சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் ஆறு பேரை போலீஸ் சுட்டுக்கொலைச் செய்துள்ளது. சின்ஹி கவுண்டியில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டதாக செய்தி நிறுவனமான சின்ஹுவா கூறுகிறது.
இளைஞரை கைது செய்ததை தொடர்ந்து போலீஸ் மீது தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்த வந்த நபரிடமிருந்த குண்டுவெடித்து 6 பேர் பலியாகினர். ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார்.
கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் தான் இத்தாக்குதல்களுக்கு காரணம் என்று போலீஸ் கூறுகிறது. ஆனால், இவ்வியக்கம் இப்பகுதியில் செயல்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் சிறுபான்மை உய்கூர் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் ஜின் ஜியாங். தாது வளமிக்க இப்பகுதியை தமது கட்டுக்குள் கொண்டுவர அரசு அப்பகுதிக்கு தீவிரவாத முத்திரை குத்துகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு 91 பேர் இம்மாகாணத்தில் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் போலீசின் துப்பாக்கிச்சூட்டில் அதிகமானோர் பலியாகினர்.
-Newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment