகம் நியூஸ் ஸ்டோரியின், இறுதிப் பாகம் இது. 1-ம், 2-ம் பாகங்களை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்து படிக்கவும்!
முனீர் செலுத்திய விமானத்தின் நகர்வை ஈராக்கின் தரை எல்லைப்புற கட்டுப்பாட்டு மையம் ஒன்றின் ரேடாரில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் குழம்பிப் போனார்கள். தரையிலிருந்து விமானத்துக்கு ரேடியோ தொடர்பை ஏற்படுத்த முயன்றார்கள்.

அஸ்ஸாம் தாக்குதலை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்


கர்நாடகா மாநிலம் சிக்மங்கலூர் மாவட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரணி பழைய தாலுகா அலுவலகத்தில் தொடங்கி DC அலுவலகத்தில் நிறைவுற்றது.


ஆர்ப்பாட்டத்தில் அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் போடோ தீவிரவாதிகளுக்கு எதிராகவும் , அஸ்ஸாம் மாநில அரசாங்கத்தின் கையாலாகாத தனத்திற்கு எதிராகாவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தில் பேசிய மாவட்ட செயற் குழு உறுப்பினர் அல்தாப் அவர்கள் \\\" வங்க மொழி பேசும் அஸ்ஸாமிய முஸ்லிம்களை வங்கதேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்கள் என்று கூறி வரும் RSS இயக்கத்தை வன்மையாக கண்டித்தார் \\\".

Thursday, August 23, 2012

உளவுத்துறை கடத்திய விமானம்:பகுதி-2!


இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் திட்டமிட்டு நடத்திய விமானக் கடத்தல் நியூஸ் ஸ்டோரியின், 1-ம் பாகத்தின் தொடர்ச்சி இது. 1-ம் பாகத்தை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்து படிக்கவும்!
தாம் விமானத்தை கடத்தப் போகும் விஷயம் தெரிந்துவிட்டதா என்று உள்ளே பதட்டமாக இருந்தாலும், அதை வெளியே காண்பிக்காமல் இயல்பாக இருந்தார் விமானி முனீர்.
விமானப் படையின் கன்ட்ரோல் ரூமுக்குச் சென்று, அவருக்குரிய பிளைட்-பிளானை (flight plan) பெற்றுக் கொண்டார். அப்போதுதான் கொஞ்சம் பயம் ஏற்பட்டது. காரணம் இவருக்கு கொடுக்கப்படும் பிளைட்-பிளான் எப்படிப்பட்ட பிளைட்-பிளானாக இருக்க போகின்றது என்பது அது கையில் கிடைக்கும்வரை தெரியவராது.

நியூயார்க் போலீஸ்: 6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்து என்ன கிடைத்தது?


நியூயார்க் ஏரியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்களை ஆறு வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட கிடைக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது நியூயார்க் போலீஸ் NYPD (New York Police Department)
நியூயார்க் கோர்ட்டில் நடைபெறும் சிவில் உரிமை வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த NYPD துணைத் தலைவர் தாமஸ் கலாடி, கோர்ட்டில் இதை ஒப்புக்கொண்டார்.
முஸ்லிம் மக்களை உளவு பார்ப்பதற்காக டெமோகிராஃபிக்ஸ் யூனிட் என்ற பிரிவு ஒன்றை அமைத்து, அதில் பல உளவாளிகளை பணியில் அமர்த்தியிருந்தது நியூயார்க் போலீஸ். காவல்துறையின் உளவு பார்க்கும் பிரிவுகளில், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதும், இந்த பிரிவுக்குதான்.
கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஃபுல் ஃபோர்ஸில் இயங்கிவரும் பிரிவு இது.

முர்ஸியின் கேபினட்டில் பெண்கள், கிறிஸ்தவருக்கு இடம்!

Egypt's Mursi appoints Christian man, two women for his cabinet
கெய்ரோ:எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியின் கேபினட் அமைச்சரவையில் 2 பெண்களும், ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தைச் சார்ந்தவரும் இடம் பெற்றுள்ளனர். இத்தகவலை முர்ஸியின் செய்தி தொடர்பாளர் டாக்டர் யாஸிர் அலி தெரிவித்துள்ளார்.
காப்டிக் கிறிஸ்தவ சமுதாயத்தின் அறிவுஜீவியான ஸமீர் மார்க்கோஸ், பேராசிரியை அல் ஸர்காவி, எழுத்தாளர் சுகைனா ஃபுவாத் ஆகியோர் முர்ஸியின் கேபினட்டில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பெர்மூடா முக்கோண’ மாய மறைவுகள்: பகுதி-2!

பாகம் இரண்டு
“மேற்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. இப்போது கீழே கடல் தெரிகிறது. ஆனால் அது கூட வழமையாகத் தெரியும் கடல் போல இல்லை. எல்லாமே வித்தியாசம். நாங்கள் வேறு கண்டத்திலோ, கிரகத்திலோ இருக்கிறோமா?” என்று விமானத்தில் இருந்து வந்த ரேடியோ மெசேஜ்,  தரையில் இருந்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.
திசைகூடத் தெரியவில்லையா?
விமானங்கள் காலையில் தரையில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவற்றில் கோளாறுகள் எதுவுமில்லாமல் இருந்தன என்று மெக்கானிக்குகள் பரிசோதித்து கிளியரன்ஸ் கொடுத்திருந்தார்கள். அன்றைய தினத்தில் வானம்கூட முகில்கள் அற்று கிளியராக இருந்தது. மோசமான காலநிலை இல்லை. இரவு நேரம் அல்ல.

Wednesday, August 22, 2012

உளவுத்துறை கடத்திய விமானம்:பகுதி-1 !


ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி 1966ம் ஆண்டு.
இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு மிக முக்கியமான தினம். மொசாத்தின் தலைவர் அமீட் பேயர் தாமே நேரடியாக தேர்ந்தெடுத்த தினம் அது. எதற்காக? விமானம் ஒன்றை கடத்துவதற்காக!
அன்றைய தினத்தில் மிக்-21 ரக விமானம் ஒன்று மொசாத்தின் திட்டமிட்டபடி ஈராக்கிலிருந்து இஸ்ரேல்வரை கடத்தப்பட வேண்டும். விமானம் ஈராக் நாட்டு விமானப் படைக்கு சொந்தமானது.
மொசாத் சுமார் 8 மாதங்களாக போட்ட திட்டம் இது. ஈராக் விமானப் படையின் விமானி ஒருவரை அணுகி, அவரை வழிக்கு கொண்டு வந்திருந்தது மொசாத். (அதற்காக அனுப்பப் பட்டவர் ஒரு அழகிய பெண்)
ஈராக்கிய விமானிகள் பயிற்சிக்காக மிக்-21 போர் விமானங்களில் பறந்து ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு இறங்குவது வழக்கம். குறிப்பிட்ட விமானி பயிற்சிக்காக பறக்கும்போது, விமானத்தை அப்படியே ஈராக்குக்கு வெளியே கொண்டுபோய் இஸ்ரேலில் தரையிறக்க வேண்டும் என்பதே திட்டம்.
அதிலும் சின்னதாக தில்லுமுல்லு ஒன்று இருந்தது.

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘ பெர்மூடா முக்கோண’ மாய மறைவுகள்:பகுதி-1!

இது ஒரு முக்கோண கடல் பகுதி. இங்கு வந்த பல கப்பல்கள் மாயமாக மறைந்து போகின்றன. இந்த கடலுக்கு மேலே பறந்த பல விமானங்களும் மிஸ்ஸிங். என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.
காற்றில் கரைகின்றனவா? வேறொரு கிரகத்துக்கு இழுக்கப்படுகின்றனவா? அல்லது கடலின் அடிப்பகுதியை நோக்கி உறுஞ்சப்படுகின்றனவா?
இந்த கடல் பகுதியில் எத்தனையோ விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமானங்களிலோ இருந்த ஒருவரது உடல்கூட ஏன் இதுவரை கிடைக்கவில்லை?
உடல்களை விடுங்கள் – அவை சிறியவை. விபத்துக்குள்ளாகிய கப்பல்கள் அல்லது விமானங்களின் பாகங்கள் கூடக் கிடைக்காமல் மாயமாக மறைகின்றனவே. அது எப்படி?
இதுதான் பர்மியூடா முக்கோணம்
பல வருடங்களாக நடைபெற்றுள்ள ‘காரணம் கூறப்படாத விபத்துக்கள்’ எல்லாவற்றிலும், இப்படியான மாய மறைவுகள்தான் ஒரேயொரு ஒற்றுமை என்பது ஆச்சரியமாக இல்லையா?
இந்த இடத்தில் பொதிந்திருக்கும் மர்மம், எப்போது அவிழும்?
மேலே கூறப்பட்ட கேள்விகள் அனைத்தும் குறிக்கும் இடம் – பர்மியூடா முக்கோணம் (The Bermuda Triangle) எனப்படும் இடம். இந்த இடத்துக்கு மற்றொரு பெயர், பிசாசு முக்கோணம் (Devil’s Triangle).

அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு ஈரான் தலைமை தாங்குவது இஸ்ரேலுக்கு கவலை: ஈரான் அமைச்சர்!

A worker arranges the flags of the Non-Aligned Movement (NAM)
டெஹ்ரான்:அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு ஈரான் தலைமை தாங்குவதை இஸ்ரேலால் சகித்துக்கொள்ள இயலவில்லை என்று ஈரான் வர்த்தக அமைச்சர் மெஹ்தி கஸன்பாரி தெரிவித்துள்ளார். உலக தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு தலைமை தாங்குவதன் மூலம் ஈரான் அடையப்போகும் ஆதாயங்கள் குறித்து சியோனிஷ அரசு கவலை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இம்மாதம் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

அஸ்ஸாம் மக்களுக்கு எதிரான வதந்திகளில் சிக்க வைக்கும் முயற்சி: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

எஸ்.எம்.எஸ். வதந்தி
கொச்சி:தென்னிந்திய மாநிலங்களில் வாழும் அஸ்ஸாம் மக்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி செய்திகளுக்கான பழியை சுமத்தி பாப்புலர் ஃப்ரண்டை சிக்கவைக்கும் உண்மைக்கு புறம்பான ஊடகங்களின் செய்திகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று சில ஆன்லைன் பத்திரிகைகளும்,  தொலைக்காட்சி சானல்களும் அஸ்ஸாம் மாநிலத்தவருக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி செய்திகளின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேசனல் சைபர் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது என்று பரப்புரைச் செய்தன. இதனைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் மற்றும் கேரள மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி ஆகியோர் கலந்துகொண்டு அவதூறானச் செய்திக்கு மறுப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.

Tuesday, August 21, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெருநாள் தின விளையாட்டு போட்டி பரிசுகள் வழங்கும் விழா!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பெருநாள் தின விளையாட்டு போட்டிகள் கடந்த 3 நாட்களாக  புதுவலசையில் நடத்தப்பட்டு வந்தது. இதில் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், பொது மக்களுக்கு தனியாகவும் கால்பந்து,கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை பெருநாள் தினத்தன்று புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் அருகே நடைபெற்றது.

Sunday, August 19, 2012

ஈகைத் திருநாளில் சக மனிதர்களின் துயரங்களில் பங்கெடுப்போம் பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் வேண்டுகோள்

டெல்லி,18 :பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் E.M.அப்துல் ரஹ்மான் தன்னுடைய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தொரிவித்துள்ளார். இத்தருணத்தில் உலகில் இயற்கை மற்றும் பிற சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சுதந்திரம் மற்றும் நீதிக்காக போராடக்கூடிய மக்களுக்கு நம்முடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உள்ளம் உவகை கொள்ளும் பெருநாள்!

உள்ளம் உவகை கொள்ளும் பெருநாள்!
உள்ளத்தையும், உணர்வுகளையும் அல்லாஹ்வுக்கு கடன் கொடுத்த இரவு, பகல்களுக்கு ஆனந்தமான விடை. விசுவாசிகளுக்கு உள்ளம் நிறைய உவகையை அள்ளித் தருவதுதான் பெருநாள் தினம்.
இதய நரம்புகளில் மகிழ்ச்சி தாண்டவமாடும் புண்ணிய தினம். நோன்பில் சம்பாதித்ததை பெருநாளுடன் முடித்துக்கொண்டவர்களுக்கு ஈத்-தோல்வியின் நாளாக முடிவடையும். உள்ளம் நிறைய மகிழ்ச்சி தழும்பும் பொழுதும் வரம்புகள் மீறாத மனோநிலைதான் நமது சம்பாத்தியம்.
பெருமையுள்ள நாள் தான் பெருநாள். அல்லாஹ்வின் மகத்துவத்தால் இப்பூவுலகம் முழுவதும் பிரகாசிக்கும் தினம். உச்சபட்ச குரலில் எழும்பும் தக்பீர்கள் அல்லாஹ்விடம் நமது சமர்ப்பணத்திற்கு மீண்டும் ஒரு அடையாளமாகும்.

ஈகைத் திருநாளில் அமைதி நிலவிட பிரார்த்திப்போம். பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் பெருநாள் வாழ்த்து செய்தி

சென்னை - Aug 19: ரமலான் மாதத்தின் முக்கிய நோக்கமான தக்வா எனும் இறையச்சத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அதிகப்படுத்திதருவானாக.

உணவு துறந்து , உறக்கம் துறந்து , இறைபயந்து , ஒரு மாத காலம் நாம் மேற்கொண்ட பயிற்சி வாழ்நாள் முழுவதும் நிலைபெறச்செய்ய முயற்சிக்க வேண்டும். நம்முடைய தனி மனித வாழ்வு மட்டுமல்லாது சமூக வாழ்வும் மேம்பட இந்த ஈகை பெருநாளில் உறுதி பூண்டிடுவோம். 

கல்வி ,பொருளாதாரம் , சமூகபாதுகாப்பு போன்றவற்றில் சமூகம் மேம்பட நாம் உழைக்க வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த இந்நன்னாளில் அஸ்ஸாம் ,பர்மா, இந்திய சிறைகளில்  வாடும்  அப்பாவி சிறைவாசிகள், மற்றும் சிரியா என முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை மாற இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம். 

அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!

DSCF4657
துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:19) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.
காலை 5:00 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.12 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நமதூர் திருகுர்ஆன் ஓதும் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது

நமதூரில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் சிறுவர், சிறுமியருக்கு திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடத்தப்பட்டுவருகின்றது. இதனை தாசின் அறக்கட்டளை சார்பில் நமதூர் ஆலிம்களின் ஒத்துழைப்போடு சிறப்பான முறையில் செய்துவருகின்றனர். இதற்காக நமதூர் ஜமாஅத்தும் நல்ல ஊக்கமும், பங்களிப்பும் செய்துவருவது மகிழ்சியானது. இந்த வருடம் நடத்தப்பட்ட போட்டியில் திரளாக மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இதில் தஜ்வீது, கிராஅத், உச்சரிப்பு ஆகிய குர்ஆனை முறைப்படி ஓதுவதின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு நமதூர் பிரமுகர்களால் பரிசு வழங்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பெருநாள் தின விளையாட்டு போட்டி


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சமூக மற்றும் நலப்பணிகளை இந்தியா முழுவதும் செய்துவருகின்றது. இன்றைய நவீன உலகில் உடல் ஆரோக்கியம் பற்றிய கவலை நம் மக்களிடத்தில் குறைவு அல்லது இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதி வேக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிகழ்வை மாற்ற ஒவ்வொரு வருடமும் "ஆரோக்கியமான மக்கள் ஆரோக்கியமான தேசம்" என்ற செயல்திட்டத்தின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் உடல் பயிற்சி, யோகா, கராத்தே போன்றவற்றை ஊக்கபடுத்தியும், நடைமுறைபடுத்தியும் வருகின்றது.

அதன் ஓர் அம்சம் தான் பெருநாள் தினங்களில் விளையாட்டு போட்டிகள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தின் பெருநாள் தினங்களின் போது வாள் வீச்சு, அம்பு எறியும் போட்டி, மலயுத்தம் ஆகியவை நடத்தப்பட்டு பலத்தை திரட்டி கொள்ளுவதில் மக்கள் பங்களிப்பு செய்துவந்தனர்.

Thursday, August 16, 2012

"சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! கோவையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் தேசிய அளவிலான பிரச்சாரத்தின் துவக்க நிகழ்ச்சி.


சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தின் மீதான இது போன்ற பொய்யான நடவடிக்கைகள் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தவறான அடிப்படையில் சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “சட்டப்படி பிணையில் வீடு  அப்பாவிகளை விடுதலை செய்” என்ற தலைப்பில் வரக்கூடிய 2012 ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை தேசிய அளவிலான பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டம் - உளறும் தமிழக காவல்துறை!

நமது தேசம் 65வது சுதந்திர தின கொண்டாட்டத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. அனைவருக்கும் சுதந்திர தின  நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம். நமது முன்னோர்கள் ஜாதி, மத பேதமின்றி ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக  இரத்தம் சிந்தி போராடியதன் வெற்றிக் கனிதான் நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கும் சுதந்திர காற்று.
இப்படிப்பட்ட சுதந்திர தின விழாவைக் கெளரவிக்கும் விதமாகவும், சுதந்திர போராட்டத்தின்  தியாக நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக் குலுங்கச் செய்யும் விதமாகவும், சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும்,  ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பை பல மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு மதுரையிலும், 2009ம் ஆண்டு கும்பகோணத்திலும் 2010ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலும் இந்த நிகழ்ச்சியை  நாம் சிறப்பாக நடத்தியுள்ளோம்.  2011ல் நாம் நெல்லையில் நடத்த இருந்த சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் கடைசி நேரத்தில் அனுமதியை மறுத்து தனது சிறுபான்மையினர் எதிர்புணர்வை உறுதிபடுத்தினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தலைமயகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி

ஆகஸ்ட் 15,2012 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தலைமையகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.காலை 10 மணியளவில் ஒற்றுமை கீதத்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் ஷாஹித் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின் மாநில துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது .அதன்பின் சிறப்புரையாற்றிய மாநில துணை தலைவர்  பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக அனைவருக்கும் சுதந்திர தின  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அதை தொடர்ந்து  பேசிய அவர், ஊழல் எதிர்ப்பு போராளிகள் தொடங்கிஅனைவரும் வன்முறையை தங்களின் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். பழங்குடியினர் ,ஆதிவாசிகள், தலித்கள், முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகப்பட்டுள்ளது.

ஒராண்டு நிறைவு:கூடங்குளத்தில் இன்று அணுசக்தி எதிர்ப்பு மாநாடு

கூடங்குளத்தில் இன்று அணுசக்தி எதிர்ப்பு மாநாடு
நெல்லை:கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தொடங்கி ஓராண்டு ஆவதையொட்டி அணுசக்தி எதிர்ப்புக் குழு சார்பில் இன்று இடிந்தகரையில் மாநாடு நடைபெறுகிறது.
சுப.உதயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் வைகோ, சீமான் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் மிரட்டல் கோழைகளின் அடையாளம்! – ஈரான்!

General. Ahmad Vahidi in the capital Tehran
டெஹ்ரான்:தாக்குதல் நடத்துவோம் என்ற இஸ்ரேலின் மிரட்டலை பொருட்படுத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இத்தகைய விவேகமற்ற முயற்சிகளால் ஏற்படும் எதிர்கால பின்விளைவுகள் குறித்து இஸ்ரேலுக்கு தெரியும் என்று ஈரான் கூறியுள்ளது.
அர்த்தமற்ற பேச்சுக்களை நாங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என்று ஈரானின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பெரஸ்த் கூறியுள்ளார். தாக்குதல் மிரட்டல் என்பது கோழைகளின் அடையாளம் என்று ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி கூறுகிறார்.

சுதந்திர தின உரை:மத்திய அரசு மீது தலைமை நீதிபதி தாக்கு!

Justice Sarosh Homi Kapadia
புதுடெல்லி:இந்த ஆண்டின் சுதந்திர தின உரையை நாட்டின் உச்ச பதவியில் இருப்பவர்கள் தாக்குதல் உரையாகவே மாற்றிவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே குடியரசு தலைவர் தனது உரையில் ஹஸாரே குழுவினரின் போராட்டம் குறித்து ஒரு பிடி பிடித்திருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று(புதன்கிழமை) தனது சுதந்திர தின உரையில் மத்திய அரசை தாக்கியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) சுதந்திர தினக் கொடியேற்றி வைத்து அவர் கூறியது:
நீதிபதிகளின் பொறுப்புகளை வலியுறுத்தம் வகையில் அரசு சட்டம் இயற்றலாம். அதைக் கண்டு எங்களுக்கு பயம் இல்லை. ஆனால் அது நீதித்துறையின் சுதந்திரத்தை ஒடுக்கும் விதமாக இருத்தல் கூடாது.

Tuesday, August 14, 2012

எகிப்து:பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்- முர்ஸி அதிரடி நடவடிக்கை!

Egypt's president retires defense minister.
கெய்ரோ:எகிப்து ராணுவ தலைமை தளபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மார்ஷல் ஹுஸைன் தன்தாவியை பதவியை விட்டு நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் அதிபர் முஹம்மது முர்ஸி.
ஞாயிற்றுக்கிழமை மாலை முர்ஸியின் செய்தி தொடர்பாளர் யாஸிர் அலி தன்தாவி நீக்கப்பட்ட தகவலை தேசிய தொலைக்காட்சி சேனல் வாயிலாக அறிவித்தார். தன்தாவிக்கு பதிலாக அப்துல் ஃபத்தாஹ் அல் ஸீஸி நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் ராணுவ கவுன்சிலான ஸ்காஃபில் 2-வது இடத்தை வகிக்கும் ஸாமி அனானை அதிபரின் முக்கிய ஆலோசகராக நியமித்த முர்ஸி, எகிப்தின் மூத்த சட்ட வல்லுநரான மஹ்மூத் மக்கியை துணை அதிபராகவும் நியமித்துள்ளார். மேலும் அதிபரின் அதிகாரத்தை வெட்டிக் குறைக்கும் அரசியல் சாசன பிரிவுகளை ரத்துச் செய்துள்ளார்.

படிப்பினை!

வாசகர் பக்கம்
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஏற்ப்பட்ட சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது. அதன் காரணத்தால் அமெரிக்க தூதரகம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவேண்டும் என்று அவசர உத்தரவு.
விஷயம் என்னவென்று பார்த்தால் அமெரிக்க போலிஸ் ஒருவன் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கு சொந்தமான குருத்வராவுக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டான் இதில் 6 சீக்கியர்கள் பலியானார்கள் பலர் படுகாயம் ஆனார்கள். இது அமெரிக்க ராணுவம் செய்த படுபாதகச் செயல் இதை இந்தியன் மட்டும் அல்ல மனிதன் என்கின்ற முறையில் நாமும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் உள்ள இன்னொரு விஷயம் என்னவென்றால் உலக ரவுடி என்று தன்னை நினைத்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு தனது தூதரகம் அனைத்திலும் அவர்களது தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் இறக்கியது.

சிரியா விவகாரம்:ஈரானின் எச்சரிக்கைக்கு எர்துகான் பதிலடி!


Turkey issues 'frank, friendly' warning to Iran
அங்காரா:சிரியா சர்வாதிகார அதிபர் பஸ்ஸார் அல் ஆஸாதை பதவியில் இருந்து அகற்ற எதிர்ப்பாளர்கள் நடத்தும் போராட்டம் ஒன்றரை ஆண்டுகளை தாண்டியுள்ள சூழலில் அந்நாட்டு விவகாரம் தொடர்பாக ஈரான்-துருக்கி இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளன.
எதிர்ப்பாளர்களை கொடூர்மாக கொன்றொழிக்கும் பஸ்ஸார் அல் ஆஸாதை பதவியில் நிலை நிறுத்த ஈரான் ஆர்வமாக இருக்கும் வேளையில், எதிர்ப்பாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது துருக்கி.

Monday, August 13, 2012

அசாம் அகதிகளுக்கு உதவிடுவீர்! பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் வேண்டுகோள்!


அசாம் அகதிகள் முகாமில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவிக்கரம் நீட்டுமாறு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக போடோ இனத்தினர் நடத்திய கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயன்றளவு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

149 அகதிகள் முகாமில் அவர்களின் அடிப்படை தேவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 149 முகாம்களில் நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சிராங்கில் 25 முகாம்கள், சபாரில் 10 முகாம்கள், பிலாசிபாராவில் 55 முகாம்கள், போங்கைகாவ்னில் 7 முகாம்கள், கவுரிபூரில் 25 முகாம்கள், கோக்ரஜாரில் 27 முகாம்கள் என அவர்களின் தேவை என்ன என்பது கணக்கிடப்பட்டுள்ளது.

மும்பை வன்முறை:சதித்திட்டம் குறித்து விசாரணை நடத்த முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை!

Community leaders condemn Mumbai violence, appeal for calm
மும்பை:அஸ்ஸாம் மற்றும் மியான்மர் கலவரத்தை கண்டித்து மும்பையில் நடந்த போராட்டத்தின் போது உருவான வன்முறையில் 2 பேர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் நடந்துள்ள சதித்திட்டத்தை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்ஸாம், மியான்மர் கலவரத்தை கண்டித்து மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 22 வயதான அல்தாஃப் ஷேக், முஹம்மது உமர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மைதானத்தின் வெளியே சிலர் பீதியை கிளப்பிவிட்டதாக நேற்று முன்தினம் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

பங்களாதேஷ்:மஸ்ஜிதில் இடி-மின்னல் தாக்கி இமாம் உள்பட 13 பேர் மரணம்!

Imam among 13 dead as lightning strikes Bangladesh mosque
டாக்கா:வடகிழக்கு பங்களாதேஷில் இடி-மின்னல் தாக்கி மஸ்ஜிதில் இருந்த இமாம் உள்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தலைநகர் டாக்காவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஸுனாம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஸரஸ்வதிபூர் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Sunday, August 12, 2012

துருக்கியில் பூரண மத சுதந்திரம் – ரோமன் பாதிரியார் பாராட்டு!

Complete religious freedom in Turkey - roman bishop
இஸ்தான்புல்:இஸ்லாமியவாதிகள் ஆளும் துருக்கியில் பூரணமான மத சுதந்திரத்தை அனுபவிப்பதாக கிறிஸ்தவ மத நிறுவனத்தின் இயக்குநரான ரோமன் பாதிரியார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தைக் குறித்து பயப்படும் அளவுக்கு ஒரு சிறு சம்பவங்களை கூட எங்களது அண்டை அயலார்களான முஸ்லிம்களிடம் இருந்து நாங்கள் சந்திக்கவில்லை.

மியான்மருக்கு செல்லும் முதல் முஸ்லிம் நாடு துருக்கி!

Turkish Prime Minister Erdogan’s wife and a Myanmar refugee woman hug each other, crying
யங்கூன்:பர்மாவில் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளால் துயரத்தை அனுபவிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு துருக்கி நாட்டு குழு பார்வையிட்டதுடன் ஆறுதல் கூறி உதவிகளையும் வழங்கியது.
பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனா, அவரது மகள், வெளியுறவுத்துறை அமைச்சர் தாவூத் ஒக்லு மற்றும் அவரது மனைவி ஆகியோர் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

மஸ்ஜிதுல் அக்ஸா:ஜும்ஆ தொழுகையில் 3.5 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்பு!

Muslims pray in Al-Aqsa on penultimate Ramadan Friday
ஜெருசலம்:இஸ்லாத்தில் மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் ரமலானின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.
இஸ்ரேலின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் பரிசுத்தமான மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆவில் கலந்துகொண்டனர்.

Saturday, August 11, 2012

சர்வதேச குத்ஸ் தினத்தை நினைவு கூற பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு!

Al-Quds Day
சென்னை: ‘அல் குத்ஸ் தினத்தில்’ போராடி கொண்டிருக்கும் ஃபஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிக்க பாப்புலர் ஃப்ரண்டின் தமிழகத் தலைவர் இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இவர்கள் புரிந்து வரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காதவர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்டுவதில்லை.

வளர்ச்சியில் மோடியின் குஜராத்தை விட நிதிஷின் பீகார் முன்னிலை: மோகன் பாகவத் புகழாரம்!

RSS chief says Nitish govt far ahead of Modi's
புதுடெல்லி:வளர்ச்சியில் நரேந்திர மோடியின் குஜராத்தை விட நிதிஷ்குமாரின் பீகார் முன்னணியில் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் புகழாரம் சூட்டியுள்ளார்.
வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுக்கு அளித்த பேட்டியில் மோகன் பாகவத் இக்கருத்தை தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை தனது கட்டளைக்கு கீழ்படியவைக்கும் மோடியின் நடவடிக்கையில் ஏற்பட்ட வெறுப்பை மோகன் பாகவத் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

அஸ்ஸாம்:அகதி முகாம்களிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் – ஷப்னம் ஹாஷ்மி

Assam shabnam hashmi  claim bias in camps
புதுடெல்லி:அஸ்ஸாமில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அகதிகள் முகாமிலும் கடுமையான பாரபட்சம் காட்டப்படுவதாக மனித உரிமை ஆர்வலரும், தேசிய ஒருமைப்பாட்டுக்குழு உறுப்பினருமான ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.
உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்த ஷப்னம் ஹாஷ்மி அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மேலும் அவர் கூறியது:போடோ அல்லாத மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. சரியான உணவுகளோ, அத்தியாவசியப் பொருட்களோ கிடையாது. போடோக்கள் தங்கியுள்ள முகாம்களில் இறைச்சியும், மீனும் உள்பட பொருட்கள் விநியோகிக்கப்படும் பொழுது இதர மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் வாடுகின்றனர்.

ஹிந்து யாத்ரீகர்கள் இந்தியா செல்ல பாகிஸ்தான் அனுமதி!

Hindu pilgrims allowed entering India
இஸ்லாமாபாத்:ஹிந்து யாத்ரீகர்களை வாகா எல்லையில் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்கு செல்ல பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஹிந்து வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்வதற்காக 250 ஹிந்துக்கள் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் வாகா எல்லையில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்கள் இந்தியாவில் குடியேற்றம் நடத்துவதற்காக செல்வதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து பாக்.அரசு அவர்களை எல்லையில் தடுத்து வைத்தது.

Thursday, August 9, 2012

ரோஹிங்கியா முஸ்லிம் படுகொலை: துருக்கி தலைவர்கள் மியான்மர் பயணம்!

Turkish Delegation travels to Myanmar
அங்காரா:ரோஹிங்கியா முஸ்லிம்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு பலிகடாக்களாக மாறியுள்ள சூழலில் பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரப்பூர்வ தலையீட்டைக் கோரி துருக்கி நாட்டு தலைவர்கள் மியான்மர் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவும், பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனாவும் நேற்று  முன்தினம் மியான்மருக்கு புறப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“வாழ்வதற்காக போராடுபவர்கள்” – இன்று சர்வதேச ஆதிவாசிகள் தினம்!

வாழ்வதற்காக போராடுபவர்கள்
ஐக்கிய நாடுகள் சபை 2005-15 காலக்கட்டத்தை மரபின மக்களின்(ஆதிவாசிகள்) தசாப்தமாக கடைப்பிடிக்கிறது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி சர்வதேச ஆதிவாசிகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
“Indigenous Media, Empowering Indigenous Voices” (சுதேச ஊடகங்கள் மரபின மக்களின் குரல்களை பலப்படுத்துதல்) என்ற முழக்கத்தை இவ்வாண்டு முழக்கமாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது. ஆதிவாசி சமூகங்களின் பொருளாதார-சமூக முன்னேற்றம், கலாச்சார-சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு, சுகாதாரம் பேணல், மனித உரிமைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றிற்கு கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதே இத்தினம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.

எகிப்து:உளவுத்துறை தலைவர் நீக்கம் – முர்ஸி அதிரடி!

Mursi sacks intelligence chief
கெய்ரோ:எகிப்து உளவுத்துறை தலைவர் முராத் முவாஃபியிடம் பதவி விலகுமாறு அதிபர் முர்ஸி உத்தரவிட்டுள்ளார்.
ஸினாயில் ராணுவத்தினருக்கு எதிராக மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 16 எகிப்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய உளவுத்துறை தலைவராக முஹம்மது ரஃபாத் அப்துல் வாஹிதை முர்ஸி நியமித்துள்ளார்.

Wednesday, August 8, 2012

பத்ர் தரும் பாடம்!

பத்ர் தரும் பாடம்!
மனித குலத்திற்கு நேர்வழி காட்டும் புனித திருக்குர்ஆனை(2:185) இறக்கியருள அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம் தான் ரமலான்.
மனித சமூக வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை மாபெரும் மாற்றத்தை  எக்காலத்திலும் உருவாக்கிக் கொண்டிருக்கும் புரட்சி வேதம்தான் திருக்குர்ஆன். மனித சமூகத்திற்கு ஓர் பூரணமான விடுதலையை திருக்குர்ஆன் லட்சியமாக கொண்டுள்ளது. சாத்தானிய சக்திகளிடமிருந்து விடுதலை, ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, மனோ இச்சையில் இருந்து விடுதலை, உலகியல் வாழ்வின் அதி மோகத்தில் இருந்து விடுதலை ஆன்மீகத்தின் அபத்தமான பயணத்தில்  இருந்து விடுதலை மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நரகில் இருந்து விடுதலை – இவ்வாறு திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் விடுதலை கொள்கை உலகியல் மற்றும் மரணத்திற்கு பிந்தைய வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.

குவைத்தில் KIFF நடத்திய இஃப்தார் விருந்து நிகழ்ச்சி!

pic1
குவைத்:குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம்(KIFF) பாஹீல் கிளை நடத்திய இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நேற்று  மங்காபில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
சரியாக மாலை 5.45க்கு சகோதரர். ஷகீல் அவர்களின் துவக்க உரையுடன் இனிதே ஆரம்பமானது. மேலும் நிகழ்ச்சி அனைத்தையும் அவரே தொகுத்து வழங்கினார்.
பின்னர் கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்கள் “வெற்றி அடைந்த குரான்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள், அவர் குறிப்பிடும் போது “குரானை வாழ்வியல் நெறியாகவும், வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருந்தால் ஈருலகிலும் வெற்றியாளர்களாக திகழ முடியும் என்ற உண்மையை நினைவுபடுத்தினார்கள், அதை பல வரலாற்று சம்பவங்கள் மூலம் அழகுற எடுத்துரைத்தார்கள்”.

Dua For Gaza