Saturday, May 31, 2014

யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபல்யமான நஜ்மா ஹெப்துல்லாஹ்வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் 13-ம் தேதி 1940ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்யது யூசுஃப் அலீ மற்றும் பாத்திமா யூசுஃப் அலீ ஆகியோரின் மகளாக பிறந்தார்.
தனது பள்ளிப் படிப்பை மோதிலால் விக்யான் மகாவித்யாலயாவில் (MVM) தொடங்கிய நஜ்மா விலங்கியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர். அதோடு தல்வார் பல்கலைக்கழகத்தில் கார்டியாக் அனாடமி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 1966-ல் அக்பர் அலீ ஹெப்துல்லாஹ் என்பவரை திருமணம் செய்த நஜ்மா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

Wednesday, May 28, 2014

தியாகத்தின் நிழலில் இஸ்லாம்! – வலசை ஃபைஸல்

புதிதான கொள்கையின் காற்று வீச தொடங்கிய காலம். சமத்துவமும், சகோதரத்துவமும் என்னவென்றே தெரியாமல் இன்று இந்தியாவில் ஆரிய பாசிச வர்க்கங்கள் கொலை, கொள்ளை, இனவாதத்தின் பெயரில் வீடுகளை சூறையாடுவது, சக மனிதன் என்பதை மறந்து மனிதாபிமானம் என்றால் அதன் நிறம் என்ன என்று கேட்கும் அளவிற்கு கருவில் இருக்கும் குழந்தையை வயிற்றை பிளந்தெடுத்து தீக்கிரையாக்கும் கோரர்களை போன்று கொடியவர்களை கொண்ட அரபு மண் அது.
அங்கே அடிமைகளுக்கு ஆனந்தமாய், உண்மையாளர்களுக்கு ஒளியாய், மனித நேயம் உடையவர்களுக்கு மணமாய் அழகிய கொள்கையுடன் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம், அமைதி என்ற தென்றல் காற்றை சுமந்து வந்தது வஹீ என்னும் நபித்துவம்.

Tuesday, May 20, 2014

நிரபராதிகள் தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கப்படுகின்றனர்! - உச்சநீதிமன்றம்!
புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக நிரபராதிகளை பொய்வழக்குகளில் சிக்கவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள அக்ஷார்த்தம் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்ட 6 பேரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்து தீர்ப்பளித்தபோது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

Wednesday, May 14, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மக்கள் தொடர்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சிபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மக்கள் தொடர்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 10, 2014 அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு துறை பொறுப்பாளர் ஷபியுல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் பி.கோயா அவர்கள் மக்கள் தொடர்பு என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். சமூக களத்தில் செயல்படும் இயக்கங்களுக்கு மக்கள் தொடர்பின் அவசியம் குறித்தும் குறிப்பாக ஊடகங்களுடன் கொள்ள வேண்டிய தொடர்புகள் குறித்தும் தன்னுடைய உரையில் எடுத்துரைத்தார். மக்கள் தொடர்பை எடுத்து செல்வதற்கான வழிமுறைகள் குறித்து தன்னுடைய உரையில் விவரித்தவர் மக்கள் தொடர்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருக்க வேண்டிய குணநலன்களையும் விவரித்தார்.

Saturday, May 10, 2014

மதுரை வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணி-ஸ்டாலின்


கிரீஸில் தலையை மறைத்து அன்னா தேர்தலில் போட்டியிடுகிறார்!ஏதன்ஸ்: ’முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சத்தை தடுக்கவேண்டும்.கிரீஸில் அனைத்து முஸ்லிம்களுக்கும் பிறரைப் போலவே உரிமைகள் வழங்கவேண்டும்’- ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் கிரீஸுக்கான இடத்திற்காக போட்டியிடும் முஸ்லிம் பெண்மணி அன்னா ஸ்டாமோயு தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் முன்னால் வைக்கும் கோரிக்கையாகும்.ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலையை மறைத்த உறுப்பினராக தான் இருப்பேன் என்று அன்னா கூறுகிறார்.இம்மாதம் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

Tuesday, May 6, 2014

மே - 4 ஷஹீத்.திப்பு சுல்தான் இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த நாள்...!


‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது."ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிஷ்டம்".என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லேச்லி. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

Saturday, May 3, 2014

அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் அட்டூழியம்: பெண்கள், குழந்தைகள் உட்பட 32 முஸ்லிம்கள் படுகொலை!

குவஹாத்தி: அஸ்ஸாமில் கடந்த இரண்டு நாட்களாக போடோ தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட முஸ்லிம்களின் பலி எண்ணிக்கை 11 லிருந்து 32 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு சமீபத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24–ந் தேதியுடன் 3 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் போடோ இன வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு போடோ தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்தனர்.

Friday, May 2, 2014

சென்னை குண்டுவெடிப்புக்கு எஸ்டிபிஐ கண்டனம்!

 “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் இரயிலில் நடந்த குண்டுவெடிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று எஸ்.டி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
01.05.2014 காலை 7.15 மணியளவில் பெங்களூரிலிருந்து கவுகாத்திக்கு சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும் பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது நடைமேடைக்கு வந்து நின்ற அடுத்த 10 நிமிடங்களில் இரயிலின் எஸ்4, எஸ்5 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில் இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கக்கூடியது, கடும் கண்டனத்திற்குரியது.

Dua For Gaza