புதுடெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது நாட்டிற்கே அவமானமும், தலைகுனிவும் ஆகும் என்று எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய தலைவர் ஏ. சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு:
“மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத், வல்லபாய் படேல், இன்னும் எண்ணற்ற சுதந்திரப் போராளிகள் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்த தேசத்தை மீட்டெடுத்தனர். அப்படிப்பட்ட நாட்டில் நரேந்திர மோடி போன்றோர் பிரதமர் ஆனால் தேசத்திற்கு அவமானமும், தலைகுனிவும், கண்ணியக் குறைவுமே ஏற்படும். ஏனெனில், வகுப்புவாத அரசியலை தங்கள் வாழ்க்கை வழியாகக் கொள்பவர்களுக்கு மோடி ஓர் உதாரணப் புருஷன்.
பகைமையை மட்டுமல்ல, கொடூரத்தையும் தன் கொள்கையாகக் கொண்ட ஓர் அரசியல்வாதிதான் நரேந்திர மோடி. அந்தக் கொடூரமும், பகைமையும் மத ரீதியாகவோ சிறுபான்மையின ரீதியாகவோ மட்டுமோ அல்ல, யாரெல்லாம் அவரை ஒப்புக்கொள்ளவில்லையோ அவர்கள் மீதும் அவற்றை அவர் கடைப்பிடித்தார்.
1947ல் இந்தியா சுதந்திரம் வாங்கிய பின் நடக்கும் மிகவும் தலைகுனிவான நிகழ்வு இது. 1930களிலும், 1940களிலும் மக்களைக் கொன்றொழித்த பாசிஸ்டுகள், கொடூர அடக்குமுறையாளர்கள் ஆகியவர்களுடன் ஒப்பிடப்படுபவர் இந்த நரேந்திர மோடி. ஒரு தேசிய அளவிலுள்ள கட்சி அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியும் என்றால் அது இந்த நாட்டிற்கு தலைகுனிவே அன்றி வேறில்லை.
இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல. வகுப்பு வெறி பிடித்த ஆர். எஸ். எஸ். வழி நடத்தும் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதும் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்தான்.”
இவ்வாறு எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய தலைவர் ஏ. சயீத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Info : Thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment