Saturday, January 25, 2014

நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-வது ஆண்டு விழா

நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளின் 124-ஆவது  ஆண்டு விழா மற்றும் விளையாட்டு  விழா எதிர் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. விளையாட்டு விழா காலை 8 மணியளவிலும், பள்ளி ஆண்டு விழா மாலை 4:30 மணியளவிலும் தொடங்குகிறது. சுற்று வட்டார கிராமங்களுடன் ஒப்பிடும் போது கல்வி தரத்தில் சிறந்து விளங்கும் நமதூர் பள்ளியின் ஆண்டுவிழாவை சிறப்பாக நடத்த நமதூர் ஜமாத், முஸ்லிம் முன்னேற்ற சங்கம், தாசின் அறக்கட்டளை,பள்ளிகளின் தாளாளர்,ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவியர் உட்பட அனைவரும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


மேலும் நமதூர் இஸ்லாமிய சிந்தனை கொண்ட இளைஞர்களின் முயற்சியால் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஆடல்,பாடல் கலை நிகழ்ச்சிகள் கடந்த 2 வருடங்களாக மீண்டும் நடத்தப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜமாத்திற்கு கடி தம்  அளித்திருந்தது. மேலும், சமூக  சிந்தனையுள்ள நமதூர்  இளைஞர்களும்  எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.. கடந்த வருடம் நடந்த ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் இந்த கருத்து மிகவும் காரசாரமாக விவாதிக்கப்பட்ட பின்  அப்போதைய ஜமாஅத் நிர்வாகம் இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள்  நடத்தப்பட மாட்டாது என  உறுதி அளித்திருந்தது. அதன் படி இப்பொழுது அமைந்த புதிய நிர்வாகம்  இந்த வருட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நிரலில் ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள்   ரத்து செய்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்....!

நமதூர் முஸ்லிம் ஜமாஅத் தர்ம பரிபாலன சபைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதோடு விழா இனிதே சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.......!


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza