இராமநாதபுரம் ஆற்றாங்கரை – கோப்பேரி மடம் சாலையை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ சார்பில் நடைபயணம் அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.ஆனால் கடைசி நேரத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அழகன்குளத்தில் தடையை மீறி நடைபயணம் அன்று (26.11.2013)துவங்கியது.
திருவாடனை தொகுதி தலைவர் ஜஹீருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்,மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ்கான்,எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹிஜ்ரி, தொகுதி செயலாளர் ரியாஸ் அஹமது,இணைச்செயலாளர் கஜினி முஹம்மது,நூருல் ஹக்,பனைக்குளம் கிளைத்தலைவர் பாசித் அலி,செயலாளர் இஜாஸ் அஹமது,அழகன் குளம் கிளைத்தலைவர் அப்துல் ஜமீல்,செயலாளர் உமர்,சித்தார்கோட்டை கிளைத்தலைவர் ரைசுதீன்,தேவிப்பட்டிணம் கிளைத்தலைவர் ஷாஜஹான் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டு தேவிப்பட்டிணம் கொண்டு செல்லப்பட்டு மஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.
இது குறித்து மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் கூறுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆற்றங்கரை முதல் கோப்பேரி மடம் வரையில் உள்ள சாலையானது தற்சமயம் மிகவும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் ஒரு வாகனம் வரும்போது, மற்றொரு வாகனம் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் குறுகலாகவும் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துடனே தினசரி பயனங்களை மேற்கொள்கின்றனர். மேலும் அப்பகுதியில் அமைந்து இருக்கும் 25க்கும் மேற்பட்ட ஊர்களை மாவட்ட தலை நகரமான இராமநாதபுரத்துடன் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இச்சாலையை பள்ளி,கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், வியாபரிகள், கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மாவட்டத்தின் முக்கிய பகுதியாக திகழும் இங்கு சாலை சிரமைப்பின்றி பல காலமாக் உள்ளது. இதனால் இக்கோரிக்கையினை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.மேலும் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.எனவே இப்போராட்டத்தை எஸ்டிபிஐ கட்சி நடத்துகிறது. தமிழக அரசும் இவ்விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
1 கருத்துரைகள்:
Thanks
Post a Comment