அல் குத்ஸில் முஸ்லிம்களின் புனித மஸ்ஜிதான அல் அக்ஸா, யூத கோவிலாக புதுப்பிக்கப்படும் என்று இஸ்ரேலின் வீடு மற்றும் கட்டிட கட்டுமான அமைச்சர் ஊரி ஏரியல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏரியல் கூறியிருப்பது: குத்ஸில் 3-வது யூத கோயில் கட்டப்படும். முதல் இரண்டு கோவில்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டன. கோவில் நிலைப்பெற்றிருந்த இடத்தில் தற்போது மஸ்ஜித் உள்ளது. ஆகையால் அதனனை புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கிறோம்.
ஊரி ஏரியலின் திமிரான பேச்சுக்கு ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘மஸ்ஜிதை தகர்ப்பதற்கான யூதர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
அரபு-இஸ்லாம் வரலாற்றை அழிக்க நடக்கும் முயற்சி இது. சுதந்திர ஃபலஸ்தீனாக கருதப்படும் பிரதேசத்தில் அல் குத்ஸ் உள்ளது. இந்த புராதன நகரத்தை அழிக்க அனுமதிக்கமாட்டோம்’ என்று ஃபலஸ்தீன் மக்கள் கூறுகின்றனர்.
-newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment