இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.
Monday, December 31, 2012
எழுச்சியுடன் நடந்த இமாம்களின் மாநாடு!
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் கடந்த டிசம்பர்-29ம் தேதி சனிக்கிழமை "இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு" எழுச்சியுடன் நடைபெற்றது.
காலை 9 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழக தலைவர் இபுராஹிம் உஸ்மானி அவர்கள் கொடியேற்றி வைத்து இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுச்செயலாளர் ஆபிருதீன் மன்பஈ திறந்துவைத்தார். காலை 10 மணியளவில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஜமாத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் மெளலானா மன்சூர் காஷிஃபி அவர்கள் காதியானிகளின் உருவாக்கம் தொடர்பான உரையை நிகழ்த்தினார். அடையாள் ஜூம்மா மஸ்ஜிதின் தலைமை இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் இஸ்லாமிய கல்வி என்ற தலைப்பிலும் இன்னும் பிற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவாற்றினர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மரணம் : தேசத்தின் துக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்கிறது
பத்திரிகை செய்தி
டெல்லி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் மரணம் தேசத்தின் துக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்கிறது.
அண்மையில் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி மரணமடைந்த துயர சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே. முஹம்மது ஷெரீஃப் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரில் நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 23 வயதான மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பலியான சம்பவம், இந்திய பெண்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. அரசு மற்றும் போலீசாரின் அணுகுமுறையே இத்தகைய கொடிய சம்பவங்கள் நிகழ முதன்மையான காரணமாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுப்பதற்கு, ஆட்சியாளர்களின் கண்களை திறக்க சமீபத்திய இச்சம்பவம் உதவட்டும்.
கோவையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்
கோவை : கடந்த 2006ஜுலை 22ல் கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு புனைந்து கோவை மாநகரையே குலுங்க வைத்த முன்னால் உளவுத்துரை AC ரத்தின சபாபதியின் மாபாதகச்செயலை யாரும் மறந்திருக்க முடியாது .
ஒன்றுபட்ட முஸ்லிம்களின் போராட்டத்தாலும் , சமூக நலனில் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் எழுப்பிய குரலாலும் தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுக்கு (SIT) .மாற்றியது . ஒரு வருட காலமாக இவ்வழக்கை விசாரித்த SIT கடந்த 2007 அக்டோபர் மாதம் கோவை ஜே.எம் - 7 நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை .சமர்ப்பித்தது இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் காவல்துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் , சேர்க்கப்பட்டவை மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன . எனவே இவ்வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கிறோம் என அவ்வறிக்கையில் SIT குறிப்பிட்டுள்ளது .
Sunday, December 30, 2012
இராமநாதபுரத்தில் நடப்பாண்டில் மட்டும் விபத்தில் 272 பேர் மரணம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பல்வேறு இடங்களில் 50 பேர் கொலை செய்யப்பட்டனர். 254 விபத்துகளில், 272 பேர் பலியாகியுள்ளனர். இதில் 841 பேர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆண்டுதோறும் புத்தாண்டு பிறப்பையொட்டி, "நடப்பாண்டு கொலையோ, கொள்ளையோ நடக்கக்கூடாது' என வேண்டாத போலீசார் இருக்க முடியாது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாக நடக்கவில்லை என, பெருமூச்சு விடுகின்றனர்.
லேபிள்கள்:
இராமநாதபுரம்
ஹிஜாப் அணிய முஸ்லிம் பெண்களுக்கு நீதிமன்றம் அனுமதி!
நீதிமன்றத்திற்கு வரும்போது முஸ்லிம் மகளிர் முகத்தை மூடி கண்கள் மட்டும் தெரியும் வகையில் ஆடை (நிகாப்) அணியலாம் என்று கனேடிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அண்மையில் கனேடிய முஸ்லிம் பெண்ணொருவர், பொது இடத்துக்கோ அல்லது ஆண்கள் இருக்கும் இடத்துக்கோ வரும்போது முழுதும் மூடிய உடையை தான் அணிந்திருக்க வேண்டும். அதனால் தன்னை அந்த உடை அணிய அனுமதிக்குமாறு கனேடிய நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான தீர்ப்பின் போது அது தனிமனித உரிமை என்று நீதிமன்றம் கருத்தளித்துள்ளது.
லேபிள்கள்:
உலகம்
பாலியல் பலாத்கார பெண் மரணம்:குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்-பாப்புலர் ஃப்ரண்ட்
இந்தியாவின் தலைநகரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: இளம்பெண்ணின் மரணம் இந்திய பெண்களின் பாதுகாப்பைக் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கொடூரமான இச்சம்பவத்தில் அரசுதான் முக்கிய பொறுப்பாளி. எல்லை மாநிலங்களிலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை காண்பதற்கு இச்சம்பவம் அதிகாரிகளுக்கு தூண்டுகோலாக அமையவேண்டும். அங்கேயெல்லாம் குற்றம் புரிவது போலீசும், ராணுவமும் என்பதால் நிலைமை கடுமையானது. இந்திய மக்கள் நீதி கேட்டு வீதிகளில் இறங்கி போராடுவது நல்ல அறிகுறியாகும்.
