திருச்சி ஜமால் முகம்மது தன்னாட்சிக் கல்லூரி +2 மாணவர்கள் மற்றும் மதரஸாக்களில் படித்து +2 தேர்வில் வெற்றி பெற்ற ஆண்/பெண் இருபாலருக்கும் தொழிற்கல்வி சார்ந்த பட்டயக் கல்வியை வழங்கவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலில் இத்தகைய பட்டயங்கள் வழங்கப்படுவதால் இந்திய அளவில் அங்கீகாரமுள்ளதாக இந்தப் பட்டயம் மதிக்கப்படும். இந்தப் பட்டயத்தை உருது மொழி மேம்பாட்டிற்கான தேசிய அமைப்பும் இணைந்து “0” லெவல் என்கிற சான்றுக்கான பட்டயக்கல்வியாக வழங்கவுள்ளது சிறப்புக்குரியது.

பொறியியல் பட்டக்கல்வியில் கற்பிக்கப்படுவதற்கு நிகரான கம்ப்யூட்டர் அடிப்படைகள், அதன் இயக்கம், அதில் அலுவலகம், தொழிலகம், திட்ட வரைவு முதலானவற்றை செய்யும் பணிகள் தொடர்பாகவும், இணையதளம்; அதன் வடிவமைப்பு, உருவம் உருவாக்கம் தொடர்பாகவும், வணிகவியலுக்குத் தேவையான கணக்கீடுகள், திறன் மேம்பாடு மற்றும் கம்ப்யூட்டர் மொழியான “சி” வழியில் தீர்வு காணும் நுணுக்கங்கள், இவற்றைப் போலவே உருது, இந்தி, அரபி மற்றும் தமிழ் மொழிகளில் கம்ப்யூட்டர் தட்டச்சு மற்றும் பக்கங்கள் வடிவமைப்பு, வரைகலை முதலியன பகுதி பகுதியாக இந்தப் பட்டயக் கல்வியில் வழங்கவுள்ளனர். பெண்கள் காலை வகுப்பிலும், ஆண்கள் மாலை வகுப்பிலும் கற்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்த கட்டணமே பெற்று இந்த பட்டயக் கல்விகளை திருச்சி ஜமால் முகம்மது தன்னாட்சிக் கல்லூரி வழங்கவுள்ளது சிறந்த சேவையாகும்.