
பெண் போலிஸ் சர்மிளாபானு இறப்பில் மர்மம் உள்ளது. எனவே உண்மையை கண்டறிய SDPI வழக்கறிஞர் அணி மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, டாக்டர்கள் குழு வைத்து மறுபிரேத பரிசோதனை(Re-postmortem)செய்வதற்கும் அதை வீடியோகிராப் செய்வதற்கும் உத்தரவு பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோட்டையூர் என்ற கிராமத்தைசேர்ந்த சிக்கந்தர் என்ற ஏழையின் மகள் சர்மிளாபானு, சென்னையில் ஆம்டுரிசர்வில் காவலராக பணியாற்றியுள்ளார். கடந்த 14.4.14 அன்று பரங்கிமலை காவல்துரையினர் சர்மிளா குடும்பத்தார்களை தொடர்புகொண்டு சர்மிளா ஆக்ஸிடன்ட் ஆகிவிட்டதாக கூறி நாடகமாடி சென்னைக்கு அழைத்து, பின்னர் சர்மிளா காதல்தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி எழுதப்பட்ட பேப்பர்களில் கையெழுத்து கேட்டுள்ளனர். அதற்கு மறுத்த சர்மிளா குடும்பத்தார்களை மிரட்டி கையெழுத்து பெற்று 2 நாள் கழித்து பிரேதபரிசோதனை செய்து பிரேதத்தை கோட்டையூர்வரை கொண்டுவந்து கொடுத்துள்ளனர். சர்மிளாவின் உடலில் பல காயங்களை பார்த்த கோட்டையூர் கிராம மக்கள் பிரேதத்தை நத்தம் பஸ்ஸ்டாண்டில் கொண்டுவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் SDPI வழக்கறிஞரணி இவ்விசயத்தில் உண்மையை வெளிகொண்டுவர ஆக்கபூர்வ வேலைகளை செய்ய முடிவுசெய்து, ஏழை சிக்கந்தரை உடனடியாக மதுரை உயர்நீதிமன்றம் வரசொல்லி அன்றே அசரமனுவாக விசாரிக்க கோரி மதியம் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் அனுமதிவாங்கி மாலை4.15 மணிக்கு விசாரனைக்கு கொண்டுவந்தோம்.
அவசரமனுவை விசாரனைக்கு கொண்டுவரும் அனைத்து முயற்சியிலும் நம்முடன் மனிதநேய வழக்கறிஞர்.சி.எம்.ஆறுமுகம் அவர்கள் உளமாற பணியாற்றினார். மனு விசாரனைக்கு வந்த போது உயர்நீதிமன்ற வேங்கை பீட்டர் நம்முடன் கைகோர்த்தது. விசாரனையின் முடிவில் டீம் ஆஃப் டாக்டர்ஸ் சர்மிளாவின் பிரேதத்தை போஸ்ட்மார்டம் செய்ய வேண்டுமென்றும்,அதை வீடியோகிராப் செய்யவேண்டுமென்றும் நீதியரசர். சுப்பையா அவர்கள் உத்தரவிட்டார். போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டை வைத்து நாம் மீண்டும் இவ்வழக்கை தூசிதட்டி சி.பி.ஐ விசாரணைக்கு கோரவுள்ளோம்.
SDPI வழக்கறிஞரணி, சர்மிளாபானு குடும்பத்தார்க்கு நீதியை பெற்று தரும். அநீதி எந்த மூலைமுடிக்கில் நடந்தாலும், எந்த சமூகத்திற்கு நடந்தாலும் அங்கு SDPI கட்சியும் அதன் வழக்கறிஞரணியும் இறைவனின் துணையோடு உச்சகட்ட சட்டபோராட்டத்தை எடுத்துசென்று கொண்டே இருக்கும் அதை யாராலும் தடுத்துஅடக்க முடியாது என எஸ்.டி.பி.ஐ கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Source : popularfronttn.org

0 கருத்துரைகள்:
Post a Comment