பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மக்கள் தொடர்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 10, 2014 அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு துறை பொறுப்பாளர் ஷபியுல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் பி.கோயா அவர்கள் மக்கள் தொடர்பு என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். சமூக களத்தில் செயல்படும் இயக்கங்களுக்கு மக்கள் தொடர்பின் அவசியம் குறித்தும் குறிப்பாக ஊடகங்களுடன் கொள்ள வேண்டிய தொடர்புகள் குறித்தும் தன்னுடைய உரையில் எடுத்துரைத்தார். மக்கள் தொடர்பை எடுத்து செல்வதற்கான வழிமுறைகள் குறித்து தன்னுடைய உரையில் விவரித்தவர் மக்கள் தொடர்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருக்க வேண்டிய குணநலன்களையும் விவரித்தார்.
தொடர்ந்து செங்குட்டுவன் அவர்கள் மக்கள் தொடர்பு என்ற தலைப்பில் முக்கிய விஷயங்களை எடுத்துரைத்தார். சுவையான துணுக்கு செய்திகள் மற்றும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் மூலம் தன்னுடைய வகுப்பை நடத்தினார்.
விடியல் வெள்ளி மாத இதழ் துணை ஆசிரியர் ரியாஸ் அஹமது அவர்கள் பத்திரிக்கை நிர்வாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஜெ.முஹம்மது ரசின் அவர்கள் உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இவண்
ஊடக தொடர்பாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
0 கருத்துரைகள்:
Post a Comment