இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக "முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)" திட்டம் 26.01.14 அன்று இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தில் முஹம்மதியாபுரத்தில் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலமாக முஹம்மதியாபுரம் கல்வி வளர்ச்சிக்காக தத்தெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் எந்த ஒரு குழந்தையும் அவர்களது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்து விடக்கூடாது என்பதாகும்.
இதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சார்ந்தவர்கள் வீடு வீடாக சென்று கல்வியின் முக்கியத்துவத்தை சிறுவர்களிடமும், அவர்களது தாய், தகப்பனாரிடம் எடுத்துரைத்தனர். கற்றல் குறைபாடு காணப்படும் மாணவர்களுக்கு மாலைநேர பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுளளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் தொடர்ந்து இவர்களை வழிநடத்தி மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெறும் வரை பின்தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிக்ழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் H.ஹபீப் நவாஸ் கான் தலைமையில் ஜமாத்தார்கள் முன்னிலையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment