Sunday, October 9, 2011

மனித உரிமை ஆர்வலர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் வீட்டில் ரெய்டு: எஸ்.டி.பி.ஐ கண்டனம்

Kavita Srivastava’s
புதுடெல்லி:மனித உரிமை இயக்கமான பி.யு.சி.எல்லின் தேசிய செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் ஜெய்ப்பூர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இஸ்லாமோஃபோபியா:விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் – விமான நிறுவனம் மீது வழக்கு!

alg_irum_abbasi
சாண்டிகோ:இரம் அப்பாஸி என்கிற அமெரிக்க முஸ்லிம் பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் தனது விமானத்திலிருந்து இறக்கி விட்டது அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ். இதனால் அவமானமடைந்த அப்பெண், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீது சான் டியாகோ நீதிமன்றத்தில் வியாழனன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தான் தலை முக்காடு அணிந்திருந்த ஒரே காரணத்துக்காக, அநியாயமாக நடத்தப்பட்டதாக அவர் வழக்கில் தெரிவித்துள்ளார். இச்செய்தியை வழக்கறிஞர் ஜேம்ஸ் மெக்எல்ராய் தெரிவித்தார்.

ஹஜ் புனித யாத்ரீகர்களில் மூன்று இந்தியர்கள் மரணம்

imagesCAKE7GFT
ஜெத்தா:2011-க்கான புனித ஹஜ் பயணம் சென்ற முதல் பயணக்குழுவில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.

புனித யாத்திரைக்கு முதலில் புனித பயணம் மேற்கொண்ட 30,177 நபர்களில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். அதில் இருவர் இந்தியாவின் ஹஜ் கமிட்டியின் மூலம் பயணம் செய்தவர்களும், ஒருவர் தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் பயணம் மேற்கொண்டவருமாவார் என்று ஜெத்தாவின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Saturday, October 8, 2011

ஹசாரேக்கு ஆதரவு என மோகன் பகவத் – இல்லை என ஹசாரே மறுப்பு – உண்மை வெளிவந்தது என திக்விஜய் சிங்

digvijay-anna-350_100711073958
டெல்லி:அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஆதரவு அளித்து வந்துள்ளதாக அதன் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதை ஹசாரே மறுத்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே, டெல்லியில் கடந்த மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்தது. அப்போது, அன்னாவின் போராட்டத்தை ஆர்எஸ்எஸ் போன்ற சங்பரிவார் அமைப்புகள் இயக்கி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார். இதை அன்னா கடுமையாக மறுத்தார்.

மூன்றாவது வாரத்தை கடந்த ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம்

wallstreet_bailout_protest-April-2011
நியூயார்க்:அமெரிக்காவில் ‘வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பை ஆராய உயர் மட்ட நிபுணர் குழு: தமிழகப் பிரதிநிதிகளிடம் பிரதமர் தகவல்

Man_801925f
புதுடெல்லி:கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வதற்கு உயர் மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தன்னைச் சந்தித்த தமிழகப் பிரதிநிதிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் மாநில நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசியல் கட்சி குழுவும்,  போராட்டக்குழுவும் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

அமைதிக்கான நோபல்:மூன்று பெண்களுக்கு பகிர்ந்தளிப்பு

nobel_08102011
ஆஸ்லோ:ஏமன் நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பெண்களுக்கு 2011-ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மகளிர் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடி வரும்  ஏமனின் தவாக்குல் கர்மான், லைபீரியாவின் அதிபர் எல்லென் ஜான்சன் சிர்லீஃப், லைபீரியாவின் லேமா க்போவீ மற்றும் ஆகிய மூவரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று

imagesCAIO7JJD
உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை, உடற்பயிற்சி செய் என ஏகப்பட்ட அறிவுரை. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.

மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் “பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்” என்றும், மற்றும் சில விளம்பரங்கள் “தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்” என்று கூறுகின்றன.

Friday, October 7, 2011

‘என் கணவரை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்’: சஞ்சீவ் மனைவி ஸ்வேதா

sanjeev wife
புதுடெல்லி:குஜராத் கலவர வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த ஐ.பி.எஸ். அதிகாரியான தன்னுடைய கணவரை ‘பயங்கரவாதி’ போல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா இரண்டாவது கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், தனது கணவருக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் எல்லாவித நடவடிக்கைகளையும் குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருவதாக அவர் குறைகூறியுள்ளார்.

உலகின் மலிவு விலை தொடுகணினி – அறிமுகம் செய்தது இந்திய அரசு

aakash pc
புதுடெல்லி:ரூ.1,200 மட்டுமே விலை கொண்ட உலகின் மலிவான தொடுகணினியை (tablet PC) இந்திய அரசு அறிமுகம் செய்தது.

தற்போது மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படும் இந்த கணினி, இந்த் ஆண்டு இறுதியில் முழு அளவில் சந்தையில் விடப்படவுள்ளது.

டெல்லி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தப் புதிய தொடுகணினியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிமுகப்படுத்தினார்.

பாகிஸ்னுடனான உறவை ஆய்வு செய்வோம்: ஒபாமா

obama(3)
வாஷிங்டன்:பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பாகிஸ்தான் உடனான உறவை அவ்வப்போது ஆய்வு செய்வோம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் வியாழக்கிமை நிருபர்களிடம் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் உளவு அமைப்பும் (ஐ.எஸ்.ஐ) சில விரும்பத்தகாத சக்திகளுடன் தொடர்பு வைத்துள்ளன. இதில் சந்தேகமே இல்லை. இந்த தொடர்பு, அமெரிக்காவுக்கு தொந்தரவாக இருக்கிறது. இந்த தொடர்பு குறித்து பகிரங்கமாகவும், பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

அமெரிக்கர்களை சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்ய ரகசிய குழு ஆணையிட முடியும் – வெள்ளை மாளிகை

secret group
வாஷிங்டன்:வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டாமி விட்டோர் உட்பட ஒபாமாவின் நிர்வாகத் துறை அதிகாரிகள் பலர் அமெரிக்க குடிமகன்களை தேவைப்பட்டால் சட்டத்தின் கண்களை மறைத்துவிட்டு கொலை செய்வதற்கு தனியாக இயங்கிவரும் ரகசிய குழு ஆணையிட முடியும் என்று உறுதிசெய்துள்ளனர்.

மேலும் யாரை வாழவிட வேண்டும் யாரை கொலைச் செய்ய வேண்டும் என்று ரகசிய குழு எவ்வாறு முடிவு செய்யும் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார் டாமி விட்டோர். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் இதுவரை அமெரிக்கரும் மற்றும் மத போதகருமான அன்வர் அவ்லாகியை மட்டும்தான் கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Thursday, October 6, 2011

சஞ்சீவ் பட் கைது விவகாரம் – களம்காணுகிறார் காந்தியவாதி – மாநில அளவில் போராட்டம் நடத்த அழைப்பு

relese bhutt
மும்பை:குஜராத் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் கைதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல்வேறு மனித உரிமை ஆணையங்கள் ஒன்று திரண்டுள்ளன.

குஜராத் அரசிற்கெதிராக உண்மைகளை வெளிக்கொணற்பவர்களை மோடி அதிகாரத்தை பயன்படுத்தி  பயத்தை உருவாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார இப்போக்கை கண்டித்து மாநில அளவில் போராட்டங்களை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ருத்ராபூர் கலவரம்:அக்கறையின்றி செயல்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பதவி நீக்கம்

DE03-PG3-RUDRAPUR_P_798356f
டெல்லி:உத்ரகாண்டின்,உதம் சிங் நகரில் உள்ள ருத்ராபூரில் கடந்த அக்டோபர் உத்ரகாண்டின், உதம் சிங் நகரில் உள்ள ருத்ராபூரில் அக்டோபர் 2-ஆம் நாள் புனித குர்ஆன் அவமதிப்புத் புகாரின் மீதான காவல்துறையின் ஒருதலை பட்ச நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் ஹிந்துத்துவாதிகளுடன் சேர்ந்து செய்த அத்துமீறல் மற்றும் வன்முறையில் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த கலவரத்தில் பலரின் கடைகள் மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டும், வாகனங்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.  

இச்சம்பவத்தில் அக்கறையின்றி நடந்துக் கொண்ட அம்மாவட்டத்தின் காவல்துறை உயர் அதிகாரிகளான டி.ஐ.ஜி. அமித் ஷர்மா, டி.எம் பி.பி.ஆர் புருஷோத்தம் மற்றும் எஸ்.எஸ்.பி அபினவ் குமார் மோர்டோலியா ஆகியோரை உத்ரகாண்ட் அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது.

இஸ்ரேல் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு – எர்டோகன்

4257748338
கேப்டவுன்:இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதாலும் அரச பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாலும் “டெல் அவிவ்” பிராந்தியத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று துருக்கி நாட்டு பிரதமர் ரெசப் தய்யிப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த புதன் அன்று தென் ஆப்ரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள துருக்கி பிரதமர் இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதால் பிராந்தியத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை தாம் காண்பதாக அன்டோலியா பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.    

தெலுங்கானா போராட்டத்தில் முஸ்லிம்கள் முக்கிய பங்கு – ஹமீது முஹம்மது கான்

ஹைதராபாத்:தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முஸ்லிம்கள் தனித் தெலுங்கான போராட்டத்தில் முக்கிய வகிப்பதாக கூறியுள்ளனர்.

பிரதமரை சந்தித்த பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றிருந்த ஜனாதிபதியின் அமைதி மற்றும் நீதிக்கான இயக்கத்தின் ஹமீது முஹம்மது கான் தனித் தெலுங்கானாவிற்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்தின் ஆதரவு குறித்த காரணத்தை விளக்கியதாக கூறினார்.

கணிணி உலகில் புரட்சி ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்

PY9BH3CATZIP1BCAZ3TNOJCA8FTRMLCAKTJ8URCA9NTOQXCAYDP0AFCACZQW7TCAFV2VG6CA68MUHPCAQFPPR3CAPKM2N0CA8XVLY8CAF0XBGVCA7P0H8XCA5VU1M2CASICH6WCARC38R5CA8VC04D
நியூயார்க்:புற்று‌நோயால் அவதிப்பட்டு வந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ‌ஜாப்ஸ் நியூயார்க் நகரில் மரணமடைந்தார்.

கணினி உலகத்தில் விஞ்ஞான புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம்.

Wednesday, October 5, 2011

ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா தலைமை அலுவகத்தில் என்.ஐ.ஏ சோதனை


imagesCAAUQQ37கோவா:வடகோவா பாண்டா பகுதியில் உள்ள ஹிந்து தீவிரவாத இயக்கமான சனாதன் சான்ஸ்தா [SANATAN SANSTHA]  தலைமை அலுவகத்தில் இந்திய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ நேற்று இரவு சோதனை நடத்தியது. இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கண்டெடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள இவ்வியக்கத்தை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு எடுத்திருக்கும்  இவ்வேளையில் என்.ஐ.ஏ வின் இப்பரிசோதனை முக்கியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

கல்வியறிவு அற்ற 85 வயது மூதாட்டி குர்-ஆன் மனனம்

1581852359
ரியாத்:இதய நோய், சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்று நோயால் பாதிக்கப்பட்ட, முற்றும் கல்வி கற்காத எண்பத்தைந்து வயது மூதாட்டி குர்-ஆனில் ஐந்தில் ஒரு பங்கை மனனம் செய்துள்ளார் என்று சவுதியின் தினசரி பத்திரிக்கையான கல்ப் கிங்டம் தெரிவித்துள்ளது.

அவர் சில மாதங்களாக குர்-ஆன் மனனம் செய்யும் வகுப்பிற்கு சென்று வருவதோடு, அவர் ஒரு நாள் கூட வகுப்பிற்கு விடுப்பு எடுத்ததில்லை என்றும், அவர் வசிக்கும் இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சவுதியின் மத்திய பகுதியில் உள்ள ஷக்ரா என்னுமிடத்திற்கு அவர் தினந்தோறும் வந்து போவதாக சப்க் அரபி மொழி பள்ளி தெரிவித்துள்ளது.

சஞ்சீவ் பட்டை உடனடியாக விடுதலை செய்ய மனித உரிமைக் குழுவின் தலைவர் கவர்னருக்கு கோரிக்கை

citizen-rpotest
மும்பை:மும்பையை சேர்ந்த மனித உரிமைக் குழுவின் தலைவர் பரீத் அஹ்மத், ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை விடுதலை செய்யக்கோரியும், அவரது குடும்பத்தின் பாதுக்காப்புக்காவும் குஜாராத் கவர்னர் டாக்டர் கமலா பெனிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது; ‘சஞ்சீவ் பட்டின் கைது  2002-ல் நடந்த குஜாராத் கலவரத்தின் முக்கிய சாட்சிகளை அச்சுறுத்துவதற்க்காகவும், இந்த வழக்கில் இருந்து நீதியின் வாயை  முதலமைச்சர் மோடியால் கட்டுபடுத்த முடியவில்லை அதனால் இப்படி ஒரு திடீர் நடவடிக்கை’ என்றும் தெரிவித்தார்.

Tuesday, October 4, 2011

2011-க்கான மருத்துவ நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

nobel2
ஸ்டாக்ஹோம்:தொற்றுநோய்கள் மற்றும் புற்றுநோயை தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் புதிய வழிமுறைகளுக்கு துணைபுரியும் வகையிலான நோய் எதிர்ப்பு மண்டலத்தை கண்டுபிடித்தற்காக, 2011-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசை மூன்று விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்கின்றனர்.

சஞ்சீவ் பட்டின் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

citizen-rpotest
புதுடெல்லி:குஜராத் இனப் படுகொலைக்கு முக்கிய காரணம் நரேந்திர மோடி தான் என்றும் அவர் தான் காவல்துறையினருக்கு கலவரத்தை தடுக்க வேண்டாம் என்று ஆணையிட்டதாக சஞ்சீவ் பட் என்கின்ற ஐ.பி.எஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது சமூக அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான மனித உரிமை அமைப்புகளும் இந்த கைது நடவடிக்கையை வன்மையா கண்டிப்பதோடு நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்புவிடுத்துள்ளனர். சமூக ஆர்வளர் ஷபானா ஹாஸ்மி அவர்கள் கூறும் போது “சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நரேந்திர மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார் என்ற ஒரே காரணத்திற்காக பொய்வழக்கு ஜோடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நரேந்திர மோடி அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம்” எனக் கூறினார்.

சோமாலியா தலைநகர் மொகாதிஷூவில் பயங்கர குண்டு வெடிப்பு: 139 பேர் மரணம்

golinejad20111004102337937
மொகாதிஷூ:சோமாலியாவின் மொகாதிஷுவில் அமைச்சரவை கட்டிடம் ஒன்றின் வெளிப்புறத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் சுமார் 139 பேர் மரணமடைந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மாணவர்கள்,இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் மரணம் அடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் அதிகமானோர் தீக்கிரையாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ருத்ராபூரில் அராஜகம் செய்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் – உலமா குழு

dun1
டெல்லி:ருத்ராபூரில் ஒருதலை பட்சமாக நடந்த காவல்துறை அதிகாரிகளை ராஷ்ட்ரிய உலமா குழு வன்மையாக கண்டித்துள்ளதுடன் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 4  முஸ்லிம்களை கொன்றுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ராஷ்ட்ரிய உலமா குழுவின் பொதுச் செயலாளர் டாக்டர்.தஸ்லிம் அஹ்மத் ரஹ்மானி கூறியதாவது “உத்தரகாண்டில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருப்பதாகவும் அதை கருத்தில் கொண்டு சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற கலவரங்கள் நடத்தி வருங்கின்றனர் என்றும் மேலும் அவர்கள் குரானை தொடர்ந்து அவமதிப்பத்தின் மூலம் முஸ்லிம்களை உசுப்பேற்ற நினைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்”.

காவல் நிலையத்தில் தொழுகை நடத்திய இளைஞருக்கு போலீசாரின் அடி உதை

கொச்சி:காவல் நிலையத்தில் தொழுகை நடத்திய இளைஞரை போலீசார் கொடூரமாக தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஒரு வழக்கு விசாரணைக்காக அரூர் காவல் நிலையம் சென்ற ரஹீம் என்ற முஸ்லிம் வாலிபரைதான் ஆய்வாளர் சிவன்குட்டி மற்றும் மூன்று காவலர்கள் அடித்து துவைத்தனர்.

சஞ்சீவ் பட் சாட்சியாக வேண்டும் – குல்பர்க் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

Sanjeev_Bhatt_Article
அஹ்மதாபாத்:கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குல்பர்க் சொசைட்டியை சேர்ந்தவர்கள்  மோடிக்கு எதிராக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை சாட்சியாக சேர்க்க வேண்டும் என்றும் மேலும் நான்கு காவல்துறை உயர் அதிகாரிகளை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் கடந்த திங்கள் அன்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஜெ.தந்தா வருகின்ற அக்டோபர் 18-ஆம் தேதி அம்மனுவின் மீதான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னால் காங்கிரஸ் எம்.பி.இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி அளித்துள்ள மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் சஞ்சீவ் பட்டை இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று சிறப்பு நீதி மன்றத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, October 3, 2011

அடுத்த இரண்டு வாரங்களுக்கு டெல்லியில் மின்சார பாதிப்பு

imagesCAXBJTIL
புதுடெல்லி:வாஜிராபத்தில் மேம்பாலம் கட்டுவதை தொடர்ந்து வட மற்றும் தென் டெல்லியில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மின்சார இணைப்பில் பாதிப்பு ஏற்ப்படும் என்றும், இன்று முதல் அக்டோபர் 17 வரை, வாஜிராபாத், கீதா காலனி, பட்பர்கனி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக டெல்லி ட்ரான்ஸ்கோ லிமிட் தெரிவித்துள்ளது.

இந்த மின்சார துண்டிப்பு மிகவும் முக்கியமான காரணமாகவே செய்யப்பட உள்ளது என்றும், தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றில் இணைக்கப்பட உள்ள வாஜிராபாத் பாலத்தின் பணியை மையத்தில் வைத்தே இப்படி ஒரு ஏற்பாடு என்றும் தெரிவித்துள்ளனர். 

மத துவேஷ கருத்து – சுப்பிரமணியம் சாமி மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு

ssamy
புதுடெல்லி:மதங்களுக்கு இடையே மோதலையும், துவேஷத்தையும் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுப்பிரமணியம் சாமி மும்பையின் பிரபல செய்தித் தாளில் எழுதியிருந்த கட்டுரையில், இந்துக்கள் மற்றும் முஸ்லீ்ம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்ல்பட வேண்டும். அந்த மனப்பான்மை இந்துக்களுக்கு வர வேண்டும்.

Sunday, October 2, 2011

சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

Sanjeev_Bhatt_Article
அகமதாபாத்:நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அவரை நீதிமன்றக் காவலில் சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் ஆவணங்களை தாக்கல் செய்தவர்.

Saturday, October 1, 2011

தனித் தெலுங்கானா பந்த்தால் முடங்கியது ஹைதராபாத்

telangana_796378f
ஹைதராபாத்: தனித் தெலுங்கானா வலியுறுத்தி, ஹைதராபாத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தால், நகர் முழுவதும் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, டெல்லியில் தெலுங்கான பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ரயில் மறியல்,சாலை மறியல் என பல்வேறு வகையில் தெலுங்கானா பகுதிகளில் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது

Sanjeev_Bhatt_arrested_295
அஹமதாபாத்:குஜராத் காவல்துறை முன்னால் அதிகாரி சஞ்சீவ் பட் இன்று கைது செய்யப்பட்டர். குஜராத் இனப் படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பட் மிக முக்கியமான சாட்சிகளை பதிவு செய்திருந்தார்.

கலவரத்தின் போது மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்கவேண்டாம் என அந்த கூட்டத்தில் மோடி காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டளை இட்டதாக அதில் கூறி இருந்தார்.

மோடியை விமர்சித்த கார்ட்டூனிஸ்ட் கைது

modifastontrack1
புதுடெல்லி:குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக  ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாத் கிரண் என்ற ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஹரீஷ் யாதவ் என்ற மூசவீர்(35) இந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  செப்டம்பர் 20ம் தேதி அவர் வரைந்த கார்ட்டூன் அந்த நாளிதழில் வெளியாகியிருந்தது.

Dua For Gaza