Wednesday, March 5, 2014

நீதி வேண்டி தொடர் போராட்டம்: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்!



கோவையில் 02 - 03 - 2014 அன்று மாலை 06.00 மணிக்கு இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் K. ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். கோவை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இப்பொதுக்கூட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர் மார்க்ஸ், SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் ரபீக் அஹமது, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராம கிருட்டிணன், பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் தெற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் நன்றியுரையாற்றினார். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza