தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நேற்று ( ஜனவரி-25) சனிக்கிழமை நமது புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தேர்தல் குறித்து மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது பல நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே ஜனவரி 25ம்தேதியை தேசிய வாக்காளர் தினமாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தி, வாக்களிப்பதை அதிகப்படுத்துவதே இதன் நோக்கம்.
கண்ணியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு என்று தேர்தல் ஆணையம், அரசு சாரா அமைப்புகளோடு இணைந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நமது பள்ளியிலும் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டது. வாக்களிப்பதன் அவசியமும் அப்பொழுது எடுத்துரைக்கப்பட்டது. இதில் நமது ஜமாஅத் நிர்வாகிகள், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் புதிய வாக்காளர் அட்டைகளும் விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment