Thursday, January 30, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத் துறை இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தில் "முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)"

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக "முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)" திட்டம் 26.01.14 அன்று இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தில் முஹம்மதியாபுரத்தில் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலமாக முஹம்மதியாபுரம் கல்வி வளர்ச்சிக்காக தத்தெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் எந்த ஒரு குழந்தையும் அவர்களது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்து விடக்கூடாது என்பதாகும்.

Monday, January 27, 2014

சென்னை ராயபுரத்தில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! – எஸ்.டி.பி.ஐ.!

சென்னை ராயபுரத்தில் பத்திரிகையாளர்கள்  மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கூறியுள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை ராயபுரம் லாலாகுண்டா பகுதியில் இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அப்பகுதியில் அந்நிகழ்ச்சி அன்று கலவரம் செய்வோம் என்று அப்பகுதி வி.ஹெச்.பி பொறுப்பாளர் பகிரங்கமாகவே பேசிய காரணத்தால் அதை சுட்டிக்காட்டி அப்பகுதியில் சமூக அமைதியை கட்டிக்காக்கும் விதத்தில் அந்நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கக் கோரியும், பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வி.ஹெச்.பி

சீனாவின் ஜின் ஜியாங்கில் போலீஸ் துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பில் 12 பேர் பலி!



சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் ஆறு பேரை போலீஸ் சுட்டுக்கொலைச் செய்துள்ளது. சின்ஹி கவுண்டியில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டதாக செய்தி நிறுவனமான சின்ஹுவா கூறுகிறது.
இளைஞரை கைது செய்ததை தொடர்ந்து போலீஸ் மீது தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்த வந்த நபரிடமிருந்த குண்டுவெடித்து 6 பேர் பலியாகினர். ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார்.

அல் அக்ஸா மஸ்ஜித் இடிக்கப்படும்! - இஸ்ரேல் அமைச்சர் பேச்சு!

அல் குத்ஸில் முஸ்லிம்களின் புனித மஸ்ஜிதான அல் அக்ஸா, யூத கோவிலாக புதுப்பிக்கப்படும் என்று இஸ்ரேலின் வீடு மற்றும் கட்டிட கட்டுமான அமைச்சர் ஊரி ஏரியல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏரியல் கூறியிருப்பது: குத்ஸில் 3-வது யூத கோயில் கட்டப்படும். முதல் இரண்டு கோவில்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டன. கோவில் நிலைப்பெற்றிருந்த இடத்தில் தற்போது மஸ்ஜித் உள்ளது. ஆகையால் அதனனை புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கிறோம்.

Sunday, January 26, 2014

சவூதி வாகன விபத்தில் கோமா நிலையில் இருந்த தமிழர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் முயற்சியால் நாடு திரும்பினார்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா, பெருமங்களம் பஞ்சாயத்து கீழ்நாரியப்பனூரை சேர்ந்த முதலி என்பவரின் மகன் பூமாலை (வயது 33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2011 ம் ஆண்டில் வேலைக்காக வளைகுடா நாடான சவூதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அவர் டேங்கர் லாரியில் ஓட்டுநராக பணி செய்து வந்தார்.
இந்நிலையில் வாகன விபத்து ஒன்றில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூமாலை, நினைவு எதுவும் திரும்பாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கோமா நிலையில் இருந்து வந்தார். இந்த விபரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் சவூதியில் சமூக நல பணிகளை மேற்கொள்ளும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தை தொடர்புகொண்டு அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியை மேற்க்கொண்டனர். தொடர் முயற்சியின் காரணமாக கோமா நிலையிலிருந்து ஓரளவு நினைவு திரும்பிய நிலையில் அவரது ஊரை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் துணையுடன் இன்று (25-01-2014) சென்னை அழைத்து வரப்பட்டார்.

புதுவலசையில் ''தேசிய வாக்களர் தினம் அனுசரிப்பு''

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நேற்று ( ஜனவரி-25) சனிக்கிழமை நமது புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

தேர்தல் குறித்து மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது பல நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே ஜனவரி 25ம்தேதியை தேசிய வாக்காளர் தினமாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வாக்களிப்பதன்  முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தி, வாக்களிப்பதை அதிகப்படுத்துவதே இதன் நோக்கம்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!

    எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இட ஒதுக்கீடு முறை அகற்றப்பட்டதன் காரணமாக இந்திய அளவிலும், தமிழக அளவிலும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதனை பல்வேறு ஆனையங்களும் புள்ளி விபரங்களுடன் தெரிவிதுள்ளன.

Saturday, January 25, 2014

நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-வது ஆண்டு விழா

நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளின் 124-ஆவது  ஆண்டு விழா மற்றும் விளையாட்டு  விழா எதிர் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. விளையாட்டு விழா காலை 8 மணியளவிலும், பள்ளி ஆண்டு விழா மாலை 4:30 மணியளவிலும் தொடங்குகிறது. சுற்று வட்டார கிராமங்களுடன் ஒப்பிடும் போது கல்வி தரத்தில் சிறந்து விளங்கும் நமதூர் பள்ளியின் ஆண்டுவிழாவை சிறப்பாக நடத்த நமதூர் ஜமாத், முஸ்லிம் முன்னேற்ற சங்கம், தாசின் அறக்கட்டளை,பள்ளிகளின் தாளாளர்,ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவியர் உட்பட அனைவரும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tuesday, January 21, 2014

ஆதாரம் இல்லை:பொடா சட்டத்தில் கைதான 3 முஸ்லிம்கள் விடுதலை!


no evidence

புதுடெல்லி: ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தினார்கள் என்று குற்றம் சாட்டி பொடா கறுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம்களை ஆதாரம் இல்லாததால் உ.பி மாநிலத்தின் மொராதாபாத் நீதிமன்றம் விடுதலைச்செய்தது. 2002-ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்ட மக்ஸூத், ஜாவேத், தாஜ் முஹம்மது ஆகிய 3 பேர் விடுதலைச் செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் அணி கூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று 19.01.2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் வஹாப் முன்னிலை வகித்தார்.

சிறுபான்மையினரை அவமதித்து பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா மீது SDPI கட்சி புகார்

மதவெறி, இனவெறியை தூண்டி கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இன்று காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்து தர்ம பாதுகாப்பு என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துதுவாதிகளுக்கு எதிராக உள்ளவர், ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதவெறியை தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சு யூ டியூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.(<http://www.youtube.com/watch?v=7rO7qPp0ps4>, <http://www.youtube.com/watch?v=jV9qVLRVMEY>, <http://www.youtube.com/watch?v=hxH0Ra-ap2Q>) இதனை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கண்டுள்ளனர்.

Saturday, January 18, 2014

பிப்ரவரி 17-பாப்புலர் ஃப்ரண்ட் தினம்: ஜமாஅத் களின் சந்திப்பு

இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ராம்நாட்டில் நடக்க விருக்கும் UNITY MARCH (ஒற்றுமை பேரணி) க்கு மாவட்டத்தில் இருக்கும் 254 முஸ்லிம் ஜமாஅத் களை அழைக்கும் முகமாக நேற்று ஆற்றங்கறை முதல் சோழன்தூர்(ஆற்றங்கரை,அழகங்குளம்,பனைக்குளம்,புதுவலசை,அத்தியுத்து

,சித்தார்கோட்டை,வாளூர்,தேவிபட்டிணம்,பொட்டகவயல்,சோழன்தூர்)ஆகி

ய ஜமாஅத் களின் சந்திப்பும் அழைப்பும் கொடுக்கப்பட்டது.இச்சந்திப்பு 

மாவட்ட தலைவர் பரக்கதுல்லா தலைமையில் செயலாளர் மற்றும் மாவட்ட செயற் குழு உறுப்பினர்களுடன் நடந்தது.

Thursday, January 9, 2014

முஸஃபர் நகர் முகாமில் உள்ளவர்களை வெளியேற்றமாட்டோம்! – எஸ்.டி.பி.ஐ பிரதிநிதிக் குழுவிடம் முதல்வர் அகிலேஷ் உறுதி!

 முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அகதிகள் முகாம்களில் இருந்து வெளியேற்றமாட்டோம் என்று எஸ்.டி.பி.ஐ தலைமையிலான பிரதிநிதிக் குழுவிடம் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் உ.பி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மாஸ்டர் ஸாஹித் தலைமையிலான அகதிகளுக்கான பிரதிநிதிக் குழுவுடன் லக்னோவில் நடத்திய பேச்சுவார்த்தையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அகதிகளை முகாம்களில் இருந்து வெளியேற்றமாட்டோம் என்று அகிலேஷ் யாதவ் உறுதி அளித்தார்.

Wednesday, January 8, 2014

மலேசியா: துரித உணவகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்ய தடை

மலேசிய நாட்டு துரித உணவகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்யத் தடை விதித்து அந்நாட்டு அரசு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. மலேசியாவில் உணவகங்கள், கட்டுமானப் பணிகள், குப்பைகளை நீக்குதல் மற்றும் தோட்டப்பணிகள் போன்றத் தொழில்களில் அந்நாட்டு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இப்பணிகளில் பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப் படுகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள் தற்போது இப்பணிகளைச் செய்து வருகின்றனர்.

Sunday, January 5, 2014

எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் (EPMA) - புதிய நிரிவாகிகள் தேர்வு

நமதூர் எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் சங்கத்தின் (EPMA) கூட்டம் துபாயில் உள்ள ஜபீல் பார்க்கில் 03.01.2014 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தலைவர் சகோ. ஜபருல்லா கான் அவர்களது தலைமையில் துவங்கியது. செயலாளர் சகோ. ஜாபிர் ஹுஸைன் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதில் தொடர்ச்சியாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக EPMA-வின் சார்பாக நமதூர் மக்களுக்கு செய்துவரும் உதவிகளையும், இனிவரும் காலங்களில் நாம் செய்யவேண்டிய பணிகளையும் பற்றி விளக்கினார்.

இந்த கூட்டத்தின் பிரதானம், நிர்வாகம் தேர்ந்தெடுத்து ஓராண்டு கழிந்த நிலையில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டமாக இந்த அமர்வு இருந்தது. அதன் தொடர்சியாக புதிதாக UAE-க்கு வருகை தந்திருக்கும் சகோதரர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். நீண்ட ஆலோசனைகளுக்கும், கருத்து பரிமாற்றங்களுக்கும் உட்படுத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Dua For Gaza