Friday, May 31, 2013

புதுவலசை பள்ளி தேர்வு முடிவுகள்: 450க்கு மேல் 9, 400க்கு மேல் 32 மாணவ மாணவிகள் எடுத்து சாதனை!


தமிழகம் மற்றும் புதுசேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் 89% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.500 க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 9 பேர் முதலிடமும் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 52 பேர் இரண்டாம் இடமும்  500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 136 பேர் மூன்றாம்  இடமும் பெற்றுள்ளனர்.
கணிதப்பாடத்தில் 29,905 பேர் 100 /100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியலில் 38,154 பேர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
97.29 % சதவிகிதம் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டங்களில் முதலிடம் பிடித்துள்ளது .
நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளியில் 99 பேர் இந்த கலிவியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்தனர். இதில் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான்கு பேர் தோல்வி அடைந்துள்ளனர். மாணவிகள் மூன்று பேரும், மாணவர் ஒருவரும் தோல்வி அடைந்தது வருத்ததிற்குறியது.
இதனை சமன் செய்யும் வகையில் நமதூர் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தவருடம் 95% தேர்ச்சி பெற்றுள்ளது. முதல் மூன்று இடத்தை மாணவிகளே பிடித்துள்ளனர்.

யுனெஸ்கோவின் இளம் விஞ்ஞானி விருது பெரும் இந்தியாவின் பிலால் ஹபீப்!

உலகில் கல்வி, கலச்சாரம், அறிவியல்களின் மேம்பாட்டிற்காக செயல்படும் ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது. இங்கு 27-30 தேதி வரை யுனெஸ்கோ அமைப்பின் நிகழ்ச்சிகள் நடந்தன.  

அப்போது யுனெஸ்கோ அமைப்பின் இளம் விஞ்ஞானிகளுக்கான 6 விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியாவை சேர்ந்த பிலால் ஹபீப் என்ற உத்தரகாண்ட் இளைஞரும் ஒருவர். 

கறுப்புச்சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஓயாது! கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சி!

நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்குஎதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது. 

Thursday, May 30, 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு: பொய் தகவலை ஐ.பி இட்டுக்கட்டியதா? சி.பி.ஐ விசாரணை!

2004-ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் மோடியின் போலீஸாரால் அநியாயமாக போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

மோடியை கொலைச் செய்ய லஷ்கர்-இ-தய்யிபா இயக்கம் திட்டமிட்டுள்ளதாக இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) தகவல் தெரிவித்ததன் அடிப்படையிலே இந்த போலி என்கவுண்டர் நடத்தப்பட்டதாக மோடியின் போலீஸ் கூறியிருந்தது.

Wednesday, May 29, 2013

’சென்சார் போர்ட்டில் அரசியல் பின்னணியா?’ – ஹைகோர்ட் கேள்வி

”கடுமையான வன்முறைக் காட்சிகள், கொடூர காட்சிகள், குற்றவாளிகளை புகழ்வது ஆகியவற்றை சினிமாவில் பார்க்கும்போது, இதற்கு தணிக்கைத்துறை எப்படி சான்றிதழ் வழங்கியது என்று தெரியவில்லை. தணிக்கைத் துறைக்கு தனி பொறுப்பு உள்ளது. தணிக்கை குழுவில் அரசியல் பின்னணி உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது” என்று சென்சார் போர்ட்டுக்கு ஹைகோர்ட் அறிவுரை கூறியுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனு ஒன்றை விசாரித்தபோது  போது   நீதிபதி என்.கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்தார் அந்த உத்தரவில்,”பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தலைப்பே படத்தின் மதிப்பை அறிவிக்கும். நல்ல கதாபாத்திரங்களில் கதாநாயகர்கள் நடித்தனர். இதனால் அவர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர்.

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம்!

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம்!லாஷியோ: பர்மாவின் வடகிழக்கு பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோ. இங்கு, புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம் ஒருவர் எரித்து கொன்றுவிட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

மியான்மர்:முஸ்லிம்கள் 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற அரசின் கொள்கைக்கு சூகி கண்டனம்!

யங்கூன்: மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்கட்சி தலைவர் ஆங்சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முதன் முதலாக சூகி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலித் முஜாகித் படுகொலையை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI கண்டன ஆர்ப்பாட்டம்!!

20130528_173334
உத்திர பிரதேசத்தில் கடந்த 2007 இல் ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மௌலான காலித் முஜாகித். அவரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தொடந்து வந்த நிலையில் கடந்த 18 ம் தேதி சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையை கண்டித்தும் தொடரும் இது போன்ற முஸ்லிம் விரோத போக்குகளையும் கண்டித்தும் SDPI கட்சி தேசிய அளவில் கண்டன போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இன்று 28.05.2013 மாலை 4:30 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜ்நாத் சிங்கிற்கு ஜனநாயகத்தை பற்றி பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது? மாவோயிஸ்டுகள் கேள்வி!

பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு ஜனநாயகத்தை பற்றி பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என்று சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து கடிதம் எழுதியுள்ள மாவோயிஸ்டுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
‘எங்களின் தாக்குதலை ஜனநாயக கோட்பாடுகள் மீதான தாக்குதல் என கூறுபவர்கள், பீஜப்பூரில் நடந்த என்கவுன்டரில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் துணை ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு ஜனநாயக கோட்பாடுகள் பற்றிய சிந்தனை ஏன் வரவில்லை?’ என்றும் மாவோயிஸ்ட்கள் ஊடகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Tuesday, May 28, 2013

அப்துல் நாஸர் மஃதனிக்கு நீதி கோரி எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் கர்நாடகா முதல்வருடன் சந்திப்பு!

பெங்களூர்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு நீதியும், மனிதநேய முன்னுரிமையும் வழங்க கோரி எஸ்.டி.பி.ஐயின் கேரள மாநில தலைவர்கள் கர்நாடகா மாநில முதல்வர் சித்தாராமைய்யாவை சந்தித்தனர்.

கடுமையான நோய்களால் அவதியுறும் அப்துல் நாஸர் மஃதனிக்கு உயர் தொடர் சிகிட்சை அளிக்கவும், வழக்கு நடவடிக்கைகளை வெளிப்படையாக நடத்தவும், ஜாமீன் வழங்கவும் அரசு அவசரமாக தலையிடவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் முதல்வர் சித்தாராமைய்யா மற்றும் உள்துறை அமைச்சர் கே.கே.ஜார்ஜ் ஆகியோருக்கு அளித்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மும்பை ரெயில் குண்டுவெடிப்பு: ஒரே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு தரப்பினர்!

மும்பை: ஒரே வழக்கில் இரு தரப்பு கைதிகள் சிறையில் பல வருடங்களாக அடைக்கப்பட்டுள்ளனர். ஒரே சம்பவம் தொடர்பாக இருவேறு நீதிமன்றங்களில் பரஸ்பரம் முரண்பாடான குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2006-மும்பை ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில்தான் அறிவுக்கும், நீதிக்கும் பொருந்தாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்: நீதித்துறை மீதான தாக்குதல்- பாப்புலர் ப்ரண்ட் கண்டனம்!

கடந்த செவ்வாய்கிழமை பைஸாபாத் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் முகம்மது சலீம் மீது சக வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இத்தாக்குதல் நமது நீதித்துறை மீதான தாக்குதல் என்றும் தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கைள் மீதான தாக்குதல் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துள்ளது.

காலித் முஜாஹிதின் மரணம்:பாரபட்சமற்ற விசாரணை-முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் உறுதி!

package of Rs 45000 crore for Uttar Pradesh
லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் தீவிரவாத வழக்கில் சிக்கவைத்து போலீஸ் காவலில் மர்மமான முறையில் காலித் முஜாஹித் மரணமடைந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று உ.பி மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளார்ந்த நேர்மையுடனும் மிக கவனத்துடனும் செயல்படுவோம் என்று தன்னை சந்தித்த முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.காலித் முஜாஹிதின் உறவினர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி! மலேசிய இந்திய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்த விவகாரங்களின் அமைச்சக பதவி, ஹிண்ட்ராஃப் என்ற அமைப்பின் தலைவர் வேதமூர்த்திக்கு அளிக்கப்பட்டதற்கு மலேசிய இந்திய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நஜீப் ரஸ்ஸாக் தலைமையிலான அரசு மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இவ்வரசின் அமைச்சரவையில் ஹிண்ட்ராஃபின் வேதமூர்த்திக்கு இந்திய வம்சாவளி மக்களின் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்ற உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தல்!

பெங்களூரு மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் மூன்று மாநிலங்கள் தொடர்பு இருப்பதாலும், பல முரண்பாடான தகவல்கள் வெளியாவதாலும் இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்
என மனித உரிமைகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் (NCHRO), உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது.

Monday, May 27, 2013

எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுர மாவட்ட சமூக நீதி மாநாடு

முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீட்டையும், மாநிலத்தில் 7 சதவீத இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) மே 26 அன்று பல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் திடலில் சமூக நீதி மாநாட்டை நடத்தியது.
26.05.2013 காலை 10 மணியளவில் மாநாட்டுத் திடலில் மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி கொடியேற்றி வைத்தார். மாலை 3 மணியளவில் பல்லாவரம் கிரீன் மஸ்ஜித் அருகில் தொடங்கிய மாநாட்டின் எழுச்சி பேரணியை மாநில செயலாளர் வி.எம்.ரத்தினம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மியான்மரில் முஸ்லிம்கள் 2க்கு மேல் குழந்தை பெறக் கூடாது! மியான்மர் அரசின் உத்தரவு!

மியான்மரில் முஸ்லிம்கள் 2-க்கு மேல் குழந்தை பெறக்கூடாது என்று மியான்மர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், ராக்கேன் புத்தர்களுக்கும் இடையே மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்களாம் மியான்மர் அதிகாரிகள்.

Sunday, May 26, 2013

மாலேகான்: மஹராஷ்டிரா ஏ.டி.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு!

2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரணைச் செய்த உயர் ஏ.டி.எஸ் அதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட உள்ளது.
2006-மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் மீது இவர்கள் பொய்வழக்கை புனைந்ததை மத்திய அரசு தீவிர விவகாரமாக எடுத்துள்ளது. ஏ.டி.எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுச் செய்ய மஹராஷ்ட்ரா அரசுக்கு உத்தரவிடப்படும் என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, May 25, 2013

முஸ்லிம்கள் நிரபராதிகள் என்று தெரிந்தே வழக்கில் சிக்கவைத்து சித்திரவதைச் செய்யும் போலீஸ் - ஆஷிஷ் கேதானின் புலனாய்வு அறிக்கை!


தீவிரவாத வழக்குகளை குறித்து விசாரணை நடத்தும் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்று தெரிந்தே வழக்குகளில் சிக்கவைத்து, மிருகத்தனமாக சித்திரவதைச் செய்து
சிறையில் அடைக்கின்றனர் என்று பிரபல புலனாய்வு செய்தியாளரும், ஊடகவியலாளருமான ஆஷிஷ் கேதானின் புதிய புலனாய்வு அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் புத்தர்களால் பிற மதத்தினருக்கு பாதிப்பு! - அமெரிக்க அரசின் அறிக்கை!


இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது புத்தர்களால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக சில புத்தர்கள் சகிப்புத் தன்மையற்று செயற்படுவதாகவும்
அமெரிக்க அரசுத்துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கை கூறியுள்ளது.

சவூதியில் உலகின் மிக சொகுசான ரயில் நிலையம்!

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உலகிலேயே மிகவும் சொகுசான தொடர்வண்டி நிலையம் அமைக்கப்படவுள்ளது. 

பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்தத் தொடர்வண்டி நிலையம் சவூதி அரேபியாவின் செல்வசெழிப்பை எடுத்துக்காட்டும் வகையில் நான்கே ஆண்டுகளில்  அமைக்க சவூதி மன்னர் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.


தற்சமயம் சவூதி அரேபியாவில் தொடர்வண்டி போக்குவரத்து அதிகமில்லை. தலைநகர் ரியாத்துக்கும் கிழக்கு மாகாண நகரங்களுக்குமிடையே ஓரிரு தொடர்வண்டிகள் மட்டும் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உலகின் பல பெரும் நகரங்களிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்க, மெட்ரோ வசதிக்கு ரியாத்வாசிகளும் ஏங்கிக்கொண்டிருந்தனர்.

Friday, May 24, 2013

மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் இப்போதும் விற்பனை!


பல ஆண்டுகளாக பல்வேறு மீடியாக்கள் சொல்லி வந்த தகவல்தான். ஆனாலும் உலகின் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை, இந்தியாவில் மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ற உண்மையை சமீபத்தில் பாராளுமன்றக் குழு ஒன்று வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் பெரியவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் இத்தகைய மருந்துகள் இங்கு அளிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

சவுதியில் விசா இல்லாமல் 56,700 இந்தியர்கள்:குர்ஷித் சவுதி பயணம்!


சவுதியில் அனுமதியின்றி தங்கியுள்ள இந்தியர்கள் ஜுலை 6-ம் தேதிக்குள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவுதி அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று சவுதி அரேபியா செல்கிறார்.
சவுதியில் இருந்து இன்னும் 1 1/2 மாதத்தில் 56,700 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்புகின்றனர். இவர்களிடம் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட், விசா இல்லாததால் இந்தியா திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என இவர்கள் அனைவரும் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு அளித்துள்ளனர்.

குஜராத் அமைச்சருக்கு எதிராக ரூ. 400 கோடி ஊழல்: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

அஹ்மதாபாத்: மீன்பிடிக்க அனுமதி வழங்கியதில் சட்ட விரோதமாக செயல்பட்டு அரசுக்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டில், மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புருஷோத்தம் சோலங்கிமீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


குஜராத் மாநில மோடி அரசில் மீன் வளத்துறை அமைச்சராக இருப்பவர் புருஷோத்தம் சோலங்கி. மோடியின் கடந்த அமைச்சரவையிலும் இவர் இதே துறையின் அமைச்சராக இருந்தார்.
 அப்போது, 2009 ஆம் ஆண்டு குஜராத்திலுள்ள 58 நீர் தேக்கங்களில் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தத்தை, அதிகாரப்பூர்வ அரசு ஆணையோ பொது டெண்டர் அழைப்போ இன்றி சட்ட விரோதமாக 40 கோடி ரூபாய்க்குத் தனக்கு விருப்பமானவர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். இதில் அரசுக்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

UAPA சட்டத்தை தவறாக பயன்படுத்தும் காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட்


மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோழிக்கோட்டில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு UAPA போன்ற கருப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடிவரும் முஸ்லிம் சிறை கைதிகளின் வழக்குகளை துரிதமாக முடிக்கும் வகையில் விரைவு நீதி மன்றங்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ளது.

காலித் முஜாஹித் கஸ்டடி மரணம்:போலீஸ் அதிகாரிகளை விசாரணைச் செய்ய எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!


புதுடெல்லி: தீவிரவாத வழக்கில் குற்றமற்றவர் என விடுவிக்கப்படவிருந்த காலித் முஜாஹித், போலீஸ் காவலில் மரணித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளை கைதுச் செய்து விசாரணை நடத்தவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது.

காலிதின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தியுள்ளது. காலித் முஜாஹித் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

Thursday, May 23, 2013

காலித் முஜாஹிதின் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்! - பார் அசோசியேசனில் இருந்து நீக்கம்!


போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணித்த காலித் முஜாஹிதின் வழக்கறிஞர்கள் மீது பாசிச சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஃபைஸாபாத் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழக்கறிஞர்களான ஜமால் காலித், ஜூனியரான முஹம்மது ஸலீம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்ட முஹம்மது ஸலீம் மாவட்ட மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வருகிறார். இரண்டு வழக்கறிஞர்கள் மீது போலிஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஈரான் அதிபர் தேர்தல்:முக்கிய தலைவர்களின் மனுக்கள் தள்ளுபடி!


ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் அக்பர் ரஃப்ஸஞ்சானி, அதிபர் அஹ்மத் நஜாதிற்கு நெருக்கமான ரஹீம் மஸாஈ ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஈரானின் தேர்தலை நடத்தும்
கார்டியன் கவுன்சில் தள்ளுபடிச் செய்துள்ளது.மனுக்களை தள்ளுபடிச் செய்ய என்ன காரணம்? என்பதுக் குறித்து கார்டியன் கவுன்சில் விளக்கம் அளிக்கவில்லை.

Wednesday, May 22, 2013

துபாயில் பணிபுரிபவர்கள் குடும்பத்தை அங்கு அழைத்துக் கொள்ள புதிய நடைமுறை!


துபாயில் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் தமது குடும்பத்தை துபாய்க்கு அழைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும்போது, இனி வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டுகள் தேவை என்ற நடைமுறை வரவுள்ளது.

ஜனநாயக வழியில் முன்னேறும் யெமன்!


எகிப்தும், துனீசியாவும் புரட்சிக்கு பிறகு உள்நாட்டு குழப்பங்களை சந்திக்கும் வேளையில் குழப்பங்களுக்கும், மோதல்களுக்கும் பிரசித்திப் பெற்ற யெமன் மெதுவாக ஜனநாயக பாதையில் முன்னேறி வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெற யெமன் அரசு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குகிறது. மார்ச் 18-ஆம் தேதி 565 உறுப்பினர்களை கொண்ட அரசியல் நிர்மாண அவையின் செயல்பாடு துவங்கும். தெற்கு-வடக்கு யெமன் பிரச்சனை உள்பட ஒன்பது பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த அவை முயற்சிக்கும்.

இலங்கையில் மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் இடமில்லை!-ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்!


கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம்சாட்டியுள்ளது.

தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்றவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அது சாடியுள்ளது.

காலித் முஜாஹித் மரணம்: விசாரணை நடத்தக் கோரி உ.பி மாநில சட்டப்பேரவையை நோக்கி எஸ்.டி.பி.ஐ பேரணி!லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் 2008 டிசம்பரில் எஸ்.டி.எஃப் படையினரால் கைதுச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹிதின் மர்மமான கஸ்டடி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்தியது.

பேரணியை சட்டப்பேரவை கட்டிடத்தின் 100 மீட்டருக்கு முன்பாக போலீஸ் தடுத்து நிறுத்தியது. ‘முந்தைய மாயாவதி அரசால் நியமிக்கப்பட்ட நிமேஷ் கமிஷன், காலித் முஜாஹிதும், அவருடன் கைதுச் செய்யப்பட்ட டாக்டர்.தாரிக் காஸ்மியும் நிரபராதிகளன்று கண்டறிந்த பிறகும் தற்போதைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று எஸ்.டி.பி.ஐ கூறுகிறது.

Tuesday, May 21, 2013

கீழக்கரையில் SDPI சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்த்திப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று (20.05.2013) SDPI சார்பாக ஜமாத்தார்கள், உலமாக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட ச‌மூக‌ ந‌ல‌ன் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி கீழ‌க்க‌ரை ஹுசைனியா ம‌ஹாலில் ந‌டைபெற்ற‌து.

