Thursday, December 26, 2013

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபயணம்.100 க்கும் மேற்ப்பட்டோர் கைது!

periyapattinam
 இராமாநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயண போராட்டம் இன்று 24.12.2013 பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது.

பெரியபட்டினம் முதல் களிமன்குண்டு வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தரவேண்டியும், பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர் நியமனம் செய்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுவர் அமைக்க கோரியும், இராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் வரை வந்து செல்லும் பேருந்து காலை, மாலை பள்ளிகளுக்கு செல்லும் மீனவ தொழில் செய்துவரும் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த 55 மாணவர்கள் நலன் கருதி பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு வரை சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் நடைபயண போராட்டம் இன்று  பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது. இதில்  மாவட்ட துணை தலைவர் பைரோஸ் கான், மாவட்ட செயலாளர்கள் அப்துல் ஜமீல், செய்யது இப்ராஹீம், தொகுதி செயலாளர் செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரயிலில் முன்பதிவு செய்தவர் பயணத்தை ரத்து செய்தால் அந்த பதிவில் குடும்ப உறுப்பினர்கள் பயணிக்கலாம்!ரயிலில் முன்பதிவு செய்து ஒருவர் திடீரென பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அவருக்குப் பதிலாக அவரது குடும்ப உறுப்பினர், பெயர் மாற்றம் செய்து ரயிலில் பயணம் செய்யலாம்.
இதுக்குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்; ‘ரயிலில் பயணம் செய்ய, பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்னதாக ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்கும் நடைமுறை இப்போது உள்ளது. தட்கல் டிக்கெட்டை முதல்நாள் காலை 10 மணியில் இருந்துதான் எடுக்கமுடியும்.

இளம்பெண்ணை கர்நாடகாவிலும் குஜராத் போலீஸ் கண்காணித்தது! – குலைல் டாட் காம்


spy

புதுடெல்லி: பெங்களூரைச் சார்ந்த கட்டிட கலை வல்லுநரான இளம்பெண்ணை குஜராத்தில் மட்டுமல்ல; கர்நாடகாவிலும் மோடியின் போலீஸ் கண்காணித்தது என்று குலைல் டாட் காம் இணையதளம் ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்கால கணவர், உறவினர்கள், பெற்றோர் ஆகியோர் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கியதை தொடர்ந்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் நோக்கம் இளம்பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை குறித்து அறியும் ஆவலே என்பது தெரிய வந்துள்ளது.

ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிக்கோவ் (94) மரணம்மாஸ்கோ: ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிக்கோவ் (94) திங்கள்கிழமை மரணம் அடைந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக ரஷ்யாவின் உட்முர்ஷியா குடியரசுத் தலைநகர் இஷ்விஷ்க்கில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உட்முர்ஷியா குடியரசின் செய்தித் தொடர்பாளர் விக்டர் சல்கோவ் தெரிவித்தார். சோவியத் ஒன்றியப் படையணியின் முக்கிய துப்பாக்கியாக இருந்த ஏகே 47, பின்னாளில் உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

Monday, December 23, 2013

நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி, இன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம்!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் இன்று(22.12.2013) சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பி. அப்துல் ஹமீது, நிஜாம் முஹைதீன், மாநில பொருளாளர் ஏ. அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் எஸ்.எம். ரபீக் அகமது அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர்கள் செய்யது அலி, அமீர் ஹம்சா, அப்துல் சத்தார், ரத்தினம், அபுதாகிர் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொணடனர்.

முஸஃபர் நகர்: குளிரை தாக்குப் பிடிக்க பாப்புலர் ஃப்ரண்ட் உதவி!


PFI

முஸஃபர் நகர்: உத்தர பிரதேச மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களில் துயரமான சூழல் கடுமையான குளிரால் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அங்கு நடத்தி வந்த துயர் துடைப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக முகாம்களில் நிவாரணப் பணிகளுக்கு தலைமை வகிக்கும் மவ்லானா முஹம்மது ஸதாப் தெரிவித்தார்.

எதிர்கட்சிகளை ஒடுக்கும் எகிப்திய ராணுவம்: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்!
மொராக்கோ: இஃவானுல் முஸ்லிமீனை தொடர்ந்து எகிப்தின் இதர எதிர்கட்சியினரையும் போராட்ட எதிர்ப்புச் சட்டம் பிரயோகித்து ராணுவம் ஒடுக்குவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது.
ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய ஏப்ரல் 6 இயக்கத்தின் தலைவர் முஹம்மது ஆதில் உள்ளிட்ட 6 பேரை ராணுவம் கைதுச் செய்தது. அவர்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த ராணுவம், ஆறுபேரையும் கடுமையாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் ஆதில் தவிர 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Sunday, December 15, 2013

ஓரினசேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்,தீர்ப்பை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்!ஓரினசேர்க்கை எனப்படும் இயற்கைக்கு மாற்றமான உறவை தண்டனைக்குரிய குற்றமாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை டிவிட்டர்,ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் குறைகாண்பது ஆச்சர்யமாக உள்ளது. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை விட அதிகமான முயற்சிகளை,எய்ட்ஸ் நோயின் முக்கிய காரணியான இந்த அசிங்கத்திற்கு எதிராக எடுக்க வேண்டும்.     'கடவுள் ஆதம் மற்றும் ஏவாளைதான் படைத்தார். ஆதம் மற்றும் ஸ்டீவை படைக்கவில்லை' என்று ஒரு செய்தியாளர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய வங்கிகளில் கேட்பாரற்ற தொகை எவ்வளவு?

 கணவரோ மனைவியோ இறந்துவிட்ட பின யாராலும் உரிமை கோர இயலாத நிலையில் பெருந்தொகை வங்கியில் இருப்பில் உள்ளதாகவும்,
அதை எடுக்க உதவும்படியும் உங்களுக்கு நைஜீரியாவிலிருந்து அல்லது ஏதேனும் ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்து மின்னஞ்சல்கள் வந்திருக்கிறதா?

ஹிந்துத்துவாவாதிகளின் பிடியில் மத்திய உள்துறை அமைச்சகம்!-சமூக ஆர்வலர்கள்!


shabnam

புதுடெல்லி: இந்தியாவில் அதிகாரமையங்கள் காவிமயமாக் கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் நீண்டகாலமாகவே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், மத்திய அமைச்சகமும் கிட்டத்தட்ட ஹிந்துத்துவா சக்திகளின் பிடியில்தான் உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும் முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் கைதுச் செய்யப்படுவது தொடருவதற்கு காரணம் இதுவாகும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
முன்னாள் உள்துறமை செயலாளர் ஆர்.கே.சிங் பா.ஜ.க வில் சேர்ந்தது இதற்கான தெளிவான ஆதாரமாகும்.உள்துறை அமைச்சகம் தவிர இதர துறைகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.காவி உள்ளம் படைத்த அதிகாரிகள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை தகர்க்கின்றார்கள்.

Friday, December 13, 2013

ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேஷனுக்கு முகுந்தன் சி.மேனன் விருது!


Nchro

கோழிக்கோடு: பிரபல மனித உரிமை ஆர்வலரும், என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் ஸ்தாபகபொதுச் செயலாளருமான மறைந்த முகுந்தன் சி.மேனன் பெயரில் ஆண்டு தோறும் என்.சி.ஹெச்.ஆர்.ஓ (தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு) மனிதஉரிமை விருதை வழங்கி வருகிறது. இவ்விருது மனித உரிமை மற்றும்சுற்றுச்சூழல் தளத்தில் சிறப்பாக பணியாற்றிய நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இராம்நாடு வடக்கு மாவட்டம் பனைக்குளத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம்!பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராம்நாடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் நேற்று (06.12.2013) நடைபெற்றது.
இராம்நாடு வடக்கு மாவட்டம் பனைக்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அப்துல் நாசர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஹமீது இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Wednesday, December 11, 2013

முஸஃபர் நகர் கூட்டு பாலியல் வன்கொடுமை:வாக்குமூலம் அளித்த பெண்களின் வீடுகள் தீக்கிரை!


fire home

முஸஃபர் நகர்: உத்தரபிரதேச மாநிலம் முஸஃபர்நகரில் நடந்த கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.முன்னர் 6 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்திருந்தனர்.

மருந்து விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு – சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

விலை குறைத்து விற்கவேண்டிய மருந்தகள் என அரசு பிறப்பிக்கும் உத்தரவானது அது பற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளி யான உடனேயே அமலுக்கு வரும்.அத்துடன் இந்த உத்தரவை 15 நாள்களுக்குள் அமல்படுத்தவேண்டும் .மேலும் இந்த அவகாச காலத்தில் விற்காத இருப்புகளை உயர் விலையில் விற்கக்கூடாது என்று மருந்து தயாரிப்பாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நிதாஹத் சட்டத்தினால் சவூதி அரேபியாவில் வேலை இழந்து தவித்து வரும் தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத்தேடி பல்வேறு மாநில மக்கள் சென்றுள்ளனர். சவூதி அரேபியா நாட்டிலும் வேலை வாய்ப்பிற்காக தமிழகத்தை சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர். சவூதி அரேபியாவில் “நிதாஹத்” என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வரையரைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதில் அடிப்படை வேலைகளுக்காக சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநில மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியாகியுள்ளனர்.

ஃபேஸ்புக்கில் உணர்ச்சியை வெளிப்படுத்த சிம்பதி (sympathy) பட்டன்!..!ஃபேஸ்புக்கில் துயரமான செய்திகள், மரண வார்த்தைகளை பார்க்கும்போது தமது உணர்ச்சியை வெளிப்படுத்த லைக் கொடுக்கலாமா? என்று இனி யோசிக்க தேவையில்லை.
அத்தைய சூழல்களில் இனி sympathy (இரக்கம்) பட்டனை க்ளிக் செய்வதற்கான வசதி இனி ஃபேஸ்புக்கில் உண்டாகும்.
sad மற்றும் depressed என்ற பெயர்களில் பட்டன்கள் இடம்பெறும்.

இஸ்ரேல் குடியேற்றத்தை ஆதரிக்கக் கூடாது! – பிரிட்டன்


britain

லண்டன்: இஸ்ரேல் குடியேற்றக்காரர்களுடன் இணைந்து செயல்படக் கூடாது என்று பிரிட்டீஷ் அரசு தன் வர்த்தகத் துறை நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் அளித்துள்ளது. குடியேற்றத்தை ஆதரிக்கும் நடவடிக்கைக்களுக்கு துணை போகக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
குடியேற்றக்காரர்களுடன் இணைந்து திட்டங்களை நிறுவனங்கள் துவக்கினால் பிரிட்டீஷ் அரசு ஆதரிக்காது. சட்ட ரீதியாக இஸ்ரேலுக்கு சொந்தமில்லாத பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடக்கூடாது.

Saturday, December 7, 2013

பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டவேண்டும்! – டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் தர்ணா


jantar

புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில பிரிவு சார்பாக ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடந்தது.
தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவரும், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினருமான இ.எம். அப்துர் ரஹ்மான் தனது உரையில் கூறியது:
சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு சங்க் பரிவாரம் நிகழ்த்திய மிகப் பெரிய பயங்கரவாதச் செயலே பாபரி மஸ்ஜித் இடிப்பு. பாபரி மஸ்ஜிதின் இடிப்பை மறக்கடித்து விடலாம் என்று சங்க் பரிவாரம் கனவு காண வேண்டாம்.

உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய பிரச்னை ஃபலஸ்தீன்! – யூசுஃப் அல் கர்ழாவி


qaradawi

தோஹா: இஸ்லாம் மற்றும் உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய பிரச்னை ஃபலஸ்தீன் என்று உலகின் புகழ் பெற்ற முஸ்லிம் மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி தெரிவித்தார்.
கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அமைந்துள்ள உமர் கத்தாப் மஸ்ஜிதில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆற்றிய ஜும்ஆ குத்பா உரையில் இதனை குறிப்பிட்டார் கர்ழாவி.

Dua For Gaza