பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர்கள் J.ரசின், S.இல்யாஸ் மற்றும் பொருளாளர் A.அஹமது பைசல் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து கீழ்காணும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை :
ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு சிறுபான்மை சமூகத்திடம் கடிதம் எழுதிய அதே சமயத்தில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதவாத கட்சியான பா.ஜ.க விடமும் தி.மு.க. ஆதரவு கேட்டிருக்கின்றது. தேசத்தந்தை காந்தியை படுகொலை செய்தது, முஸ்லிம்களின் இறை இல்லமான பாபரி பள்ளியை இடித்து தேசத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தியது, குஜராத் இனப்படுகொலை, கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிப்பு, பாதிரிமார்கள் எரிப்பு, தற்போது நடைபெற்ற முஸஃபர் நகர் கலவரம் வரை இந்த தேசத்தில் நடைபெற்ற எண்ணற்ற இரத்தக் கறை படிந்த வரலாற்றுக்கு சொந்தமான கட்சிதான் பா.ஜ.க என்பதை யாரும் மறுக்க முடியாது.
தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய சேது சமுத்திர திட்டத்திற்கு மதவாதம் பூசி நிறைவேற்றவிடாமல் இன்றளவும் தடைபோடுபவர்கள் இவர்கள்தான். இப்படிப்பட்ட பா.ஜ.க விடம் ஏற்காடு இடைதேர்தலில் தி.மு.க ஆதரவு கேட்டிருப்பது சிறுபான்மை சமூகத்திற்கு மிகவும் வருத்தமளிக்கும் செயலாக பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகின்றது.
மதவாத கட்சியான பா.ஜ.க விடம் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியதால் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க விற்கு ஆதரவு இல்லை என செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேசத்திற்கு எதிரான அடிப்படையில் பாசிஸ சிந்தனையோடு செயல்படும் பா.ஜ.க வை தமிழக கட்சிகள் முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கின்றது.
இப்படிக்கு
A.ஹாலித் முஹம்மது,
மாநில பொது செயலாளர் ,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
0 கருத்துரைகள்:
Post a Comment