Thursday, September 26, 2013

முஸஃபர்நகர்: பாப்புலர் ஃப்ரண்டின் துயர் துடைப்புப் பணிகள் துவங்கின!உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸஃபர்நகர் மாவட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கியுள்ளது.
புதானா தாலுக்காவில் உள்ள டோடா கல்யாண்பூர் கிராமத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள 200 குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக விநியோகிக்கப்பட்டன.

ஒரு மாதத்தில் 1,350 கோடி இந்தியாவின் முக்கிய தகவல்களை திருடிய அமெரிக்கா!


ரியோடி ஜெனீரா: ஒரு மாத காலத்திற்குள் இந்தியாவில் இருந்து சுமார் 1,350 கோடி தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் அரசியல் நிலவரம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி திட்டங்கள் குறித்த ரகசியங்களை அமெரிக்கா சேகரித்துள்ளது.
 
உலக நாடுகளை அமெரிக்கா பல ஆண்டுகளாக வேவு பார்த்து வருவதை அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்.எஸ்.ஏ.) முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்த ஊழியர் எட்வர்ட் ஸ்நோடென் சில மாதங்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

ஹைதராபாத் சமஸ்தானம் இணைப்பு: மிகப் பெரிய முஸ்லிம் இனப்படுகொலை குறித்து வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!


புதுடெல்லி: இந்தியா 1947ம் ஆண்டு பிரிக்கப்பட்டபோது, இடம் பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது.
 
ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது.

Tuesday, September 24, 2013

விசாரணைக் கைதிகளான முஸ்லிம்களில் பெரும்பாலோர் நிரபராதிகள்!: தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம்


mm

புதுடெல்லி: இந்தியாவில் விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் நீதிமன்றங்களால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்படுகின்றனர் என்று தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2012-ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி மொத்த விசாரணைக் கைதிகளில் முஸ்லிம் விசாரணைக் கைதிகள் 21 சதவீதம் ஆவர்.  17.75 சதவீதம் பேரை மட்டுமே  நீதிமன்றங்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளன.
விசாரணைக் கைதிகளில் ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் 69.92 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் தண்டிக்கப்பட்டவர்களின் சதவீதம் இதைவிட அதிகம்.

Monday, September 23, 2013

நைரோபி வணிக வளாக தாக்குதல்: சென்னை என்ஜீனியர் பலி!கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள  வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்காளின் என்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வெஸ்ட் கேட்’ என்ற வணிக வளாகத்திற்குள் 10 க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகள் நேற்று முன்தினம் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் வகுப்புக் கலவரம்: 10 ஆண்டுகளில் 2500 பேர் பலி!இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த வகுப்புக் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 ஐ தாண்டியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த 8473 கலவரங்களில் கிட்டத்தட்ட 2500 பேர் கொல்லப்பட்டதாகவும், 28.688 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முஸாஃபர் நகர் கலவரம்: கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு சிறை அதிகாரி வரவேற்பு!


bjp

உரய்: முஸாஃபர் நகர் வகுப்புக் கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோமிற்கு சிறை அதிகாரி கை கூப்பி வரவேற்கும் காட்சி வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜலோன் மாவட்டத்தில் உள்ள உரய் சிறைக்குள் நுழையும் சோமிற்கு சிறை அதிகாரி எல்.பி. சிங், கை கூப்பி வரவேற்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. சிறை அதிகாரியுடன் நிற்கும் சில போலீஸ் அதிகாரிகள் சோமிற்கு சல்யூட் அடிக்கின்றனர்.

Saturday, September 21, 2013

ஆற்றங்கரை முதல் கோப்பேரிமடம் வரையிலான சாலையை சீரமைக்க கோரி SDPI கட்சி நடத்தும் தொடர் முழக்க போராட்டம்...!


‘மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்!’ - பாஜகவின் விமர்சனத்திற்கு எழுத்தாளர் அனந்தமூர்த்தி பதிலடி!குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி தெரிவித்தார்.
பெங்களூரில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

‘உலக முஸ்லிமா 2013’ பட்டத்தை வென்றார் நைஜீரியா பெண்!


ஜகார்த்தா: 2013ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறுவதாக இருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு வலுக்க பாலீ தீவுக்கு அப்போட்டி மாற்றப்பட்டது.
 
இந்நிலையில் உலக அழகிப் போட்டிக்கு எதிராக முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகிப் போட்டி புதன்கிழமை நடந்தது. இஸ்லாமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

முஸாஃபர் நகர்: அகிலேஷ் யாதவிடம் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மனு!


Chairman  and General Secretary with Mr. Arun Kumar, DGP (law and order)

புதுடெல்லி:முஸாஃபர் நகர் கலவரத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மற்றும் கலவரத்தை தூண்டிய அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமுதாய தலைவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மனு அளித்துள்ளனர்.கடுமையான கலவரத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் வேகமான வளர்ச்சியை நோக்கி இஸ்லாம்!


வாஷிங்டன்: அமெரிக்காவில் ஸ்பானிஷ் வம்சாவழியினர் மத்தியில் இஸ்லாத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
 
ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான ஹிஸ்பானிக்குகள் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிபரப்படி ஹிஸ்பானிக் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாகும்.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டருக்கு நீதி வேண்டி மாணவர்கள் பேரணி!


புதுடெல்லி: பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்து 5 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகம் நோக்கி பேரணி நடத்தினர்.
 
முஸ்லிம் வேட்டையை நிறுத்துங்கள்! அரச பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்! உள்ளிட்ட முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

வி.ஹெச்.பியின் மாநாட்டில் இருந்து உலக மத பாராளுமன்ற கவுன்சில் விலகல்!


வாஷிங்டன்: அமெரிக்காவின் ஷிகாகோவில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடுச் செய்திருந்த நிகழ்ச்சியில் இணை ஏற்பாட்டாளராக செயல்பட்ட உலக மத பாராளுமன்ற கவுன்சில் (சி.பி.டபிள்யூ.ஆர்) விலகியுள்ளது.

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்ததின விழாவையொட்டி வி.ஹெச்.பியின் அமெரிக்க பிரிவு நடத்தும் நிகழ்ச்சியில் சி.பி.டபிள்யூ.ஆர் இணை ஏற்பாட்டாளராக இருந்து வந்தது. இந்நிலையில் அவ்வமைப்பு இப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளது.

Thursday, September 19, 2013

முஸாஃபர் நகர் : கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் நேரில் சந்திப்பு


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் K.M.ஷெரிப் அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 16 அன்று, உத்திரபிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இருப்பிடங்களை விட்டு பிற கிராமங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்தனர். 

முஸாஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் ! துண்டு பிரசுரம் மற்றும் ஜும்ஆ சர்குலர்  • ஆகஸ்ட் 27, 2013 முதல் உத்திரபிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்திற்கெதிராக மிகப் பெரிய அளவில் கலவரம்.

  • 50 க்கும் குறைவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆனால் உண்மை எண்ணிக்கை இதை விட 4 மடங்கு அதிகம்.

  • நூற்றுக்கணக்கான மக்கள் காயம் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் நாசம் அல்லது சேதம்.

  • கலவரத்தால் பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்ட கிரமாங்களிலிருந்து மக்கள் தப்பியோட்டம்.

  • 70000 க்கும் அதிகமான அகதிகள் பல்வேறு நிவாரண முகாம்கள் மற்றும் சக முஸ்லிம்களின் வீடுகளில் தஞ்சம்.

  • செப்டம்பர் 16, 2013 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தலைமையிலான குழு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நிலைமைகளை ஆராய்ந்தது.

  • கலவரத்தில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு உடனடி நிவாரணம் தேவை.

  • பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் அடங்கிய குழு பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நம்முடைய ஆதரவை நாடி முஸாஃபர்நகர் !
உணவு, உடைகள், மருந்துகள் மற்றும் சட்ட உதவி !!
இந்த புனித பணியில் நீங்களும் பங்கு பெற அழைக்கிறோம்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
184/229, 2 வது மாடி , லிங்கிச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001
தொலைபேசி : 044 - 6461 1961. இணையதளம் : www.popularfronttn.org

10 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் SDPI கட்சி சட்டப் போராட்டம் மகளிரணி மாநில செயலாளர் பொதுநல வழக்கு !

sdpi womans wing
கடந்த 15 ம் தேதி அதிகாலை திருவள்ளூர் மாவட்டம் சோழாவரம் அம்பேத்கார் நகரை சேர்ந்த மாரிமுத்து இவரது 10 வயது மகள் 4 ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது காமுகர்களால் தூக்கி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

Wednesday, September 18, 2013

தமிழகத்தின் மனித உரிமை மீறலை கண்டித்து எழுச்சியுடன் ஆரம்பம் ஆன கோவை பொதுக்கூட்டம் "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக  தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6  வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடைபெறுகிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான  செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும்.