Saturday, December 29, 2012
புதுவலசை டவுன் பஸ் நிறுத்தம் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
ராமநாதபுரம்-புதுவலசை டவுன் பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பல்வேறு கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரத்திலிந்து 20 கி.மீ. தொலைவில் அழகன்குளம் உள்ளது. ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோப்பேரிமடம், சித்தார்கோட்டை, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம் வழியாக அழகன்குளத்திற்கு 6, 6ஏ, எம்.1 ஆகிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ராமநாதபுரத்திலிருந்து புதுவலசை கிராமத்திற்கு 6பி டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
லேபிள்கள்:
புதுவலசை
பாலியல் வன்புணர்வு தேசமும் கள்ள மவுனமும்!
கடந்த வாரம், டிசம்பர் 16 இரவு ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை 6 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த சம்பவம் நேற்றுவரை இந்தியாவின் தலைநகரை உலுக்கி எடுத்துவிட்டது. மாணவர்களின் போராட்டம் உச்சத்தை எட்டி இருப்பது ஒருவகையில் நம்பிக்கை தருகிறது. |
கடந்த வாரம், டிசம்பர் 16 இரவு ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை 6 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த சம்பவம் நேற்றுவரை இந்தியாவின் தலைநகரை உலுக்கி எடுத்துவிட்டது. மாணவர்களின் போராட்டம் உச்சத்தை எட்டி இருப்பது ஒருவகையில் நம்பிக்கை தருகிறது. மாணவர்கள் இந்தியா கேட்டுக்கு செல்வதைத் தடுக்க 9 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடும் நிலை உருவாகி இருப்பதுடன் பிரதமர் நாற்காலியில் இருக்கும் மன்மோகன்சிங்கும், பிரதமராக அதிகாரம் படைத்த சோனியா காந்தியும் கலந்து பேசி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன வழக்கம் போல…. ஆட்சியாளர்களுக்கே உரிய ஆயுதத்தை எடுப்பார்கள்.
முர்சியின் ஆட்சியை கவிழ்க்க சதி!: விசாரணை நடத்த உத்தரவு!
எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சி தலைவர்கள் தங்களது கட்சி தொண்டர்களுக்கு ஊக்கமளித்தது தொடர்பாக விசாரணை நடத்த எகிப்தின் முதன்மை வழக்குரைஞர் உத்தரவிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர்களான முஹம்மது அல் பராதி, முன்னாள் அரபுலீக் பொது செயலாளர் அம்ர் மூஸா, ஹம்தீன் ஸபாஹி ஆகியோருக்கு எதிராக விசாரணை நடைபெறும்.
அம்ர் மூஸாவும், ஸபாஹியும் அதிபர் தேர்தலில் முர்ஸியை எதிர்த்து போட்டியிட்டவர்கள் ஆவர். எதிர்கட்சி தலைவர்கள் அப்பாவி மக்களை அதிபர் முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க ஊக்கமூட்டினர் என்று இஃவானுல் முஸ்லிமீனின் இணையதளம் குற்றம் சாட்டுகிறது. இதன் மூலம் எதிர்கட்சி தலைவர்கள் தேசத்துரோக குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லேபிள்கள்:
உலகம்
UAPA உடனே நீக்க வேண்டும்-NCHRO
மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) சார்பாக ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20.12.2012 மாலை 5.00 மணியளவில் சென்னையில் நடைபெற்றது.என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். ஏ. ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப் துவக்கவுரையாற்றினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் (PUHR) பேரா. அ. மார்க்ஸ் யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கொடூரத்தன்மை குறித்து அறிமுக உரையாற்றி விவாதத்தை துவக்கி வைத்தார்.
Friday, December 28, 2012
வன்புணர்வு வழக்குகள்: நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புதுடெல்லி: வன்புணர்வு வழக்குகளை விரைந்து விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி வன்புணரப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வன்புணர்வு வழக்குகளை விரைந்து 2 மாதங்களுக்குள் முடிக்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
லேபிள்கள்:
இந்தியா
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு
கலாச்சார பாரம்பரியமிக்க நம் நாட்டின் இன்றைய நிலை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. தனி மனித ஒழுக்கங்கள், குடும்ப உறவு முறைகள், சமூக வாழ்வு என அனைத்தும் சிதைந்து வருகிறது. சுயநலம், பாலியல் வன்கொடுமைகள், தகாத உறவுகள், கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், பெண்களை போகப்பொருளாக பயன்படுத்துதல், கற்பழிப்பு போன்ற சமூக தீமைகள் தினமும் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.
நம் நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கின்ற இத்தகைய கலாச்சார சீரழிவுகளை முற்றிலும் களைந்து, களங்கமில்லா கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக வருகின்ற 29-12-2012 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ஃபைஸ் மஹாலில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு டிசம்பர் 22.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் புத்தனத்தானியில் மலபார் ஹவுஸில் வைத்து தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இப்பொதுக்குழுவில் துவக்க உரையாற்றிய தேசிய தலைவர் தனதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நவீன சமூக இயக்கம் என்பதையும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கு மக்களுக்கு மத்தியில் அமோகமான ஆதரவு கிடைத்து வருகின்றது என்றும் குறிப்பாக வட மாநிலங்களில் நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது, சமீபத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? பிரச்சாரத்திற்கு கலந்து கொண்ட மக்கள் வெள்ளமே இதற்கு சாட்சிய் என்றார்.
Thursday, December 27, 2012
புதிய அரசியல் சாசனத்தில் முர்ஸி கையெழுத்திட்டார்!
கெய்ரோ:மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்தில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கையெழுத்திட்டார். தேசம் சந்திக்கும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்த முர்ஸி, எகிப்தின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் இனி கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார்.
கடுமையான செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் சூசகமாக தெரிவித்தார். 2 கட்டங்களாக நடந்த மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் 63.8 சதவீத வாக்காளர்கள் அரசியல் சாசனத்தை ஆதரித்து வாக்களித்ததாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2 மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்.
லேபிள்கள்:
உலகம்
பேராசிரியர் கிலானியை சுட்டவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!
புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலை செய்த பேராசிரியர் கிலானியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றவர்கள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆவர். கிலானியை தாங்கள் தாம் துப்பாக்கியால் சுட்டதாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரி ஒப்பு கொண்டுள்ளான்.
லேபிள்கள்:
இந்தியா
உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் இன்று சீனாவில் ஓட தொடங்கியது!
உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீய்ஜிங்கிலிருந்து தென் பகுதியில் இருக்கும் குவாங்ஷோ நகர் வரை இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2,300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அதி வேக ரயில் பாதையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதிய ரயில் பீஜிங்கிலிருந்து இன்று (புதன்கிழமை) புறப்பட்டது.
பீய்ஜிங் மேற்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட ரயில் சுமார் 8 மணி நேர பயணத்தின்பின் குவாங்ஷோ சென்றடைந்தது. இதற்கு முன் இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் 20 மணித்தியாலங்களுக்கும் மேலாக இருந்தது.
Wednesday, December 26, 2012
அமெரிக்காவை அதிர வைத்த வடகொரியா!
வட கொரியா இந்த மாதம் நடத்திய ஏவுகணை சோதனையின்போது (அது ஏவுகணை அல்ல, சட்டலைட் என்கிறது, வ.கொ.) கடலில் விழுந்த முதல் கட்ட ராக்கெட் பாகங்களை கடலில் கைப்பற்றிய தென் கொரியா, அந்தப் பாகங்களை ஆராய்ந்துவிட்டு, வட கொரியாவிடம், சுமார் 10.000 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடிய ஏவுகணை தொழில் நுட்பம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு, அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. காரணம், தென்கொரியாவின் கணிப்பு சரியாக இருந்தால், வட கொரியாயால், அமெரிக்காவின் மேற்கு கரையோர நகரங்களை வரை ஏவுகணையை செலுத்த முடியும்.
அமெரிக்காவின் மேற்கு கரை பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் மூன்று. லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ, மற்றும் சியாடில். இந்த மூன்று நகரங்களையும் குறிவைத்து வடகொரியா தமது ஏவுகணையால் தாக்க முடியும்.
லேபிள்கள்:
உலகம்
Tuesday, December 25, 2012
ஆழ்கடலுக்குள் ஒர் அதிசிய உலகம்: விஞ்ஞானிகள் வியப்பு
அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.
ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஓரினச்சேர்க்கை திருமணம்:படைப்பின் நோக்கத்தையே தகர்த்துவிட்டது – போப்!
வடிகான் சிட்டி:மனித படைப்பின் நோக்கத்தையே தகர்ப்பதுதான் ஓரினச் சேர்க்கை திருமணம் என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கும் வேளையில் அவர் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார். மேலும் அவர் கூறியது:ஆண், பெண் என்பது இறைவனின் படைப்பாகும்.அதனை மாற்ற முடியாது.
லேபிள்கள்:
உலகம்
குஜராத் தேர்தலில் பெய்ட் நியூஸ் அதிகம்! – பிரஸ் கவுன்சில்
புதுடெல்லி:குஜராத் தேர்தலில் கையூட்டு வாங்கிவிட்டு செய்தியை வெளியிடும் பெய்ட் நியூஸ் அதிகம் நடந்துள்ளதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா(பி.சி.ஐ)வின் உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த அறிக்கை அதிர்ச்சி அடையச் செய்வதாகவும், ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாலே இதனை தடுக்க முடியும் எனவும் ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். பி.சி.ஐ உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன் நாகின் தலைமையிலான குழு ஒன்று, குஜராத்தில் பெய்ட் நியூஸ் சம்பந்தமான புகார்களின் விசாரணைக்கு நியமிக்கப்பட்டது. பத்திரிகைகளில் மட்டுமல்ல, சானல்களிலும் பெய்ட் நியூஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
லேபிள்கள்:
இந்தியா
பாடப்புத்தகங்களில் காவி மயம்!
