Friday, November 22, 2013

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (20.11.2013) திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை வகித்தார்.

மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் அனைவரையும் வரவேற்றார். 

மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர்கள் அமிர் ஹம்சா, ரத்தினம், அப்துல் சத்தார், அபுதாகிர், செய்யது அலி, மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மகளிர் அணி தலைவி ஃபாத்திமா கனி,எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாநில தலைவர் முஹம்மது ஃபாரூக், மற்றும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாநில பொது செயலாளர் முபாரக் நன்றியுரையாற்றினர்.

இச்செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நிலை குறித்தும், கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 10 வரை தமிழகம் முழுவதும் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சம்பந்தமாகவும், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஏற்காடு சட்டமன்ற இடைதேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1. ஏற்காடு இடைதேர்தல்

ஏற்காடு இடைதேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி யாருக்கும் ஆதரவில்லை என்ற முடிவை மாநில செயற்குழு ஏகமனதாக எடுத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை பரிசீலித்தும் இன்னும் பல்வேறு விஷயங்களையும் விவாதித்தும் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்ற ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி மாநாட்டில் பங்கேற்ற மத்திய அரசையும், இப்பிரச்சனையில் இரட்டை வேடம் போட்ட பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தமிழக தலைவர்களையும் இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

3. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோமாரி நோயினால் கால்நடைகள் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை அடைந்துள்ளனர். இந்நோய் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு விரைவாக செயல்பட்டு இந்நோயை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza