Thursday, December 26, 2013

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபயணம்.100 க்கும் மேற்ப்பட்டோர் கைது!

periyapattinam
 இராமாநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயண போராட்டம் இன்று 24.12.2013 பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது.

பெரியபட்டினம் முதல் களிமன்குண்டு வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தரவேண்டியும், பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர் நியமனம் செய்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுவர் அமைக்க கோரியும், இராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் வரை வந்து செல்லும் பேருந்து காலை, மாலை பள்ளிகளுக்கு செல்லும் மீனவ தொழில் செய்துவரும் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த 55 மாணவர்கள் நலன் கருதி பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு வரை சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் நடைபயண போராட்டம் இன்று  பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது. இதில்  மாவட்ட துணை தலைவர் பைரோஸ் கான், மாவட்ட செயலாளர்கள் அப்துல் ஜமீல், செய்யது இப்ராஹீம், தொகுதி செயலாளர் செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரயிலில் முன்பதிவு செய்தவர் பயணத்தை ரத்து செய்தால் அந்த பதிவில் குடும்ப உறுப்பினர்கள் பயணிக்கலாம்!ரயிலில் முன்பதிவு செய்து ஒருவர் திடீரென பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அவருக்குப் பதிலாக அவரது குடும்ப உறுப்பினர், பெயர் மாற்றம் செய்து ரயிலில் பயணம் செய்யலாம்.
இதுக்குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்; ‘ரயிலில் பயணம் செய்ய, பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்னதாக ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்கும் நடைமுறை இப்போது உள்ளது. தட்கல் டிக்கெட்டை முதல்நாள் காலை 10 மணியில் இருந்துதான் எடுக்கமுடியும்.

இளம்பெண்ணை கர்நாடகாவிலும் குஜராத் போலீஸ் கண்காணித்தது! – குலைல் டாட் காம்


spy

புதுடெல்லி: பெங்களூரைச் சார்ந்த கட்டிட கலை வல்லுநரான இளம்பெண்ணை குஜராத்தில் மட்டுமல்ல; கர்நாடகாவிலும் மோடியின் போலீஸ் கண்காணித்தது என்று குலைல் டாட் காம் இணையதளம் ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்கால கணவர், உறவினர்கள், பெற்றோர் ஆகியோர் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கியதை தொடர்ந்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் நோக்கம் இளம்பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை குறித்து அறியும் ஆவலே என்பது தெரிய வந்துள்ளது.

ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிக்கோவ் (94) மரணம்மாஸ்கோ: ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிக்கோவ் (94) திங்கள்கிழமை மரணம் அடைந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக ரஷ்யாவின் உட்முர்ஷியா குடியரசுத் தலைநகர் இஷ்விஷ்க்கில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உட்முர்ஷியா குடியரசின் செய்தித் தொடர்பாளர் விக்டர் சல்கோவ் தெரிவித்தார். சோவியத் ஒன்றியப் படையணியின் முக்கிய துப்பாக்கியாக இருந்த ஏகே 47, பின்னாளில் உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

Monday, December 23, 2013

நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி, இன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம்!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் இன்று(22.12.2013) சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பி. அப்துல் ஹமீது, நிஜாம் முஹைதீன், மாநில பொருளாளர் ஏ. அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் எஸ்.எம். ரபீக் அகமது அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர்கள் செய்யது அலி, அமீர் ஹம்சா, அப்துல் சத்தார், ரத்தினம், அபுதாகிர் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொணடனர்.

முஸஃபர் நகர்: குளிரை தாக்குப் பிடிக்க பாப்புலர் ஃப்ரண்ட் உதவி!


PFI

முஸஃபர் நகர்: உத்தர பிரதேச மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களில் துயரமான சூழல் கடுமையான குளிரால் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அங்கு நடத்தி வந்த துயர் துடைப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக முகாம்களில் நிவாரணப் பணிகளுக்கு தலைமை வகிக்கும் மவ்லானா முஹம்மது ஸதாப் தெரிவித்தார்.

எதிர்கட்சிகளை ஒடுக்கும் எகிப்திய ராணுவம்: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்!
மொராக்கோ: இஃவானுல் முஸ்லிமீனை தொடர்ந்து எகிப்தின் இதர எதிர்கட்சியினரையும் போராட்ட எதிர்ப்புச் சட்டம் பிரயோகித்து ராணுவம் ஒடுக்குவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது.
ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய ஏப்ரல் 6 இயக்கத்தின் தலைவர் முஹம்மது ஆதில் உள்ளிட்ட 6 பேரை ராணுவம் கைதுச் செய்தது. அவர்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த ராணுவம், ஆறுபேரையும் கடுமையாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் ஆதில் தவிர 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Sunday, December 15, 2013

ஓரினசேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்,தீர்ப்பை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்!ஓரினசேர்க்கை எனப்படும் இயற்கைக்கு மாற்றமான உறவை தண்டனைக்குரிய குற்றமாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை டிவிட்டர்,ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் குறைகாண்பது ஆச்சர்யமாக உள்ளது. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை விட அதிகமான முயற்சிகளை,எய்ட்ஸ் நோயின் முக்கிய காரணியான இந்த அசிங்கத்திற்கு எதிராக எடுக்க வேண்டும்.     'கடவுள் ஆதம் மற்றும் ஏவாளைதான் படைத்தார். ஆதம் மற்றும் ஸ்டீவை படைக்கவில்லை' என்று ஒரு செய்தியாளர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய வங்கிகளில் கேட்பாரற்ற தொகை எவ்வளவு?

 கணவரோ மனைவியோ இறந்துவிட்ட பின யாராலும் உரிமை கோர இயலாத நிலையில் பெருந்தொகை வங்கியில் இருப்பில் உள்ளதாகவும்,
அதை எடுக்க உதவும்படியும் உங்களுக்கு நைஜீரியாவிலிருந்து அல்லது ஏதேனும் ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்து மின்னஞ்சல்கள் வந்திருக்கிறதா?

ஹிந்துத்துவாவாதிகளின் பிடியில் மத்திய உள்துறை அமைச்சகம்!-சமூக ஆர்வலர்கள்!


shabnam

புதுடெல்லி: இந்தியாவில் அதிகாரமையங்கள் காவிமயமாக் கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் நீண்டகாலமாகவே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், மத்திய அமைச்சகமும் கிட்டத்தட்ட ஹிந்துத்துவா சக்திகளின் பிடியில்தான் உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும் முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் கைதுச் செய்யப்படுவது தொடருவதற்கு காரணம் இதுவாகும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
முன்னாள் உள்துறமை செயலாளர் ஆர்.கே.சிங் பா.ஜ.க வில் சேர்ந்தது இதற்கான தெளிவான ஆதாரமாகும்.உள்துறை அமைச்சகம் தவிர இதர துறைகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.காவி உள்ளம் படைத்த அதிகாரிகள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை தகர்க்கின்றார்கள்.

Friday, December 13, 2013

ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேஷனுக்கு முகுந்தன் சி.மேனன் விருது!


Nchro

கோழிக்கோடு: பிரபல மனித உரிமை ஆர்வலரும், என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் ஸ்தாபகபொதுச் செயலாளருமான மறைந்த முகுந்தன் சி.மேனன் பெயரில் ஆண்டு தோறும் என்.சி.ஹெச்.ஆர்.ஓ (தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு) மனிதஉரிமை விருதை வழங்கி வருகிறது. இவ்விருது மனித உரிமை மற்றும்சுற்றுச்சூழல் தளத்தில் சிறப்பாக பணியாற்றிய நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இராம்நாடு வடக்கு மாவட்டம் பனைக்குளத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம்!பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராம்நாடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் நேற்று (06.12.2013) நடைபெற்றது.
இராம்நாடு வடக்கு மாவட்டம் பனைக்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அப்துல் நாசர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஹமீது இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Wednesday, December 11, 2013

முஸஃபர் நகர் கூட்டு பாலியல் வன்கொடுமை:வாக்குமூலம் அளித்த பெண்களின் வீடுகள் தீக்கிரை!


fire home

முஸஃபர் நகர்: உத்தரபிரதேச மாநிலம் முஸஃபர்நகரில் நடந்த கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.முன்னர் 6 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்திருந்தனர்.

மருந்து விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு – சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

விலை குறைத்து விற்கவேண்டிய மருந்தகள் என அரசு பிறப்பிக்கும் உத்தரவானது அது பற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளி யான உடனேயே அமலுக்கு வரும்.அத்துடன் இந்த உத்தரவை 15 நாள்களுக்குள் அமல்படுத்தவேண்டும் .மேலும் இந்த அவகாச காலத்தில் விற்காத இருப்புகளை உயர் விலையில் விற்கக்கூடாது என்று மருந்து தயாரிப்பாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நிதாஹத் சட்டத்தினால் சவூதி அரேபியாவில் வேலை இழந்து தவித்து வரும் தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத்தேடி பல்வேறு மாநில மக்கள் சென்றுள்ளனர். சவூதி அரேபியா நாட்டிலும் வேலை வாய்ப்பிற்காக தமிழகத்தை சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர். சவூதி அரேபியாவில் “நிதாஹத்” என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வரையரைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதில் அடிப்படை வேலைகளுக்காக சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநில மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியாகியுள்ளனர்.

ஃபேஸ்புக்கில் உணர்ச்சியை வெளிப்படுத்த சிம்பதி (sympathy) பட்டன்!..!ஃபேஸ்புக்கில் துயரமான செய்திகள், மரண வார்த்தைகளை பார்க்கும்போது தமது உணர்ச்சியை வெளிப்படுத்த லைக் கொடுக்கலாமா? என்று இனி யோசிக்க தேவையில்லை.
அத்தைய சூழல்களில் இனி sympathy (இரக்கம்) பட்டனை க்ளிக் செய்வதற்கான வசதி இனி ஃபேஸ்புக்கில் உண்டாகும்.
sad மற்றும் depressed என்ற பெயர்களில் பட்டன்கள் இடம்பெறும்.

இஸ்ரேல் குடியேற்றத்தை ஆதரிக்கக் கூடாது! – பிரிட்டன்


britain

லண்டன்: இஸ்ரேல் குடியேற்றக்காரர்களுடன் இணைந்து செயல்படக் கூடாது என்று பிரிட்டீஷ் அரசு தன் வர்த்தகத் துறை நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் அளித்துள்ளது. குடியேற்றத்தை ஆதரிக்கும் நடவடிக்கைக்களுக்கு துணை போகக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
குடியேற்றக்காரர்களுடன் இணைந்து திட்டங்களை நிறுவனங்கள் துவக்கினால் பிரிட்டீஷ் அரசு ஆதரிக்காது. சட்ட ரீதியாக இஸ்ரேலுக்கு சொந்தமில்லாத பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடக்கூடாது.

Saturday, December 7, 2013

பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டவேண்டும்! – டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் தர்ணா


jantar

புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில பிரிவு சார்பாக ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடந்தது.
தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவரும், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினருமான இ.எம். அப்துர் ரஹ்மான் தனது உரையில் கூறியது:
சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு சங்க் பரிவாரம் நிகழ்த்திய மிகப் பெரிய பயங்கரவாதச் செயலே பாபரி மஸ்ஜித் இடிப்பு. பாபரி மஸ்ஜிதின் இடிப்பை மறக்கடித்து விடலாம் என்று சங்க் பரிவாரம் கனவு காண வேண்டாம்.

உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய பிரச்னை ஃபலஸ்தீன்! – யூசுஃப் அல் கர்ழாவி


qaradawi

தோஹா: இஸ்லாம் மற்றும் உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய பிரச்னை ஃபலஸ்தீன் என்று உலகின் புகழ் பெற்ற முஸ்லிம் மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி தெரிவித்தார்.
கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அமைந்துள்ள உமர் கத்தாப் மஸ்ஜிதில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆற்றிய ஜும்ஆ குத்பா உரையில் இதனை குறிப்பிட்டார் கர்ழாவி.

Wednesday, November 27, 2013

ஆற்றாங்கரை – கோப்பேரி மடம் சாலையை சீரமைத்து அகலபடுத்த கோரி தடையை மீறி நடைபயணம் எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

இராமநாதபுரம் ஆற்றாங்கரை – கோப்பேரி மடம் சாலையை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ சார்பில் நடைபயணம் அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.ஆனால் கடைசி நேரத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அழகன்குளத்தில் தடையை மீறி நடைபயணம் ன்று (26.11.2013)துவங்கியது. 

திருவாடனை தொகுதி தலைவர் ஜஹீருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்,மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ்கான்,எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹிஜ்ரி, தொகுதி செயலாளர் ரியாஸ் அஹமது,இணைச்செயலாளர் கஜினி முஹம்மது,நூருல் ஹக்,பனைக்குளம் கிளைத்தலைவர் பாசித் அலி,செயலாளர் இஜாஸ் அஹமது,அழகன் குளம் கிளைத்தலைவர் அப்துல் ஜமீல்,செயலாளர் உமர்,சித்தார்கோட்டை கிளைத்தலைவர் ரைசுதீன்,தேவிப்பட்டிணம் கிளைத்தலைவர் ஷாஜஹான் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டு தேவிப்பட்டிணம் கொண்டு செல்லப்பட்டு மஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.

Friday, November 22, 2013

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர்கள் J.ரசின், S.இல்யாஸ் மற்றும் பொருளாளர் A.அஹமது பைசல் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து கீழ்காணும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

முந்தைய தலைமுறையை விட தற்போதைய குழந்தைகளின் உடல் வலு குறைவு!-ஆய்வில் தகவல்!லண்டன் : உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான குழந்தைகளிடம் நடத்திய ஆய்வொன்று, தற்காலக் குழந்தைகளில் பலரால், அவர்களின் பெற்றோர்கள் அவர்களைப் போல இளம் வயதினராக இருந்த காலத்தில் ஓடியது போல அதே போன்ற வேகத்தில் ஓட முடியவில்லை, என்பதைக் கண்டறிந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் 28 நாடுகளிலிருக்கும் சுமார் 2.5 கோடிக்கும் மேலான குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு விவகாரம்: சிக்கலில் பா.ஜ.க!புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே மீதமுள்ள நிலையிலும், நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள சூழலிலும் குஜராத் முதல்வரும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ரகசியமாக உயர் அதிகாரிகள், தனிநபர்களை கண்காணித்த விவகாரத்தை சமாளிக்க தெரியாமல் பா.ஜ.க தவித்து வருகிறது.
சாஹிபிற்காக(மோடி) உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, பெங்களூரைச் சார்ந்த ஆர்க்டிக்டான இளம்பெண்ணையும், குஜராத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியையும் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை போலீசிடம் ஒப்படைத்த செய்தியை இணையதள நியூஸ் போர்டல்களான குலைல் மற்றும் கோப்ரா போஸ்ட் ஆகியன வெளியிட்டது பா.ஜ.கவிற்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

2011- ஆம் ஆண்டு கலவரம்:பா.ஜ.க எம்.எல்.ஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!ருத்ரப்பூர் (உத்தரகாண்ட்) : உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக ருத்ரப்பூர் நீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2011ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ருத்ரப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்தக் கலவரத்தை தூண்டியதாக ராஜ்குமார் துக்ரால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி சிபிசிஐடி போலீஸார் ருத்ரப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (20.11.2013) திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை வகித்தார்.

மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் அனைவரையும் வரவேற்றார். 

மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர்கள் அமிர் ஹம்சா, ரத்தினம், அப்துல் சத்தார், அபுதாகிர், செய்யது அலி, மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Sunday, November 17, 2013

நச்சு மாசுக்களால் உலக அளவில் 20 கோடி பேர் பாதிப்பு!லண்டன்: உலகளவில் இருபது கோடிக்கும் அதிகமான மக்கள் நச்சு மாசுக்கள் காரணமாக பாதிப்படையக் கூடிய அபாயகரமான நிலையில் உள்ளனர் என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கையில் உலகளவில் மிகவும் நச்சுத்தன்மை அபாயம் வாய்ந்த பத்து இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நியூயார்க்கிலுள்ள பிளாக்ஸ்மித் நிறுவனமும், சுவிட்சர்லாந்திலுள்ள கிரீன் கிராஸ் அமைப்புமே இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட நடத்திய மாநில அளவிலான விளையாட்டு இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான்,உடற்பயிற்சி வகுப்புகள்,ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள்,இரத்த தான முகாம்கள்,அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

Wednesday, November 13, 2013

எஸ்டிபிஐ (SDPI) சார்பில் பரமக்குடியில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்


இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதை கண்டித்தும்,இந்த மாநாட்டிற்கு இந்திய அரசின் சார்பில் பிரதமர் உட்பட எந்த பிரதிநிதியும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட  எஸ்டிபிஐ(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் பரமக்குடியில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார்.

பாட்னா குண்டுவெடிப்பு: விசாரணையில் புதிய திருப்பம்!


patna

பாட்னா: பீகாரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னர் இந்தியன் முஜாஹிதீன் மீது குற்றம் சாட்டப்பட்ட இச்சம்பவத்தில் புதிய கைதுகளை தொடர்ந்து வழக்கு புதிய திசையை நோக்கி பயணிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜார்கண்டில் தன்பாத் மாவட்டத்தில் ராஜு ஸாவு என்பவர் இவ்வழக்கில் புதியதாக கைது செய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ.விடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பீகார் போலீஸ் ராஜு ஸாவுவை தன்பாத்தில் ஜாரியாவில் வைத்து கைது செய்தது.

Sunday, November 10, 2013

சாதிக் ஜமால் போலி என்கவுன்ட்டர் வழக்கு: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் சாந்துவிடம் சிபிஐ விசாரணை!குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சாதிக் ஜமால் வழக்கில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்துவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஜனவரியில் சாதிக் ஜமால் என்பவர் போலீசாரால் தீவிரவாதி எனக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது ஐ.பியில் இணை இயக்குநராக பணிபுரிந்தார் நேச்சல் சாந்து. தற்போது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.

ஐ.நா அமைப்பில் அமெரிக்கா, இஸ்ரேல் தகுதியிழப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் வாக்களிக்கும் உரிமையை அமெரிக்காவும், இஸ்ரேலும் இழந்துள்ளன.
பலஸ்தீனத்தை யுனெஸ்கோ அமைப்பில் உறுப்பினராக கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. பலஸ்தீனத்தை உறுப்பினராக இணைத்துக் கொண்டதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்தன.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்

இலங்கை தலைநகர் கொழும்பில் வருகின்ற 15-ம் தேதி காமன்வெல்த் மாநாடு தொடங்குகிறது. சொந்த நாட்டு மக்களையே அழித்தொழித்து, சர்வாதிகார போக்கில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ராஜபக்சே அரசை உலக நாடுகள் கண்டித்துக்கொண்டிருக்கும் வேளையில், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால் அது உலக நாடுகளுக்கு மத்தியில் ராஜபக்சே அரசுக்கு மதிப்பைக் கூட்டும் விதமாகவும், ராஜபக்சே அரசு முன்னின்று மேற்கொண்ட இனப்படுகொலைகளை மறக்கடிக்கும் விதமாகவும் அமைந்து விடும்.

Saturday, November 9, 2013

நிரபராதிகள் மீது பொய்க் குற்றச்சாட்டு: மனித உரிமை கமிஷன் கர்நாடகா போலீஸ் மீது வழக்கு!


shrc

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட நிரபராதிகளான 3 முஸ்லிம்களை ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவித்த சம்பவத்தில் கர்நாடகா போலீஸ் மீது அம்மாநில மனித உரிமை கமிஷன் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

இஸ்ரேல் நீதிமன்றம் அல் அக்ஸா இமாம் மீது குற்றச்சாட்டு!


''KUDUS'TEKI OSMANLI MIRASIMIZ TEHLIKEDE'' PROGRAMI

ஜெருசலேம்: முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைதுல் முகத்தஸ் என்றழைக்கப்படும் அல் அக்ஸா மஸ்ஜிதின் இமாம் ஷேக் ராஇத் ஸலாஹி வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று இஸ்ரேல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 2007ம் ஆண்டு அவர் நிகழ்த்திய ஓர் உரையில், “அல் அக்ஸாவைக் காப்பதற்காக என் உயிரைக் கூட கொடுப்பேன்” என்று அவர் பேசியது வன்முறையையும், இனவாதத்தையும் தூண்டியதாம்.

முஸஃபர் நகர் கலவரம்: 254 வழக்குகளில் விசாரணை நிறைவுற்றது!


Muzaffarnagar_Oct31360

முஸஃபர் நகர்: உத்தரப் பிரதேச அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான 254 வழக்குகளில் தனது விசாரணையை நிறைவு செய்துள்ளதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் ஏ.டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) முகுல் கோயல் கூறியதாவது:

Thursday, November 7, 2013

சவூதியில் இந்தியர்கள் துன்புறுத்தப்படவில்லை! – மத்திய அமைச்சர் வயலார் ரவி!

சவுதி அரேபிய அரசு, சட்டவிரோதமாக நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்களது பணி ஆவணங்களை சட்ட ரீதியாகத் திருத்திக்கொள்ள அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், அங்கிருந்து நாடு திரும்பும் இந்தியத் தொழிலாளர்கள் அங்கு துன்புறுத்தப்பட்டதாக எந்த ஒரு புகாரும் இல்லை என்று வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியிருக்கிறார்.

யாசர் அராஃபத் படுகொலை - திடுக்கிடும் தகவல் அம்பலம்!

பாரிஸ்: பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன விடுதலைக்காக தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தி போராடி, பின்னர் ஆயுதத்தைக் கைவிட்டு அஹிம்சை வழியில் பயணித்த யாசர் அராபத் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தனது 75-வது வயதில், பிரான்ஸ் நாட்டில் இறந்தார். அவர் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டாலும் அவருடைய மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அப்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

Tuesday, November 5, 2013

புதுவலசையில் மழை!

புதுவலசையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக  ஜாமிஆ பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த மரம் ஒடிந்து கீழே விழுந்தது. மேலும் நமதூர் பள்ளிக்கூடத்தின் மைதானத்திலும், தெருவிலுள்ள  சாலைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.   

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னையில் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா!பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் கொடூரங்களுக்கு துணை போன மருத்துவர்கள்: புதிய அறிக்கை!அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், தீவிரவாதம் என்ற பெயரால் சந்தேகிக்கப்படும் நபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Wednesday, October 30, 2013

ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் பாசிச அஜண்டாவை செயல்படுத்துகின்றன – எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

press relese(27.10.2013)
 புதுடெல்லி:இந்தியாவில் ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச அஜண்டாவை நடைமுறைப்படுத்துவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) தேசிய செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தியை கூட ரகசிய புலனாய்வு பிரிவு, தனது ரகசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
உபயோகித்துள்ளது என்பதற்கான ஆதாரம் தான் அவரது முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கை.முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புண்டு என்று அறிக்கை வெளியிட்ட ராகுல் காந்தி நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தேசிய செயற்குழு தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.

காஸாவில் ராணுவ பயிற்சி மையத்தை நோக்கி இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்!காஸாவில் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியுள்ளன. வடக்கு காஸாவில் ஹமாஸின் ராணுவ பயிற்சி மையத்தை குறி வைத்து ட்ரோன் விமானத்திலிருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்தன.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் யாருக்கும் காயமுற்றதாக தகவல் இல்லை. ராணுவ மையத்திற்கு அருகே ஏவுகணைகள் விழுந்தன. இவ்வேளையில் யாரும் அங்கிருக்கவில்லை.

Sunday, October 27, 2013

சர்ச்சைக்குரிய கருத்து: ராகுல்காந்தி வீட்டை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம்! - உருவ பொம்மை எரிப்பு!மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உ.பி., முஸாஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதாக கூறி நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

முஸாஃபர் நகர் கலவர பாதிப்புக்கு நிதி ஒதுக்கீடு! - 1800 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் உதவி!முஸாஃபர் நகர் கலவரம் குறித்த மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 கோடியே 84 லட்சம் ஒதுக்கி உ.பி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்படி அசையும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எனவும் அசையா சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கு மேல் எனவும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

Saturday, October 26, 2013

காமன்வெல்த் மாநாடு: சட்டசபை தீர்மானம் வரவேற்கத்தக்கது! – எஸ்.டி.பி.ஐ


mubarak

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற  தமிழக சட்டசபையின்  தீர்மானம்  வரவேற்கதக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கூறியுள்ளது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை  நடத்தக் கூடாது, இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பது எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை தமிழக சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ,எஸ்,ஐ தொடர்பு! - ராகுலின் சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு கண்டனம்!முஸாஃபர் நகரில் வகுப்புவாதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ தொடர்பு இருப்பதாக கூறிய ராகுல்காந்தியின் அறிக்கை  முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
முஸாஃபர் நகரில் வகுப்புவாதக் கலவரத்தால் சொந்தங்களையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் முஸ்லிம்களுக்கு ஐ.எஸ்.ஐ தொடர்பு இருப்பதாக கூறிய ராகுலின் அறிக்கைக்கு முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Monday, October 21, 2013

இஸ்ரேல் சிறைகளில் கொடிய சித்திரவதைகளை அனுபவிக்கும் ஃபலஸ்தீன் குழந்தைகள்: யுனிசெஃப் அறிக்கை!இஸ்ரேல் சிறைகளளில் ஃபலஸ்தீன சிறுவர்கள் கொடிய சித்திரவதைகளை அனுபவிப்பதாக ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃபின் அறிக்கை கூறுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொடுமைகள் குறித்து ஏழு மாதங்கள் முன்பு யுனிசெஃப் முதல் கட்ட அறிக்கையை அளித்திருந்தது. இதன் பின்னரும் அதே நிலை தொடருவதாக புதிய அறிக்கை கூறுகிறது.

இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு?


Islamic Bank

புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் ஆதரவாக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, October 19, 2013

காணாமல் போன சென்னை ஹஜ் பயணி இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் ஊழியரால் கண்டுபிடிப்பு!


iff

ஜித்தா: சென்னையில் இருந்து புனித ஹஜ் யாத்திரை சென்று, இறந்ததாகக் கருதப்பட்ட ஒரு புனிதப் பயணி, மக்காவில் உள்ள மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் என்பவர் தன் மனைவி பதருந் நிசாவுடன் சேர்ந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். அவர்கள் யாத்திரையின் முதல் நாளன்று பிரிந்து விட்டனர். நான்கு நாள்களாகத் தேடியும் பரக்கத்துல்லாஹ்வைக் காணாததால் அவர் இறந்து விட்டதாக அவரது யாத்திரைக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் கருதினர்.

Dua For Gaza