Wednesday, March 28, 2012

பாகிஸ்தானுக்கு மின்சாரம் தர பரிசீலிக்கப்படும் – மன்மோகன் சிங்

PM offered Pakistan 5000 MW electricity
சியோல்:பஞ்சாப் மாநிலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மின்சாரம் ஏற்றுமதி தொடர்பான பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கு சிறந்த நட்பு நாடு அந்தஸ்த்தை கொடுத்ததற்காக கிலானிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் சியோலில் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில்; இந்தியாவிற்கு சிறந்த நட்பு நாடு அந்தஸ்த்தை கொடுத்ததற்காக கிலானிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியா அந்த அந்தஸ்தை அடைய கிலானி பெருமளவில் ஆதரவு அளித்தார் என்றும் கூறினார்.

பல்வந்த் சிங் ரஜோனாவை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு: பஞ்சாப்பில் முழுஅடைப்பு


Beant Singh's killer Balwant Singh Rajoana

சண்டிகர்:பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி தண்டனையை நிறைவேற்றும்படி சண்டிகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிராக பஞ்சாப்பில் முழு அடைப்பு போராட்டத்தால் இன்று இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியா வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு


Z-security provided to judges linked to Ayodhya Title suit

லக்னோ:அயோத்தி பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளைச் கொலைச் செய்ய இந்திய முஜாஹிதீன்(?) மற்றும் சிமி(?) திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய பிரதேச தீவிரவாத எதிர்ப்புபடை தெரிவித்துள்ளது.
இத்தகவலை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட  தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையிலிருந்து தெரிந்துகொண்டதாக மத்திய பிரதேச தீவிரவாத எதிர்ப்புபடை கூறியுள்ளது.

பாகிஸ்தானில் எம்.க்யூ.எம் தலைவர் உள்பட 10 பேர் பலி!


violence flares in Karachi

இஸ்லாமாபாத்:முத்தஹிதா குவாமி மூவ்மெண்டின்(எம்.க்யூ.எம்) தலைவர் மன்சூர் முக்தார் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து உருவான அரசியல் வன்முறையில் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
வாகனங்கள், கட்டிடங்களுக்கு தீவைத்த எம்.க்யூ.எம் தொண்டர்கள் காராச்சி முழுவதும் போராட்டம் நடத்தினர். மன்சூர் முக்தாரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் மன்சூர் முக்தார் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனை தடுக்க முயன்ற முக்தாரின் சகோதாரரையும் மர்ம நபர் சுட்டுள்ளார். இரண்டுபேரும் மரணமடைந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் நகரத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.

கோஃபி அன்னனின் அமைதிக்கான பரிந்துரைகளை சிரியா அரசு ஏற்பு!


கோஃபி அன்னனின் அமைதிக்கான பரிந்துரைகளை சிரியா அரசு ஏற்பு!

பீஜிங்:சிரியாவில் நடந்துவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக்-ஐ.நா மத்தியஸ்தர் கோஃபி அன்னன் பரிந்துரைத்த ஆறு அம்ச திட்டத்தை சிரியா அரசு அங்கீகரித்துள்ளது.
ஒரு ஆண்டிற்கும் மேலாக சிரியாவில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு வரும் என கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை கோஃபி அன்னனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

ஃபஸல் கொலை வழக்கு: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு பங்கு!


ஃபஸல்

கொச்சி:கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் மேலும் பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை சி.பி.ஐ தேடி வருகிறது.
சி.பி.எம்(மார்க்ஸிட் கம்யூனிஸ்ட்) மாவட்ட கிளையைச் சார்ந்த தலச்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த தலைவர்களை திருவனந்தபுரம் சி.பி.ஐ யூனிட் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சி.பி.எம் முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.சசியிடம் திங்கள் கிழமை ஆஜராக சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் தனிப்பட்ட காரணங்களை காட்டி ஆஜராகவில்லை. இதனால் இன்னொரு தினம் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்படும் என்று விசாரணை அதிகாரி கூறுகிறார்.

எகிப்து:இஸ்லாமிஸ்டுகள் VS ராணுவம் – பகிரங்க மோதலை நோக்கி!


Egyptian army chief Field Marshall Hussein Tantawi (L) and Brotherhood General Guide Mohammed Badei have not been able to make an alliance between the two groups work

கெய்ரோ:எகிப்தில் நெருக்கடி சூழலை உருவாக்கும் விதமாக இஸ்லாமியவாதிகளும், ராணுவமும் பகிரங்கமான மோதலுக்கு தயாராகி வருகின்றனர். நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்ற இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவிப்பு புகைந்து கொண்டிருந்த மோதலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இஸ்லாமியவாதிகளுக்கு பெரும்பானமை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் பரிந்துரைத்த அமைச்சரவையை அங்கீகரிக்க ராணுவ கவுன்சில் மறுத்தது மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தவர்களை தங்களிடமிருந்து அகற்றிய ராணுவத்தின் செயல் ஆகியன இஃவானுல் முஸ்லிமீனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மரணத்தண்டனை கடுமையாக அதிகரிப்பு: ஆம்னஸ்டி!


The death penalty is still in force in 57 countries worldwide

லண்டன்:பல்வேறு நாடுகளில் மரணத்தண்டனை கடந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ளது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிக்கை கூறுகிறது.
20 நாடுகளில் கடந்த ஆண்டு 676 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

ஷைமா அல் வாதியின் கொலை: துவேஷ பிரச்சாரத்தின் விளைவு!


Shaima Alwadi

வாஷிங்டன்:இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக நடந்துவரும் வெறுப்பைத்தூண்டும் பிரச்சாரத்தின் விளைவே நேற்று முன்தினம் அமெரிக்காவில் கொலைச் செய்யப்பட்ட ஈராக் வம்சாவழியைச் சார்ந்த முஸ்லிம் பெண்மணி ஷைமா அல்வாதி.
’பயங்கரவாதியே நீ உனது நாட்டிற்கு திரும்பிச்செல்!’ என்று எழுதப்பட்ட குறிப்பு ஷைமா தலையில் அடிபட்டு கிடந்த இடத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இன துவேஷத்திற்கு(xenophobia) தனது மனைவி பலியாகிவிட்டதாக ஷைமாவின் கணவர் காஸிம் அல்ஹாமிதி நேற்று முன்தினம் கூறினார்.

அணு ஆயுத பயங்கரவாதம் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: மன்மோகன்சிங்!


PM at Nuclear Security Summit in Seoul

சியோல்:தவறான நோக்கங்களுக்காக அணு ஆயுதத் தொழில்நுட்பங்களையும் அதற்குத் தேவையான மூலப் பொருள்களையும் அடைவதற்கு பயங்கரவாதிகள் முயற்சி செய்து வரும்வரை, அணு ஆயுத பயங்கரவாதம் உலகின் அமைதிக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் என்று தென்கொரியாவில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்ற அணுசக்திப் பாதுகாப்பு உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் கூறியது:

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அதிகாரி பலம்பிரயோகித்து மருத்துவமனையில் அனுமதி!


Fasting UP officer admitted to hospital

லக்னோ:சமூகநலத்துறையில் ஊழலுக்கு எதிராக மரணம் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்த ப்ரொவின்சியல் சிவில் சர்வீஸ் அதிகாரியை பலம் பிரயோகித்து போலீஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளது.
ரிங்குசிங் ராகி என்பவரை நள்ளிரவில் போலீசார் போராட்ட இடத்தில் இருந்து அகற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். ராகியை மனநோய்நல பிரிவிலும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளாததால் போலீசாரின் முயற்சி தோல்வியடைந்தது. ராகி பின்னர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று அவரது நண்பர் பிரவீண் தெரிவித்தார். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே ராகியை மருத்துவமனையில் அனுமதித்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் விஜய் பூஷன் தெரிவித்தார்.

நானும், எனது சகோதரனும் மோடியால் வேட்டையாடப்படுகிறோம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா


Indian Administrative Service (IAS) officer Pradip Sharma

கட்ச்:நரேந்திரமோடியின் அரசு என்னையும், எனது சகோதரனையும் வேட்டையாடுகிறது என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா கூறுகிறார்.
குஜராத்தில் அதிகார பரவலாக்கம்(decentralization) அதிகாரம் முழுவதும் ஒரு தனி நபரின் கைகளில் ஒதுங்கியுள்ளது என்றும் பிரதீப் சர்மா குற்றம் சாட்டுகிறார். முன்பு பல்வேறு விவகாரங்களில் மோடி அரசு மீது குற்றம் சாட்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி குல்தீப் சர்மாவின் சகோதரர் தாம் பிரதீப் சர்மா.

கூடங்குளம்:காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பேராயர் பீட்டர் பெர்னாண்டோ பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்
வள்ளியூர்:மாநில அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார் தலைமையிலான அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். எனினும், அணு உலைக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் கூறுகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை தமிழக அமைச்சரவை திறக்க முடிவுச்செய்தது. இதனைத் தொடர்ந்து அணு உலை எதிர்ப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 87 சதவீத வீடுகளில் டி.வி! ஆனால் 52 சதவீத வீடுகளில் டாய்லெட் இல்லை!


தமிழகத்தில் 87 சதவீத வீடுகளில் டி.வி

சென்னை:இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிவடைந்ததையொட்டி நேற்று அதுதொடர்பான அறிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையின் தமிழ்நாடு மாநில இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக் கொண்டார்.
மக்கள்தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போது 1 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 1.42 கோடி குடும்பங்கள் இருந்தன.

Sunday, March 4, 2012

எக்ஸிட்போல்:உ.பி.யில் தொங்கு சட்டசபை!

elections
லக்னோ:இந்தியாவில் மிக அதிகமான வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று முடிவுற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உ.பியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகும் என தெரியவந்துள்ளது.

முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி பார்ட்டி(எஸ்.பி) தனிப்பெரும் கட்சியாக மாறும் என்று ஸ்டார் நியூஸ்- ஏ.சி. நீல்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறுகிறது. சமாஜ்வாடி கட்சி 160 இடங்களைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி 86 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், 80 இடங்களுடன் பா.ஜ., மூன்றாவது இடத்தையும், 58 இடங்களுடன் காங்கிரஸ் 4வது இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலை.தேர்தல்: தீவிர இடதுசாரிகள் வெற்றி!

AISA party's victory in JNU polls
புதுடெல்லி:ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்(ஜெ.என்.யு) மீண்டும் சிவப்பு அங்கியை அணிந்துள்ளது. மாணவர் யூனியனுக்கு நடந்த தேர்தலில் நக்ஸலைட் அனுதாபிகளான தீவிர இடதுசாரி மாணவர் அமைப்பு ஆல் இந்தியா ஸ்டுடெண்ட்ஸ் அசோசியேசன்(எ.ஐ.எஸ்.எ) அபார வெற்றியை பெற்றுள்ளது.

தேர்தலில் யூனியனின் நான்கு நிர்வாகிகள் பதவிகளையும் இவ்வமைப்பு கைப்பற்றியுள்ளது. மேலும் எ.ஐ.எஸ்.எ யூனியன் கவுன்சில் தேர்தலிலும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. பெரும் வெற்றியை பெற்றதில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல்கலை கழக வளாகத்தில் எ.ஐ.எஸ்.எ மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். ‘நக்ஸல் பாரி, லால் ஸலாம்’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

கூடங்குளத்தில் இன்று பால்குடம் ஏந்தி போராட்டம்: பலத்த பாதுகாப்பு!

kudanprotest-gpramod1
திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின்நிலையம் எந்த வேளையிலும் திறக்கப்படலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வலையில் உள்ளது. போராட்டம் நடக்கும் இடிந்த கரை, ராதாபுரம் தாலுகா மற்றும் அணு உலை எதிர்ப்பு குழுவிற்கு ஆதரவான பகுதிகளில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை டி.ஜி.பி எஸ்.ஜார்ஜ் நேற்று முன்தினம் கூடங்குளம் வருகை தந்திருந்தார். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையம் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்மக்கள் கருதுகின்றனர். காலை முதல் போலீஸ் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீமின் ’வஜ்ரா’ உள்ளிட்ட வாகனங்கள் அப்பகுதி வந்ததை தொடர்ந்து அதிகமான மக்கள் போராட்டம் நடைபெறும் இடத்தில் திரண்டுள்ளனர்.

Friday, March 2, 2012

சம்ஜோதா:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது!

NIA identifies another Samjhauta Express bomber
புதுடெல்லி:68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளத்தை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டறிந்துள்ளது.

மத்தியபிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திர பஹல்வான் என்ற சமந்தர் என்பவர் ரெயிலில் குண்டுவைத்த நான்குபேரில் ஒருவர் என்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது.

ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூகிள் நீக்கியது!

google
புதுடெல்லி:ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை இணையதளங்களில் இருந்து நீக்கிவிட்டதாக இணையதள சேவை நிறுவனமான கூகிள் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய கலாச்சாரத்தை மோசமாக சித்தரிக்கும் குற்றச்சாட்டை கூகிள் மறுத்துள்ளது. அட்மினிஸ்ட்ரேடிவ் சிவில் நீதிபதி ப்ரவீண் சின்ஹாவுக்கு ஆவணம் மூலம் தெரிவித்த பதிலில் கூகிள் இதனை கூறியுள்ளது. கூகிளின் இந்திய சேவைதாரர்களுக்கு நோட்டீஸ் கிடைத்ததை தொடர்ந்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கிவிட்டதாக கூகிள் கூறுகிறது.

ஜெயில் சூப்பிரண்டிற்கு 5 கோடி வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள்!

Lokayukta raids Indore jail superintendent's residence-- assets worth crores recovered
போபால்:மத்தியபிரதேச மாநில ஜெயில் சூப்பிரண்ட் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் புருஷோத்தம் சோம்குன்வர். இவர் தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், இவரது வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

Thursday, March 1, 2012

நியூஸ் இண்டர்நேசனல் ஜேம் மர்டோக் ராஜினாமா!

James Murdoch resigns from News International
லண்டன்:பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்காக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது உள்ளிட்ட முறைகேடான வழிகளை கடைப்பிடித்ததால் சர்ச்சையில் சிக்கிய நியூஸ் இண்டர்நேசனலின் சேர்மன் பொறுப்பில் இருந்து ஊடக முதலை ரூபர் மர்டோக்கின் மகன் ஜேம்ஸ் மர்டோக் ராஜினாமா செய்துள்ளார்.

தி டைம்ஸ், தி சண்டே டைம்ஸ்,தி சன் ஆகிய பத்திரிகைகள் நியூஸ் இண்டர்நேசனலின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னர் தொலைபேசி உரையாடல் ரகசியமாக ஒட்டுகேட்பு விவகாரத்தில் நிறுவனத்தின் சி.இ.ஒ ரெபேக்கா ப்ரூக் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தம்!

Western sanctions tighten squeeze on Iran oil exports
வாஷிங்டன்:ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது.

இந்தியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

சிரியா:மரண எண்ணிக்கை 7500-ஐ தாண்டியது!

Syrian forces have killed more than 7500
டமாஸ்கஸ்:சிரியாவில் சாதாரண மக்கள் மீது கடந்த 11 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளது. பெண்களும், குழந்தைகளும் உள்பட தினந்தோறும் 100 பேர் பலியாகி வருவதாக ஐ.நா அண்டர் செகரட்டரி ஜெனரல் லேன் பாஸ்கோ அறிவித்துள்ளார்.

குண்டுவீச்சு தொடரும் ஹிம்ஸில் செவ்வாய்க்கிழமை 104 பேர் கொல்லப்பட்டனர். ஹமாவில் நடந்த கூட்டுப் படுகொலைகளில் 35 பேரும், பாப் அம்ரில் 26 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜின்சியாங்கில் மீண்டும் கலவரம் :20 பேர் மரணம்!

at least 20 people were killed in a new outburst of violence in China's

பீஜிங்:வடமேற்கு சீனாவில் ஜின்சியாங்கில் நடந்த உள்நாட்டு கலவரத்தில் குறைந்தது 20 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஜின்சியாங்கில் கார்கிலிக் சுயாட்சி பிரதேசத்தில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது. ஏழுபேர் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்கள்.

Dua For Gaza