புதுடெல்லி:கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களை காவி மயமாக்கியது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி விசாரணை நடத்துகிறது. பிஞ்சு உள்ளங்களை வகுப்புவாத நஞ்சை விதைக்க பா.ஜ.க நடத்திய முயற்சிகள் குறித்து என்.சி.இ.ஆர்.டி விசாரணை நடத்த உள்ளது.பாடப்புத்தகங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து விளக்கம் கேட்டு என்.சி.இ.ஆர்.டி தலைவர் பர்வீன் சின்க்ளெயர், பள்ளிக்கூட கல்வி செயலாளருக்கும் , டி.சி.ஆர்.டி தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அடுத்த புதன்கிழமைக்குள் டி.சி.ஆர்.டி தலைவர் ஹெச்.எஸ்.ராமராவுடன் என்.சி.இ.ஆர்.டி கவுன்சில் விவாதிக்கும்.
இவ்வாண்டு ஜூலையில் வெளியான ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தில் ஹிந்துத்துவா சக்திகள் வரலாற்றை வளைத்துள்ளனர். எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தின் ஒரு அத்தியாயத்தில் வேதகாலங்களிலேயே பசுவதை அமலில் இருந்தது என கூறப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
இந்தியா,
ஹிந்துத்துவா
Monday, December 24, 2012
குஜராத் சோமாலியாவை விட மோசம்: மார்க்கண்டேய கட்ஜு!
போபால்:குஜராத்தில் ஊட்டச்சத்துக் குறைவு, சோமாலியா போன்ற ஏழ்மையில் வாடும் நாடுகளை விட மோசம் என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
சாதாரண மக்களுக்கு எந்தவொரு பயனும் கிடைக்காத குஜராத்தில், வளர்ச்சி என்பது கற்பனையாகும் என்று, புள்ளிவிபரங்களுடன் கோடிட்டு காட்டுகிறார் கட்ஜு.
லேபிள்கள்:
இந்தியா
ஹிந்துத்துவா சக்திகளின் தலையீடே டெல்லி வன்முறைக்கு காரணம்!
புதுடெல்லி:டெல்லியில் ஓடும் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடிய செயலைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஹிந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் தலையீடே காரணம் என கூறப்படுகிறது.
லேபிள்கள்:
இந்தியா
Sunday, December 23, 2012
ஆண்களை அடக்கும், இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இஸ்லாத்தை சாராதவர்களின் பார்வையில் இஸ்லாம் என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்துவருகிறது. அப்படிபட்ட விமர்சகர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் 'இஸ்லாத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள்' என்பதே...
இந்த ஆயுதம் உண்மையில் கூரிய கத்தியா அல்லது அட்டை கத்தியா என தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், இறைவனின் கட்டளைகள் இறங்கிக்கொண்டிருந்த அந்த ஆரம்ப காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்களின் பார்வையின் கீழ் வாழ்ந்த இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலையை பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். சில இடங்களில் இஸ்லாமிய ஆண்கள் எல்லாம் பாவம் என சொல்ல வைக்கும் :-))) மேலும் எந்த இடங்களில் தான் (?) பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள் என்று புரியும் ! அல்லது எவ்விதத்தில் இஸ்லாமிய பெண்கள் குறைந்தவர்கள் என்ற உண்மை தெரியவரும் இன்ஷா அல்லாஹ்!
குற்றவாளிகளின் மரண தண்டனை நேரடிக் காட்சிக்கு கோரிக்கை!
டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதற்கும், தமிழகத்தில் 7-ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இயக்குனர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு வைத்துள்ள கோரிக்கை அறிக்கையில்:
“நம் தலைநகர் டில்லியில் கடந்த 16-ஆம் தேதி மருத்துவ கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் உலுக்கி உறைய வைத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் ஆறு பேருக்கும் உடனடியாக விசாரணை முடித்து இம்மாத இறுதிக்குள் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அந்த குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனையை அனைத்து மீடியா மற்றும் தொலைக்காட்சிகளில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும். இதன் மூலம் இனி வரும் காலங்களில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவருக்கு இது ஒரு அபாய எச்சரிக்கையாக இருக்கும்.
லேபிள்கள்:
தமிழகம்
ஆப்கான்: இறந்த உடல்கள் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க ராணுவ வீரர் குற்றவாளி!
வாஷிங்டன்:ஆப்கான் குடிமகன் ஒருவரின் இறந்த உடல் மீது சிறுநீர் கழித்து அவமதித்த அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவ வீரரை நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது.
2011 ஜூலை 27-ஆம் தேதி ஹெல்மந்த் மாகாணத்தில் இறந்த தாலிபான் போராளி மீது நான்கு ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தை சார்ந்த 4 வீரர்கள் சிறுநீர் கழித்து அவமதிக்கும் இழிவான செயல் வீடியோ காட்சிகள் மூலமாக யூ டியூபில் பரவியது. இது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ராணுவ சீருடையுடன் சிறுநீர் கழிக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவ வீரன், இன்று நல்ல நாள் என சிரிக்கும் காட்சியும் யூ ட்யூப் வீடியோவில் பதிவாகியிருந்தது.
லேபிள்கள்:
உலகம்
Saturday, December 22, 2012
குஜராத் போலி என்கவுண்டர்: 10 ஆண்டுகளுக்கு பின் 5 காவலர்கள் கைது!
கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம், குஜராத் மாநிலம் பவா நகரை சேர்ந்த சாதிக் ஜமால் என்பவரை குஜராத் போலீசார் அகமதாபாத்தில் எண்கவுன்டரில் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவம் போலி எண்கவுன்டர், இதுதொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என சாதிக் ஜமாலின் சகோதரர், சபீர் ஜமால் என்பவர் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில், மும்பை போலீஸ் படையை சேர்ந்த 'எண்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' தயா நாயக் என்பவரிடம் குஜராத் போலீசார் சாதிக் ஜமாலை ஒப்படைத்த காட்சியை, தான் நேரில் பார்த்ததாக, கேத்தன் தரோட்கர் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.
லேபிள்கள்:
இந்தியா
யு.ஏ.பி.ஏ எதிர்ப்பு கூட்டியக்கம் உருவாக்கம்: என்.சி.ஹெச்.ஆர்.ஓ கலாந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை:என்.சி.ஹெச்.ஆர்.ஒ நடத்திய சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் பற்றிய கலந்தாயவுக் கூட்டத்தில் யு.ஏ.பி.ஏ எதிர்ப்பு கூட்டியக்கம் ஒன்றை உருவாக்கி பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) சார்பாக ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (20/12/2012) சென்னையில் நடைபெற்றது.
என்.சி.ஹெச்.ஆர்.ஓ-வின் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப் கலந்தாய்வு கூட்டத்தில் துவக்க உரையை நிகழ்த்தினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் (PUHR) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கொடூரத்தன்மைக் குறித்து அறிமுக உரையாற்றி துவக்கி வைத்தார்.
மோடி ஒரு மாயத் தோற்றம் : மார்க்கண்டேய கட்ஜு
குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ள நிலையில், இந்திய ஊடகக் குழுமத் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ மோடி பற்றிய சில கருத்துரைகளையும் பரப்புரைகளையும் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
தனது ஆக்கமொன்றில் கட்ஜூ கூறுகையில் "மோடி பற்றி கருத்தளிக்குமாறு நான் ரொம்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டாலும், என் கருத்து குஜராத் தேர்தலில் எந்தவிதத்திலும் பிரதிபலித்துவிடக்கூடாது என்பதால் தவிர்த்துவந்தேன். ஆனால் குஜராத் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் இப்போது என் கருத்தைச் சொல்லலாம் என்று கருதுகிறேன்.
லேபிள்கள்:
இந்தியா
Friday, December 21, 2012
துப்பாக்கி பட விவகாரம்: மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
“துப்பாக்கி திரைப்படத்துக்கு தணிக்கைத் துறையினர் வழங்கிய சான்றிதழை வாபஸ் பெற்று, திரைப்படத்தின் சுருள்களைக் கைப்பற்றும்படி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் டி. அப்துல் ரஹீம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். “இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தத் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழை வாபஸ் பெறும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று அவரது மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்தினர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கர சுப்பு, “துப்பாக்கி திரைப்படம் காரணமாக பெரும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், இந்தத் திரைப்படத்தின் சுருள்களைக் கைப்பற்றும்படி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
லேபிள்கள்:
தமிழகம்
வகுப்பு வெறி மாறாத குஜராத்தில் 3-வது முறையாக முதல்வரானார் மோடி! – இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது!
அஹ்மதாபாத்/சிம்லா:குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க வெற்றிப் பெற்றுள்ளது. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை மோடியின் தலைமையில் தொடர்ச்சியாக 3-வது முறையாக பா.ஜ.க அரசு ஆட்சி கட்டிலில் அமருகிறது. கடுமையான போட்டி நிலவிய இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது காங்கிரஸ் கட்சி.
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வென்றதை விட இது இரண்டு இடங்கள் குறைவு. அதே நேரம் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளைக் கூடுதலாகப் பெற்று 61 இடங்களை கைப்பற்றியுள்ளது.
லேபிள்கள்:
இந்தியா
தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு நிரந்தர வெற்றி அல்ல-SDPI மாநில தலைவர்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குஜராத் , ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவியுள்ளது.. பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கலாம் என்று எண்ணிய பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றை இழந்துள்ளது.
Thursday, December 20, 2012
இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் அப்பாவி மக்களின் வீடுகளை மீண்டும் கட்ட வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி பிரமாண்ட பேரணி!
புதுடெல்லி:டெல்லி மெஹ்ராலியில் நானூறு ஆண்டுகள் பழமையான கெளஸியா மஸ்ஜிதும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்நூறுக்கும் அதிகமான முஸ்லிம் வீடுகளை இடித்து தள்ளிய டெல்லி வளர்ச்சி ஆணையத்தின்(டி.டி.ஏ) அட்டூழியத்தை கண்டித்து கவுஸியா காலனி மறுவாழ்வு பேரவையின் சார்பில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியும், தர்ணாவும் நடைபெற்றது. இடிக்கப்பட்ட மஸ்ஜிதையும், வீடுகளையும் மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். கைக்குழந்தைகளுடன் குடும்ப பெண்மணிகளும், வயோதிகர்களும் பேரணியில் கலந்துகொண்டு கடுமையான தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பேரணியை ஜந்தமந்தரில் வைத்து போலீஸ் தடுத்து நிறுத்தியது.
லேபிள்கள்:
இந்தியா
மலேகானிலும் நாங்கள் தாம் குண்டுவைத்தோம்: ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம்!
புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்தது நாங்கள் தாம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளான். தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில் 37 பேர் பலியானார்கள்.
300 பேருக்கு காயம் ஏற்பட்டது. துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் உறுப்பினர்கள் என அநியாயமாக குற்றம் சாட்டி ஒன்பது முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்கு மூலம் இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
லேபிள்கள்:
இந்தியா
Wednesday, December 19, 2012
இராமநாதபுரத்தில் நேற்று நடந்த சாலை விபத்துகளில் 5 பேர் மரணம்!
ராமநாதபுரம் அருகே வெவ்வெறு இடங்களில் நடந்த இரு விபத்துக்களில், அரசு கல்லூரி பேராசிரியர் உட்பட ஐந்து பேர் பலியாகினர். ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரஹ்மான், 25. நேரு நகரை சேர்ந்தவர் அப்துல்பாசித், 20.இவர்கள், நேற்று மதியம் 12.30 மணிக்கு உச்சிப்புளியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி ஸ்பிலெண்டர் பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்து கொண்டிருந்தனர். உச்சிப்புளி சேர்வைக்காரன் ஊரணி அருகே கடலூரிலிருந்து, ராமேஸ்வரம் சென்ற சுமோ கார் மோதியதில், பைக்கில் சென்ற இருவரும் பலியாகினர். உச்சிப்புளி போலீசார், கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
லேபிள்கள்:
இராமநாதபுரம்
மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய சமாஜ்வாதிக் கட்சி!
புதுடெல்லி:தலித்துகளை விட முஸ்லிம்களின் நிலைமை மோசமாக இருக்கிறது.எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் வலியுறுத்தினார்.
அரசுப் பணிபுரியும் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.
லேபிள்கள்:
இந்தியா
அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மட்டுமே தகுதியானவர்: அரசு அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2013-ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் 31.3.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவு எடுத்துள்ளது.
Tuesday, December 18, 2012
சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்- பாப்புலர் ஃபிரண்ட் ஆ ஃப் இந்தியா கோரிக்கை
பத்திரிக்கை செய்தி
சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - சிறுபான்மையினர் தினத்தை முன்னிட்டு அரசுக்கு பாப்புலர் ஃ பிரண்ட் ஆ ஃப் இந்தியா கோரிக்கை
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ம் நாள் சிறுபான்மையினர் தினமாக உலகம் முழுவதும் ஐ.நா சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை இந்தியாவில் தேசிய சிறுபான்மையினர் ஆணையமும் கடைப்பிடித்து வருகின்றது . இந்தியாவில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சீகள், ஜைனர்கள் என 5 பிரிவினர் சிறுபான்மை சமூகங்களாக வாழ்ந்து வருகின்றனர் . சிறுபான்மையினர் தினத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறுபான்மையினர் நலனுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பாப்புலர் ஃ பிரண்ட் ஆ ஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.
இராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜன.1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் ஜனவரி 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் முதல் இராமேஸ்வரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
லேபிள்கள்:
இராமநாதபுரம்
நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது-மௌலானா அபுல் கலாம் ஆசாத்
கல்வி என்பது அவரவர் திறமையைக் கண்டறியும் சாதனாமாக இருக்க வேண்டுமேயொழிய, நினைவுத்திறனை மட்டும் சோதிக்கும் முயற்சியாக இருக்கலாகாது என்பதையே பல அறிஞர்களும் கூறுகின்றனர். இந்த கணினி யுகத்தில் அனைத்து விதமான செய்திக்ளும் தடையற இணையத்தில் கிடைக்கப்பெறும்பட்சத்தில் வெறும் மனப்பாடம் செய்து எழுதி தன்னை நிரூபிப்பதால் மட்டுமே ஒரு மாணவன் தம் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது. அதை விடுத்து படித்த அந்த விசயங்களை வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் விதம் மற்றும் அதுகுறித்த தெளிவும் அவசியம் தேவை.
லேபிள்கள்:
இந்தியா
இர்ஃபான் பத்தான் மோடியின் வலையில் சிக்கியது எப்படி?
அஹ்மதாபாத்:ஹிந்துத்துவா வாக்கு வங்கியின் வீழ்ச்சியை தடுக்க முடியாத சூழலில் சிறுபான்மையின முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க பல சூழ்ச்சி வலைகளை பின்னியுள்ளார் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி. ஃபேஸ்புக் புகழ் ஷஹீன் தாதாவை தனது வலையில் சிக்க வைக்க மோடி நடத்திய முயற்சி தோல்வியை தழுவியவுடன் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பத்தானை உபயோகித்து அரசியல் ஆதாயம் தேட மோடி முயற்ச்சி செய்து வருகிறார்.
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் அந்தரங்க செயலாளர் அஹ்மத் மியான் பட்டேல் குஜராத் முதல்வராவார்” என்று தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கிண்டலடித்து பிரச்சாரம் செய்தார் மோடி. அஹ்மத் பட்டேல் என்ற அழைப்பதற்கு பதிலாக முஸ்லிம்கள் மரியாதையுடன் அழைக்கும் மியான் என்ற வார்த்தையையும் சேர்த்து பிரயோகித்தார் மோடி.
லேபிள்கள்:
இந்தியா
Monday, December 17, 2012
ஈரானின் முன்னால் பாதுகாப்புத்துறை அமைச்சர் கடத்தியது மொஸாத்: சதி திட்டம் அம்பலம்
டெஹ்ரான்:ஈரானின் முன்னால் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அலிரெசா அஸ்காரியை இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் அமைப்பு தான் துர்கியிலிருந்து இஸ்ரேலுக்கு கடத்தி சென்றுள்ளது என்று பல்வேறு ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக ஈரானின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹோசைன் டகிகி தெரிவித்துள்ளார். அஸ்காரி கடத்தப்பட்டு ஆறாவது நினைவு ஆண்டை ஒட்டி அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு அஸ்காரி துர்கியிலிருந்து மாயமானார். அவரை துர்கியில் உள்ள அமெரிக்க ராணுவதளம் வழியாக இஸ்ரேல் கடத்தி சென்றிறுக்கலாம் என்று நம்பப்பட்டு வந்தது.
லேபிள்கள்:
உலகம்
25 குழந்தைகளுக்கு கண் கலங்கும் அமெரிக்கா!மற்ற நாடுகளில் குழந்தைகளை கொல்லும்போது கண் கலங்காது ஏன்?
அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 27 என்று மற்றொரு செய்தி கூறுகிறது. துப்பாக்கிதாரி கொல்லப்பட்டு விட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். பள்ளிக்கூட அலுவலகத்தில் அவர் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு வகுப்பறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லேபிள்கள்:
உலகம்
சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு இந்துத்துவ தீவிரவாதி கைது!
சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி ராஜேஷைத் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.டெல்லி மற்றும் பாகிஸ்தானிலுள்ள லாகூர் இடையே இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அரியானா மாநிலம் பானிப்பட் அருகே பாகிஸ்தான் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடந்தது.குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட பயங்கர தீயில் கருகி ரயில் பயணிகள் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்தக் காயமுற்றனர். இதில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.
லேபிள்கள்:
இந்தியா,
ஹிந்துத்துவா
Sunday, December 16, 2012
குஜராத்தில் மக்களின் கனவுகள் புறக்கணிக்கப்படுகின்றன! மோடியின் கனவுகளுக்கே முக்கியத்துவம்!- ராகுல் கடும் தாக்கு!
அஹ்மதாபாத்:குஜராத்தில் நரேந்திர மோடி கோப அரசியலை நடத்தி வருகிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி தாக்கியுள்ளார். குஜராத் முன்னேற வேண்டுமென்றால் மாநில மக்கள் மகாத்மா காந்தி போதித்த அன்பு வழிக்கு மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். குஜராத்தில் 2ஆம் கட்டத் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் பகுதியில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அதில் பேசிய ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
லேபிள்கள்:
இந்தியா
மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
அரைகுறை ஆடையுடன் கூடிய மேற்கத்திய வாழ்க்கைதான் சுதந்திரத்தின் அடையாளம் என்று நான் வாழ்ந்த போது உணராத சுதந்திரமும் சமுகத்தில் எனக்கு கிடைக்காத அங்கீகாரமும் இன்று ஹிஜாபின் மூலமே எனக்கு கிடைத்தது. ஒரு முன்னாள் முஸ்லீம் அல்லாத பெண் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன் , ஹிஜாப் பெண்ணுரிமையின் அடையாளம்,சம நீதியின் குறியீடும், பெண் விடுதலையின் புதிய குறியீடும் நிகாப்தான் என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.ஹிஜாப் என் வாழ்கையில் ஏற்படுத்திய அமைதி மற்றும் மகிழ்ச்சியை போன்றே எல்லா பெண்களின் வாழ்விலும் கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை. - சாரா போக்கர்
'டிச-21 -ஆம் தேதி உலகம் அழியும்'-சொன்னால் கைது!
மாயா என்ற அழிந்துபோன அமெரிக்க நாகரிகத்தின் ஆரூடத்தின்படி, இந்த மாதம் உலகம் அழியும் என்று சில பிரிவினர் நம்பி இணையத்தில் எச்சரிக்கைகளைப் பரப்பிவருகின்ரனர்.
இவ்வாறு வதந்தி பரப்பி பீதியை கிளப்பிய சிலர் ஹாங்காங்கில் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டார்கள்.
அதேபோல இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை, காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
லேபிள்கள்:
உலகம்
Saturday, December 15, 2012
இனிதே துவக்கப்பட்டது: புதுவலசை RDCC வங்கி கிளை
நமதூரில் RDCC வங்கி கிளை வெகு சிறப்பான முறையில் 15-12-2012 அன்று திறக்கப்பட்டது. நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு நமதூர் வாசிகளின் கூட்டு முயற்சியினாலும், ஒருங்கினைப்பினாலும் இந்த வங்கி கிளை நமதூருக்கு கிடைத்திருப்பது ஒரு சந்தோஷமான தருனம் என்பது கிளை திறப்பு விழாவின் போது அங்கு குழுமியிருந்த நமதூர் வாசிகளின் கண்களில் தென்பட்டது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பற்றி ஒருசில குறிப்புகள்:
மத்திய கூட்டுறவு வங்கிகள் மாவட்ட தலைமையிடம் அல்லது மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளில் இருக்கும். இவ்வங்கிகளுக்கு சில தனிநபர்கள், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றை வழங்குபவர் இருப்பர். மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மூன்று முக்கிய ஆதார நிதிகள் உள்ளது.
1. அவர்களின் சொந்த பங்கு முதலீடு மற்றும் இருப்புகள்.
2. பொது மக்களிடம் இருந்து பெறும் வைப்பு நிதிகள்.
3. மாநில கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பெறும் கடன்கள்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பற்றி ஒருசில குறிப்புகள்:
மத்திய கூட்டுறவு வங்கிகள் மாவட்ட தலைமையிடம் அல்லது மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளில் இருக்கும். இவ்வங்கிகளுக்கு சில தனிநபர்கள், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றை வழங்குபவர் இருப்பர். மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மூன்று முக்கிய ஆதார நிதிகள் உள்ளது.
1. அவர்களின் சொந்த பங்கு முதலீடு மற்றும் இருப்புகள்.
2. பொது மக்களிடம் இருந்து பெறும் வைப்பு நிதிகள்.
3. மாநில கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பெறும் கடன்கள்.
லேபிள்கள்:
புதுவலசை
ஜன-1 முதல் வங்கிகளில் புதிய காசோலை நடைமுறை: பழையது செல்லாது!
வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல்லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது . .
சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறுவது எப்படி? என பலருக்கும் பல வித கேள்விகள் இருப்பதால் அந்த கேள்விகளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனிவாசனிடம் கேட்டோம்.
அவர் ”தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலைகளை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய இமேஜை ஸ்கேன் செய்து, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விற்கு வங்கிகள் அனுப்புகின்றன. அங்கிருந்து அந்தந்த வங்கி களுக்கு காசோலைகளின் இமேஜ் அனுப்பப்படும். வங்கிகள் அந்த இமேஜை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையென்றால் வாடிக்கையாளரின் கணக்குக்குப் பணத்தை வரவு வைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் திரும்ப அனுப்பிவிடும். இந்த நடைமுறையைத்தான் கடந்த ஒரு வருடமாக வங்கிகள் பின்பற்றுகின்றன.
லேபிள்கள்:
இந்தியா
அக்கோட்டில் நடந்த வன்முறை நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி அன்று மஹாராஷ்டிரா மாநிலம் அக்கோட்டில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் உட்பட பலரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக கல்லூரி பேராசிரியரின் தலைமையில் மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய விஷ்வவித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்மையை கண்டறியும் பொருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று தங்களது அறிக்கையை சமர்பித்துள்ளனர்.
லேபிள்கள்:
இந்தியா
அப்சல் குருவை தூக்கிலிடக் கூடாது! – மத்திய அமைச்சர்
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்து பெரும்பான்மை மனசாட்சிபடி தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குருவை தூக்கில் போடக்கூடாது என்று மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா கூறியுள்ளார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்ற குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கு எதிராக எவ்வித ஆதாரம் இல்லாதபோதும் பெரும்பான்மை மனசாட்சிபடி தூக்கு தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது.இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதலின் 11 வது நினைவு நாளில் கொல்லப்பட்ட 9 பாதுகாப்பு வீரர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
லேபிள்கள்:
இந்தியா
பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் டெங்கு நோய் தடுப்பு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுதுறையின் சார்பில் புதுவலசையில் கடந்த 14/12/12 அன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் டெங்கு நோய் தடுப்பு நிலவேம்புகசாயம் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் வைத்து இலவசமாக வழங்கப்பட்டது. இதில் புதுவலசை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார பொதுமக்கள் எராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் வீடுகளுக்கும் வாங்கி சென்றனர்.
Friday, December 14, 2012
பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!
இஇராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இசுலாமிய வழிபாட்டுத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் காவி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 144 தடை உத்தரவை மீறி வரும் 15.12.2012 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் (CAMP OFFICE) முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து இசுலாமிய மக்கள் கூட்டமைப்பு அறிவித்
துள்ளது. இந்த போராட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இசுலாமிய பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
லேபிள்கள்:
இராமநாதபுரம்