Wednesday, March 5, 2014

இராமநாதபுரம் தடியடியை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!



இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (04-03-2014) மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி துவக்க தினத்தை கொண்டாடும் விதமாக இராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தது.
எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கிய பின்னர், பேரணி துவங்கவிருந்த நேரத்தில் மாலை 4 மணியளவில் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பேரணியை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். காவல்துறையின் இந்த சட்டவிரோதமான கொலைவெறித்தாக்குதலில் ஏராளமான முஸ்லிம்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத செயலைக் கண்டித்தும், முஸ்லிம் விரோதப்போக்கைக் கண்டித்தும் இன்று மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தியது.

காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலுக்கு காரணமாக இருந்த எஸ்.பி. மயில் வாகனன், ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை, டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார், கேணிக்கரை காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சாமுவேல், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் ஏ. காலித் முஹம்மது அவர்கள் தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் எஸ். இல்யாஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பல்வேறு ஜமாத்தார்கள் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.எம். ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் தேசியத் தலைவர் கே.எம். ஷெரிஃப், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.அப்துல் ஹமீது, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வெ. கனியமுதன், இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத்தலைவர் முஹம்மது முனீர், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் சங்க தலைவர் பீட்டர் ரமேஷ் குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் எம்.ஏ. இத்ரீஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza