Friday, June 20, 2014

பாஜக அரசு இரயில் கட்டணத்தை உயர்த்தியது மக்கள் விரோத செயல்! எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி கூறியதாவது,
புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுபட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சாதாரண மக்கள் பெரிதும் உபயோகிக்கும் இரயிலின் பயணக் கட்டணத்தை 14.2 சதவீதம் அளவிற்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மேலும் சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  
பதவியேற்று ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில்விவாதத்திற்கு அஞ்சி கொல்லைபுற வழியாக இவ்வாறு மக்களை வாட்டும் வகையில் இரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.பயணிகள் இரயில் கட்டணம் 14.2 சதவீதமும்சரக்கு கட்டண உயர்வு 6.5 சதவீத உயர்வு என்பதும் மக்களை பெரிதும் பாதிக்கக்கூடியது.
மக்கள் விரோத திட்டங்களை பெரிதும் அமல்படுத்திய கடந்த காங்கிரஸ் அரசு கூட இப்படி ஒரு கட்டண உயர்வை அறிவிக்கவில்லை. மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகஅத்தியாவசிய விலையுயர்வை கண்டித்து போராட்டங்களை நடத்தி ஆட்சி பொறுப்பேற்ற பின்பாஜக இவ்வாறு கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.பாஜக அரசு உடனடியாக இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லையேல் நாடு முழுவதும்  பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza