கீழக்கரை அருகே வண்ணாங்குண்டு ஊராட்சியில் ஊரின் நடுவில் மூன் மழையர் பள்ளி எதிரே அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.இதை அகற்ற க்கோரி அப்பகுதி மக்களுடன் இணைந்து எஸ். டி .பி .ஐ பல்வேறு போரட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதனால் இன்று எஸ் டி பி ஐ சார்பில் டாஸ்மாக் கடையை மூடி பூட்டு போடும் போராட்ட அறிவிக்கப்பட்டிருந்தது.இதனால் அங்கு கீழக்கரை டிஎஸ்பி சோமசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கனேசன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் போராட்டத்திற்கு வண்ணாங்குண்டு எஸ்டிபிஐ நகர் தலைவர் அஸ்கர் அலி தலைமை வகித்தார்.மாவட்ட தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம்,தொகுதி செயலாளர் சேகு முகம்மது,மாவட்ட செயலாளர் செய்யத் இப்ராகிம்,நகர் செயலாளர் தாஹா,மாவட்ட துனை தலைவர்கள் பைரோஸ்கான்,சோமு மாவட்ட அமைப்பாளர் கார்மேகம் முன்னிலை வகித்தனர்.
எஸ் டி பி ஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்
மதுக்கடைக்கு பூட்டு போடுவதற்கு ஊர்வலமாக வந்த போது போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தி டிஎஸ்பி சோமசேகர் பேச்சு வார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் இரண்டு மாதத்திற்குள் கடையை அங்கிருந்து அகற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
ஏராளமான எஸ்டிபிஐயை சேர்ந்தவர்கள, நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-keelakarai time's.
0 கருத்துரைகள்:
Post a Comment