Saturday, August 31, 2013

பாலியல் சம்பவங்களில் முதல் இடம் பிடிக்கும் சென்னை!

 பாலியல் சம்பவங்களில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை முதலிடம் பிடிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மாநில குற்ற ஆவண காப்பக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில், கடந்த 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013ல் பாலியல் குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012ல் மாநிலம் முழுவதும் 291 பாலியல் வழக்குகள் பதிவாயின. 2013ல் தற்போது வரை 436 வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் மொத்தம் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு 32 வழக்குகள் பதிவாகியுள்ளன. கோவை மாநகரத்தில் 11 பலாத்காரம், 5 மானபங்கம், 22 பெண்களுக்கு எதிரான கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு 2013 முதல் 7 மாதங்களில் மொத்தம் 1,130 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான சம்பவங்களில் காவல்துறையினர் இருதரப்பில் சமரசம் செய்யவே முயற்சிக்கின்றனர்.
நடப்பாண்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், கணவனால் கொடுமை குறித்த புகார்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன. 2012ம் ஆண்டில் முதல் 7 மாதங்களில் ஒப்பிடுகையில் இது இரட்டிப்பு புகார்களாகும்..
டெல்லியில் சென்ற ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன.. இதனைத் தொடர்ந்து பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டுமென பல்வேறு சமூக அமைப்புகள் போராடின. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தில் மும்பையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத் தக்கது..
-Inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza