Monday, January 27, 2014

சென்னை ராயபுரத்தில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! – எஸ்.டி.பி.ஐ.!

சென்னை ராயபுரத்தில் பத்திரிகையாளர்கள்  மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கூறியுள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை ராயபுரம் லாலாகுண்டா பகுதியில் இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அப்பகுதியில் அந்நிகழ்ச்சி அன்று கலவரம் செய்வோம் என்று அப்பகுதி வி.ஹெச்.பி பொறுப்பாளர் பகிரங்கமாகவே பேசிய காரணத்தால் அதை சுட்டிக்காட்டி அப்பகுதியில் சமூக அமைதியை கட்டிக்காக்கும் விதத்தில் அந்நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கக் கோரியும், பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வி.ஹெச்.பி
நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காவல்துறையிடம் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் ஜமாத் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. குடியரசு தினம் என்றும் பாராமல் அந்நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, அந்நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பள்ளிவாசல் அருகே மேளமடித்து சிலரை தாக்கியுள்ளனர். சம்பவத்தை கேள்விப்பட்டு திரண்ட அப்பகுதி மக்களுக்கும், கலவரம் செய்தவர்களுக்கும் மத்தியில் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பத்திரிக்கை நண்பர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. பத்திரிக்கையாளர்களுக்கும், முஸ்லிம் சமூகத்தினருக்கும் நல்ல உறவு உள்ளது. சில சமூக விரோதிகளால் இந்த நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் நடந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.                            இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-Thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza