அசம் கான் வழமைக்கு மாறாக பாஸ்டன் விமான நிலையத்தில் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தன் அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உரையை புறக்கணித்தார்.
மேலும் இந்திய தூதரகம் அகிலேஷ் யாதவை கெளரவப்படுத்தும் முகமாய் விருந்துக்கு ஏற்பாடு செய்தது. இவ்விருந்தில் அமெரிக்கவில் உள்ள முக்கிய இந்திய வம்சாவளியினர், சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாய் இருந்தது. இவ்விருந்தையும் அகிலேஷ் யாதவ் புறக்கணித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment