எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று 19.01.2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் வஹாப் முன்னிலை வகித்தார்.
மகளிர் அணி மாநில தலைவி ஃபாத்திமா கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மகளிர் அணி மாவட்ட தலைவியாக தவுலத்தியா,மாவட்ட செயலாளராக ராதா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பரமேஸ்வரி, அனிதா, ஆயிசத், அலி ஃபாத்திமா, ஹஸனத் நிசா, பர்வீன் பானு, மங்களேஸ்வரி ஆகியோர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். இறுதியாக மகளிரணி மாவட்ட செயலாளர் ராதா நன்றி கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment