Monday, March 28, 2011

அருண் ஜெட்லியிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் – ராம் விலாஸ் பஸ்வான்


PATNA AIRPORT MAI   PRESS  SE  BAT  KERTE  RAMVILAS  PASWAN
புதுடெல்லி:ஹிந்துத்துவா சக்திகள் தீவிரவாதத்தை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹிந்துத்துவா தேசிய வாதத்தை பா.ஜ.கவின் சந்தர்ப்பவாதம் என அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த சூழலில் அவரை தீவிரவாத வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டுமென பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க தூதரக அதிகாரியிடம் ஜெட்லி கூறியது ஹிந்துத்துவாவாதிகளின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
முஸ்லிம்களுக்கெதிரான துவேசத்தை வளர்ப்பதற்காகவே பா.ஜ.க ஹிந்துத்துவா தேசியவாதத்தை உபயோகிக்கிறது என லோக் ஜனசக்தியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக் தெரிவித்துள்ளார்.
ஹிந்துத்துவா என்பது உண்மையான சித்தாந்தம் அல்ல. முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை வளர்த்தி வாக்கு வங்கிகளை உருவாக்கத்தான் பா.ஜ.க முயன்றுள்ளது.
பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறுவதால் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் ஹிந்துத்துவா தேசிய வாதம் நன்றாக செல்லுபடியாகும் என அருண்ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் இது செல்லுபடியாகாது. பாராளுமன்றத் தாக்குதலைப் போல ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் டெல்லியில் நிலைமை மாறும் என ஜெட்லி அமெரிக்க தூதரிடம் கூறியிருந்தார்.
மலேகான்,அஜ்மீர்,மக்கா மஸ்ஜித்,சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சந்தர்ப்பவாத அரசியலுக்காக பா.ஜ.க தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது நிரூபணமாகியுள்ளது என அப்துல் காலிக் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியும் அருண் ஜெட்லியை சாடியுள்ளது.பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் மதத்தை சுய ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷக்கீல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்கள் வருகை: மெகாலி மைதானத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு!

இந்தியா -பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நடைபெறும் மைதானத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.ஆட்டத்தினை காண இரு நாட்டு தலைவர்கள் வருவதால் பஞ்சாப் மாநிலம் முழுவதும் தேசிய பாதுகாப்புப்ப‌டையினரின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ப‌ோட்டி பஞ்சாப் மாநிலம்‌ மொகாலியில் வரும் 30-ம் தேதி நடக்கிறது. ‌போட்டி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது. இதில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டியைக் காண இந்தியா வருமாறு பிரதமர் மன்மோகன்சிங் , பாகிஸ்தான், பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரி ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் கிலானி போட்டியை காண இந்தியா வருவதாக உறுதியளித்துள்ளார். கிலானி இந்தியா வருகை‌‌யையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிலானி தங்கவிருக்கும் தாஜ் ஹோட்டல் முழுவதும் தேசிய பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. தாஷ் ‌ஹோட்டலைச்சுற்றி 1200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் தேசிய பாதுகாப்புப்ப‌டையினரின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அது மட்டுமின்றி போட்டி நடைபெறும் மைதானத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. பாராமிலிட்டரியும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

நள்ளிரவில் புதைக்கப்பட்ட மூட்டையை தோண்டி எடுத்த போலீசாருக்கு அதிர்ச்சி!

நள்ளிரவில் தேர்தலுக்கு வினியோகிப்பதற்காக பண மூட்டை புதைக்கப்பட்டதாக வந்த தகவலால் காரைக்காலில் பரபரப்பு ஏற்பட்டது. புதைக்கப்பட்ட இடத்தை தோண்டிப் பார்த்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

காரைக்கால் தலத் தெரு தெற்கு தெரு பகுதியில், நேற்று நள்ளிரவு சாக்கு மூட்டையுடன் சென்ற மர்ம நபர், ஒரு வீட்டின் பின்புறத்தில் மூட்டையைப் புதைத்தார். சாக்கு மூட்டையுடன் சென்ற மர்ம நபரைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், காங்., வேட்பாளர் பி.ஆர்.திருமுருகன் தேர்தல் செலவுக்காக பணம் மற்றும் மதுபானங்களைக் கொடுத்து அனுப்பி புதைத்து வைத்துள்ளார் என, போலீசாரிடம் புகார் கூறினர்.
இதையெடுத்து, நகர போலீசார் ஒரு படையுடன் சென்று, அப்பகுதியில் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மர்மபொருள் புதைக்கப்பட்ட பகுதியில் பூக்கள், சில்லரை காசுகள் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம மூட்டை புதைக்கப்பட் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடந்தது.
அங்கு வந்த நபர் யார் என்று தெரியாது, தாங்கள் புதிதாக குடி வந்ததாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர். புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்க்க போலீசார் முடிவு செய்தனர். மர்ம பொருள் புதைக்கப்பட்ட பகுதியில் போலீசார் தோண்ட ஆரம்பித்தனர். குழியில் மூட்டை இருந்தது.
ஆர்வமுடன் மூட்டையை எடுத்த போலீசார், அதைத் திறந்து பார்த்த போது  மூட்டையில், ஒரு இறந்த நாயின் உடல் இருந்தது. போலீசார், வீட்டின் உரிமையாளர் செந்திலை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். "தன் வீட்டில் ஆசையாக வளர்த்த நாய் இறந்துவிட்டதால், அதை வாடகை வீட்டிற்கு கொண்டு வந்து புதைத்தேன் ' என அவர் தெரிவித்தார்.
பணம் புதைக்கப்பட்டதாக வந்த தகவலால் இரவு முழுவதும் பரபரப்புடன் இருந்த போலீசார், குழியில் இறந்த நாயின் உடல் இருந்ததைக் கண்டு நொந்துபோயினர்.

அரை இறுதியைக் காண அஜ்மல் கசாப்பை ஏன் அழைக்கவில்லை?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் அரை இறுதிப் போட்டியைப் பார்க்க பாகிஸ்தான் பிரதமர் கிலானி இந்தியா வருகிறார். இதனை சிவசேனை தலைவர் பால் தாக்கரே கடுமையாக எதிர்த்துள்ளார்.
இது சம்பந்தமாக சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார்.
அமைதி நடவடிக்கை என்ற பெயரில் மொஹாலியில் நடைபெறும் அரை இறுதிப்போட்டியைப் பார்க்க பாகிஸ்தானின் பிரதமரையும் ஜனாதிபதியும் அழைக்கும்போது மும்பை தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பும் நாடாளுமன்ற தாக்குதலின் குற்றவாளி அப்ஸல் குருவுக்கும் அழைப்பு விடுக்காமல் ஏன் அநீதி இழைக்கப்படுகிறது என பால் தாக்கரே காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாக்கிஸ்தான் அதிபர்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு கிரிக்கெட் பார்க்க வந்து சென்றாலும் பிரச்னைகள் தீராமல் எல்லை தாண்டிய தீவிரவாத செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எதிரி நாடு மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களின் காயங்களில் உப்பைத்தூவும் வேலையை நமது பிரதமர் மன்மோகன் சிங் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

திமுக-வுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு


ms08

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுல் ஆப்தீன், முதல்வர் கருணாநிதியை நேற்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்.
இச்சந்திப்பிற்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கூறுகையில்,”சட்டசபை தேர்தல் அறிக்கையில்,முஸ்லிம் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து எந்த கட்சி கூறுகிறதோ அதற்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தோம். தி.மு.க., தங்களது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை உயர்த்துவதாக கூறியிருப்பததோடு, அதற்கு முதல்வர் கருணாநிதியும் உறுதியளித்துள்ளார். எனவே, சட்டசபை தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து எதுவும் கூறப்படவில்லை. எனவே, அக்கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை” என்றார்.
TNTJ - TAMILNADU

அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடி​ப்பு

அஜ்மீரில் கர்வா கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடித்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிர் சேதம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு கடைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.


குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை என போலீஸ் கூறுகிறது. ஃபாரன்சிக் சயன்ஸ் பரிசோதனைக்குழு குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பரிசோதனை மேற்கொண்டது. இதனை அஜ்மீர் எஸ்.பி பிபின்குமார் பாண்டே தெரிவிக்கிறார்.உலகம்

இலவச நாப்கின் : தமிழர்களை கோமாளிகளாக்கும் பா.ஜ.க

180309bjp
தமிழகத்தில் வருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தின் முக்கிய இரு கட்சிகளான தி.மு.கவும்,அ.இ.அ.தி.மு.கவும் இலவசங்களை அள்ளி வீசி தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டன. தமிழர்களை சோம்பேறிகளாக்கும் அதேவேளையில் வேலை வாய்ப்பிற்கோ, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித அறிவிப்புகளும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் புறம்போக்கு கட்சியான பா.ஜ.க ஏதோ அடுத்து தாங்கள்தாம் ஆட்சிக்கு வருவதைப் போல கனவு கண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. புறம்போக்கு கட்சி எனக் கூறக் காரணம், தமிழகத்தின் பிரபலமான எந்த சிறுகட்சியும் கூட இவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் இருக்கிற மானமும் போய்விடும் என்ற பயம்தான் காரணம். இத்தகையதொரு கட்சியின் வெற்று தேர்தல் அறிக்கைக் குறித்து விமர்சிப்பதே நேரத்தை வீணடிப்பது என்றாலும், ஏதோ தாங்கள் பரிசுத்தவான்கள் என வேடமிட்டு சில அறிக்கைகளை வெளியிடுவதால் எவரேனும் இவர்களை நம்பிவிடக் கூடாது என்பதற்காக இவர்களது தேர்தல் அறிக்கையின் கோமாளித் தனத்தைக் குறித்து சிறிது அலசுவோம்.
மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி கூறியதாவது:
தமிழ்நாட்டில் 44 ஆண்டுகளாக நடந்து வரும் இருண்ட ஆட்சியை அகற்றி விட்டு, உன்னதமான ஆட்சியைத் தர முடியும் என்ற நம்பிக்கை பா.ஜ.க.வுக்கு உள்ளது. அதன்படி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா ஒளிர்கிறது எனக்கூறி இருந்த 5 ஆண்டுகளில் இந்தியாவை கொள்ளையடித்து, அறிவு சூன்யமாக்கி கற்காலத்திற்கு கொண்டு செல்லவிருந்த வேளையில் ஆட்சியை விட்டு விரட்டப்பட்டவர்கள்தாம் இவர்கள்.இந்நிலையில் இவர்கள் எப்படி 44 ஆண்டுகளாக நடந்துவரும் இருண்ட ஆட்சியை அகற்றப் போகிறார்கள். சக மனிதர்களையே கொடூரமாக கொலைச் செய்த அக்கிரமத்தை குஜராத்தில் அரங்கேற்றிய இந்த மாபாதகர்களால் எவ்வாறு ஒளிவீசும் ஆட்சியை கொடுக்கவியலும்?
*தமிழர்களின் உண்மையான புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்.
காஞ்சிக் காமகோடியும் இதைத்தான் சொல்றான். திராவிடக் கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி.
*சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அப்படியானால் அட்டவணைப்படுத்தப்பட்ட இந்து சமூகத்தைச் சார்ந்த 44 சாதியினர் பெறும் சலுகைகளெல்லாம் என்னாச்சு! அவங்க இந்து கிடையாதா? அவர்களுக்கு கிடைத்த சலுகையெல்லாம் இனி சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்குமா? இல்லை தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான சலுகைகளை பிடுங்கும் முயற்சியா?
*அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும்
என்னா அக்கறை போங்க! சமஸ்கிருதத்தை நடைமுறைப்படுத்தாமலிருந்தால் சரி! சமஸ்கிருதம்தான் தமிழ் என்று மாறிவிட்டதோ?
*மாணவர்களுக்கு வருட தொடக்கத்திலும், தேர்வு நேரத்திலும் பேனா, பென்சில் இலவசமாக கொடுக்கப்படும்.
பேனா, பென்சில் கூட வாங்கமுடியாத அளவுக்கு தமிழன் என்ன பிச்சைக்காரனா?
*அரசு பள்ளிகளில் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படும்.
பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை இதிலிருந்தே புரிந்துக் கொள்ளலாம். தி.மு.கவும், அ.தி.மு.கவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட பொழுது, இலவசங்களை அள்ளி வழங்கி தமிழர்களை சோம்பேறிகளாகவும், கையேந்துபவர்களாகவும் மாற்றுகிறார்கள் எனக் கூச்சல் போட்ட பொன்.ராதாகிருஷ்ணன், தற்பொழுது தான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் அதனை அப்படியே காப்பியடித்துள்ளார். கொள்கையே இல்லாத கட்சி என்பதற்கு இதுவே உதாரணமாகும்.
*6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு யோகா, தியானம் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும்.
கூடவே கிளிஜோஷியம், வாஸ்துவையும் கற்றுக்கொடுக்க வேண்டியதுதானே! ஹிந்துத்துவா மாநிலமாக மாற்ற நடக்கும் முயற்சி! தமிழர்களே ஜாக்கிரதை!
*வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டு இலவச பால் கொடுக்கப்படும்.
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் சிறந்த சத்தான உணவு என்பது மருத்துவர்களின் கூற்று. தண்ணீர் கலந்த பசும் பாலை கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் முயற்சியா?
*சுய உதவிக் குழுக்கள் மூலம் ‘நாப்கின்’கள் தயாரித்து ஏழைப் பெண்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக கொடுக்கப்படும்.
ஏற்கனவே காண்டம் வழங்கியது பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதில் வேறு நாப்கின் சப்ளையா? தமிழக மகளிரை இப்படி வேற கேவலப்படுத்தணுமா?
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்
அரபு நாட்டு சட்டம்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே குஜராத்தில் முஸ்லிம் பெண்களை வன்புணர்வுச் செய்து, வயிற்றைக் கிழித்து கருவிலுள்ள சிசுக்களையே தீயிலிட்டு பொசுக்கிய உங்களுக்கு என்னத் தண்டனையை தரணும்?
*இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்படும்
முதல்ல உனது கட்சிக்காரன்கிட்ட ஒழித்துவிட்டு மக்களுக்கு உபதேசம் செய்!
நதிநீர் இணைப்பு கொள்கைப்படி தமிழக நதிகள் இணைக்கப்படும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகாவில் உனது கட்சிதான் ஆட்சி செய்யுது. முதல்ல காவிரி பிரச்சனையை தீர்க்க வழியைப்பாரு. ஒகேனக்கல்லில் வேற உங்கட்சிகாரன் பிரச்சனையை கிளப்பிவிட்டுட்டான்.
*பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். அதுவரை விவசாயிகள் நலன்கருதி கள் இறக்க அனுமதிக்கப்படும்.
‘குடி குடியைக் கெடுக்கும்’ சொல்றாங்க. இவங்க என்னன்னா விவசாயிகள் நலன்கருதி கள் இறக்குவாங்களாம். ஒன்றைக்கூட ஒழுங்கா சொல்லமுடியல. இதுலவேற இருண்ட ஆட்சியை அகற்றப் போறாங்களாம்.
*அரசே சூப்பர் மார்க் கெட் நடத்தும்.
ஏற்கனவே இந்தியாவை 5 ஆண்டுகள் ஆட்சி செய்த பொழுது அடிமாட்டு விலைக்கு அரசு நிறுவனங்களை விற்றுத் தொலைச்சாச்சு!இப்ப சூப்பர் மார்கெட் நடத்தப் போறாங்களாம். வால்மார்ட், கேரிஃபோருடன் ஒப்பந்தம் போட்டார்களோ என்னவோ?
*அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும்.
அனைத்து சாதியினரும் கோயில்ல போய் ஒன்றாக கும்பிடவே முடியலே. மாறி மாறி சண்டைதான் நடக்குது. இதுலவேற அர்ச்சகர்களாக பணியாற்றப் போறாங்களாம்!
*ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒரு கறவை பசு மாடு இலவசமாக கொடுக்கப்படும்
கூடவே கோமியம் தொழிற்சாலை துவக்குவோம்னு  சொல்லியிருக்க வேண்டியதுதானே!
*கச்சத் தீவை திரும்ப பெற்று தமிழர்களின் மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்
கார்கில் போரில் சவப் பெட்டியில கூட ஊழல் செய்தது போதாதா?இப்ப கச்சத்தீவை மீட்பதற்காக போரா?
*வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றும் உரிமை ஆகாது. எனவே அச்சுறுத்தி ஆசைகாட்டி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகும். எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்.
இப்பத்தான் பூனைக்குடி வெளியே வந்திருக்கு.ஜாதிக் கொடுமை தாங்க முடியாமத்தானே மக்கள் வேற மதத்துக்கு போகிறார்கள்.அவர்களுடைய உரிமையை தடுப்பதுதான் கிரிமினல் குற்றம்.
பொன்.ராதாகிருஷ்ணன் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர்.குமரி மாவட்டத்தில் நாடார் சமுதாயத்திற்கு மேல்ஜாதி ஹிந்துக்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். ஜாதிக் கொடுமை தாங்க முடியாமல்தான் அய்யா வைகுண்டர் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி தனியாக ஒரு மதத்தையே உருவாக்கினார். ஜாதிக் கொடுமைகளால் குமரி மாவட்டத்தில் பெருமளவிலான நாடார்கள் கி்றிஸ்தவ மதத்திற்கு மாறினர். சொந்த சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைத்துவிட்டு மதமாற்றச் சட்டம் கொண்டுவர வேண்டுமென அறிக்கைவிடும் பொன்.ராதாகிருஷ்ணன் உயர்ஜாதி பாசிச பரிவாரத்திற்கு கொத்தடிமை என்பதை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஒட்டு மொத்தமாக பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை தமிழர்களை முட்டாள்களாக்கும், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும், தமிழகத்தை இருண்ட காலத்திற்கு கொண்டு செல்லும் அறிக்கையாகும்.
இவர்கள் ஒரு சீட்டைக் கூட தமிழகத்தில் பிடிக்க முடியாது என்பது வேறு விஷயம். ஆனால், இவர்கள் மீது பரிதாபப்பட்டு ஆறுதல் வாக்குகளை கூட அளித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையின் முட்டாள் தனத்தை இங்கே விளக்கினோம்.

மதுரை முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு


கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்து 4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

மேற்படி அத்துமீற‌ல் சம்மந்தமாகவும், மததுவேசமாகவும், நடந்து கொண்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், போடப்பட்டுள்ள பொய் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற ஆவண செய்யக்கோரியும் கடந்த 15.03.2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினரும், மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுடனும் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். பின்னர் மேற்படி மனுவை உள்துறைசெயலாளரும், டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, தென்மண்டல ஐ.ஜி., ஆகியோரும் பதிவு தபாலில் அனுப்பினோம். பின்னர் மதுரை மா நகர காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இது சம்பந்தமாக பல முறை புகார் செய்தோம்.

பின்னர் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட கோரி மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்டு அமைதியான முறையில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பின்னர் கடந்த 23.03.2011 அன்று மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பரிந்துரை செய்ய கோரினோம்.

கடந்த 22.03.2011 அன்று பல்வேறு மனித உரிமை அமப்புகள் ஒன்றிணைந்து உண்மை கண்டறியும் குழு ஒன்றை பேராசிரியரும் பிரபல எழுத்தாளருமான அ. மார்க்ஸ் அவர்கள் தலைமையில் உருவாக்கி பல்வேறு உண்மைகளை கண்டறிந்து கடந்த 23.03.2011 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையிலும் மேற்படி வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற இதுவரை உத்தரவிடாததால் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் உள்ள 90 ஜமாத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும், அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றினைந்து எதிர்வரும் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக மதுரை வாழ் முஸ்லிம்களை அனைவரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கேள்வி-க்கு SDPI தலைவர் பதில் அளிக்கிறார்


அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,  சமுதாய தலைவர்களிடம் ஒற்றுமையை   உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவர்களை  நேர்முகம் கானல்  பகுதி துவங்கப்பட்டது.  உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும்  தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை தங்கள் சமுதாய தலைவரிடம் கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

தமிழ் முஸ்லிம் இணையதள வரலாற்றில் முதன் முறையாக  கூத்தாநல்லூர் முஸ்லிம் இணையத்தளம் மற்றும் முத்துபேட்டை இணையத்தளம் இணைந்து வழங்கும் "சமுதாயத்தின் குரல்" கேள்வி பதில் பகுதியில் SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி அவர்கள், வாசகராகிய உங்களுடைய கேள்விக்கு பதில் தர இருக்கிறார், இன்ஷா அல்லாஹ்.

வாசகர்களே  தங்களுக்கு SDPI கட்சி பற்றியோ அதன் தேர்தல் நிலைப்பாடு பற்றியோ நம் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தை பற்றி  கேள்விகளை  எங்களுக்கு உடன் அனுப்பி வையுங்கள், இன்ஷா அல்லாஹ் உங்கள் கேள்விக்கான பதிலை சகோதரர் தெஹ்லான் பாகவி அவர்கள் விரைவில் தர இருக்கிறார்.

நிபந்தனைகள் :

  1. வாசகர்கள் கேள்வி கண்ணியமான முறையில் இருக்க வேண்டும். கண்ணியம் இல்லாத கேள்விகள் நீக்கப்படும்.
  2. மற்ற அமைப்புகளை குறை கூறுவதை தவிர்த்து கேள்வி கேளுங்கள்.
  3. தாங்கள் கேள்வி சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
  4. தாங்கள் கேள்வி வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 2 -April -2011

உங்கள் கேள்வியை பதிவு செய்ய இதை அழுத்தவும்.
Question

Wednesday, March 23, 2011

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை

தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13 யை நோக்கி அசுர வேகத்தில் பயனிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிளக்கல்ல இதனை பார்க்கும் பொழுது  அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவர்களாக  அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிதுவத்தை வெளிக்கொணரும் விதமாக தமிழகத்தில் 14 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தயாராகிவருகின்றனர். இதில் பேசப்படும் பெரிய கட்சிகளாக முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (SDPI) ஆகியவை மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தி இருக்கின்றன. இதில் முஸ்லீம் லீக் ஆளும் கட்சியான திமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், மமக எதிர்கட்சியான அதிமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், தேசிய அரசியல் கட்சியான SDPI இவ்விரு அணிகளையும் சாராமல் தன்னிச்சையாக ஆறு தொகுதிகளிலும் களம் காணும் என்று அக்கட்சிகளின் தலைமை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதே சூழலில் இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளையும் அறிவித்திருக்கின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அரசியலில்  நாம் போட்டியிடுவதில்லை ஆனால் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவற்றில் முஸ்லிகல் முன்னேற ஆவன செய்யும் கட்சிகளுக்கு ஆதரவு என்றும் மமக எங்கு போட்டியிடுமோ அங்கு அவர்களை தோற்கடிப்பதற்காக வேலைகளை செய்வோம் என்று அறிவித்திருக்கிறது. இதே பொன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அதிமுக-விற்கு தங்கள் ஆதரவு எனவும் முஸ்லிம் வேட்பாளர்கள் எங்கு போட்டியிடுவார்களோ அங்கு அவர்களூக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என அறிவித்திருக்கிறது. இதே போன்று அகில இந்திய இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தம் நிலைப்பாடு SDPI போட்டியிடும் அனைத்து இடங்களிலும் SDPI செயல்வீரர்களூடன் இணைந்து தங்கள் செயல்வீரர்களும் களப்பணி ஆற்றுவார்கள் என்று SDPI க்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலைப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இல்லாமல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருங்கினைந்து ஒற்றுமையோடு ஒரே கட்சியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் பரவலாக பேச்சு நடைபெறுகிறது. இனிமேல் அவ்வாறு பேசிக்கொண்டு இருப்பதில் பயனில்லை காரணம் இம்மூன்று கட்சிகளும் முடிவுகள் எடுத்துவிட்டது. இனி இதில் மாற்றங்கள் விளைய வாய்ப்புகள் இல்லை. நம் ஒற்றுமையை பற்றி இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தல் வருவதற்கு முன் பேசி சுமூக தீர்வுகாண விளைவதுதான்  புத்திசாலித்தனமாக இருக்கும். நமக்கு இருக்கும் சிறிய கால அளவை வீணடிப்பதை விட்டு விட்டு இந்த மூன்று கட்சிகளில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆராய்வோம்.
முஸ்லீம் லீக் – பல வருடங்கலாக அரசியலில் கூட்டனிவைத்து போட்டியிட்டு வருகின்றது வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஏதேனும் நலத்திட்டங்களோ அல்லது சமூக மாற்றத்திர்கான முயற்சிகளோ இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றதா என்றால் அநேக மக்களின் கருத்து இல்லை என்பதாகும். நிதர்சனமும் இதுதான். சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் செல்லும் நம் தலைவர்கள் நம்மை பற்றி பேசுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். இதனால் மக்களுக்கு இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நாம் இவர்களை தேர்ந்தெடுத்தோம் ஆனால் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இவர்களால் நமக்கு கிடப்பதற்கு வாய்புகளே இல்லை என்னும் அளவிற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சமூகத்தை பற்றி சிந்திக்காமல் சீட்டில் மட்டும் குறிவைத்து அதற்காக கூலைகும்பிடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
எந்த அளவிற்கு என்றால் சமீப காலத்திற்கு முன்னால் தோன்றிய சிறிய அரசியல் கட்சிகள் கூட தனகென்று தனி சின்னத்தை போராடி பெற்று அதில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ தன் பலத்தை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களோ காலம் முழுவதும் ஒரே சின்னத்தில் நின்று இரண்டு சீட்டிற்கும் மூன்று சீட்டிற்கும் காலில் விழாத குறையாக சமூகத்தின் தைரியத்தையும், பலத்தையும் சிதைத்துவிட்டனர். அதில் வெற்றி பெற்று சட்டசபை சென்றால் அங்கு குரல் கொடுக்க சொன்னால் கொரடாவில் இல்லாததை பேசக்கூடாது என்று விளக்கம் வேறு இவ்வாறு இருக்கும் இவர்களால் இந்த முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் இது ஒரு பழம் பெறும் கட்சி இது காயிதே மில்லத் சாஹிப் போன்ற சமூகத்திற்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  தமிழக அரசியலின் கடந்த கால வரலாறுகளை புரட்டினால் ஆட்சியில் யார் அமர வேண்டும் எனும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய கட்சியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த கட்சியின் இன்றைய நிலையை சற்று சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.
அதன் பிறகு உருவாகியுள்ள இரண்டு கட்சிகள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது மனித நேய மக்கள் கட்சியா அல்லது SDPI யா இதுவே இன்று நம் முன் இருக்கும் மிகப்பெறும் கேள்வி. இதில் சற்று தொலைநோக்கு பார்வையுடனும், நடுநிலையோடும் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். காரணம் இரண்டும் சமூகத்திறகாக கடினமாக உழைக்கும் கட்சிகள் இவர்கள் சட்டசபைக்கு சென்றால் நிச்சயம் நம் சமூகத்தின் நன்மைக்காக உறுதிகுழையாமல் உழைப்பார்கள். ஆனால் இதில் யாரை முதலாவதாக தேர்ந்தெடுப்பது. அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது  என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் களத்தை சந்தித்து அதில் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த தோல்வி அரசியல் அறிவை பெற மமக விற்கு துணைபுரிந்திருக்கிறது. அந்த அனுபவத்தோடு  இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் இணைந்து போட்டியிடயிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை தரும் கட்சியுடன் கூட்டனி அல்லது எங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு எங்களுடைய சமூகத்தின் முழு ஆதரவு என்று ஏதேனும் கோரிக்கை (Demand) வைத்ததாக நமக்கு தெரியவில்லை. இது சீட்டு தந்தால் போதும் என்று அதிமுக-வின் பின்னால் போய்விட்டார்களே என்று எண்ண தோன்றுகிறது. இருப்பினும் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது என்று அறிவித்திருக்கிறது.அதாவது திமுக வை தோறகடிக்க அரசியல் களம் காண இருக்கிறது மமக. எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் சீட்டை மட்டும் எதிர்பார்த்து ஏழு மாதங்களுக்கு முன்பே அதிமுக-வுடன் கூட்டனி பேச்சுவார்த்தை தொடங்கியது நம் சமூகத்தில் இவர்களுக்கு இருந்த நற்பெயரை சீர்குழைக்கும் விதமாக அமைந்துவிட்டது.
அதனோடு சேர்த்து விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது அதை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்தது சமூகம் அதிகாரத்தை அடைவதற்கு போதாது, பொறுந்தாது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் சற்று மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றே குறிப்பிடமுடியும். இது போன்ற அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது இவர்களுடைய தலைவர்கள் நம் சமூகத்தில் உள்ள மக்களிடம் கலந்துரையாடாமல் தன் சுய கருத்தை சமூக கருத்தாக அறிவித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆனால் இப்பொழுது இவர்கள் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் வாசகங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. காரணம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு எடுத்துவைக்க நமக்கு அதிகாரம் தேவை அதற்காக நாம் பலவழிகளை கையால்வோம் அதில் ஒன்றுதான் இந்த கூட்டனி. சீட்டு பெறுவதற்கு முன்னால் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருந்த இவர்கள். சீட்டை பெற்ற பிறகு அதீத கவனமும், அதிகார வர்கத்தில் நாம் அமர்வதற்காக இவர்கள் நடத்திய நாடகாம இருக்குமோ என்றும் கூறத்தோன்றுகிறது. இதை தான் அரசியல் வித்தை என்பார்களோ என்று கூறுமளவிற்கு சிந்தனையில் ஆழ்த்துகிறது.  அந்த அதிகாரம் பெற  என்ற இவர்களது தேர்தல் பிரச்சாரங்ககலை பார்க்கும் போது புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்று எண்ணம் எழாமலில்லை.ஆனால் சீட்டை பெறுவதற்கு முன்னமே மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறு என்பது மட்டும் உண்மை. அதை நிவர்த்தி செய்யும் விதமாக தான்  இப்பொழுதாவது சமுதாய தலைவர்களை சந்தித்து கொண்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்.
SDPI – இது ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது. இக்கட்சி தேசிய அளவில் தேர்தல் களம் கண்டு ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் தமிழக அரசியலை பொறுத்தவரை புதிய அரசியல் கட்சிதான். இவர்கள் திருச்சி வார்டு எலக்சனில் சமீபத்தில் போட்டியிட்டார்கள் அது ஒன்றும் மிகப்பெறும் அரசியல் அனுபவத்தை கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் கோரிக்கைகளும், இவர்கள் விடும் அறிக்கைகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பது விந்தையானதே. தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்னால் இவர்கள் தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு வைத்த கோரிக்கை நாங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சதவிகித அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு இந்த சட்டசபை தேர்தலில் வழங்கப்பட  வேண்டும் அதாவது தமிழகத்தின் 234 தொகுதிகளில் 23-24 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கபட  வேண்டும்  அவ்வாறு அளிக்கும் கட்சிக்கு  ஆதரவாகவும், அக்கட்சியின் வெற்றிக்காகவும் SDPI போராடும் என்ற அறிவிப்பு செய்தார்கள்.
இது சமூக மக்களிடத்திலும் சரி அரசியல் வ்ட்டாரங்களிலும் சரி புது விதமான யாரும் யோசித்திராத விதத்தில் அதே நேரத்தில் தனது கட்சியை பற்றி சிறுதும் கவலைப்படாமல் அறிவித்த அறிக்கையாகவே தெரிந்தது. காரணம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் இந்த அளவு தைரியமாக அரசியல் கட்சிகளுக்கு Demand வைத்தது யாரும் இல்லை என்பதால். அதை தொடர்ந்து வக்பு சொத்துகளை முறைபடுத்துவது, சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிகளை விடுதலை செய்ய ஆவன செய்வது, பாபர் மசூதி இடிப்பு, மீனவர்கள் பிரச்சனை, கல்வி, வேலவாய்ப்பு, பொருளாதரத முன்னேற்றத்தை கொண்டுவருதல் என அடுக்கடுக்காக இவர்கள் வைத்த கோரிக்கைகள், இவர்கள் அரசியலில் ஆபத்தானவர்கள் என்று அரசியல்வாதிகளை மிரள வைத்தது. அத்தோடு தங்கள் ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைப்பது இவர்களது கூடுதல் பலம்.
அதன் தொடர்சியாக இவர்களிடத்திலும் சீட்டு பேறம் நடைபெற்றதாக தகவல். ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது இவர்களது தன்னிம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் காட்டுகிறது.. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் இது தனி மனித மூளையால் சிந்த்திக்க முடியாது இந்த கட்சிக்கு பின்னனியாக ப்லமிக்க போராட்ட குணம் கொண்ட தன்னையும் தன் கட்சியையும் பற்றி கவலை கொள்ளாத, சமூகத்தின் வலிமையை தன் வலிமையாக கொண்டு சிந்திக்கும் நல்ல தலைமை இருக்குமோ என்று பாமரனையும் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போரட்ட குணம் இறுதிவரையில் இருந்தால் நல்லது.
கட்சிகளின் நிலைமைகள் இவ்வாறிருக்க போட்டியிடும் தொகுதிகளின்  அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை எற்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும், இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கின்றன. இவர்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். இந்த இடம் அல்லாமல் SDPI போட்டியிடும் போட்டியிடும் கடையநல்லூர்(நெல்லை மாவட்டம்),  பூம்புகார்(நாகை மாவட்டம்), தொண்டமுத்தூர்(கோவை மாவட்டம்), நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்) ஆகிய நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அனைவரும்  SDPI-யை ஆதரிக்க வேண்டும். அதே போன்று மமக போட்டியிடும்  சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி), ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் நாம் அனைவரும் மமக-வை ஆதரிக்க வேண்டும். முஸ்லீம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் லீக்கை ஆதரிக்க வேண்டும். இதில் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கூட கருத்து வேறுபாடு இருக்காது என்று கூட கூற முடியும்.
இதில் குழப்பம் மிகுந்த இராமநாதபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அவர்களது கோரிக்கைகள், சமுதாயத்திற்கு பாடுபடும் மனநிலை, அரசியல் கட்சிகளிடம் இவர்கள் செய்த Demand ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இதனை அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் குழப்பம் நிறைந்த தொகுதிகளில் அக்கட்சிகளின் கடின உழைப்பு தீர்மானிக்கும் அது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் குறிப்பிட்டபடி  தேர்தல் களம் கண்டால் இன்ஷா அல்லஹ் நம்மிடமிருந்து 4+2+2 = 8 சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆதலால் ஒற்றுமையில்லை என்ற மனநிலையை அகற்றிவிட்டு முன்னால் இருந்ததைவிட இயக்கங்களின் வருகையினாலும், கட்சிகளின் தோற்றங்களாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலன்கள் தானே தவிர இழப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.இந்த அடிப்படையில் நாம் பயனித்தால் நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து ஓரணியில் அரசியல் களம் காண்பது சாத்தியமாகும். சிந்திப்போம்…….

Sunday, March 20, 2011

வைகோவுக்கு ஞானோதயம்: தேர்தலை புறக்கணிக்க முடிவு

vaiko.election.cartoon
சென்னை:சுயமரியாதையை இழந்து அ.இ.அ.தி.மு.க தரும் சீட்டுகளை பெற்று தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பழுத்த அரசியல் வாதியும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவருமான ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆணவப் போக்கினால் அவமதிப்புக்குள்ளாகி கடைசியில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட சச்சரவால் அக்கூட்டணியிலிருந்து வெளியேறிய வைகோவிற்கு ஜெயலலிதா 35 தொகுதிகளைக் கொடுத்து திக்குமுக்காட வைத்தார். அன்றிலிருந்து அம்மாவின் நிழலில் ஒதுங்கிய வைகோவிற்கு கஷ்டகாலம் விஜயகாந்தின் வடிவில் வந்தது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை எப்படியேனும் வீழ்த்தி அரியணையில் ஏறத்துடிக்கும் செல்வி ஜெயலலிதா, அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் வேட்டுவைக்கும் விஜயகாந்தை தனது கூட்டணிக்குள் இழுத்தார். பின்னர் அவருக்கு வைகோ ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பல்வேறு சிறுகட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டையெல்லாம் முடித்துவிட்டு ம.தி.மு.க வை கண்டுகாணாமல் இருந்த ஜெயலலிதா, திடீரென 160 சீட்டுகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்து கூட்டணிக் கட்சிகளை கதி கலங்கவைத்தார்.
இவரது அதிரடியால் ஆட்டங்கண்ட கூட்டணிக் கட்சியினர் மூன்றாவது அணி கோஷத்தை எழுப்பி அம்மாவை அதிரவைத்தனர். உடனடியாக அனைத்துக் கூட்டணிக் கட்சிகளை விடிய விடிய சந்தித்துப்பேசி சமாதானம் பேசி அவர்களது கோரிக்கையை நிறைவுச்செய்தார்.
ஆனால், ம.தி.மு.க வின் கோரிக்கையை அவர் ஏற்பதாக இல்லை. முந்தைய தேர்தலில் 35 இடங்களை அளித்தவர் இத்தேர்தலில் 8 அல்லது 9 தொகுதிகளை அளிப்பதாக கூறி ம.தி.மு.கவை மட்டந்தட்டினார். கடைசியில் கூட்டணிக் கட்சியினரின் வற்புறுத்தலுக்கிணங்க 12 தொகுதிகளை மட்டுமே தர முடியும் எனக்கூறி ம.தி.மு.கவை திண்டாட வைத்தார் ஜெயலலிதா.
அ.தி.மு.க தரும் தொகுதிகளைப் பெற்று தேய் பிறையாக மாறுவதை விட தேர்தலை புறக்கணிப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக கூட்டணித் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது நடத்தியவிதத்தால் ம.தி.மு.கவினர் ஒவ்வொருவரின் உள்ளமும் காயப்பட்டுப் போனது என வைகோ கூறியுள்ளார்.
சுயமரியாதையை இழக்கமாட்டோம், உள்ளத்தை காயப்படுத்தி விட்டார்கள் எனக் கூறும் வைகோவுக்கு இப்பொழுதுதான் ஞானோதயம் பிறந்திருக்கிறது போலும். தன்னை தி.மு.கவிலிருந்து வெளியேற்றிய பொழுது தனக்காக தீக்குளித்து இறந்துபோன தொண்டர்களின் உணர்வுக்கு (அரசியல்வாதிகளுக்கெல்லாம் தீக்குளிக்கும் மூடத்தனம் இந்தியாவில்தான் அரங்கேறுகிறது என்பது வேறுவிஷயம்). மதிப்பளிக்காமல் மீண்டும் தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய தி.மு.கவுடன் வைகோ கூட்டணி வைத்தவுடனேயே அவருக்கிருந்த சுயமரியாதை போய்விட்டது.
பின்னர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினார் எனக் குற்றஞ்சாட்டி பொடா என்ற கருப்புச் சட்டத்தில் பல மாதங்கள் ஜெயலலிதாவால் சிறையிலடைக்கப்பட்ட வைகோ, தனது மானத்தையும் மரியாதையையும் இழந்து ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார். அப்பொழுது அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச சுயமரியாதையும் காணாமல் போய்விட்டது.
இப்பொழுது அ.தி.மு.க காயப்படுத்திவிட்டது என புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது?

திண்டுக்கலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கைது

20 Mar 2011
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்புப் பேரணி நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் மற்றும்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  திண்டுக்கல் மாவட்ட தலைவர் முஹம்மது கைசர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கைது.

லிபியாவின் மீதான அமெரிக்க கூட்டுப் படையினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம்

திரிபோலி:லிபிய அதிபர் கத்தாஃபியை ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு இதுவரை அது கை கூடவில்லை. தற்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொண்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒப்புதல் பெற்றது. இந்தன தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை.
இந்த ஒப்புதல் கிடைத்ததும் அதிரடியாக அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து விமானத் தாக்குதலை நடத்தியுள்ளன.போர் விமானங்கள் மூலமும்,ஏவுகணைகளை வீசியும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா.
ஈராக் போருக்குப் பின்னர் தற்போது லிபியாவில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது அமெரிக்கா.
ரேடார்கள், ஏவுகணைகள், தகவல் தொடர்பு மையங்களை ஆகியவற்றை குறிவைத்து ஏவுகணைகளை சரமாரியாக செலுத்தி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. லிபியாவின் கடல் பகுதியில் நிறுத்தி வைத்துள்ள தனது கடற்படைக் கப்பல்களிலிருந்தபடி இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்கா.
மிசுரடா, சுர்த் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது.
“அமெரிக்காவின் செயல் காட்டுமிராண்டித்தனமானது. அத்துமீறிய தாக்குதல் இது. அப்பாவி மக்களையும், கட்டடங்களையும் இது கடுமையாக பாதித்துள்ளது” என்றார் லிபிய நாடாளுமன்ற சபாநாயகர் முஹம்மது சுவேத்.
இந்த வி்மானத் தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது தெரியவில்லை. 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிகிறது.
இந்த தாக்குதலுக்கு பிரெஞ்சுப் படையினர் தலைமை தாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா கண்டனம்
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர. இது அத்துமீறிய தாக்குதல் என்று அவை வர்ணித்துள்ளன.
வெனிசூலாவும் இதைக் கடுமையாக கண்டித்துள்ளது. இன்னொரு நாட்டின் மீது எப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம். இது அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வெனிசூலா அதிபர் சாவேஸ் கூறியுள்ளார்.
ஈராக் போருக்குப்பின் தனது இராணுவ தளத்தை அரபு நாடுகளில் நிறுவுவதற்கு லிபியாவின் புரட்சியை சாதகமாக்கி கொண்டுள்ளது அமெரிக்கா. லிபியாவின் வடபகுதிகள் எண்ணெய் வளம் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் – சி.பி.ஐ

  610x
ஹைதராபாத்:இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியத் தலைவர் இந்திரேஷ் குமாரின் தலைமையில் கடந்த 2006-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி குஜராத் சமாஜம் கெஸ்ட் ஹவுஸில் கூடிய கூட்டத்தில் இதற்கு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் இந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
முஸ்லிம்கள் அதிகமாக திரளும் வழிப்பாட்டுத் தலங்களைத்தான் இவர்கள் குறிவைத்துள்ளார்கள். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்களை சேகரிப்பதற்கான பொறுப்பு கல்சங்கரா மற்றும் லோகேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுனில் ஜோஷிக்கு நிதியை திரட்டுவதற்கான பொறுப்பு. ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி கலவை வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதையும் சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா, மலேகான் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் இத்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.
Share9  03share12

லிபியாவின் மீது பிரான்சின் தாக்குதல் துவங்கியது

  a10_get_in_line
திரிபோலி:ஜனநாயக ரீதியிலான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாaஃபி கொடூரமாக அடக்கி ஒடுக்கி வருவதை சுட்டிக்காட்டி பிரான்சு அந்நாட்டு ராணுவத்தின் மீதான விமானத் தாக்குதலை தொடுத்துள்ளது.
லிபிய ராணுவத்தின் ஐந்து டாங்குகளை பிரஞ்சு விமானங்கள் தகர்த்தன. நேற்று இரவிலேயே விமானப்படை தாக்குதலுக்கு தயாராகிவிட்டது.
லிபியாவின் மீதான ராணுவ நடவடிக்கைக்கு கடந்த புதன்கிழமை ஐ.நா அனுமதியளித்தது. மேலும் பல நாடுகள் தாமதிக்காமல் பிரான்சுடன் இணைந்து தாக்குதலில் பங்கேற்கும் என கருதப்படுகிறது.
லிபியாவுக்கெதிரான நடவடிக்கைகளைக் குறித்து விவாதிப்பதற்கு ஐரோப்பிய யூனியன், அரபு லீக், ஆப்பிரிக்க யூனியன், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் முன்னிலையில் பாரிஸில் நடந்தது.
இதன் பின்னர் இத்தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவிலியன்களுக்கெதிரான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வோம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
லிபியாவின் வான் பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிவித்த உடனேயே ஒபாமாவின் அறிக்கை வெளியானது.
அமெரிக்க கப்பற்படையின் மேலும் பல போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பிராந்தியத்திற்கு சென்றுள்ளன.
பிரான்சின் தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது. லிபியாவில் தாக்குதல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
போர்நிறுத்த பிரகடனத்தை காற்றில் பறத்திய கத்தாஃபியின் ராணுவம் எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பெங்காசியின் மீது தாக்குதல் நடத்தியது. அப்பகுதியை சுற்றிவளைத்த லிபிய ராணுவம் கடற்பகுதியிலிருந்தும் தெற்கு பிரதேசத்திலிருந்தும் தாக்குதலை தொடுத்தது.
லிபியாவின் போர் விமானங்கள் பெங்காசியில் குண்டுமழைப் பொழிந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெங்காசியின் சுற்றுப்பகுதியான கோரஷியாவிலும் சமீபத்திய பகுதிகளிலும் தாக்குதல் நடந்துள்ளது.
பெங்காசியின் அனைத்து மாவட்டங்களிலும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்ப்பாளர்களின் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே லிபியா ராணுவத்தின் போர் விமானத்தை எதிர்ப்பாளர்கள் சுட்டு வீழ்த்தினர்.

முஸ்லிம் அமைப்புகளுடன் ம.ம.க நிர்வாகிகள் சந்திப்பு


ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்...
ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்...இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்...


சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுக கூட்டணிக்கும் ஆதரவு கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் ஆகியோர் சந்தித்து வருகிறார்கள்.


கடந்த 4.3.2011 அன்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். 5.3.2011 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ம.ம.க. தலைமை நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினர். 

கைவெட்டு வழக்கு – என்.ஐ.ஏ விசாரணை தொடங்கியது!

joseph

கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள நியுமேன் கல்லூரியின் ஆசிரியர் ஜோசப் என்பவரின் கை மர்ம நபர்களால் கடந்த வருடம் ஜூலை மாதம் வெட்டப்பட்டது. இதனை தொடர்ந்து கேரளா உயர் நீதி மன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி (N.I.A) இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி என்.ஐ. ஏ கடந்த வாரத்தில் தான் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. என்.ஐ.ஏவின் ஒரு குழு ஹைதரபாதிலிருந்து கேரளா சென்று அங்கே நேரடியாக இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஜோசப்பை சந்தித்து விசாரணை நடத்தியது. முதற்கட்ட விசாரணையின் அறிக்கையை என்.ஐ.ஏ மத்திய் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கும் என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து வழக்கிற்கான முழு விசாரணையை மேற்கொள்ளும்.

தொடுபுழாவில் உள்ள நியு மேன் கல்லூரியில் மலையாள பேராசிரியராக இருந்தவர் டி.ஜே. ஜோசப். இவர் கடந்த‌ வருடம்  முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட புனிதமாக மதிக்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் ஒரு கேள்வித்தாளை வெளியிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சில மர்ம நபர்கள் கடந்த ஜூலை மாதம் ஜோசப் தன் குடும்பத்தாருடன் ஞாயிற்றுக்கிழமை சர்ச் சென்றுவிட்டு திரும்பும் நேரத்தில் இவரது கையை வெட்டினர். இதனை தொடர்ந்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது சுமத்தி பல உறுப்பினர்களை கைது செய்தது கேரள அரசாங்கம். ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் இத்தகைய செயலை வன்மையாக கண்டிப்பதோடு இத்தகைய செயலுக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆரம்ப முதலே கூறிவருகிறது. முஸ்லிம் சமூகத்தின் உணர்வுளை புண்படுத்தியதாக கூறி கல்லூரி நிர்வாகம் ஜோசப்பை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளை தப்பிக்க உதவி செய்ததாக கூறி சிலருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை திருப்பி தரமுடியாது என எர்ணாக்குளம் சிறப்பு நீதி மன்றம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி அன்று கூறியது.

கேரளா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கக்கோரி விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கேரளா காவல்துறை இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தது. 54 நபர்கள் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்கள். அதிலே 29 நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Thursday, March 17, 2011

கேரள மாநில சட்டமன்றத் தேர்தல்: எஸ்.டி.பி.ஐ 98 தொகுதிகளில் போட்டி


imagesCAVIMY01

கோழிக்கோடு:வருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி 98 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக 42 தொகுதிகளில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மஞ்சேஷ்வரம், நேமம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள். அங்கு பா.ஜ.கவை தோற்கடிப்பதற்கான கொள்கை வகுக்கப்படும்.
40 தொகுதிகளில் கேரள தலித் சிறுத்தைகள், லோக் ஜனசக்தி கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களை எஸ்.டி.பி.ஐ ஆதரிக்கும். இத்தகவலை கேரள மாநில எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம் பரிசீலனையில்

புதுடெல்லி:வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம் துவங்குவதுக் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம் பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் தெரிவித்தார்.
ஆன்றோ ஆண்டனி எம்.பி மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் எஸ்.எம்.கிருஷ்ணா இதனை தெரிவித்துள்ளார்.
கடுமையான மோதல் நடைபெற்று வரும் லிபியாவிலிருந்து 16,200 இந்தியர்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு வர விரும்பிய அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் ஷேஃப் ஹோம் கமிங் என்ற பெயரில் இதற்காக உருவான செயல் குழுவிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல விவகார அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் தலைமை வகித்தன.

கஷ்மீரில் கைது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – கிலானி

  geelani
ஸ்ரீநகர்:கஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களை கைதுச் செய்யும் நடவடிக்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் கஷ்மீர் அரசுக்கு புதுடெல்லி தலையிடுகிறது. கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமுலிருக்கும் பொது பாதுகாப்புச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்.
கடந்த ஆண்டு கஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொண்டுவந்த எட்டு அம்ச திட்டத்தில் அரசியல் கைதிகள் விடுதலைச் செய்யப்படுவார்கள் என உறுதியளித்திருந்தார். மேலும், மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு கஷ்மீருக்கு வருகைத்தந்த பொழுதெல்லாம் இதனை தெரிவித்திருந்தது.
கஷ்மீர் சட்டமன்றத்தில் பல தடவை இப்பிரச்சனை முன்வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒருவரைக்கூட விடுதலைச் செய்யவில்லை. மாறாக, பொதுமக்களை கைது செய்வது தொடரத்தான் செய்கிறது. இவ்வாறு கிலானி தெரிவித்துள்ளார்.

திமுக தொகுதிப் பட்டியல் வெளியீடு


DMK[1]

சென்னை:கூட்டணி பிரச்சினை மற்றும் தொகுதி பங்கீடு பிரச்சினை போன்றவற்றை ஒருவழியாக சமாளித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 119 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று இரவு திமுக வெளியிட்டது.
திமுக போட்டியிட உள்ள தொகுதிகள் விவரம் (மாவட்ட வாரியாக):
திருவள்ளூர் மாவட்டம்
1. திருவள்ளூர்
2. பொன்னேரி (தனி)
3. அம்பத்தூர்
4. மாதவரம்
5. திருவொற்றியூர்
சென்னை
6. ஆர்.கே.நகர்
7. கொளத்தூர்
8. வில்லிவாக்கம்
9. எழும்பூர் (தனி)
10. சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி)
11. ஆயிரம்விளக்கு
12. விருகம்பாக்கம்
13. சைதாப்பேட்டை
காஞ்சிபுரம்
14. பல்லாவரம்
15. தாம்பரம்
16. செய்யூர் (தனி)
17. உத்தரமேரூர்
வேலூர்
18. காட்பாடி
19. ராணிப்பேட்டை
20. கே.வி. குப்பம் (தனி)
21. குடியாத்தம் (தனி)
22. திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
23. வேப்பனஹள்ளி
24. தளி
தருமபுரி
25. பென்னாகரம்
26. பாப்பிரெட்டிபட்டி
திருவண்ணாமலை
27. திருவண்ணாமலை
28. கீழ்பென்னாத்தூர்
29. ஆரணி
30. வந்தவாசி (தனி)
விழுப்புரம்
31. வானூர் (தனி)
32. விழுப்புரம்
33. விக்ரவாண்டி
34. திருக்கோவிலூர்
35. சங்கராபுரம்
சேலம்
36. கெங்கவல்லி (தனி)
37. ஏற்காடு (தனி)
38. சங்ககிரி
39. சேலம் (மேற்கு)
40. சேலம் (தெற்கு)
41. வீரபாண்டி
 நாமக்கல்
42. ராசிபுரம் (தனி)
43. சேந்தமங்கலம் (தனி)
44. குமாரபாளையம்
ஈரோடு
45. ஈரோடு (கிழக்கு)
46. அந்தியூர்
47. பவானிசாகர் (தனி)
திருப்பூர்
48. தாராபுரம் (தனி)
49. மடத்துக்குளம்
நீலகிரி
50. கூடலூர் (தனி)
51. குன்னூர்
கோவை
52. மேட்டுப்பாளையம்
53. கவுண்டம்பாளையம்
54. கோவை (வடக்கு)
55. கோவை (தெற்கு)
56. கிணத்துக்கடவு
திண்டுக்கல்
57. பழனி
58. ஒட்டன்சத்திரம்
59. ஆத்தூர்
60. நத்தம்
கரூர்
61. அரவக்குறிச்சி
62. கிருஷ்ணராயபுரம் (தனி)
63. குளித்தலை
திருச்சி
64. ஸ்ரீரங்கம்
65. திருச்சி (மேற்கு)
66. திருச்சி (கிழக்கு)
67. திருவெறும்பூர்
68. லால்குடி
69. மணச்சநல்லூர்
70. துறையூர் (தனி)
பெரம்பலூர்
71. பெரம்பலூர் (தனி)
72 குன்னம்
கடலூர்
73. பண்ருட்டி
74. கடலூர்
75. குறிஞ்சிப்பாடி
நாகை
76. கீழ்வேளூர் (தனி)
திருவாரூர்
77. மன்னார்குடி
78. திருவாரூர்
79. நன்னிலம்
தஞ்சை
80.திருவிடைமருதூர் (தனி)
81. கும்பகோணம்
82. திருவையாறு
83. தஞ்சாவூர்
84. ஒரத்தநாடு
புதுக்கோட்டை
85.கந்தர்வக்கோட்டை (தனி)
86. விராலிமலை
87. புதுக்கோட்டை
சிவகங்கை
88. திருப்பத்தூர்
89. மானாமதுரை (தனி)
மதுரை
90. மேலூர்
91. மதுரை (கிழக்கு)
92. மதுரை (மத்தி)
93. மதுரை (மேற்கு)
94. திருமங்கலம்
95. உசிலம்பட்டி
தேனி
96. ஆண்டிப்பட்டி
97. பெரியகுளம் (தனி)
98. போடிநாயக்கனூர்
99. கம்பம்
விருதுநகர்
100. ராஜபாளையம்
101. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
102. சாத்தூர்
103. சிவகாசி
104. அருப்புக்கோட்டை
105. திருச்சுழி
ராமநாதபுரம்
106. திருவாடானை
107. முதுகுளத்தூர்
108. தூத்துக்குடி
109. திருச்செந்தூர்
110 ஒட்டப்பிடாரம் (தனி)
திருநெல்வேலி
111. சங்கரன்கோவில் (தனி)
112. தென்காசி
113. ஆலங்குளம்
114. திருநெல்வேலி
115. அம்பாசமுத்திரம்
116. பாளையங்கோட்டை
கன்னியாகுமரி
117 கன்னியாகுமரி
118. நாகர்கோவில்
119. பத்மநாபபுரம்

அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


ADMK

சென்னை:அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகள் மற்றும் அத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார்.
ஆவடி,ராணிப்பேட்டை,திருச்சிராப்பள்ளி ஆகிய  மூன்று தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகள் அடங்கிய பட்டியல்:
1. ஸ்ரீரங்கம் (139) : ஜெ ஜெயலலிதா
2. கும்மிடிபூண்டி (1) :  வி. கோபால் நாயுடு
3. பொன்னேரி (தனி) (2) :  பொன். ராஜா,
4. திருவள்ளூர் (4) :  B.V. ரமணா,
5. பூவிருந்தவல்லி (தனி) (5) : NSA இரா. மணிமாறன்,
6. ஆவடி (6) :  எஸ். அப்துல் ரஹீம்
7. அம்பத்தூர் (8) :  எஸ். வேதாச்சலம்
8. மாதவரம் (9) :  வி. மூர்த்தி
9. திருவொற்றியூர் (10) :  கே. குப்பன்,
10. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11) :  இ. மதுசூதனன்
11. பெரம்பூர் (12) :  பி. வெற்றிவேல்,
12. வில்லிவாக்கம் (14) :  J.C.D. பிரபாகர்,
13. வி.க. நகர் (தனி) (15) :  வ. நீலகண்டன்
14. ராயபுரம் (17) :  டி. ஜெயக்குமார்,
15. துறைமுகம் (18) :  பழ. கருப்பையா
16. ஆயிரம்விளக்கு (20) :  பா. வளர்மதி,
17. அண்ணாநகர் (21) :  எஸ். கோகுல இந்திரா,
18. விருகம்பாக்கம் (22) :  ஆர். கமலக்கண்ணன்
19. சைதாப்பேட்டை (23) :  ஜி. செந்தமிழன்,
20. தியாகராயநகர் (24) :  வி.பி. கலைராஜன்,
21. மயிலாப்பூர் (25) :  ஆர். ஜானகி,
22. வேளச்சேரி (26) :  எம்.கே. அசோக்,
23. சோழிங்கநல்லூர் (27) :  கே.பி. கந்தன்
24. ஆலந்தூர் (28) :  V.P.N வெங்கட்ராமன்,
25. ஸ்ரீபெரும்புதூர் (29) :  மொளச்சூர் இரா. பெருமாள்,
26. பல்லாவரம் (30) :  ப. தன்சிங்,
27. தாம்பரம் (31) :  T.K.M சின்னையா,
28. செங்கல்பட்டு (32) :  கே.என். இராமச்சந்திரன்,
29. திருப்போரூர் (33) :  தண்டரை கே. மனோகரன்
30. செய்யூர் (தனி) (34) :  வி.எஸ். ராஜி, ,
31. மதுராந்தகம் (தனி) (35) :  எஸ். கணிதா சம்பத்,
32. உத்திரமேரூர் (36) :  வாலாஜாபாத் பா. கணேசன்
33. காஞ்சிபுரம் (37) :  வி. சோமசுந்தரம்,
34. காட்பாடி (40) :  எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன்,
35. ராணிப்பேட்டை (41) :  அ. முஹம்மத் ஜான்,
36. வேலூர் (43) : டாக்டர் வி.எஸ். விஜய்,
37. ஜோலார்பேட்டை (49) :  கே.சி. வீரமணி,
38. ஊத்தங்கரை (தனி) (51) :  மனோரஞ்சிதம் நாகராஜ்
39. பர்கூர் (52) :  கே.இ. கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி (53) :  கே.பி. முனுசாமி,
41. பாலக்கோடு (57) :  கே.பி. அன்பழகன்,
42. அரூர் (தனி) (61) :  ஆர்.ஆர். முருகன்,
43. கலசபாக்கம் (65) :  அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி,
44. செஞ்சி (70) :  ஆர். தமிழ்மொழி ராஜதத்தன்,
45. மைலம் (71) :  கே.பி. நாகராஜன்,
46. திண்டிவனம் (தனி) (72) : டாக்டர் த. அரிதாஸ்,
47. விழுப்புரம் (74) :  சி.வி. சண்முகம்,
48. விக்கிரவாண்டி (75) :  சிந்தாமணி ஆர். வேலு
49. உளுந்தூர்பேட்டை (77) :  இரா. குமரகுரு, எம்.எல்.ஏ.,
50. சங்கராபுரம் (79) :  ப. மோகன்,
51. கள்ளக்குறிச்சி (தனி) (80) :  பா. அழகுவேல் பாபு,
52. ஏற்காடு (ST) (83) :  செ. பெருமாள்
53. ஓமலூர் (84) :  பல்பாக்கி சி. கிருஷ்ணன்
54. எடப்பாடி (86) :  எடப்பாடி கே. பழனிசாமி,
55. சேலம் (மேற்கு) (88) :  ஜி. வெங்கடாஜலம்,
56. சேலம் (வடக்கு) (89) :  விஜயலட்சுமி பழனிச்சாமி
57. சேலம் (தெற்கு) (90) :  எம்.கே. செல்வராஜ்,
58. வீரபாண்டி (91) :  எஸ்.கே. செல்வம்
59. ராசிபுரம் (தனி) (92) :  ப. தனபால்,
60. குமாரபாளையம் (97) :  பி. தங்கமணி,
61. ஈரோடு (கிழக்கு) (98) :  இரா. மனோகரன்,
62. ஈரோடு (மேற்கு) (99) :  கே.வி. ராமலிங்கம்,
63. மொடக்குறிச்சி (100) :  ஆர்.என். கிட்டுசாமி
64. தாராபுரம் (தனி) (101) :  கே. பொன்னுசாமி,
65. காங்கேயம் (102) :  என்.எஸ்.என். நடராஜ்,
66. பெருந்துறை (103) :  தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்,
67. பவானி (104) :  எம்.ஆர். துரை,
68. அந்தியூர் (105) :  எஸ்.எஸ். ரமணீதரன்,
69. கோபிசெட்டிப்பாளையம் (106) :  கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ.,
70. உதகமண்டலம் (108) :  புத்தி சந்திரன்,
71. மேட்டுப்பாளையம் (111) :  ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ.,
72. அவினாசி (தனி) (112) :  ஏ.ஏ. கருப்புசாமி
73. திருப்பூர் (வடக்கு) (113) :  எம்.எஸ்.எம். ஆனந்தன்
74. திருப்பூர் (தெற்கு) (114) :  திருப்பூர் ஏ. விசாலாட்சி,
75. பல்லடம் (115) :  பல்லடம் கே.பி. பரமசிவம்
76. சூலூர் (116) :  செ.ம. வேலுசாமி,
77. கவுண்டம்பாளையம் (117) :  வி.சி. ஆறுக்குட்டி
78. கோயம்புத்தூர் (வடக்கு) (118) :  தா. மலரவன், எம்.எல்.ஏ.,
79. தொண்டாமுத்தூர் (119) :  எஸ்.பி. வேலுமணி,
80. கோயம்புத்தூர் (தெற்கு) (120) :  சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி,
81. சிங்காநல்லூர் (121) :  ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ.,
82. கிணத்துக்கடவு (122) :  செ. தாமோதரன், எம்.எல்.ஏ.,
83. பொள்ளாச்சி (123) :  எம்.கே. முத்துகருப்பண்ணசாமி,
84. உடுமலைப்பேட்டை (125) :  பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ.,
85. மடத்துக்குளம் (126) :  சி. சண்முகவேலு,
86. பழனி (127) :  கே.எஸ்.என். வேணுகோபாலு,
87. ஒட்டன்சத்திரம் (128) :  பி. பாலசுப்பிரமணி
88. நத்தம் (131) :  இரா. விசுவநாதன்,
89. திண்டுக்கல் (132) :  பி. ராமுத் தேவர்
90. வேடசந்தூர் (133) :  ச. பழனிச்சாமி,
91. அரவக்குறிச்சி (134) :  வி. செந்தில்நாதன்,
92. கரூர் (135) :  வி. செந்தில்பாலாஜி,
93. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) :  எஸ். காமராஜ்
94. குளித்தலை (137) :  ஹ. பாப்பாசுந்தரம்
95. மணப்பாறை (138) :  ஆர். சந்திரசேகர்
96. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140) :  என். மரியம் பிச்சை,
97. திருச்சிராப்பள்ளி கிழக்கு (141) :  ஆர். மனோகரன்,
98. திருவெறும்பூர் (142) : டாக்டர் சி. விஜயபாஸ்கர்,
99. முசிறி (145) :  என்.ஆர். சிவபதி,
100. பெரம்பலூர் (தனி) (147) :  இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்,
101. கடலூர் (155) :  எம்.சி. சம்பத்,
102. குறிஞ்சிப்பாடி (156) :  சொரத்தூர் இரா. இராஜேந்திரன்,
103. சீர்காழி (தனி) (160) :  ம. சக்தி,
104. பூம்புகார் (162) :  எஸ். பவுன்ராஜ்
105. நாகப்பட்டினம் (163) :  கே.ஏ. ஜெயபால்,
106. கீழ்வேலூர் (தனி) (164) :  திருவாரூர் அ. அசோகன்,
107. திருத்துறைப்பூண்டி (தனி) (166) : டாக்டர் கே. கோபால்,
108. மன்னார்குடி (167) :  சிவா. ராஜமாணிக்கம்,
109. திருவாரூர் (168) :  குடவாசல் எம். இராசேந்திரன்
110. நன்னிலம் (169) :  ஆர். காமராஜ்,
111. கும்பகோணம் (171) :  இராம. இராமநாதன்,
112. பாபநாசம் (172) :  இரா. துரைக்கண்ணு,
113. திருவையாறு (173) :  எம். ரெங்கசாமி,
114. ஒரத்தநாடு (175) :  ஆர். வைத்திலிங்கம்,
115. கந்தர்வகோட்டை (தனி) (178) :  ந. சுப்ரமணியன்,
116. விராலிமலை (179) :  வி.சி. இராமையா
117. புதுக்கோட்டை (180) :  டி. கருப்பையா
118. திருமயம் (181) :  பி.கே. வைரமுத்து
119. ஆலங்குடி (182) :  கு.ப. கிருஷ்ணன்,
120. காரைக்குடி (184) :  சோழன் சித. பழனிச்சாமி
121. திருப்பத்தூர் (185) :  ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,
122. சிவகங்கை (186) :  கே.ஆர். முருகானந்தம்,
123. மானாமதுரை (தனி) (187) :  ம. குணசேகரன்,
124. சோழவந்தான் (தனி) (190) :  எம்.வி. கருப்பையா,
125. மதுரை தெற்கு (192)  செல்லூர் கே. ராஜூ,
126. மதுரை மையம் (193) :  வி.வி. ராஜன் செல்லப்பா,
127. மதுரை மேற்கு (194) :  பெ. சாலைமுத்து,
128. திருப்பரங்குன்றம் (195) :  ஏ.கே. போஸ்,
129. திருமங்கலம் (196) :  ம. முத்துராமலிங்கம்
130. உசிலம்பட்டி (197) :  பா. நீதிபதி,
131. ஆண்டிபட்டி (198) :  தங்க தமிழ்செல்வன்,
132. பெரியகுளம் (தனி) (199) :  கே. இளமுருகன்
133. போடிநயாக்கனூர் (200) :  ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,
134. கம்பம் (201) :  கே. சந்தனகுமார்
135. ராஜபாளையம் (202) :  கே. கோபால்சாமி,
136. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) :  கே. சீனிவாசன்
137. சாத்தூர் (204) :  R.B. உதயகுமார்,
138. சிவகாசி (205) :  K.T ராஜேந்திர பாலாஜி
139. விருதுநகர் (206) :  எஸ்.வி.பி. ரவி
140. அருப்புக்கோட்டை (207) :  வைகைச்செல்வன்,
141. பரமக்குடி (தனி) (209) : டாக்டர் எஸ். சுந்தர்ராஜ்,
142. முதுகுளத்தூர் (212) :  மு. முருகன்
143. விளாத்திகுளம் (213) :  ஜி.வி. மார்க்கண்டேயன்,
144. தூத்துக்குடி (214) :  எஸ். ஜெனிபர் சந்திரன்,
145. திருச்செந்தூர் (215) :  பி.ஆர். மனோகரன்,
146. ஸ்ரீவைகுண்டம் (216) :  எஸ்.பி. சண்முகநாதன்
147. ஒட்டப்பிடாரம் (தனி) (217) :  என். சின்னத்துரை,
148. கோவில்பட்டி (218) :  கடம்பூர் செ. ராஜு
149. சங்கரன்கோவில் (தனி) (219) :  சொ. கருப்பசாமி, எம்.எல்.ஏ.,
150. வாசுதேவநல்லூர் (தனி) (220) : டாக்டர் எஸ்.துரையப்பா,
151. கடையநல்லூர் (221) :  பி. செந்தூர்பாண்டியன்
152. தென்காசி (222) :  கே. அண்ணாமலை
153. ஆலங்குளம் (223) :  பி.ஜி. ராஜேந்திரன்,
154. திருநெல்வேலி (224) :  நயினார் நாகேந்திரன்,
155. அம்பாசமுத்திரம் (225) :  இசக்கி சுப்பையா,
156. நாங்குநேரி (227) :  ஆர்.எஸ். முருகன்
157. ராதாபுரம் (228) :  எல். சசிகலா புஷ்பா,
158. கன்னியாகுமரி (229) :  மு.கூ. பச்சைமால்
159. நாகர்கோவில் (230) :  நாஞ்சில் ஏ. முருகேசன்
160. குளச்சல் (231) :  பி. லாரன்ஸ்

சிறை அறை மண அறையாக மாறுமா?


jail-bars-prison-cartoon-picture-thumb
பாட்டியாலா:மரணத் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளிடம் தண்டனை விதிக்கப்படுமுன் அவர்களது கடைசி என்ன? என வினவப்படுவது வழக்கமான ஒன்று. இது ஒரு அதிகாரப்பூர்வ சடங்காகவே கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதிபீடம் இதற்கு அனுமதியளித்துள்ளது.
ஆனால், பாட்டியாலா மத்திய சிறையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரு பெண், விசித்திரமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதே சிறையில் தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் தனது கணவருடன் சிறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமென்பதே அக்கோரிக்கை.
திருமணமாகி எட்டு மாதம் கழியும் பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் வாரிசை உருவாக்க உதவும் தாம்பத்யம் தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என இப்பெண் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் தூக்கிலிடப்பட்டால் தங்களுக்கு வாரிசு இல்லாத சூழல் உருவாகிவிடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவருடைய கோரிக்கைக்கு எதிராக மற்றொருவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர், ஐந்து ஆண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டுள்ள தம்பதிகளால் 5 ஆண்டுகளுக்கு முன்பு 50 லட்சம் ரூபாய் பிணைத்தொகை கேட்டு கடத்தப்பட்டு பின்னர் கொலைச் செய்யப்பட்ட குழந்தையின் தந்தையாவார்.
“அடுத்தவரின் குழந்தையை கொடூரமாக கொலைச் செய்தவர்களுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளவோ  வளர்க்கவோ தகுதியில்லை” என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் கொலைச் செய்யப்பட்ட குழந்தையின் தந்தை.
இவருடைய வாதத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீதிபீடத்தின் முன்னால் கொண்டுவரப்பட்ட குழந்தையின் தந்தை யார்? என்பதை அறிய மன்னர் சாலமன் விதித்ததுபோல் விசித்திரமான தீர்ப்பையொன்றும் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றம் அளிக்கவில்லை. மாறாக இதனைக் குறித்து வல்லுநர்களின் கருத்தினை ஆராயும் நோக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஆலோசகர் (அமிக்கஸ் க்யூரி) ஒருவரை நியமித்துள்ளது.

அ.இ.அ.தி.மு.கவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு

சென்னை:கடந்த 15-ஆம் தேதி சென்னையில் கூடிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் செயற்குழுவில் வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கூட்டணியை ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கவும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் குளறுபடிகளை நீக்கவும் அ.இ.அ.தி.மு.க உறுதி அளித்ததன் பேரில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன், பாப்ரி மஸ்ஜித் வழக்கு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து வரும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது எனவும், முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிப்பதாகவும், புதுச்சேரியில் ரங்கசாமியின் NR காங்கிரஸ்-அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் துணைத் தலைவர் எம்.ஐ.முஹம்மது முனீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, March 15, 2011

பாலைவனத்தூது வாசகர்களுக்கு தூது குடும்பத்தின் வேண்டுகோள்!

அன்பார்ந்த வாசகர்களே!
நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக "தூதுஆன்லைன்.காம்" என்ற நமது இணையதளத்தைத் துவக்கவுள்ளோம். (http://www.thoothuonline.com/)

இன்ஷா அல்லாஹ் இன்று (மார்ச்-15) இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.

பாலைவனத் தூது வலைப்பூ இன்று இரவு முதல் தூது ஆன்லைன்.காம் என்ற இணையதளமாக செயல்படத் துவங்கும்.

ஆகவே பாலைவனத் தூதின் நியூஸ் லெட்டரை மின்னஞ்சல் மூலம் பெற்றவர்கள், தூது ஆன்லைன்.காம்-ன் நியூஸ் லெட்டரை பெற http://www.thoothuonline.com/ தளத்திற்குச் சென்று Subscribe to Our News Feed என்பதை க்ளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துகொள்ளுங்கள்.

பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.

பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

தூது ஆன்லைன்.காம் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் தங்களின் ஆலோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி editor@thoothuonline.com
தூது குடும்பம்

மோடிக்கு உபகாரம் செய்த ஆர்.கே.ராகவன் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

அஹ்மதாபாத்,மார்ச்.15:குஜராத் இனப் படுகொலைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனான தவறான உறவைக் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜ்காட்டில் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சக்தி சிங் கோஹில் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

நரேந்திர மோடியிடமிருந்து பல்வேறு சலுகைகளை பெற்றவர் ஆர்.கே.ராகவன் எனக் குற்றஞ்சாட்டிய கோஹில், இனப்படுகொலை வழக்கில் மோடியை பாதுகாத்ததற்கு கிடைத்த உபகாரம்தான் அவருடைய லண்டன் பயணங்கள் என தெரிவித்துள்ளார்.

ராகவன் பலமுறை லண்டன் சென்றுள்ளார். இப்பயணங்களை அவர் மேற்கொண்டது, தனிப்பட்ட ரீதியிலாகும். மாறாக, குஜராத் இனப்படுகொலை விசாரணை தொடர்பானது அல்ல. மேலும், இப்பயணங்களுக்கான செலவை குஜராத் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இதுத் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன என கோஹில் தெரிவித்தார்.

தற்போது அமுலிலிருக்கும் சட்டங்களை மீறி ராகவனின் லண்டன் பயணத்திற்கான பில்லை நிறைவேற்றுக் கொடுத்துள்ளது என கோஹில் குற்றஞ்சாட்டுகிறார்.

இதன் மூலம் 2002-இல் குஜராத் இனப் படுகொலையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு குறித்த நம்பிக்கை தகர்ந்துள்ளது.

உண்மையில், சிறப்பு புலனாய்வுக்குழு கண்டறிந்தவற்றில் ஆர்.கே.ராகவன் தகிடுதித்தங்கள் புரிந்துள்ளார். கடுமையான குற்றங்கள் மோடியின் மீது சுமத்தப்பட்ட பிறகும், அவர் மீது நடவடிக்கை தேவையில்லை என ஆர்.கே.ராகவன் எழுதிக் கொடுத்தது இதனடிப்படையிலாகும்.

குஜராத் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த புகாரைத் தொடர்ந்து முதல் நோக்கு(prima facie) சரியானது என கண்டறிந்த பிறகுதான் மோடியின் மீது கூடுதல் விசாரணை தேவையில்லை என ராகவனின் அறிக்கை சிபாரிசுச் செய்தது.

உச்சநீதிமன்றம் தன்னிடம் நம்பி ஒப்படைத்த பணியில் வஞ்சம் புரிந்துள்ளார் ராகவன். ராகவன் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவின் செலவுகள் குறித்த விபரங்களை அளிக்க தகவல் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுக்களை தள்ளுபடிச் செய்த குஜராத் அரசு சிறப்பு புலனாய்வுக்குழு பொது நிறுவனமல்ல எனவும், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக அமைப்பு என பதிலளித்தது.

ராகவன் மீது ஊழல் எதிர்ப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என அஞ்சி இத்தகைய பதிலை குஜராத் அரசு அளித்தது என காங்கிரஸ் தலைவர் கோஹில் குற்றஞ்சாட்டினார்.

ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு: ம.பி பா.ஜ.க அரசின் தடைகளை முறியடிக்க என்.ஐ.ஏவிடம் வழக்கை ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி,மார்ச்.15:சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைச் செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகளில் ஒருவரான சுனில்ஜோஷி கொல்லப்பட்டார். இவருடைய கொலை வழக்கை விசாரிக்கிறோம் என்ற போர்வையில் வழக்கை சீர்குலைக்க அம்மாநில பா.ஜ.க அரசு முயல்கிறது. இதனை முறியடிக்கத்தான் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏவிடம் ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு வழக்குகளை ஒப்படைக்க ஆலோசித்தது.

மாநிலங்களின் அனுமதியில்லாமலேயே பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த என்.ஐ.ஏவுக்கு அனுமதி இருந்த பொழுதிலும் எவ்வித வீழ்ச்சிகள் வராமல் விசாரணையை நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதனைக் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக
அதிகாரிகள் சம்மதித்துள்ளனர். சுனில் ஜோஷி கொலைவழக்கில் மத்திய பிரதேச அரசு குற்றப்பத்திரிகை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பது சட்டரீதியான சிக்கலை ஏற்படுத்துமா என்பதுக் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியின் கொலை வழக்கினை மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது.

பல்வேறு குண்டுவெடிப்புகளில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் ஜோஷியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கொலைச் செய்ததற்கு காரணம், ரகசியம் வெளியாகிவிடும் என்ற அச்சமாகும்.

ஜோஷி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரக்யாசிங் தாக்கூரை கைது செய்வதற்கான மத்தியபிரதேச அரசின் தீர்மானம் கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலாகும் என சி.பி.ஐ சந்தேகிக்கிறது.

2008-ஆம் ஆண்டு நடந்த மொடாஸா குண்டுவெடிப்பு வழக்கையும், 2007-ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கையும் என்.ஐ.ஏ தற்பொழுது விசாரித்து வருகிறது. இத்துடன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய இதர குண்டுவெடிப்புகளையும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது மத்திய அரசின் நிலைப்பாடாகும்.

மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐயும், காங்கிரஸ் கட்சி ஆளும் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநிலங்களின் அரசுகளும் வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவிடம் அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால், பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேச மாநில அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேற்குகரையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி

டெல்அவீவ்,மார்ச்.15:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் புதிய யூத குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

நூற்றுக்கும் அதிகமான குடியிருப்பு யூனிட்டுகள் புதியதாக கட்டப்படும். அமைச்சரவை கமிட்டியின் அனுமதி நேற்று கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபலஸ்தீனுடனான சமாதான ஒப்பந்தம் அமுலிலிருக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபீல் அபூ தய்னா பிரச்சனைகளை உருவாக்க இஸ்ரேல் முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.

வருகிற நாட்களில் குடியிருப்புகளை கட்டும் பணி துவங்கும் என இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார். குடியிருப்புகளை கட்டும்பணி துவங்கியதைத் தொடர்ந்து ஃபலஸ்தீனுடனான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியது.

கஷ்மீர்:கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 5 கோடி நிதியுதவி

ஜம்மு,மார்ச்.15:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட 102 நபர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிதியுதவியாக 5.10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்படும். இதனை கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கஷ்மீரில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 894 பேர் காயமடைந்தனர். 18 பேருக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியொருவர் படுகொலை

மெல்பர்ன்,மார்ச்.13:ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியொருவர் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

அவரது உடல் கடந்த வாரம் சிட்னியில் ஒரு கால்வாயில் சூட்கேஸிற்குள் வைத்து கண்டெடுக்கப்பட்டது. மெடோ வங்கிக்கு அருகில் சூட்கேஸை கண்ட கட்டிடத் தொழிலாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இக்கொலைத் தொடர்பாக தோஷாவின் அயல்வாசி ஸ்டானி ரெஜினால்ட் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது கொலை மற்றும் வன்புணர்வு வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்டானி ரெஜினால்டின் முன் ஜாமீன் கோரும் மனுவை உள்ளூர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கொல்லப்பட்ட 24 வயதான தோஷா தாக்கர் சிட்னி காலேஜ் ஆஃப் பிஸினஸ் அண்ட் ஐ.டியில் கணக்கியல் துறை மாணவியாவார். இவரது கொலைக்கான பின்னணி தெரியவில்லை.

Monday, March 14, 2011

மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தூதிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்

மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் நமது தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்புப் பேட்டி.

கேள்வி:மாற்று அரசியலுக்கான முன் முயற்சி என்ற அடிப்படையில் மனித நேய மக்கள் கட்சியை உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் கட்சியின் பொதுவான செயல்திட்டம் என்ன?

பதில்:மாற்று அரசியல் என்பது எல்லா வகையிலும் மாற்று அரசியல். அதாவது, ஆடம்பர அரசியல் நிறுத்தப்பட வேண்டும், கட்அவுட் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் நாங்கள் மாற்று அரசியலுக்கான முக்கிய விஷயங்களாக வைக்கிறோம். இதுமட்டுமல்லாமல் எங்கள் கட்சியின் வேட்பாளர்களை கூட தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கிறோம். குறைந்தது எங்கள் கட்சியில் மூன்று ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் சமுதாயத்திற்காக எத்தகைய தியாகங்களை செய்திருக்கிறார்கள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் போன்ற இந்த அளவுகோலின்படி நாங்கள் எங்கள் வேட்பாளர்களை தீர்மானிக்கிறோம்.


ஆனால் இன்றைய அரசியல் கட்சிகளெல்லாம் தங்கள் தொகுதிகளை பணக்கார வேட்பாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். பணமிருந்தால் ஒருவர் சட்டமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ உறுப்பினராக செல்லமுடியும் என்ற நிலைமை இன்றைய இந்திய அரசியலில் இருக்கிறது.

கேள்வி:அ.இ.அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்துள்ள நீங்கள் முஸ்லிம் சமூகம் சார்பாக என்னென்ன கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள்? அவற்றை நிறைவேற்றுவதாக அவர்கள் வாக்களித்துள்ளார்களா?

பதில்:அதாவது செல்வி.ஜெயலலிதா அவர்களை நாம் சந்தித்தபோது, முஸ்லிம்களின் இடஒதுக்கீடை 3.5% யிலிருந்து கூடுதலாக ஒதுக்கித் தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

இரண்டாவதாக உருது முஸ்லிம்களுடைய பல்வேறு பிரச்னைகளை நாங்கள் கோடிட்டுக் காட்டி, அந்த உருது மொழியை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். அடுத்ததாக தமிழக அரசு கொண்டுவந்த திருமணப் பதிவுச்சட்டத்தில் பல விஷயங்கள் முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் தலையிடுகின்ற காரணத்தினால், அதையும் எதிர்காலத்தில் ஆட்சியமைக்கின்ற போது முஸ்லிம்களுடைய வேண்டுகோளுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.

கேள்வி:வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள். இத்தேர்தலில் பெரும்பாலும் முஸ்லிம் வாக்காளர்கள்தாம் உங்களது இலக்கு. பொதுவாகவே அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் மீது தமிழக முஸ்லிம்களுக்கு வெறுப்பு உள்ளதே. காரணங்கள் உங்களுக்கு தெரிந்ததுதான். குஜராத் இனப்படுகொலை புகழ் மோடியை நேரில் சென்று வாழ்த்தியது, வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தது, முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை எனக் கூறியது, கோத்ரா ரெயில் எரிப்புக்கு சிறுபான்மை மக்கள் மீது பழி போட்டது, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலில் கரசேவைக்கு அனுமதியளிக்கக் கோரியது உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இரு திராவிடக் கட்சிகளுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தாலும்
கூட அ.இ.அ.தி.மு.க.விடம் கொஞ்சம் அதிகமாக ஹிந்துத்துவா சாயல் தென்படுகிறதே?

பதில்:செல்வி.ஜெயலலிதா அவர்களின் மீது கடந்த காலத்தில் நாங்கள் வைத்த எந்த விமர்சனத்தையும் வாபஸ் பெறவில்லை. அதே நேரம் ஜெயலலிதா அவர்களின் மீது எத்தகைய குற்றச்சாட்டை நீங்கள் அடுக்குகிறீர்களோ அதே குற்றச்சாட்டு கருணாநிதிக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். பாபர் மஸ்ஜித் விஷயத்தில். அவர்கள் வந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்று ஜெயலலிதாவை வலியுறுத்தினார்கள். ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டுத்தான் அங்கே கோயில் கட்டவேண்டும் என்று சொன்னார்களா என்று கேட்டோமென்றால் அதற்கு ஜெயலலிதா மறுப்பு தெரிவிக்கிறார். நான் அப்படிச் சொல்லவேயில்லை. தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பேசும் பொழுது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினேன், பாபர் மசூதியை இடித்துவிட்டுத்தான் கட்டவேண்டும் என்று நான் எப்போதும் சொல்லவில்லை என்று ஜெயலலிதா தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இரண்டாவது விசயம் அவங்க வந்து மோடிக்கு விருந்து கொடுத்தாங்க, பா.ஜ.க அரசோடு உறவு வைத்தாங்க என்றெல்லாம் சொல்றீங்க, அது சம்மந்தமாக எங்களுடைய தாய்கழகம் தமுமுக எத்தகைய விமர்சனங்களை ஜெயலலிதா மீது முன் வைத்ததோ அந்த விமர்சனங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. அதை நாங்கள் வாபஸ் பெறவில்லை.

ஆனால் கடந்த காலங்களில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததில் கலைஞர்தான் முன்னின்றார். அதிகமாக 13 மாதங்கள்தான் ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ஆனால் கலைஞர் அவர்கள் ஏறத்தாழ முழுமையான காலங்களில் பா.ஜ.க.வுடைய கூட்டணியில் நீடித்து எல்லா பதவி சுகங்களையும் பெற்றிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஜெயலலிதா விருந்து வைத்தது குற்றம் என்று சொன்னால், கலைஞர் கருணாநிதி அவர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்த காலத்தில்தான் குஜராத்தில் 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆக, விருந்து வைத்தது ஒரு குற்றம் என்பதை விமர்சிக்கின்ற நேரத்தில், அதை மட்டுமே குற்றமாகப் பார்க்கக்கூடியவர்கள் ஏன் பா.ஜ.க.வின் கூட்டணியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பங்காளியாக இருந்தபோது 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்பதைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

கலவரம் பற்றி எரிந்த அந்த நேரத்தில் மத்திய கூட்டணியில் கலைஞரோடு பங்காளியாக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குஜராத் கலவரத்தைக் கண்டித்து கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறினார். ஏன் கலைஞர் அதைப் போன்று செய்யவில்லை? இப்போது ஜெயலலிதாவை குற்றம் சுமத்துபவர்கள் அதே குற்றச்சாட்டை ஏன் கலைஞர் மீது வைக்கவில்லை?

கேள்வி:இந்தியாவில் அதிகாரத்திலிருந்து வெளியே நின்றுக்கொண்டிருக்கும் நிலைமைதான் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உருவாவதால் மனித வளம்,பொருளாதாரம், முயற்சிகள் எல்லாம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளதல்லவா? அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து அரசியல் களத்தில்
செயல்பட முடியாதா? அவ்வாறு உருவானால் உங்களுடைய பதில் எவ்வாறிருக்கும்?

பதில்:பதில்:அதாவது ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஒரு கூட்டுக் குடும்பத்தை உங்களால் நடத்த முடிகிறதா? 25 நபர் கொண்ட கூட்டுக் குடும்பத்தை உங்களால் ஒன்றுபட்டு வழிநடத்த முடியவில்லை. 5000 முஸ்லிம்கள் உள்ள ஒரு ஊரில் ஒரு ஐக்கிய ஜமாஅத்தை நிறுவுவதற்கு அந்த முஸ்லிம்கள் கஷ்டப்படுறாங்க. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இன்றைக்கு 60 லட்சம் முஸ்லிம்கள் இருக்கக்கூடிய தமிழகத்தில் எல்லாரும் ஒரே நிலையில் இருக்கிறார்களா என்பது சாத்தியக் குறைவு.

ஆனால் எங்களுடைய கனவுத் திட்டம் ஒன்று இருக்கிறது. எல்லாரும் வெவ்வேறு அமைப்புகளை நடத்துவதில் தவறில்லை. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு பணிகளைச் செய்வதும் தவறில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மத்தியில் பொதுவான நிலைப்பாடுகளில் ஒரு கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்ற கனவுத் திட்டத்தில் எங்களுடைய தாய்கழகம் தமுமுக இருக்கிறது. அதை இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:தமிழக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு முன்னால் ம.ம.க. எந்த முஸ்லிம் அமைப்புகளுடனோ, அரசியல் கட்சிகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதாவது ஒட்டுமொத்த முஸ்லிம் இயக்கங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கூட்டணி முடிவாகி சீட் ஒதுக்கப்பட்ட பிறகு நீங்கள் ஆதரவு கேட்பதாகக் கூறப்படுவது பற்றி?

பதில்:இந்தக் குற்றச்சாட்டு எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும், நாங்கள் தமிழகத்தில் இருக்கக்கின்ற முஸ்லிம் அமைப்புகளில் வலுவான ஒரு அமைப்பு என்பது சமுதாயம் ஏற்றுக்கொண்ட உண்மை. அப்படி இருக்கின்ற பொழுது எங்களுக்கு என்று ஒரு செயற்குழு இருக்கின்றது, ஒரு பொதுக்குழு இருக்கின்றது. அந்தச் செயற்குழுவும் பொதுக்குழுவும் எதைச் சொல்கிறதோ அதைத்தான் எங்களுடைய உயர்நிலைக்குழு தீர்மானிக்கும். அந்த அடிப்படையில் தொகுதிப் பேச்சுவார்த்தையை நாங்கள் சென்று நடத்துறோம்.

எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஏன் போகவில்லை என்று சொன்னால், நடைமுறையில் சாத்தியமில்லை. எல்லோரும் என்ன சொல்றாங்க என்று சொன்னால் நான் உம்மி கொண்டு வரேன், நீ அரிசி கொண்டுவா என்கிறார்கள். பத்து அமைப்புகள் சேர்ந்து போகும்போது பத்து அமைப்புகளுக்கும் என்ன பின்னணி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

கேள்வி:அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாய இயக்கங்களை ஒற்றுமைப்படுத்த நடந்த முயற்சிகள் பற்றி?

பதில்:திருவளச்சேரியில் கடந்த ரமலானில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 2 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில், தமிழகத்தில் 19 இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதில் தாய்க் கழகமான தமுமுகவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இந்த அடிப்படையில் குஜராத் கலவரம் நடந்த நேரத்தில்கூட தமுமுகவும் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்து பல கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றினோம். கண்டன மாநாடுகளையும், பொதுக் கூட்டங்களையும் நடத்துவதற்கு காரணமாக இருந்தோம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பாற்பட்டு சமுதாய அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கலந்தாய்வு அடிக்கடி நடத்தப்பட வேண்டும், ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆர்வம் எங்களுக்கு இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக அதை செயல்படுத்துவோம்.

கேள்வி:தமிழக முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 3.5
சதவீதம் இடஒதுக்கீட்டை கலைஞர் கருணாநிதி அரசு வழங்கியுள்ளது. இதற்காக நீங்கள் நன்றி தெரிவித்து பாராட்டு விழா கூட நடத்தியுள்ளீர்கள். இதனை ஒரு சாதனையாக கலைஞர் கருணாநிதி அவர்கள் முஸ்லிம் சமூகத்திடம் பிரச்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு பாதிப்பு வராதா?

பதில்:நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஏனெனில் கலைஞர் விரும்பி அவராக இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. கேரளாவில் முஸ்லிம்கள் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், கர்நாடகாவில் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், ஆனால் தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நெடிய போராட்டங்களை நடத்தியது, நம்மைப் போன்ற வேறு சில சமுதாய அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திய பிறகு, போராட்டத்தின் நெருக்கடி தாங்காமல்தான் கலைஞர் இடஒதுக்கீடு தந்தார் என்பது உண்மை. குறிப்பாக 2007ம் வருடம் ஆகஸ்ட் மாதம் நாங்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ராஜகிரி தாவூத் பாஷா அவர்களின் கல்லூரியில் மாநிலப் பொதுக்குழுவை நடத்தினோம். அந்த பொதுக் குழுவில் திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தபோது இறுதி எச்சரிக்கை கலைஞருக்கு விடுத்தோம். 2007 டிசம்பர் 31க்குள் நீங்கள் இடஒதுக்கீடு தரவில்லை என்று சொன்னால், டாக்டர் ராமதாஸ் எத்தகைய வீரியமிக்க போராட்டங்களை களத்தில் எடுத்தாரோ அதை விட பன்மடங்கு வீரியமிக்க போராட்டங்களை நாங்கள் களத்தில் முன்னெடுப்போம், சாலைகளை மறிப்போம், ரயில்கள் ஓடாது, விமான நிலையங்களை முற்றுகை இடுவோம், கேபிள் வயர்களைக் கூட அறுப்போம் என்ற இறுதி எச்சரிக்கையை அந்த பொதுக் குழுவில் விடுத்தோம். அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 நாட்களில்தான் கலைஞர் இடஒதுக்கீட்டை தந்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆக ஒரு பெரிய நெருக்கடியையும் நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்திய பிறகுதான் கலைஞர் கொடுத்தாரே தவிர மனமுவந்து கொடுக்கவில்லை.

கேள்வி:வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு நியமித்த ஆணையம் அமைக்கும் முயற்சியில் ஏதேனும் கோரிக்கை வைத்தீர்களா?

பதில்:ஏறத்தாழ கடந்த 10 வருடங்களாக எங்களுடைய மாநில பொதுக்குழுவில், செயற்குழுவில் இதனைத் தீர்மானமாக நிறைவேற்றி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், எங்களுடைய கூட்டணி வெற்றி பெறுகின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைக்கின்ற பொழுது, நிச்சயமாக மனிதநேய மக்கள் கட்சி இந்த வெளிநாட்டு தொழிலாளர்களுடைய வாரியத்தை தனி அமைச்சகமாக ஆக்கி, எப்படி மலையாளிகள் கேரளாவில் தனி அமைச்சகமாக வைத்திருக்கிறார்களோ அதேபோல் மாற்றி வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கம்பெனிகள் இங்கேயே நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கு அதை சட்டமாக்குவதற்கு நாங்கள் முழுமையாக போராடுவோம்.

கேள்வி:ஒரு சமுதாய அமைப்பு தாங்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் எதிர்ப் பிரச்சாரம் செய்யப்போவதாகப் பற்றி?

பதில்:கலைஞர் கருணாநிதியாலும் நிராகரிக்கப்பட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக தாங்களும் அரசியல் களத்தில் உயிரோட்டமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்வதற்காக இத்தகைய முடிவுகளையெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே இந்தச் சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடந்து நிராகரிக்கப்படுவார்கள். அவர்களால் யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பதை இன்ஷா அல்லாஹ் சட்டமன்றத் தேர்தலின் களம் நிரூபிக்கும்.

கேள்வி:எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறீர்கள்? அதனை இறுதி செய்து விட்டீர்களா?

பதில்: 15 தொகுதிகளை அடையாளம் காட்டி அதிலிருந்து 3 தொகுதிகளை இறுதி செய்திருக்கிறோம். அந்த தொகுதிகள் எது என்பதை ஊடகங்களிடம் இப்போது பகிர்ந்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்ஷா அல்லாஹ் இருக்கிறது. விரைவில் அநேகமாக ஒரு வாரத்தில் அந்தச் செய்தி வெளிவரும்.

Dua For Gaza