 இந்நிகழ்ச்சிக்கு SDPI மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி தலைமை வகித்தார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும்  சிறுபான்மையின மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டியதன் அவசியத்தையும், தேசிய அளவில் SDPI-யின் செயல்பாடுகளையும் SDPI நிர்வாகிகள் அழகியமுறையில் எடுத்துரைத்தனர். மேலும் சமூக முன்னேற்றத்திற்கு தேவையான பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு சகோதரர்கள் முன் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தி.மு.க நகர் செயலாளர் சகோ.பஷீர், SDPI மாநில பொது செயலாளர் B.அப்துல் ஹமீது மற்றும் SDPI இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், கீழக்கரை ஜமாத்தார்கள், கீழக்கரை வாழ் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சவூதி வாழ் இந்தியருக்கு இந்தியத் தூதர் செய்தி அறிக்கை!


nitaqatரியாத்: சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர் தம் சட்ட மீறல்களைச் சரி செய்து சட்டத்திற்குட்பட்ட வகையில் திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளித்துள்ள சவூதி அரசாங்கத்தின் பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ரியாத்திலுள்ள இந்தியத்தூதர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்காலிக கடவுச்சீட்டுகளை ப் பெறவும், தங்களின் பணி சார்ந்த பிற விவகாரங்களை தீர்த்துக்கொள்ளவும்,  இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தினமும் தூதரகத்தை அணுகி வருகின்றனர், அவர்களுக்கு உதவும் நோக்கில் சவூதி அரேபியாவில் பணிபுரியும் நம்மில் யாரும் தன்னார்வலர்களாக தூதரகப்பணியை எடுத்துச் செய்யலாம் என்றும் இந்தியத்தூதர் ஹமீதுராவ் அறிவித்துள்ளார் .

சிறுவன் அல்-துர்ராவின் கொடிய மரணம்:ராணுவத்திற்கு எதிராக ஆதாரம் இல்லை-இஸ்ரேல்


மிகவும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உலகம் முழுவதும் ஏற்படுத்திய ஃபலஸ்தீன சிறுவன் அல் துர்ராவின் கொலைச் சம்பவத்தில், தமது ராணுவத்திற்கு பங்கில்லை என்று இஸ்ரேல் கூறுகிறது.
பிரெஞ்சு தொலைக்காட்சி அலைவரிசையான பிரான்சு-2 வெளியிட்ட தகவல் அடிப்படையற்றது என்று இஸ்ரேல் நியமித்த விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday, May 20, 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி!


அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி - கு. காந்திராஜா!மிழக அரசு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமுல்படுத்த முடிவு செய்திருக்கிறது; இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு விசயத்தை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டும் அளிக்கப்படப் போவதில்லை; தமிழ்வழிக் கல்வி, ஆங்கில வழிக் கல்வி இரண்டுமே அளிக்கப்படவிருக்கின்றன. தற்போது வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பணம் கட்டி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்து வருகின்றனர். ஏழைகளின் பிள்ளைகள் மட்டும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று வருகின்றனர். இனி அவர்களும் விரும்பினால், இலவசமாக ஆங்கில வழிக் கல்வி பயில முடியும். தமிழக அரசின் இந்த முடிவு ஒரு பாராட்டுக்குரிய விசயம்.

மாயா கோட்னானிக்கு மரணத்தண்டனை வழங்க கோரி எஸ்.ஐ.டி உச்சநீதிமன்றத்தை அணுகுகிறது!

mayakodnani (1)
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது நரோடா பாட்டியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூர கூட்டுப்படுகொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனையை எதிர்த்து மரணத்தண்டனை வழங்க கோரி மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியை வாபஸ் பெற குஜராத் அரசு முடிவுச் செய்திருப்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதல்களை ஆராயும். நீதிபதிகளான பி.சதாசிவம், எம்.ஒய்.இக்பால், ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இது தொடர்பான மனு அளிக்கப்படும் என்று எஸ்.ஐ.டியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்கக்கோரி மேல்முறையீடுச் செய்ய மோடி அரசு முன்னர் தீர்மானித்திருந்தது.

Sunday, May 19, 2013

யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்கள் ஜனநாயகத்தை கேலிச் செய்கின்றன!-பிரசாந்த் பூஷண்!

Prashant Bhushan

கோழிக்கோடு:யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும், உச்சநீதிமன்றத்தில்மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் கூறினார்.
கோழிக்கோட்டில் ஜமாஅத்தே இஸ்லாமியின் இளைஞர் அமைப்பான சோலிடாரிட்டி நடத்திய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக வந்த பிரசாந்த் பூஷண் தேஜஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறியது: செல்வ வளம் மிக்க தனியார் சக்திகளுக்கு மத்திய-மாநில அரசுகள் இலவசமாக காடும், நிலமும் பெருமளவில் வழங்குகின்றன.சுரங்கத்தொழிலை நடத்தவும், இயற்கை வளங்களை ஏற்றுமதிச் செய்யவுமே இவ்வாறு வழங்கப்படுகிறது.பாரம்பரிய வாழ்வாதாரங்களை இழக்கும் பழங்குடியினரும், தலித்துகளும், சாதாரண மக்களும் இதற்கு எதிராக போராடினால் அவர்கள் மீது மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்படுகிறது.

Saturday, May 18, 2013

கேரளா நாராத் சம்பவம்: போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது! மனித உரிமை அமைப்பு அறிக்கை!


கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நாராத் பகுதியில் வெடிக்குண்டுகளுடன் ஆயுதப் பயிற்சில் செய்ததாக கூறி 21 பேரை கைது செய்த சம்பவம் போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது என்று உண்மைக் கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் நடத்திய தீவிர விசாரணையில் போலீசாரின் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோரிக்கை!


press meet_708_270
 பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பு பா.ஜ.க வின் அரசியல் லாபத்திற்காக நடத்தப்பட்ட சதி செயல் என்றும் இந்த அரசியல் சதிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூர் குண்டு வெடிப்பு கைது! இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வுகோவை: தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று காலை சென்னையில் இருந்து கோவை வந்தனர். அவர்களை கோவையில் உள்ள இஸ்லாமிய இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

பிறகு காலை சுமார் 11 மணி அளவில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞகர்களின் வீடுகளுக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை அறிய இயக்க தலைவர்கள் சென்றனர். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து முழுமையாக விவரங்களை அறிந்த பிறகு கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பிறகு கோவை பத்திரிக்கையாளர் சங்கத்தின் (PRESS CLUB) அலுவலகத்தில் வைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டமைப்பின் தலைவர் மவுலானா அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி மற்றும் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அனீபா, தமுமுக மாநில பொதுச்செயலாளர் காஞ்சி ப. அப்துல் சமது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் A.S. இஸ்மாயில், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, வேல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜைனுலாபுதீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயத்துல்லா, மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் மாநில தலைவர் அ.ச. உம்மர் பாரூக் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கடந்த ஏப்ரல் 17 இல் பெங்களூர் நகரில் மல்லேஷ்வரம் பா.ஜ.க. அலுவலகம் அருகே வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த கிச்சன் புகாரி உட்பட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Thursday, May 16, 2013

விசாரணை கைதிகளின் விடுதலைக்காக தேசிய அளவிலான பிரச்சாரம் - SDPI


கொல்கத்தா: சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(யு.ஏ.பி.ஏ) உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களை பயன்படுத்தி தீவிரவாத வழக்குகளில் சிக்கவைத்து சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம்கள், பழங்குடியினர், மனித உரிமை ஆர்வலர்களை விடுதலைச் செய்யக் கோரி தேசிய அளவில் வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ள எஸ்.டி.பி.ஐ தீர்மானித்துள்ளது.

நக்பா தினத்தை கடைப் பிடித்த ஃபலஸ்தீன் மக்கள்!

nakba2013
ரமல்லா:பிறந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதன் துயர நிகழ்வுகளை நினைவுக் கூறும் விதமாக ஃபலஸ்தீன் மக்கள் நக்பா தினத்தின் 65-வது ஆண்டு நினைவுதினத்தை கடைப்பிடித்தனர்.
ராமல்லா, நப்லூஸ், துல்கரம், கல்கில்யா, பெத்லாஹ், ஜெரிகோ ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மதியம் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 65-வது நினைவு தினத்தை அடையாளப்படுத்தும் விதமாக 65 சைரன்கள் முழங்க பேரணி துவங்கியது. பேண்ட் வாத்தியத்துடன் கூடிய பேரணி மனரா சதுக்கத்தில் இருந்து துவங்கியதாக அல்ஜஸீரா கூறுகிறது.

இந்திய முஸ்லிம்களின் வரலாறு சம்பந்தமான நூலகம் அமைக்க வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட்

மாவீரன் ஹைதர் அலி மற்றும் தீரன் திப்பு சுல்தானிற்கு மணிமண்டபம் தமிழக முதல்வரின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வாசித்த அறிக்கையில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை அறிவிப்பு செய்தார்.

Wednesday, May 15, 2013

காவல் துறையில் முஸ்லிம்கள் - மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்திய ஆந்திர அரசு!


ஆந்திரப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளரான மின்னி மேத்யூ அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் வழங்கியிருக்கும் உத்தரவில் பிரதமரின் சிறுபான்மையினர் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த 15 அம்சத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும், சிறுபான்மை நலத் திட்டங்களுக்காக அரசின் அனைத்து துறைகளும் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், காவல்துறை வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடங்களை உறுதிப்படுத்துமாறும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ள மின்னி மேத்யூ, முஸ்லிம்கள் காவல்துறைக்கான வேலை வாய்ப்புகளுக்கு முன்வருவதில்லை என்ற போலீஸ் அதிகாரிகளின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரி வித்துள்ளார்.

ஃபலஸ்தீன் ஐக்கியம்: முர்ஸி - அப்பாஸ் இன்று பேச்சுவார்த்தை!


கெய்ரோ: ஃபலஸ்தீனில் பிரபல அமைப்புகளான ஹமாஸ் மற்றும் ஃபத்ஹ் ஆகியவற்றிற்கு இடையே ஐக்கிய உடன்படிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியும், ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இரு பிரிவினரும் ஏற்றுக்கொண்ட இடைக்கால அரசை உருவாக்குவது பேச்சுவார்த்தையின் முக்கிய
அஜண்டா என்று ஃபத்ஹ் குழுவின் தலைவர் அஸ்ஸாம் அல் அஹ்மத் கூறியுள்ளார்.

சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு : பிஜேபி தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு


சொராப்புதீன் போலி என்கவுண்டர் வழக்கு : பிஜேபி தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு
புது டெல்லி: குஜராத்தில் கொல்லப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் பிஜேபி மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப் சந்த் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.


கடந்த நவம்பர் 25, 2005 அன்று சொக்ராபுதீன் ஷேக் காவல்துறையுடன் நடந்த மோதலில் என்கவுண்டர் செய்யப்பட்டதாக குஜராத் காவல்துறை அறிவித்தது. அவரின் சாவில் மர்மம் இருப்பதாக சொக்ராபுதீன் ஷேக்கின் சகோதரர் புகார் அளித்ததைத் தொடர்ந்து சிபிஐ இவ்வழக்கை விசாரித்தது.

Monday, May 13, 2013

பிரமுகர் Vs. பயங்கரவாதி


கடந்த மாதம் 17 ஆம் தேதி பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து 16பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவிகள் என்பதால் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கு குண்டுவெடித்தாலும் அதைச்செய்தது முஸ்லிம்கள் என்ற நச்சுக்கருத்து மக்களின் பொதுபுத்தியில் விதைக்கப்பட்டுள்ளதால் குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியமே இன்றி கையில் கிட்டும் சில முஸ்லிம்களை ஊடகங்கள் முன்பாகக் காட்டிவிட்டால் போதும் என்ற அவலநிலை நாட்டில் நிலவுகிறது.

Sunday, May 12, 2013

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 நாட்கள் கழித்து உயிருடன் வந்த பெண் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!


வங்கதேச தலைநகர் டாக்கா அருகில் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 1080 பேர் பலியானதுடன் ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 17வது நாளாக நேற்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது, ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.

பெங்களூர் குண்டுவெடிப்பு! சிம்கார்டு ஆதாரத்தை மறைக்க முயற்சியா?

bangalore_blast2--621x414
பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம்  தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தொடர்பை மறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dua For Gaza