டி.ஜி.ஜேக்கப் எழுதி எம்பவர் இந்தியா ப்ரஸ் (Empower India Press) வெளியீடான ’லெஃப்டு டு ரைட் - டிக்ளைன் ஆஃப் கம்யூனிஸம் இன் இந்தியா’ (Left to Right - Decline of Communism in India) என்ற நூல் கல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய இரு இடங்களில் ஏப்ரல் 14 , 2013 அன்று வெளியிடப்பட்டது.
புது டெல்லியில் இந்தியன் இஸ்லாமிக் கல்சுரல் செண்டரில் நாவலாசிரியரும், ஜாமிஆ ஹம்தர்த் பல்கலைக்கழக பேராசிரியருமான இஷ்தியாக் டானிஷ் நூலை வெளியிட்டார். நூலை வெளியிட்ட இஷ்தியாக் கூறுகையில்,’இந்தியாவில் கம்யூனிசத்தின் உண்மையான நிலையை இந்நூல் அடிக்கோடிட்டு காண்பித்திருக்கிறது.ரஷ்யா, சீனா நாடுகளில் இருந்து கம்யூனிசத்தை அதே நிலையில் இந்தியாவில் இறக்குமதிச் செய்ய முயன்றதே இங்கு கம்யூனிஸத்தின் பரிதாபகரமான நிலைமைக்கு காரணம்’ என்று தெரிவித்தார்.
எம்பவர் இந்தியா ப்ரஸ்ஸின் மேலாண்மை இயக்குநரும், விடியல் வெள்ளி தமிழ் மாத இதழின் ஆசிரியருமான முஹம்மது இஸ்மாயீல் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இந்தியா நெக்ஸ்ட் அசோசியட் எடிட்டர் அஸ்ஃபர் ஃபரீதி, என்.சி.ஹெச்.ஆர்.ஓ (NCHRO)தேசிய செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் மற்றும் இந்தியா நெக்ஸ்ட் (India Next) பத்திரிக்கையின் மேனேஜர் தன்வீர் ஆகியோர் பங்கேற்றனர்.
புத்தக வெளியீட்டு விழா - புது டெல்லி
முன்னதாக கல்கத்தாவில் ஹோட்டல் பார்க் இண்டர்நேஷனலில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தை ரங் தோனு (Rang Dhonu) பத்திரிகையின் ஆசிரியர் ஜைனுல் ஆபிதீன் அறிமுகம் செய்தார் . ஓய்வு பெற்ற IAS அதிகாரியும் சமூக ஆர்வளுருமான ஸ்வபன் குமார் பிஸ்வாஸ் நூலை வெளியிட திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிக்ராம் சர்கார் பெற்றுக் கொண்டு இருவரும் புத்தகம் குறித்து உரை நிகழ்த்தினர் . டெய்லி கலோம் (Daily Kalom) பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் அஹமது ஹசன் இம்ரான் , SDPI கட்சியின் மாநில தலைவர் தயீதுல் இஸ்லாம் மற்றும் சமூக ஆரவலரும் தலித் தலைவருமான சுக்ரித் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .
எம்பவர் இந்தியா ப்ரஸ்ஸின் மேலாண்மை இயக்குநரும், விடியல் வெள்ளி தமிழ் மாத இதழின் ஆசிரியருமான முஹம்மது இஸ்மாயீல் வரவேற்புரையாற்றினார். CPM கட்சியின் முன்னாள் அமைச்சர் ரெஜ்ஜாக் மொல்லாஹ் , பெண்டி முக்தி கமிட்டியின் மேற்கு வங்க மாநிலத்தின் பொதுச் செயலாளர் சாட்டன் தாஸ் , மேற்கு வங்க மாநிலத்தின் AIUDF துணைத்தலைவர் செய்யது ஜமீருல் ஹசன் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மேற்கு வங்க மாநில கமிட்டி உறுப்பினர் ஹகீகுள் இஸ்லாம் நன்றியுரையாற்றினார்.
புத்தக வெளியீட்டு விழா - கல்கத்தா
0 கருத்துரைகள்:
Post a Comment