ஹெலிகாப்டர் திடீரென தரை இறங்கியதால் புதுவலசையில் பரபரப்பு

புதுவலசையில் நேற்று மாலை சுமார் 7:30மணியளவில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இயந்திர கோளாறால் திடீரென்று தரை இறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 உச்சிப்புளி கடற்படை விமான தளத்திலிருந்து இரவு நேர ரோந்துகாக 2 விமானிகளுடன் புறப்பட்ட இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் இயந்திர கோளாறு காரணமாக புதுவலசையில் தரை இறக்கப்பட்டது.. அதில் பயணம் செய்த 2 விமானிகளும் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.  

Tuesday, September 17, 2013

ஆற்றங்கரை முதல் கோப்பேரிமடம் வரையிலான சாலையை சீரமைக்க கோரி SDPI கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஆற்றங்கரை முதல் கோப்பேரிமடம் வரையிலான சாலையை சீரமைக்க கோரி SDPI கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை முதல் கோப்பேரி மடம் வரையில் உள்ள சாலையானது அப்பகுதியில் அமைந்து இருக்கும் 15க்கும் மேற்பட்ட ஊர்களை மாவட்ட தலை நகரமான இராமநாதபுரத்துடன் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையை பள்ளி,கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், வியாபரிகள், கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழித்தடத்தில் 8 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும், 3 தனியார் பேருந்துகளும் தினசரி இயக்கபடுகின்றன. 

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது நாட்டிற்கே அவமானம்!: எஸ்.டி.பி.ஐ.


asayeed_sdpi2

புதுடெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது நாட்டிற்கே அவமானமும், தலைகுனிவும் ஆகும் என்று எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய தலைவர் ஏ. சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு:
“மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத், வல்லபாய் படேல், இன்னும் எண்ணற்ற சுதந்திரப் போராளிகள் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்த தேசத்தை மீட்டெடுத்தனர். அப்படிப்பட்ட நாட்டில் நரேந்திர மோடி போன்றோர் பிரதமர் ஆனால் தேசத்திற்கு அவமானமும், தலைகுனிவும், கண்ணியக் குறைவுமே ஏற்படும். ஏனெனில், வகுப்புவாத அரசியலை தங்கள் வாழ்க்கை வழியாகக் கொள்பவர்களுக்கு மோடி ஓர் உதாரணப் புருஷன்.

அமெரிக்க கடற்படை தலைமையக துப்பாக்கி சூடு: கொலையாளி அடையாளம் தெரிந்தது!

திங்கட்கிழமை காலை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கடற்படை தலைமையக யார்டில் மர்ம நபர் ஒருவரால் நடத்தப்பட்ட பரபரப்பு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், துப்பாக்கியால் சுட்ட நபர் உட்பட. துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக கருதப்படும் மற்றொரு நபர் இன்னமும் சிக்கவில்லை.
அவர், அந்த பில்டிங்கில் இன்னமும் மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.

துருக்கி போர் விமானம் வானில் வைத்து சுட்டு வீழ்த்திய சிரியா நாட்டு ஹெலிகாப்டர்!

“சிரியா நாட்டு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக, யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமோ, அவர்களுக்கு தெரிவிப்போம்” என்று கூறியுள்ள துருக்கி, “நேட்டோ மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு விளக்கம் கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

துபாய் புதிய ஏர்போர்ட் டெஸ்ட் டிரைவ்: 48 மணி நேரத்தில் குவிந்த 1000 விண்ணப்பங்கள்!

துபாய் உலக மையத்தில் (DWC – Dubai World Central) அமைக்கப்பட்டு வரும், புதிய ஏர்போர்ட் சரியாக இயங்குகிறதா என பரிசோதித்துப் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு ஏராளமான பொதுமக்கள் ரெஸ்பான்ஸ் செய்யப்பட்டதை அடுத்து, புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி: மனைவியின் தோளில் தட்டிய கணவனுக்கு 20 சவுக்கடி!

சவூதி: மனைவியின் தோளில் தட்டிய கணவனுக்கு 20 சவுக்கடி!
கதீஃப்: தன் தோள் மீது கணவர் தாக்கியதாக பெண்ணொருவரின் முறையீட்டை விசாரித்த சவூதி, கதீஃப் நகர நீதிமன்றம் அந்தக் கணவருக்கு 20 சவுக்கடி கொடுக்க உத்தரவிட்டுள்ளது. 
அப்பெண், கணவர் மீதான தனது முறையீட்டை ஒருமாதத்துக்கு முன்பு செய்திருந்ததும், அதன் பொருட்டு மருத்துவச் சான்றிதழ் ஒன்றை அவர் ஆவணப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கணவர், தான் இயல்பாகவே மனைவியின் தோளில் தட்டியதாகக் குறிப்பிட்டார். பின்னர் அப்பெண் தங்களுக்குள் சமாதானமாகி விட்டதாகக் கூறி, தன் புகாரை திரும்பப் பெறுவதாகக் கூறிய போதிலும், நீதிமன்றம் தான் விதித்த தண்டனையை விலக்க மறுத்துவிட்டது.

உ.பி. கலவரத்தை தூண்டியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - SDPI மாநில செயற்குழுவில் தீர்மானம்

SWC
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 14.09.2013 அன்று திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது, நிஜாம் முகைதீன், நெல்லை முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியாக மாநில செயலாளர் அபூதாஹிர் நன்றியுரையாற்றினார்.

இஸ்ரேலும் இரசாயன ஆயுத பரிசோதனைக்கு தயாராக அழுத்தம் அதிகரிப்பு!சிரியாவை தொடர்ந்து இஸ்ரேலும் தங்களது இரசாயன ஆயுதங்களை ஐ.நாவின் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பிற நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்ற காரணம் காட்டி இஸ்ரேல் இதுவரை சர்வதேச இரசாயன ஆயுத ஒப்பந்தத்தை அங்கீகரிக்கமாட்டோம் என்று கூறி வந்தது.

‘ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க இயலாது!’ - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு!தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கப்போகும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
மேலும் அத்திட்டத்தை பழைய வழித்தடத்திலேயே  செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Saturday, September 14, 2013

சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறல்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது மத்திய, மாநில, பிரதேச அரசுகள் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அமர்வு பரிசீலித்து இந்த உத்தரவை வழங்கியது.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து SDTU சார்பாக நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்

SDTU PROTEST
மத்திய அரசு அநியாய பெட்ரோல் விலை உயர்வை முழுவதும் திரும்பபெற வேண்டும், என்னை நிறுவனங்கள் கைகளில் இருக்கும் விலை நிர்ணயிக்கும் உரிமையை உடனடியாக திரும்பப் பெற்று மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், மாநில அரசு பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை குறைத்து விளைவுயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (13.9.2013) சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு SDPI கட்சியின் தொழிற்சங்கமான சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன்(SDTU) சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண் முன்னால் சகோதரனை 3 துண்டாக வெட்டிக் கொன்ற காட்சியை நேரடியாக கண்ட பூனம் ஜஹாம்!


முஸாஃபர் நகர் : ‘நான் எதனையும் கூற விரும்பவில்லை. எப்பொழுது திரும்பிச் செல்வோம் என்பது மட்டுமே தெரியவேண்டும்.’ என சகோதரனை வன்முறையாளர்கள் வெட்டி வீழ்த்திய பிறகு 3 துண்டாக வெட்டி எறிந்த காட்சியை நேரடியாக கண்ட முஹம்மது பூர் கிராமத்தைச் சார்ந்த பூனம் ஜஹாம் கூறுகிறார்.
 
கடந்த ஐந்தாம் தேதி பூனம் ஜஹாம் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வேளையில் கடந்த 7-ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ஜாட் இனத்தைச் சார்ந்த வன்முறையாளர்கள் வீட்டை தாக்கினர். துப்பாக்கியால் சுட்ட கொடூரர்கள் குழந்தைகளை கூட சும்மா விடாதீர்கள் என்று முழக்கமிட்டனர்.

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? நெல்லையில் நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி முகாம்


தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், அநீதிகளைக் கண்டித்தும் எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரமும் நிறைவாக அக்டோபர் 6 ஆம் தேதி அன்று சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் சிறைநிரப்பு போராட்டத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பந்த் வன்முறைகள், கொலைகள், முஸ்லிம் பகுதிகளில் தேடுதல் வேட்டை, வெடி பொருட்கள் பறிமுதல், தீவிரவாதிகள் கைது, கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் போன்ற பீதிகளால் (Strategy of Tension ) முஸ்லிம்களை பொது சமூகங்களில் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலை ஒரு இருண்ட காலத்திற்கு கொண்டு செல்வதாகவே அமைந்துள்ளது. சட்ட வரம்புகள் அற்ற ஒரு வித்தியாசமான உலகில் வசிப்பதாகவே முஸ்லிம்கள் உணர்கிறார்கள்.

Thursday, September 12, 2013

உ.பி கலவரத்தில் அரசியல் சதி: ஷிண்டே!


muzafar nagar riots2

புதுடெல்லி:உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே சூசகமாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் முஸாஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை கலவரம் மூண்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆகியுள்ளது. வன்முறையில் காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செப்டம்பர் 15 - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 7 வருடம் கழிந்த ஆயுள் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்


செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை விதிப்படி, கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவர். கடந்த தி.மு.க. ஆட்சியில், 2007ம் ஆண்டில் 16 ஆயுள்தண்டனை கைதிகளும் , 2008ம் ஆண்டில் 1405 ஆயுள்தண்டனை கைதிகளும், 2009ம் ஆண்டில் 10 ஆயுள்தண்டனை கைதிகளும் மற்றும் 2010ம் ஆண்டில் 13 ஆயுள்தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
அதே போல் கடந்த அ.தி.மு.க ஆட்சியில், 1992ல் 230 ஆயுள்தண்டனை கைதிகளும் மற்றும் 1993ல் 132 ஆயுள்தண்டனை கைதிகளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அண்ணா பிறந்த நாளில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலையாகும் வழக்கத்திற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது பொது சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முஸாஃபர் நகர் கலவரம் - பின்னணியில் பா.ஜ.க வின் மதவாத அரசியல் : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!


புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் நடந்து வரும் கலவரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சமூகங்களிடையே பா.ஜ.க வெறுப்பு மற்றும் பகைமையை தூண்டுகிறது. கலவரத்தில் அப்பாவிகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தை உடனடியாக தடுக்காவிட்டால் மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் பரவும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. உள்ளூர் சம்பவத்தை பல உயிர்களை பறிக்கும் வகையில் மிகப்பெரிய கலவரமாக மாற்றியதில் பா.ஜ.க எம்.எல்.ஏ முக்கிய பங்கினை வகித்துள்ளார்.

Wednesday, September 11, 2013

பாடப் புத்தகங்களில் காவி மயம்!-எதிர்ப்பு வலுக்கிறது!

புதுடெல்லி: பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் மீண்டும் காவிமயம். இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
கர்நாடாக மாநிலம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆளும் சில மாநிலங்களிலும் வரலாறு, சமூக அறிவியல் ஆகிய பாடப் புத்தகங்களில் கற்பனைக் கதைகளை இணைத்துள்ளனர்.
இஸ்லாம், கிறிஸ்தவம் குறித்து மாணவ, மாணவிகளின் உள்ளங்களில் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகள் பாடப் புத்தகங்கள் முழுக்க காணப்படுகிறது. அறிவியல் பாடப் புத்தகங்களில் கண்டுபிடிப்புகளுக்கு பதிலாக புராணக் கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

முஸாஃபர் நகர் கலவரம்: எஸ்.டி.பி.ஐ. கண்டனப் பேரணி!


sdpi

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற்று வரும் கலவரத்தைத் தடுக்கத் தவறியதோடு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத சமாஜ்வாதிக் கட்சி தலைமையிலான அரசைக் கண்டித்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா சார்பாக டெல்லியில் உள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் வீட்டை நோக்கி கண்டனப் பேரணி மற்றும் தர்ணா நடைபெற்றது.

Tuesday, September 10, 2013

‘அயோத்தியின் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு‘

1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல் பாபர் மசூதியினுள் அத்துமீறி நுழைய முற்படுகிறது. அபிராம் தாசு ஒரு சிறு ராமர் சிலையை தன் மார்போடு அணைத்திருக்கிறார். பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளரான முகமது இசுமாயில் விபரீதத்தை உணர்ந்து அவர்களைத் தடுக்க முனைகிறார். அவர்கள் வெறி கொண்டு தாக்குகிறார்கள், இசுமாயில் உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார். தப்பி ஓடும் இசுமாயிலுக்கு ஒரு விடயம் உறுதியாகிறது, இனி வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்க போகிறது, இனி பாபர் மசூதி முன்னெப்போதும் போல் இருக்கப் போவதில்லை.

முஸாஃபர் நகர் கலவரம்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு! விசாரணை நடத்த கமிஷன் நியமனம்!உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி விஷ்ணு சஹாய் தலைமையில் விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளதாக மாநில உள்துறைச் செயலாளர் கமல் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாநிலத்தில் கலவரத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி 3 பேர் கொல்லப்பட்டனர். அதன் எதிரொலியாக மாவட்டத்தில் சனிக்கிழமை இரு வகுப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. அங்கு ராணுவம் இரண்டாவது நாளாகத் திங்கள்கிழமையும் கொடி அணிவகுப்பை நடத்தியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: கலெக்டர் நந்தகுமார் அறிவிப்பு

இமானுவேல்சேகரன் நினைவு தினம், தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு கலெக்டர் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இன்று முதல் 144 தடை உத்தரவு அமுலுக்கு வருவதால் இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

Monday, September 9, 2013

முஸாஃபர் நகர் கலவரம்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு! 4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது எப்.ஐ.ஆர். தாக்கல்!


muz

முஸாஃபர் நகர்: உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸாஃபர் நகர் மாவட்டத்தில் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளது. வகுப்புக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “காயமடைந்துள்ள 45 பேர் வெவ்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று உ.பி. மாநில உள்துறை செயலாளர் கமல் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறினார்.

கொல்கத்தா மருத்துவமனையில் 5 நாட்களில் 35 குழந்தைகள் மரணம்!


kolகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 35 பச்சிளம் குழந்தைகள் இறந்து போனதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பி. சி. ராய் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் உரிய மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளிக்கத் தவறி விட்டதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் குழந்தைகள், மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களைக் காப்பாற்ற மருத்துவர்களால் ஏதும் செய்திருக்க முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.

இரசாயன ஆயுதத்தை சிரியாவுக்கு வழங்கியது பிரிட்டன்! டெய்லி மெயில் பத்திரிகையின் அதிர்ச்சி செய்தி!சிரியாவுக்கு இரசாயன ஆயுதத்தை வழங்கியது பிரிட்டன் என்ற தகவலை  லண்டனில் இயங்கும் டெய்லி மெயில் பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவுக்கு சோடியம் ஃப்ளூராய்டை விற்க 2004-ஆம் ஆண்டிற்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையே பிரிட்டீஷ் அரசு ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Saturday, September 7, 2013

அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !

திண்டுக்கல் பிரவீன் குமார்
நிகழ்வு 1 : கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சவுராசி பரிக்ரமா யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது விசுவ இந்து பரிசத் அமைப்பு. சரயு நதிக்கரையில் துவங்கி அயோத்தி நகரைச் சுற்றி 250 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவிருந்த இந்த யாத்திரை, இந்துக்களை தட்டியெழுப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வி.எச்.பி அறிவித்திருந்தது. சுமார் 40,000 பேர் கலந்து கொள்ளக்கூடும் என்று அதிகார மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்த யாத்திரைக்காக சுமார் 200 பேர்கள் வரையே கூடியிருந்தனர். அவர்களைக் கைது செய்ததோடு யாத்திரைக்கு தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது காவல்துறை. 144 தடையுத்தரவைத் தொடர்ந்து வி.எச்.பி அறிவித்திருந்த ஆர்பாட்டங்களும் பிசுபிசுத்துப் போயுள்ளன.

ரிஹாபின் எம்.எஸ்.டபிள்யூ கல்வி உதவித்தொகை திட்டத்தின் 2-வது கட்டம் துவக்கம்!புதுடெல்லி : ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் என்ற அரசு சாரா அமைப்பு சமூக சேவை துறையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக மாஸ்டர் ஆஃப் சோசியல் வர்க் என்ற பட்ட மேற்படிப்பை பயில கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் 2-வது கட்டத்தை ரிஹாபின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில் கூறியது :

ரிஹாபின் திட்டங்கள் அமல்படுத்தும் கிராமங்களைச் சார்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் சமூக சேவையில் பங்குபெறச் செய்வதற்கான ஒரு முன்னேற்றமான திட்டம் இது. ஒரு சமூக சேவகரின் ஈடுபாடு, அர்ப்பணத்தை ஒவ்வொரு மாணவரும் தனது படிப்புக் காலத்தில் பேணவேண்டும். சமூக சேவையில் ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கினை நிறைவேற்றவேண்டும். இவ்வாறு இ.அபூபக்கர் தெரிவித்தார்.

மோடியை கைது செய்ய அரசு சாரா அமைப்பு கோரிக்கை!: வன்சாராவின் கடிதம் எதிரொலி!


mod

அஹ்மதாபாத்: ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி. வன்சாராவின் பரபரப்பை ஏற்படுத்தும் இராஜினாமா கடிதம் வெளியாகியுள்ள சூழலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கைது செய்ய வேண்டும் என்று அரசு சாரா நிறுவனம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
குஜராத் அரசின் உயர்மட்டத்தில் நடந்த சதித் திட்டத்தையே தான் அமல்படுத்தியதாக வன்ஸாரா தனது இராஜினாமா கடிதத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சதித்திட்டத்தில் பங்குடைய மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை கைது செய்து குஜராத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அரசு சாரா நிறுவனமான ஜன் சங்கர்ஷ் மஞ்சின் கன்வீனர் அமரீஷ் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

Wednesday, September 4, 2013

சிறப்பு காவல் இளைஞர் படை ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்

ராமநாதபுரத்தில் சிறப்பு காவல் இளைஞர் படை யில் சேர விண்ணப்பங் கள் வினியோகிக்கப்பட் டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியை மேம்படுத்தும் வகையில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என்று முதல் -அமைச்சர் ஜெயலலிதா அறி வித்திருந்தார்.

அத்வானிக்கு எதிரான பாபர் மசூதி வழக்கு : முன்னரே விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

புது டெல்லி: உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992, டிசம்பர் 6ஆம் தியதி பாஜக உட்பட சங்பரிவார் தலைவர்களின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
இது தொடர்பான  சதி வழக்கு, அத்வானி உட்பட 20 சங்பர்வார் தலைவர்கள் மீது போடப்பட்டு, ரேபரேலி தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், அத்வானி உட்பட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை அலகபாத உயர்நீதி மன்றம் விசாரித்து, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தி 2010 மே 21ஆம் தியதி உத்தரவிட்டது.

மசூதி மீது பன்றி ரத்தம் தெளிப்பு - நாசவேலையில் ஈடுபட்டவர்களுக்கு வலைவீச்சு!

கியூபெக்: கனடாவில் மசூதியைச் சுற்றி பன்றி ரத்தம் தெளித்து நாச வேலையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
கனடாவின் கியூபெக் பகுதியில் அமைந்துள்ள மசூதி மீது பன்றி ரத்தம் தெளிக்கப் பட்டுள்ளதோடு மசூதியின் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளன,
இதற்கிடையே பன்றி ரத்தம் தெளித்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் இஸ்லாம் பற்றி தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுகிறது. எனினும் இச்செயலுக்கு இதுவரை யாரும் பொருப்பேற்கவில்லை.

வறுமை மூளையை பாதிக்கும்! - இந்திய, அமெரிக்க விவசாயிகளிடம் நடத்திய ஆய்வில் தகவல்!வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வு முடிவுகள் சயன்ஸ் (science) விஞ்ஞான இதழில் வெளியாகியுள்ளன.
முன்னர் வெளியாகியிருந்த தகவல்களின்படி, வறுமைக்கும் தவறான முடிவுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆனால், அதற்கான மூல காரணங்கள் சரியாக தெளிவில்லாமல் இருந்தன.

Dua For Gaza