புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேருந்து நிலையம் எதிரே தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நாட்டின் 68-வது சுதந்திர தினம் நேற்று (15.08.2014) நாடு முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தியாகிகளை கெளரவப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய தலைமையகத்தில் பாப்புலர் ப்ரண்டின் தேசியத் தலைவர் சரீப் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.