Saturday, August 31, 2013

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: மத்திய மாநில அரசுகள் உயர்த்தி வழங்கவேண்டும், பா.ஜ.க.,வின் அவதூறு பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்

press relese(29.08.2013)
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி:-

சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கு அவர்கள் முன்னேறுவதற்கான திட்டங்களை, சலுகைகளை வழங்குவதற்கு நமது நாட்டின் அரசியல் சாசன சட்டம் வகை செய்கிறது. இவ்வகையில்தான் எஸ்.சி/எ.,எஸ்.டி, பிற்படுத்தப்பட்டடோர் மற்றும் சிறுபான்மையினருக்கு சலுகைகள், மானியங்கள், இடஒதுக்கீடு போன்றவை வழங்கப்படுகின்றன.

தீவிரவாத அரசியலை நிறுத்த ஒன்றிணைந்து போராட வேண்டும். எஸ்.டி.பி.ஐ கருத்தரங்கில் அழைப்பு!

national seminar
புதுடெல்லி:தீவிரவாத அரசியலை முடிவுக்கு கொண்டுவர அடக்கி ஒடுக்கப்பட்ட பிரிவினர் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று புதுடெல்லியில் சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா நடத்திய கருத்தரங்கில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பள்ளி மாணவி தவ்பிக் சுல்தானா மரணம்: SDPI கட்சியின் உயர்மட்டக்குழு நேரில் ஆய்வு: வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றம்

trichy
திருச்சியில் பள்ளி மாணவி தவ்பிக் சுல்தானா மர்ம மரணம் சம்மந்தமாக எஸ். டி.பி.ஐ கட்சியின் உயர் மட்டக்குழு, SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் M.நிஜாம் முஹைதீன் தலைமையில் தவ்பிக் சுல்தானா குடும்பத்தின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். தவ்பிக் சுல்தானா பிணமாக கிடந்த எடமலைப்பட்டி புதூர் ரெட்டை மலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தையும் நேரில் பார்வையிட்டனர்.பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களையும்,  திருச்சி மாநகர ஆணையர் அவர்களையும் சந்தித்து  தவ்பிக் சுல்தானா மரணம் சம்மந்தமாக உண்மை குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது .

பாலியல் சம்பவங்களில் முதல் இடம் பிடிக்கும் சென்னை!

 பாலியல் சம்பவங்களில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை முதலிடம் பிடிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மாநில குற்ற ஆவண காப்பக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில், கடந்த 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013ல் பாலியல் குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012ல் மாநிலம் முழுவதும் 291 பாலியல் வழக்குகள் பதிவாயின. 2013ல் தற்போது வரை 436 வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் மொத்தம் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கத்தார் புதிய விசா நடைமுறை: 188 பிரிவினருக்கு ஏர்போர்ட்டில் விசா!

கத்தார் அரசு, புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில், 188 பிரிவுகளில் தகுதி பெற்றவர்கள் கத்தார் வருவதற்கு முன்கூட்டியே விசா எடுக்க தேவையில்லை. GCC நாடுகளில் வசிப்பவர்கள் (அந்த நாடுகளின் பிரஜைகளாக இருக்க தேவையில்லை) தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கும்போதே விசா வழங்கப்படும்.

ராணுவத் தடையை மீறி எகிப்தில் பிரம்மாண்ட பேரணிகள்! பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!



ராணுவம் ஏற்படுத்திய தடைகளையும் மீறி ஜனநாயகத்தைக் கோரி எகிப்தில் நேற்று பிரம்மாண்ட பேரணிகள் நடந்தேறின.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பிரம்மாண்ட பேரணிகள் நடந்தன.
தலைநகரின் நஸ்ர் சிட்டி, மொஹந்திஸினி ஆகிய இடங்களில் நடந்த சர்வாதிகார ராணுவ அரசுக்கு எதிராக நடந்த பேரணிகளில் மிக அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். ராணுவம் ஏற்படுத்திய இடைக்கால அரசு பதவி விலக மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மோடியின் வருகையை எதிர்ப்போம்: பிரிட்டனில் சீக்கியர்கள் அறிவிப்பு!



குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரிட்டன் வருகை தந்தால் அதனை எதிர்ப்போம் என்று பிரிட்டனில் உள்ள சீக்கியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுக்குறித்து பிரிட்டனில் இயங்கும் சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் அமரிக் சிங் கூறும்போது; ‘இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோருடன் பகைமை உணர்வு மற்றும் வெறுப்புணர்வான அணுகுமுறையை மோடி கடைப்பிடிக்கிறார். ஆகையால் அவர் பிரிட்டன் வருவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

Tuesday, August 27, 2013

வளைகுடா நாடுகள் அனைத்திற்கும் பொதுவான நுழைவு விசா! - 2014 முதல் செயல்படுத்த திட்டம்!

ஐரோப்பிய யூனியனைப் போன்று வளைகுடா நாடுகளும் பொதுவான ஒற்றை நுழைவு விசா அளிக்கும் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த முடிவு செய்துள்ளன.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும், உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து பொதுவான ‘செங்கன் விசா’ என்ற ஒற்றை நுழைவு நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காவல்துறை விசாரணையில் முஸ்லிம்கள் மீது அத்துமீறல்கள்!

மதுரை: பா.ஜ.க மற்றும் இதர இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கொலை செய்யப்பட்ட செய்தி அவ்வமைப்புக்களால் பிரச்சினை ஆக்கப்பட்ட பின்,
தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பலவற்றில் காணப்படும் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் கவலைக்குரியதாக உள்ளன.
குறிப்பாக ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோரை உள்ளடக்கிய சிறப்புக் காவல் படையினரின் செயல்பாடுகள் கடந்த ஓராண்டு காலமாகவே அப்பாவி முஸ்லிகள் பலரையும் பொய் வழக்குகளில் சிக்க வைப்பது, ஆண் துணை இன்றி தனியாக வாழ நேர்ந்த பெண்கள் உட்பட அப்பாவிகள் பலரை காவல்துறை உளவாளிகளாகச் செயல்படக் கட்டாயப்படுத்துவது, மதுரை நெல்பேட்டை முதலான இடங்களில் வசிக்கும் அடித்தள முஸ்லிம்கள் பெரும்பாலானோரை விசாரணை என்கிற பெயரில் அழைத்து அடித்துத் துன்புறுத்துவது, அவர்களது புகைப்படம் செல் போன் தொடர்புகள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பது என்பதாக உள்ளன.

Monday, August 26, 2013

‘ஜெய் நரேந்திர மோடி’ கோஷம் போட மறுத்த மாணவர்கள் மீது தாக்குதல்!



‘ஜெய் நரேந்திர மோடி’ கோஷம் எழுப்ப மறுத்த மாணவர்களை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற சங்க்பரிவார மாணவர் அமைப்பினர் தாக்கியுள்ளனர்.
ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா (எஃப்.டி.ஐ.ஐ) மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கபீர் கலா மஞ்ச் என்ற சமூக கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் முடிந்த உடன் இத்தாக்குதல் நடந்துள்ளது.

‘ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு வணிக மயமாகிவிட்டது சட்டத் தொழில்!’ - உச்சநீதிமன்றம்!

சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றங்களுக்கு ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு வழக்கறிஞர் என்ற சட்டத் தொழில் அமைந்துவிட்டது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராக வக்கீல் ஒருவர் கையெழுத்திட்டு விட்டு, அதன்பின்னர் ஒரு முறைகூட அந்த வழக்கில் ஆஜராகவில்லை. இதை கண்டித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Saturday, August 24, 2013

அஸ்மா பெல்தாகிக்கு தந்தை எழுதிய கடிதம் : துருக்கி பிரதமர் எர்துகான் கண்ணீர் விட்டு அழுதார்


எகிப்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரி அமைதியான போராட்டம் நடந்துகொண்டிருந்த போது சர்வாதிகார ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அஸ்மா பெல்தாகிக்கு அவரது தந்தையும், இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டியின் பொதுச் செயலாளருமான முஹம்மது பெல்தாகி எழுதிய கடிதத்தை பார்த்து துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கண்ணீர் விட்டு அழுதார்.தனியார் தொலைக்காட்சி சானலின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட எர்துகானிடம், அஸ்மாவுக்கு அவரது தந்தை எழுதிய கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது.கடிதத்தை படிப்பதை கவனமாக கேட்ட எர்துகானின் கண்கள் கண்ணீரால் நிரம்பின.சில நிமிடங்கள் மவுனமாக இருந்த எர்துகான், பின்னர் கண்ணீரை துடைத்துவிட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார்.


முஹம்மது பெல்தாகி, தனது அஸ்மாவுக்கு எழுதிய கடிதம்:

நேசத்துக்குரிய என்னருமை மகளே!

எனக்கே ஆசானாக மாறிய ஷஹீதா அஸ்மா பல்தாஜியே!

நான் உனக்கு பிரியாவிடை வாழ்த்து சொல்ல வரவில்லை. நாளை நாம் சந்திப்போம் என்று சொல்லத்தான் வந்தேன்.
நீ அநியாயத்திற்கெதிராக தலைநிமிர்ந்து வாழ்ந்தாய். அதன் அனைத்து விலங்குகளையும் நிராகரித்தாய். எல்லையற்ற சுதந்திரத்தை காதலித்தாய்.

எகிப்து இராணுவத்தை கண்டித்து இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!


இராமநாதபுரம்: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவத்தின் துணையுடன் ஆட்சியில் உள்ள சட்டவிரோத இடைக்கால அரசு,தன்னுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது.

‘மோடியை பிரிட்டன் அழைக்கவில்லை!’ - இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ்



குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரிட்டன் விருந்தினராக அழைக்கவில்லை என பிரிட்டனுக்கான இந்திய தூதர் ஜேம்ஸ் டேவிட் பெவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக மோடி இங்கிலாந்துக்கு வருகை தந்து அங்குள்ள பாராளுமன்றத்தில் எதிர்கால இந்தியா பற்றி உரையாற்ற வேண்டும் என இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவலாக்கப்பட்டன.

Thursday, August 22, 2013

ஃபேஸ்புக்கின் பிழையைச் சுட்டிய பலஸ்தீனியருக்கு பரிசளிக்க முடிவு!

உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. இதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் என்பவரிடம் தொடர்பு கொண்ட பலஸ்தீனியரான கலீல் ஷ்ரியதெ என்பவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அம்சத்திலுள்ள குறையொன்றைச் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், கலீலின் வேண்டுகோளுக்கு எவ்வித மறுமொழியும் ஃபேஸ்புக் நிறுவனம் அளிக்கவில்லை.
இதனால், ஆத்திரமுற்ற கலீல், ஃபேஸ்புக் நிறுவனரான மார்க்-கின் ஃபேஸ்புக் பக்கத்தையே, முன்னதாக அவர் சுட்டியிருந்த பாதுகாப்புக் குறைபாட்டின் வழியே கடத்திக் கொண்டு விட்டார். அலறியடித்த ஃபேஸ்புக் நிர்வாகம், இம்முறை உடனடியாக அந்த ஃபேஸ்புக் ஓட்டையை அடைத்து பாதுகாப்பைக் கூட்டியது.

இந்தியாவில் பிற மதத்தினரை விட குறைந்த வருவாயில் வாழும் முஸ்லிம்கள்! - ஆய்வில் தகவல்!



இந்தியாவில் மத அடைப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் மற்ற மதத்தினரை விட முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக இருப்பதாக மத்திய அரசு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு கழகம் (NSSO) சார்பில் ‘இந்தியாவில் வசிக்கும் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை’ என்ற தலைப்பில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் S.P.வெங்கடசாமி மீது புதுவை அரசே உடனே நடவடிக்கை எடு :பாப்புலர் ஃப்ரண்ட்


சுதந்திர உணர்வையும், சுதந்திர போராட்டத் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் மற்றும் தேசத்திற்கான நமது கடமையை உணர்த்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தன்று "வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து "ஃப்ரீடம் மீட்" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது. 

ஆனால் தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை மேற்கண்ட சுதந்திர தின பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. தமிழக காவல்துறையின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் கடந்த 16.08.2013ல் நடைபெற்றது. 

Wednesday, August 21, 2013

SDPI கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நடத்தப்பட்ட ஈத் மிலன் நிகழ்ச்சி

5
SDPI கட்சியின் சார்பாக ஈத் மிலன் நிகழ்ச்சி இன்று(17.08.2013) சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபுபேலசில் நடைபெற்றது.

கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக்,மாநில செயலாளர் செய்யதலி,மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர் உஸ்மான் கான்,கனி ஆகியோர் உடனிருந்தனர்.

வக்ஃப் சட்டத்திருத்தம்: வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் - மத்திய அமைச்சர் ரஹ்மான் கான்!



வக்ஃப் நிலத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தினால் வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து முஸ்லிம்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்தொகை போதுமானது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். வக்ஃப் ஆக்கிரமிப்பை தடுக்கவும், வக்ஃப் நிலத்தை வர்த்தகரீதியாக பயன்படுத்தவும் நோக்கமாக கொண்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றிய பிறகு அவர் உரையாற்றினார்.

‘எகிப்து ராணுவப் புரட்சியின் பின்னணியில் இஸ்ரேல்’: துருக்கி பிரதமர் எர்டோகன்!



எகிப்தில் அதிபர் முஹம்மது முர்ஸியை ராணுவம் புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றியதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக துருக்கியின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இஃவானுல் முஸ்லிமீன் தேர்தலில் வெற்றிப் பெற்றால் கூட அவர்களை ஆட்சியில் தொடர இஸ்ரேல் அனுமதிக்காது என்று யூத அறிஞர் ஒருவர் பிரான்சில் வைத்து தன்னிடம் கூறியதாக எர்டோகன் ஏ.கே.கட்சியின் தலைவர்களிடையே உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சட்ட உதவி! - மத்திய அரசு முடிவு!



போலீஸ் மற்றும் ரகசிய புலனாய்வு அமைப்புகளால் தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக சிக்கவைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சட்ட உதவி வழங்க மத்திய அரசு முடிவுச் செய்துள்ளது.
பொய் வழக்குகளை கண்டறிவதற்கான அளவுகோலை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tuesday, August 20, 2013

எகிப்து இராணுவ அரசாங்கத்துடன் ராஜாங்க உறவுகளை துண்டிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட்



புது டெல்லி: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவத்தின் துணையுடன் ஆட்சியில் உள்ள சட்டவிரோத இடைக்கால அரசு, தன்னுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது.

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வழிமுறையே போதுமானது: பாப்புலர் ஃப்ரண்ட்



கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ராஜ்ய சபாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் (மீளாய்வு) 2012ல் மதங்களுக்கு அப்பாற்பட்டு கட்டாயமாக அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. எனினும் ஏற்கனவே அமுலில் உள்ள வேறு ஏதேனும் சட்டங்களுக்குட்பட்டு திருமணங்கள் பதிவு செய்வதாயிருப்பின், அத்தகையவர்களுக்கு இந்த சட்ட திருத்தம் பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது நாட்டில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தினரின் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முஸ்லிம் தனியார் சட்டமே பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24.11.2009 முதல் தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் 2009யின் அடிப்படையில் அனைத்து மதத்தவர்களும் திருமணங்களை கட்டாயமாக அரசு பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.

Monday, August 19, 2013

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் எகிப்து மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!



எகிப்தின் கெய்ரோ நகரத்தின் ரம்ஸீஸ் சதுக்கத்திற்கு அருகில் உள்ள ஃபத்ஹ் மஸ்ஜிதில், ஜனநாயகத்தை மீட்டெடுக்க தர்ணா போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது எந்திர துப்பாக்கிகளை பிரயோகித்து சரமாரியாக சுட்டு வீழ்த்திய எகிப்திய ராணுவம், இழந்த சிறப்பு அதிகாரங்களை மீண்டும் கைவசப்படுத்துவோம் என்று பிரகடனப்படுத்தியுள்ளது.
2012-ஆம் ஆண்டு ஜனநாயகரீதியாக எகிப்தின் வரலாற்றில் நடந்த முதல் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வெற்றிப் பெற்று அதிபரான முஹம்மது முர்ஸிக்கு எதிராக மேலை நாடு ஒன்றின் வெளிப்படையான, மறைமுகமான ஆதரவுடன் நடந்தேறியது ராணுவப் புரட்சி.

இஸ்லாமிய வங்கியியல் முறை:கேரள அரசுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி!

இஸ்லாமிய பொருளாதாரச் சட்டங்களின் அடிப்படையில் நிதி நிறுவனம் துவங்க கேரள அரசுக்கு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
சேரமான் ஃபினான்ஸியல் சர்வீஸ் லிமிட்டட் (CFSL) என்ற பெயரில் கேரள மாநில தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் நிதி நிறுவனம் Non banking finance company அடிப்படையில் இயங்கும் இந்நிறுவனத்திற்கு ரூ.40 கோடி நிதி திரட்ட முடியும் என்று கேரள அரசு நம்புகிறது.

திருச்சி பள்ளி மாணவி பலாத்கார-கொலைத் தொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் கைது!

திருச்சியில் காணாமல் போன பள்ளி மாணவி தண்டவாளத்தில் உடல் சிதறி பிணமாக இறந்து கிடந்தார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மெகபூப் நிசா. இவர்களது மூத்த மகள் தவ்பிக் சுல்தானா (13). 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Sunday, August 18, 2013

சிறுபான்மை மக்களுக்கு கல்வி உதவித்தொகை:மோடி அரசுக்கு கண்டனம்!



சிறுபான்மை சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பை (கல்வி உதவித்தொகை) எதிர்க்கும் குஜராத் அரசின் நடவடிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கண்டித்துள்ளது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட ஐந்து மதச் சிறுபான்மையினரில் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் அளிப்பதற்கான திட்டத்தை குஜராத் மோடி அரசு எதிர்க்கிறது.

சுதந்திர தினம் கொண்டாட தடை! டி.ஜி.பி. அலுவலகம் முற்றுகை போராட்டம்!


சென்னை: இந்திய தேசம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, 67வது சுதந்திர தின விழா எல்லா தரப்பு மக்களாலும் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அனைத்து மாநிலங்களிலும் கொடியேற்றம், தியாகிகளை நினைவுகூறுதல், உறுதிமொழி எடுத்தல், சுதந்திர தின பொதுக்கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டும் காவல்துறை சுதந்திர தினம் கொண்டாட அனுமதி மறுத்து பல்வேறு இடையூறுகள் தந்து, முஸ்லிம்களை கைது செய்து ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளது.

Saturday, August 17, 2013

ராணுவத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாத எகிப்து மக்கள்! - மீண்டும் சூடு பிடிக்கும் போராட்டக்களம்!



ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான கொடூர தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலைச் செய்யப்பட்ட பிறகும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் எகிப்தில் மக்கள் போராடி வருகின்றனர்.
நேற்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அவசர நிலையை பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். எத்தனை பேர் உயிர்களை இழந்தாலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மது முர்ஸியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் வரை ஓயமாட்டோம் என்று முஸ்லிம் சகோதரத்துவ பேரவை இயக்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Thursday, August 15, 2013

சுதந்திர தினம் கொண்டாட தமிழக காவல்துறை தடை ஆகஸ்ட் 17 டி.ஜி.பி அலுவலகம் முற்றுகை தமிழகம் முழுவதும் போராட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் அறிவிப்பு

சென்னை: முஸ்லிம்கள் சுதந்திர தினம் கொண்டாட தமிழக காவல்துறை தடை விதித்ததை கண்டித்து நாளை 17.8.2013 அன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக முற்றுகை போராட்டமும் மற்றும் அனைத்து மாவட்டம் தோரும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், “

67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

புதுவலசையில் பாப்பலர் ஃப்ரண்ட் சார்பில் சுதந்திர தின விழா!

இந்தியாவின் 67–வது சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இந்த வருடம் “சுதந்திரத்தின் காவலாளிகளாவோம் ” என்ற முழக்கத்தை முன் வைத்து நாடு முழுவதும் சுதந்திர தின கூட்டங்களையும், தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. அதன் படி தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தினம் உற்சாகமாக கடைபிடிக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இஸ்லாமிய வங்கியல் குறித்து தேர்தல் அறிக்கையில் உட்படுத்தவேண்டும் – ரஹ்மான் கான்

புதுடெல்லி:இஸ்லாமிய வங்கியல் குறித்து அடுத்த மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் உட்படுத்தவேண்டும் என்று மத்திய அமைச்சர் ரஹ்மான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியிடம் ரஹ்மான் கான் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பது:

புத்த கயா குண்டு வெடிப்பு - ஹிந்து மதத் துறவி கைது!

 கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதியன்று பீகாரில் உள்ள புத்த கயா கோவிலில் 10 இடங்களில் குண்டு வெடிப்புகள் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது.
புத்த கயா குண்டு வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இக்குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக அரூப் பிரமச்சாரி என்ற ஹிந்து மதத் துறவி கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எகிப்தில் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்: 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை!



எகிப்தில் ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது சர்வாதிகார ராணுவ அரசு நடத்திய கொடூரமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.
கெய்ரோவிலும், அருகில் உள்ள நகரங்களிலும் அமைதியான முறையில் பல தினங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கியுள்ள தற்காலிக முகாம்களை நீக்கம் செய்ய வந்த ராணுவம் நிராயுதபாணிகளான மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. எத்தனை பேர் மரணித்தார்கள் என்பது குறித்த தெளிவான புள்ளிவிபரம் வெளியாகவில்லை. குறைந்தது 2,200 பேராவது மரணித்திருப்பார்கள் என்று போராட்டத்திற்கு தலைமை வகித்த இஃவானுல் முஸ்லிமீனின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகத்தைவலிமைப்படுத்துவோம்!சுதந்திரத்தை கொண்டாடுவோம்!!: பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் சுதந்திர தினச் செய்தி

நாம் அனைவரும் 67 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். சுதந்திர உணர்வுகளால் ஒவ்வொரு இந்தியனின் உள்ளமும் பூரிப்படையக்கூடிய இந்நன்னாளில் நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும், உறுதியையும் நினைவு கூர்வதோடு நமது முன்னோர்கள் கண்ட கனவை வருங்காலத்தில் நிறைவேற்றுவேன் என்று உறுதி மேற்கொள்ள வேண்டும்.

மதச்சார்பின்மை , சோசியலிசம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள சுதந்திர இந்தியா இன்று கார்ப்பரேட் முதலாளிகள் , குடும்ப அரசியல்வாதிகள் மற்றும் உயர் ஜாதியினர் ஆகியோரின் கரங்களில் சிக்கித் தவிக்கும் நிலையையும் , சுதந்திரத்தின் பலனை பெரும்பான்மையான மக்கள் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாபகரமான நிலையையும் மற்றும் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலையீடு அதிகமாக இருக்கும் அபாயகரமான நிலையையும் நம்மால் காண முடிகிறது.

வறுமை ஓழியட்டும்! மதவெறி சாயட்டும்!!பொருளாதாரம் ஏற்றம் பெறட்டும்!!! SDPI

PRESS RELESE
SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:—
“நம் நாடு 67 வது சுதந்திர தினத்தில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் SDPI கட்சியின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, August 13, 2013

‘குஜராத் இனக் கலவரத்திற்காக பா.ஜ.க அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்களா?’ - காஷ்மீர் முதல்வர் கேள்வி!

கிஸ்த்வார் பகுதி கலவரத்திற்காக ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சர் சஜ்ஜத் அகமத் ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் இனக் கலவரத்திற்கு அம்மாநில அமைச்சர்களை ராஜினாமா செய்யுமாறு பா.ஜனதா தலைவர்கள் ஏன் கேட்கவில்லை?’ என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலப்பாளையத்தில் காவல்துறையின் அராஜகப்போக்கிற்கு எதிராக அணிதிரண்ட மக்கள் வெள்ளம்!


நெல்லை : முஸ்லிம்களை குறி வைக்கும் காவல்துறையின் அராஜகப்போக்கைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக  நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தையில் வைத்து மாபெரும் கண்டனப் போராட்டம்  இன்று (12.8.2013) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் அஹமது நவவி தலைமை தாங்கினார்.

Sunday, August 11, 2013

‘துர்கா சக்தி நாக்பாலால் இடிக்கபட்ட மஸ்ஜிதை கட்டிய பிறகே ஈத் பெருநாளை கொண்டாடுவோம்’ - கிராம மக்கள்!

கடந்த ஒன்பது ஆண்டுகளாக சேமித்த பணத்தைக் கொண்டு கட்டிய மஸ்ஜிதை சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் இடித்துத் தள்ளியுள்ளார். புதிய மஸ்ஜிதை கட்டாதவரை நாங்கள் ஈத் பெருநாளை கொண்டாடமாட்டோம்’
என உத்தரபிரதேசம்-ஹரியானா மாநில எல்லையில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள காதல்பூர் கிராமத்தைச் சார்ந்த முஹம்மது இஸ்மாயீல் கூறுகிறார்.

இலங்கை மஸ்ஜித் மீது தாக்குதல்: 7 பேர் காயம்! ஊரடங்கு உத்தரவு!

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயப்பட்டவர்களில் போலீசாரும் அடங்குவர்.

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு - மம்தா !

 "2014-2015 கல்வியாண்டிலிருந்து உயர் கல்வியில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை அறிமுகப்படும்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மம்தா இதனை தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மையினர் விற்பனையகங்களை நிறுவுதல், சிறுதொழில்களைத் தொடங்குதல் போன்ற இதர தொழில் வாய்ப்புகளையும் கிடைக்கச் செய்யப் படும் என்றும்,

Friday, August 9, 2013

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் ஃபித்ரா விநியோகம்!

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும், மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் பெருநாள் தினத்தை ஏழைகளும் கொண்டாடுவதற்கு வசதியாகவும் ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மத்தை  முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் ஆகிய அனைவரின் மீதும் இஸ்லாம் கட்டாய கடமையாக்கியுள்ளது.


Thursday, August 8, 2013

ஈகைத் திருநாளில் நீதி நிலைபெற பிரார்த்திப்போம் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி


நம்பிக்கையாளர்களுக்கு உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்த வந்த ரமலான் மீண்டும் ஒரு முறை நம்மை விட்டு பிரிகின்றது. ரமலானின் வெற்றி இறையச்சத்தில் தங்கி இருக்கிறது. உள்ளத்தையும், உணர்வையும் அல்லாஹ்வின் பயிற்சி பாசறையில் ஈடுபடுத்திய நமக்கு அல்லாஹ் தக்வா (இறையச்சம்) எனும் உன்னதமான பண்பைத் தந்தருள் புரிவானாக !

நோன்பில் பெற்ற படிப்பினையை ஏனைய பதினோரு மாதங்களிலும் தொடரும் மாந்தருக்கு ஈருலகிலும் வெற்றியுண்டு. படிப்பினையை பெருநாளுடன் முடித்துக் கொண்டவர்களுக்கு ஈத்- தோல்வியின் நாளாக முடிவடையும்.

வரலாற்றுச் சின்னங்களை தொழுகைக்காக திறந்து கொடுக்க சிறுபான்மை கமிஷன் கோரிக்கை!

புதுடெல்லி: பாதுகாப்பில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை தொழுகைக்காக திறந்து கொடுக்கவேண்டும் என்று தேசிய சிறுபான்மை கமிஷன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கமிஷனின் சிபாரிசை தொடர்ந்து டெல்லியில் உள்ள 31 வரலாற்று நினைவிடங்களைக் குறித்து ஆய்வு செய்ய மத்திய கலாச்சார அமைச்சகம் ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு (எ.எஸ்.எ) உத்தரவிட்டுள்ளது.

Monday, August 5, 2013

மேலப்பாளையத்தில் வெடிமருந்து பறிமுதல்! SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கள ஆய்வு!


நெல்லை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரணை கைதிகளாக மேலப்பாளையத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்களை காவல்துறை கைது செய்தது. இது தொடர்பாக கடந்த 2.7.2013 அன்று SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.   

இதுதொடர்பாக SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் M.நிஜாம் முகைதீன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியது: “1992 முதல் பல்வேறு பிரச்சனைகளையும், காவல்துறையின் மனித உரிமை மீறலையும் சந்தித்து அச்சத்துடன் மேலப்பாளையம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மேலப்பாளையத்தில் வெடிகுண்டு செய்ய பயன்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதனை வைத்திருந்ததாக கூறி ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இது பற்றி தினமும் பத்திரிக்கைகள் சமூகத்தில் பீதியை ஏற்படுத்தும் செய்திகளை பீதியூட்டும் விதத்தில் எழுதி வருகின்றன. மேற்கண்ட விஷயத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு மூலப் பொருட்களை, காவல்துறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி உண்மையை வெளியிடவில்லை. இதனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலப்பாளையம் முஸ்லிம்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

Sunday, August 4, 2013

மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் அப்பாவிகள்:NCHROவின் உண்மை கண்டறியும் குழு!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி அன்று வீட்டில் வெடி குண்டு வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சுமத்தி மேலும் சேலம் பி.ஜே.பி பொது செயலாளர் ஆடி ட்டர் ரமேஷ் வழக்கிலும் பொய்யாக குற்றம் சுமத்தி அப்பாவி முஸ்லிம்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளது தமிழக காவல் துறை . இது குறித்து NCHRO வின் உண்மை கண்டறியும் குழு நேரில் சென்று சம்பவம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்து,பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் சென்று விசாரித்தனர்.

தொடரும் படுகொலைகள் யார் குற்றவாளி? பாப்புலர் ஃப்ரண்ட் நோட்டிஸ் பிரச்சாரம்

பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது. எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க முற்பட்டு வருகிறது.

இதற்கு முன் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன், ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.

எஸ்.டி.பி.ஐ தலைமை அலுவலகம் மீது குண்டு வீசி தாக்குதல்!

கேரளா: எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள தலைமை அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள தலைமை அலுவலகம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நான்கு பேர் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்து கல் வீசி தாக்குதல் நடத்தினர். கண்ணாடிகள் உடைந்த சப்தம் கேட்டு அப்பகுதியில் மக்கள் கூடியதும் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தலைமறைவாகினர்.

Dua For Gaza