புதுடெல்லி:முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டுப்படுகொலை நடக்கும் மியான்மரையும், தமிழர்களை இனப்படுகொலைச் செய்துவிட்டு அடுத்து முஸ்லிம்களின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை இந்தியா வலுவாக கண்டிக்கவேண்டும் என்று கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கையெழுத்து சேகரிப்பை நடத்தியது.டெல்லி பல்கலைக் கழகம், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
மியான்மரில் புத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 110 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 1,20,000 முஸ்லிம்களுக்கு வீடும், சொத்துக்களும் நஷ்டமடைந்துள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் மெஹ்பூப் ஸஹானா கூறினார். இலங்கையில் தமிழ் இனத்தவர்களை இனப்படுகொலைச் செய்ய முயற்சி துவங்கி பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தற்பொழுது அங்குள்ள முஸ்லிம் சிறுபான்மையினரை புத்த தீவிரவாத குழுக்கள் குறி வைத்துள்ளதாக ஸஹானா குற்றம் சாட்டினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment