Sunday, October 31, 2010

‘எங்களைப் பொறுத்தமட்டில் இஸ்ரேல் என்பது உடலில் வளர்கின்ற கென்ஸர் போன்றது


ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மனூச்சிர் முத்தாகி தற்போதைய ஈரான் விவகாரம் குறித்து islamonline.net இணையத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதியை இங்கு தருகின்றோம். பேட்டி கண்டவர் இவ்விணையத்தின் செய்தியாளர் ஆமிர் லதீப்.
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படைகள் நிலைகொண்டி ருப்பது, பலஸ்தீன் எதிர்ப்புப் போராட்டத்திற்கான ஆதரவு, பாரசீக வளைகுடாவின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் இஸ்ரேலின் அரசியல் நகர்வுகள் குறித்து முத்தாகி இப்பேட்டியில் தெரிவித்த கருத்துகளே இங்கு சுருக்கித் தரப்படுகின்றது.
* உங்கள் நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து அதிகம் விமர்சிக்கப்படுகின் றதே...
அவர்கள் (அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள்) இவ்விவகாரத் தைத் தூக்குகின்றனர். இதற்கான எவ்வித அருகதையும் அவர்களுக் குக் கிடையாது. நாம் அணுகுண்டு களைத் தயாரிப்பதற்கு முயற்சிக்க வில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
உண்மையில் இது ஈரானுக்கு எதிரான ஒரு பிரச்சாரமே ஒழிய, வேறெதுவும் இல்லை. ஈரான் அணுகுண்டுகளைத் தயாரிக்கின் றது; பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றது என்பன போன்ற மோசமான பிரச்சாரங்களை எமக்கெதிராக முன்னெடுப்பதே இவர்களின் அரசியல் நோக்கம்.

அணுகுண்டில் எமக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. மேற்கு லகம் ஈரான் ரகசியமாக அணு குண்டுகளைத் தயாரித்து வருவதாக எழுப்பும் கோஷங்க ளில் ஒரு வீதமேனும் உண்மை கிடையாது. உள்நாட்டில் எமக்கு ஏற்பட்டுள்ள சக்திவள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே நாம் அமைதியான வழியில் யுரேனி யத்தை செறிவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து வகையான சர்வதேச சட்டங்களுக் கும் அமைவாகவே இதில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
சக்தி வளத் தேவையுள்ள ஏனைய நாடுகளைப் போன்றே நாமும் யுரேனியத்தை செறிவாக்கி, எமக்குத் தேவையான சக்தி வளத்தை அதிகரிக்கின்றோம். ஏனைய நாடுகளைப் போன்று இவ்வாறு செய்வதற்கான அடிப் படை உரிமை எங்களுக்கு உள்ளது.
* அணுகுண்டில் எமக்கு நம்பிக்கையில்லை என்று கூறுவதன் கருத்தென்ன?
தற்காலத்தில் அணுகுண்டுகள் எதனையும் செய்யப்போவதில்லை. அது முக்கியமானதுமல்ல. அணுகுண்டுகள் முக்கியமானது எனின் ஆப்கானிஸ் தான், ஈராக் யுத்தங் களை வெல்வதற்கு அமெரிக்காவி னால் முடிந்திருக்கும். லெபனான் மீதான இஸ்ரேலின் யுத்தத்தின் போதும், பலஸ்தீனின் ஹமா ஸுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப் பின் போதும் இஸ்ரேல் வெற்றி பெற்றிருக்கும். முன்னைய சோவி யத் ஒன்றியம் பிரியாமல் இணைந் திருக்கும். எனவே அணுகுண்டுகள் இன்று எதனையும் செய்ய முடி யாது என்றே நாம் நம்புகின்றோம்.
* வளைகுடாவிலுள்ள ஏனைய அறபு நாடுகள் ஈரான் அவற்றின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என்று கருதுகின்றன. இது குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இது கூட ஒரு பிரச்சாரமே. மொத்தத்தில் எமது அணுசக்தித் திட்டம் எந்த நாட்டுக்கும் எதிரா னதோ அச்சுறுத்தலோ அல்ல. குறிப்பாக பாரசீக வளைகுடாவுக்கு சமீபகமாக இருக்கின்ற எந்த நாட் டிற்கும் நாம் அச்சுறுத்தல் அல்ல. சில பாரசீக வளைகுடா நாடுகள் எமது அணு உற்பத்தி நிலையங் களிலிருந்து சில கிலோ மீற்றர் தொலைவிலேயே இருப்பதனால் ஈரானின் அணுசக்தித் திட்டம் எமக்கு அச்சுறுத்தல் என்று கூறி வருகின்றன. நாம் அவர்களுக்குச் சொல்கின்றோம், எமது யுரேனியம் செறிவாக்கப்படும் இடத்திலிருந்து இரண்டு கி.மீற்றர் தூரத்திலேயே நாங்கள் இருக்கின்றோம்.
எனவே இது குறித்து அனாவசி யமாக அச்சப்படத் தேவையில்லை. நாம் கூறுகின்ற உண்மையை இந்நாடுகள் நேரில் வந்து பார்ப் பதற்கும் நாம் இடமளிப்போம். எமக்கு அஞ்சுகின்ற வளைகுடா நாடுகள் இங்கே வந்து எமது அணு சக்தித் திட்டம் எதற்காக என்பதை பரிசீலிக்கலாம். நாம் ஏற்கனவே அவர்களுக்கு இதுபற்றிப் பல முறை தெளிவுபடுத்திவிட்டோம்.
* அயல் நாடான ஆப்கானிஸ் தானில் அந்நியப் படைகள் நிலைகொண் டிருப்பது குறித்து ஈரானின் நிலைப்பாடு என்ன?
ஆப்கானில் அப்பாவிப் பொது மக்கள் மீது குண்டுகள் வீசப்படும் போது, பெனாசிர் பூட்டோ போன்ற பாகிஸ்தான் தலைவர்கள் கொலைசெய்யப்படும் போது பிராந்தியத்தில் வெளிநாட்டுப் படைகள் தங்கியிருப்பது பாதுகாப் பற்ற பதற்றமான ஒரு சூழ்நிலை யையே கடந்த எட்டு ஆண்டுகளாக உருவாக்கி யுள்ளது என்பதைத் தவிர வேறெதைத்தான் எம்மால் கூற முடியும். ஆப்கானிஸ்தானில் அந்நியப் படைகள் தோல்வி யடைந்து விட்டன என்பதே எமது உண்மையான தீர்ப்பாகும். எடுத் துக் காட்டாக ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ள அபின் உற்பத்தி யைக் குறிப்பிடலாம்.
அங்கே அந்நியப் படைகள் ஆக்கிரமிக்கும் வரை வருடாந்தம் 100 டொன் போதைப் பொருட் களும் அபினுமே உற்பத்தி செய் யப்பட்டது. ஆனால் தற்போது 8000 டொன் அபின் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆப்கானிஸ்தானிலும் பிராந்தியத் தின் ஏனைய பகுதிகளிலுமுள்ள அந்நியப் படைகளை வெளியேற் றுவதற்கு ஈரான் முழு ஆதரவளிக் கும். ஆப்கானியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு கிடை யாது என்று நாம் எட்டு ஆண்டு களாகக் கூறி வருகின்றோம். தற் போதுள்ள நிருவாகம் இப்பிரச்சி னைத் தீர்ப்பதற்குத் தவறிவிட்டது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் மாத்திரமே ஆப்கான் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். கடந்த மாதம் இம் மூன்று நாடுகளும் இஸ்லாமாபாத் திலே ஒன்றுகூடின. அதன்போது ஆப்கான் நெருக்கடியை தீர்ப்பது குறித்தும் வெளிநாட்டுப் படை களை வெளியேற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.
ஆப்கானிலுள்ள வெளிநாட்டுப் படைகள் அங்கு நீடிக்கும் ஒரு அரசியல் இடைவெளியினால் பெரும் சவாலை எதிர்கொண்டுள் ளது என நாம் கருதுகின்றோம். 2011ல் இந்த அரசியல் வெற்றிடம் நிரப்பப்படும். பிராந்திய நாடுகளா லேயே அது நிரப்பப்பட வேண் டும் என நாம் கருதுகின்றோம்.
* ஈரானை பிராந்தியத்தின் அச்சுறுத்தல் என்று கூறிவரும் இஸ்ரேல் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
இஸ்ரேல் பலஸ்தீன மக்களின் புனித நிலங்களையும் பூர்வீக பூமி களையும் ஆக்கிரமித்து 6 தசாப்தங் கள் கடந்து விட்டன. ஆக்கிரமிப்பு, போர்க் குற்றம், அகம்பாவம் என்ப வற்றின் வரலாறாக அது மாறிவிட் டது. இஸ்ரேலை அங்கீகரித்துள்ள அறபு நாடுகள் அதனுடனான உறவு களை துண்டிக்க வேண்டும்.
1948 ஏப்ரல் 18ல் பலஸ்தீனர் களின் தைபீரியஸ் மண் மெனாச் சின் பேர்ஜினின் தலைமையிலான இர்குன் எனப்படும் சியோனிஸ தீவிரவாத இயக்கத்தினால் ஆக்கிர மிக்கப்பட்டது. அதிலிருந்த 5500 பலஸ்தீனர்கள் விரட்டியடிக்கப் பட்டனர். ஏப்ரல் 22ல் ஹைபாவை சியோனிஸ்டுகள் ஆக்கிரமித்தனர். அங்கிருந்து 70,000 பலஸ்தீனர்கள் விரட்டப்பட்டனர்.

Saturday, October 30, 2010

தாக்குதலுக்கு தயாரகும் முன்பு இஸ்ரேல் பல தடவை ஆலோசித்துக் கொள்ளட்டும் - ஹமாஸ்

காஸ்ஸா,அக்,30:காஸ்ஸாவின் மீது மீண்டுமொரு தாக்குதலுக்கு முற்பட்டால் அதன் முழுமையான பலனை அனுபவிக்க வேண்டிவரும் என மூத்த ஹமாஸ் தலைவர் மஹ்மூத் ஸஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் காஸ்ஸாவிற்குள் நுழையுமானால் அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும். அவர்களுடைய லட்சியம் நிறைவேறாது. இராண்டாவது போருக்கு முன்னால் பல முறை அவர்கள் ஆலோசிக்க வேண்டும். என மஹ்மூத் ஸஹர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது நடத்திய அக்கிரம தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1400 பேர் கொல்லப்பட்டனர்.

யூதக் குடியேற்றம் தொடர்பாக சமீபத்தில் எல்லையில் மோதல் அதிகரித்து வருகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்  


எட்டாம் வகுப்பு மாணவியை வன்புணர்ச்சிச்செய்த பூஜாரிக்கு ஏழு ஆண்டு சிறை

புதுடெல்லி,அக்.30:எட்டாம் வகுப்பு மாணவியை ஒன்பது மாதங்களாக வன்புணர்ச்சிச் செய்த கோயில் பூஜாரியை ஏழு ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது டெல்லி நீதிமன்றம்.


ஒரு கோயிலில் பூஜாரியாக பணியாற்றிய பிரேம்பிரசாத் என்பவரைத்தான் அடிசனல் செசன்ஸ் நீதிபதி சஞ்சீவ் அகர்வால் 7 ஆண்டு கடின சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் தெளிவுள்ளதாகவும், நம்பமுடியாதது எதுவும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நரேலாவில் கோயிலுக்கு சென்ற எட்டாம் வகுப்பு மாணவியை வன்புணர்வுக்கு ஆளாக்கினார் பூஜாரி.
செய்தி : தேஜஸ் மலையாள நாளிதழ் - 


ஷொராஹ்புத்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு: முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு ஜாமீன்


அகமதாபாத்,அக்.30:ஷொராஹ்புத்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் உள்துறை முன்னாள் இணையமைச்சர் அமித் ஷாவுக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.


மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ஹெச்.சுக்லா, ரூ.1 லட்சம் பிணைத் தொகையும், மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அமித் ஷா மாதம் ஒருமுறை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து ஜாமீனில் விடுதலை செய்தார்.

அமித் ஷாவின் ஜாமீனுக்கு 3 வார இடைக்கால தடை விதிக்க சிபிஐ வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை நீதிபதி நிராகரித்து விட்டார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அமித் ஷாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூலை 25-ல் கைது செய்தனர். மூன்று மாதங்களாக சபர்மதி சிறையில் உள்ள அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார்.

அமித் ஷா சார்பில் ராம் ஜெத்மலானியும், சிபிஐ சார்பில் துளசியும் ஆஜராகினர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, சிபிஐ-யின் எதிர்ப்பை மீறி அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கினார். சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் நிருபம் நானாவதி தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்பேரில் 2005-ல் ஷொராஹ்புத்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டதாவும், முக்கிய சாட்சிகளான அவரது மனைவி கவுசர்பீ, நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலீஸார் ரகசியமாக கொலை செய்து விட்டதாவும் சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை மறுத்துள்ள பாஜக மூத்த தலைவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அமித் ஷாவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினர். நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது பாஜக வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Friday, October 29, 2010

சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற SDPI வேட்பாளர்

பேராசிரியர் அனஸை கைவெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்த்தைத் தொடர்ந்து இலாஹியா கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது. ஆனால் அக்கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் 21 இடங்களை  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாணவர் அமைப்பான  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் - பாலைவனதூது

காஷ்மீர் : அருந்ததிராய்க்கும், கிலானிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு

கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என டெல்லி கருத்தரங்கில் உரை நிகழ்த்திய பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் ஹூர்ரியத் தலைவர் கிலானியும் கைதுச் செய்யப்படுவர் என்ற அச்சுறுத்தல் நிலவும் சூழலில் அவர்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீதிக்காக அழுபவர்களை தேசத்துரோகம் என்ற பிரிட்டீஷ் காலத்து சட்டத்தின் மூலம் அமைதியாக்க அரசு முயல்கிறது என கல்கத்தாவில் வெளியிடப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களும் அடங்கும் 17 பிரமுகர்களின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

அருந்ததிராய்க்கு எதிரான நடவடிக்கை குடிமக்களின் அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தை தடைச் செய்வதற்கான முயற்சி என மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கருத்தரங்கை ஏற்பாடுச் செய்த கமிட்டி ஃபார் ரிலீஸ் ஆஃப் பொலிடிகல் ப்ரிஸனர்ஸ் அமைப்பும் அருந்ததிராய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் இந்தியாவின் அரசியல் சட்ட குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. நீதிக்கான கோரிக்கைகளை அடக்கி ஒடுக்குவதற்கு பதிலாக கஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு பரிகாரம் காண அரசு முன்வரவேண்டும்.

ஐ.நாவின் மேற்பார்வையில் கஷ்மீரில் விருப்ப வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அமீத் பட்டாச்சார்யா, சுஜாதோ பத்ரா, மெஹர் எஞ்சினியர், சுதேஷன் எஞ்சினியர், திலோத்தமா முகர்ஜி, ரஞ்சன் சக்ரவர்த்தி, கல்யாண்ராய், ஹிமாத்ரி சங்கர் பானர்ஜி, ஹெச்.என்.தோபா, ரூப்குமார் மர்மன், அவிக் மஜூம்தார், சுபாஷ் சக்ரவர்த்தி, தேபாசிஷ் கோஷ்வாமி, சஞ்சீப் முகர்ஜி, அபிஜித் ராய், ஸ்மிதா கோஷ் ஆகியோர் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்

Thursday, October 28, 2010

கேரள உள்ளாட்சித் தேர்தல்:காங்கிரஸ் கூட்டணி முன்னணி, எஸ்.டி.பி.ஐ வெற்றிக் கணக்கைத் துவக்கியது

கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று வருகிறது.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக கால் பதித்துள்ள சமீபத்தில் துவக்கப்பட்ட சோஷியல் டெமோக்ரேடிக் கட்சி கண்ணூர், தொடுப்புழா, பாலக்காடு, காஸர்கோடு, பத்தணம் திட்டா ஆகிய நகரசபைகளின் வார்டுகளில் வெற்றிக் கணக்கைத் துவக்கியுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

செய்தி:தேஜஸ் - பாலைவனதூது

யு.ஏ.இ:ராஸ்-அல்-கைமாவின் ஆட்சியாளர் மறைவு

ராஸ்அல்கைமா,அக்.27:ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு பகுதியான ராஸ்அல்கைமா ஆட்சியாளர் ஷேக் ஸக்ர் பின் முஹம்மது அல் காஸிமி(வயது 92) மரணமடைந்தார்.. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்).

உலகிலேயே அதிக வயதையுடைய ஆட்சியாளர் ஸக்ர் பின் முஹம்மது அல் காஸிமி ஆவார். ராஸ்அல்கைமாவை சொந்த இடமாகக் கொண்ட அவர் 1948 ஜூலை 17 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். மேற்கொண்டு தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்று வாம் நியூஸ் ஏஜென்ஸி தெரிவிக்கின்றது.

செய்தி:மாத்யமம்

அருந்ததி ராயை கைதுச் செய்யும் முயற்சி கண்டிக்கத்தக்கது -NCHRO

புதுடெல்லி,அக்.27:டெல்லியில் கருத்தரங்கில் கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்திய சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராயை தேசத்துரோகம் குற்றஞ்சாட்டி கைதுச் செய்ய முயல்வது அரசியல் சட்டம் அனுமதித்த அடிப்படை உரிமைகள் மீதான அத்துமீறல் என NCHRO என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய கமிட்டி தெரிவித்துள்ளது.

தனது கருத்தை வெளியிட்டதற்காக ஜனநாயக அரசு ராணுவ அரசு மேற்கொள்வதற்கு சமமான மனித உரிமை மீறலை நடத்துகிறது. சர்வதேச அளவில் பிரபலமான இலக்கியவாதியும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயை கைதுச் செய்ய நடத்தப்படும் முயற்சி
எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

அருந்ததிராயை பொய் வழக்கில் கைதுச்செய்து சிறைக்கொட்டடியில் அடைக்க முயற்சிக்கும் மத்திய அரசின் தீர்மானம் கண்டிக்கத்தக்கது என NCHRO தலைவர் நீதிபதி ஹெச்.சுரேஷ், தேசிய ஒருங்கிணைப்பாளர் ரெனி ஐலின் ஆகியோர் இவ்வறிக்கையை வெளியிட்டனர்.

செய்தி :  பாலைவனத் தூது

பாப்ரி மஸ்ஜித்:வீணான பேச்சுவார்த்தைகளை நிறுத்துங்கள் -முஸ்லிம் தலைவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்

பெங்களூர்,அக்:பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் சங்க்பரிவார் மற்றும் அதன் துணை அமைப்புகளுடனான எல்லாவித சமரசப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு முஸ்லிம் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவெடுத்திருக்கும், சுன்னி வக்ஃப்போர்டு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய முஸ்லிம்களில் அதிக செல்வாக்குப் பெற்ற அமைப்பான முஸ்லிம் தனியார் சட்டவாரியம் இந்த மாதம் கூட்டிய கூட்டத்தில் வைத்து சமரசத் தீர்வு காண்பதற்கான சந்தேகங்களுக்கு முடிவுக்கட்டி, எதிர்கால செயல் திட்டங்களுக்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படவும் செய்ததாகும்.

ஆதாரங்களை விட நம்பிகையை அடிப்படையாகக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பின் அபத்தங்களை திருத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு உண்டு என அக்கூட்டம் மதிப்பீடுச் செய்திருந்தது.

கோயிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டப்பட்டது என்ற வாதம் நிரூபிக்கப்படாத சூழலில், பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடையாக அளிக்கவேண்டும் என்ற வாதம் உள்ளிட்ட சில தனிப்பட்ட கருத்துக்களை முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நிராகரித்துவிட்டது.

நிலைமை இவ்வாறிருக்க, மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் இதுக்குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சில உறுப்பினர்களின் நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாகவும், தேவையற்றதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் விமர்சிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர்களான சுவாமி சிதானந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது வீண் வேலையாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் குறித்த முஸ்லிம்களின் உரிமைக் கோரிக்கையைக் குறித்து பொதுமக்களிடம் இது சந்தேகத்தை கிளப்பவே உதவும்.

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமன் பிறந்த இடம் என்பதை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமலரிந்தால்தான் மட்டுமே பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காண இயலும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்
தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முடிவுச் செய்துள்ள தீர்மானங்களைக் குறித்து எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசியத் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ஹிந்தத்துவா அமைப்புகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் வாரியத்தின் உறுப்பினர்களை தலைவர்கள் சந்தித்து அந்த சிந்தனையிலிருந்து மாற்றவேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி :  பாலைவனத் தூது

Monday, October 25, 2010

கேரள உள்ளாட்சி தேர்தல் 8 இடங்களில் குண்டுவெடிப்பு

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. முதற்கட்ட மாக நேற்று 7 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. கேரளா உட்பட தமிழக, கர்நாடக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்டு- காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதை தடுக்க போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது ஒரு கும்பல் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது இதில் யாருக்கும் காயம் ஏற்ப்படவில்லை.

பானூர் உள்பட 7 இடங்களில் வாக்குச்சாவடி அருகே குண்டுகள் வெடித்தன. திருவனந்தபுரத்தில் காயன்குளம் நகரசபை 40-வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சாமினாவையும், அவருடைய கணவரையும்  ஒரு கும்பல் வீடு புகுந்து வெட்டியது.

புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!




 
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் உள்ள ஷார்ஜா மாகாணத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ள முற்றிலும் லாபமற்ற 0% கடன் உதவியை பிரபல வங்கியான ஷார்ஜாஹ் இஸ்லாமிய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.  மற்ற வகை 0% லாபமற்ற கடன் வசதி போல் அல்லாமல் இதில் எந்த வகை மறைவு தொகை மற்றும் சேவைத் தொகை ஆகியவை எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புனித பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்திற்கு தேவையான பணத்தை பெற்று கொண்டு மீண்டும் அதை மாத தவணையாக செலுத்தினால் போதும்.  ஷார்ஜாஹ் இஸ்லாமிய வங்கியின் அதிகாரி ஜஸ்சம் முஹம்மத் அல் பலுசி தெரிவிக்கும் போது "பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு பின்பு தான் இந்த திட்டத்தை துவங்கியுள்ளோம். இவ்வாறான தேவை தற்போது பெரிதும் தேவை உள்ள நிலையை அறிந்து கொண்ட பின்பே இதை துவங்கியுள்ளோம்" என்றுள்ளார்.

மேலும் அவர் இத்திட்டத்தை விவரிக்கையில் இந்த திட்டம் நடைமுறை படுத்த பல்வேறு 'ஹஜ்' பயண ஏஜென்சி நிறுவனங்களை அனுமதி அளித்துள்ளோம். இந்த திட்டத்தை விளம்பர படுத்துவதற்கான செலவினங்களை அவர்கள் செலுத்துவார்கள் என்றார்.

பாஜக எம்.எல்.ஏ க்களின் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிரடி சோதனை!

கர்நாடக மாநிலத்தின் 60 க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதில் பெரும்பாலான இடங்கள் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களாகும். கர்நாடக மாநில பாஜக அரசு ஆபரேசன் தாமரை மூலம் எதிர் கட்சி எம்.எல்.ஏ க்களை ராஜினாமா செய்ய வைத்து தன் அரசை காப்பாற்ற முயன்று வருகிறது.

இதன் எதிரொலியாக இது வரை காங்கிரசை சேர்ந்த இருவரும், மத சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த ஒருவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ 25 கோடி முதல்  ரூ 50  ௦ கோடி வரை பேரம் பேசுவதாக எதிர்க் கட்சிகள் பாஜக மேல் குற்றம் சுமத்தி வருகின்றன.
இதைத் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மற்றும் ஹாஸ்பெட் ஆகிய இடங்களில் அதிகாலை முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய மர்ர்கத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்



 
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு  தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். 
தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக ஹிந்து அமைப்புகளிடையே மோதல்

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை மூன்று துண்டுகளாக பங்குவைத்துக் கொடுத்து தீர்ப்பளித்து அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச்.

இதில் இரு பகுதிகள் ராமலல்லாவுக்கும், நிர்மோஹி அகாராவுக்கும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் மூன்று தரப்பினருமே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய முடிவுச் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஹிந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் நிர்மோஹி அகாராவுக்குமிடையே நீதிமன்றத்தில் பங்குவைக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக தர்க்கம் துவங்கியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் தலையிடக்கூடாது எனவும், கோயிலை கட்டும் பொறுப்பு எங்களுடையது என நிர்மோஹி அகாராவின் தலைவர் மஹந்த் பாஸ்கர்தாஸ் கூறியுள்ளார்.

ராமஜென்மபூமி நியாஸ் ராமர் கோயிலை கட்டும் என்ற வி.ஹெச்.பி யின் கட்டுப்பாட்டிலிலுள்ள அமைப்பான உச்சாதிகார் சமிதியின் அறிவிப்பு நிர்மோஹி அகாராவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலத்தில் ஏதேனும் கட்டிடப் பணிகளை நிர்வகிக்க வி.ஹெச்.பியையோ அதன் துணை அமைப்புகளையோ அனுமதிக்கமாட்டோம் என மஹந்த் பாஸ்கர் தாஸ் உறுதிப்படக் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: உயர்நீதிமன்றம் எங்களுக்கு ஒரு பங்கை பிரித்து தந்துள்ளது. இன்னொரு பகுதி வழங்கப்பட்டுள்ள ராம்லல்லாவின் பிரதிநிதியாக செயல்படுவது ஆர்.எஸ்.எஸ் என்றாலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ,ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அங்கு உரிமை வழங்கப்படவில்லை.கோயில் கட்டும் உரிமைத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். ஹிந்துக்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ள இடத்தின் உரிமை யாருக்கு என்பதுக் குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

எங்களுடைய இடத்தில் ராம்லாலா வீரஜ்மான் கோயில் கட்ட அனுமதியுண்டு. ஆனால், நீதிமன்றம் பங்குவைத்த இன்னொரு பகுதி ஹிந்துக்களுக்கு எனக் கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் ஹிந்து சமூகத்தின் சிறியதொரு பகுதியினருக்கு மட்டும்தான் பிரதிநிதிகளாக செயல்படுகின்றன. உங்களுக்கு நிலத்தில் உரிமை உண்டு எனக் கூறுவதற்கு முன்னால் தீர்ப்பை வாசிக்க வேண்டும். சீதாவின் சமையலறை, ராம்சாபூத்ரா உள்ளிட்ட பகுதிகள் நிர்மோஹி அகாராவுக்கு என நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ராம்லாலா வீரஜ்மான் உள்ளிட்ட பகுதியும் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தோடு இணைந்துள்ளன. ஆதலால் அங்கு கோயில் கட்டுவதற்கான உரிமை எங்களுடையதாகும்.

சாந்த் உச்சாதிகார் சமிதி,ராம்ஜென்மபூமி நியாஸ் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்ஸும், வி.ஹெச்.பியும் துவங்கிய அமைப்புகளாகும். கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸின் நிழல் அமைப்புகளாக செயல்பட்ட இவர்களை எங்களால் அங்கீகரிக்க இயலாது. என கூறினார்.

என்​க​வுன்ட்​டர்:48 மணி நேரத்திற்குள் தகவலளிக்க தேசிய மனித உரிமை ஆணை​யம் புதிய நிபந்தனை

டெல்லி,​​அக்.25:​என்​க​வுண்​டர் சம்​ப​வம் நடந்த 48 மணி நேரத்​துக்​குள் தேசிய மனித உரிமை ஆணை​யத்​துக்கு தெரி​விக்​க​வேண்​டும் என்று மாநில அர​சு​க​ளுக்கு உத்​த​ர​வி​டப்​பட்​டுள்​ளது.​

என்​க​வுண்டர் சம்​ப​வம் நடந்​தால் அது குறித்து தக​வல் தெரிவிப்பதற்கான புதிய விதி​மு​றை​களை தேசிய மனித உரிமை ஆணை​யம் வகுத்து வெளி​யிட்​டுள்​ளது.​ இது​தொ​டர்​பாக அனைத்து மாநி​லங்​க​ளுக்​கும் புதிய விதி​மு​றை​களை ஆணை​யம் அனுப்​பி​யுள்​ளது.​

புதிய விதி​மு​றை​க​ளின்​படி,​​ என்​க​வுன்டர் சம்​ப​வம் நடந்த 48 மணி நேரத்​துக்​குள் ஆணை​யத்​துக்கு தக​வல் தெரி​விக்​க​வேண்​டும்.​ அது​மட்​டு​மல்​லா​மல் அந்த என்​க​வுன்​டர் சம்​பந்​த​மான 2-வது அறிக்​கையை போலீ​ஸார் அடுத்த 3 மாதங்​க​ளுக்​குள் அனுப்ப வேண்​டி​யது கட்​டா​யம்.​

2-வது அறிக்​கை​யில் என்​க​வுன்ட்​ட​ரில் பலி​யா​ன​வ​ரின் பிரே​தப் பரி​சோ​தனை அறிக்கை,​​ மரண விசா​ரணை அறிக்கை,​​ மாஜிஸ்​தி​ரேட் நடத்​திய விசா​ரணை அறிக்கை,​​ மூத்த போலீஸ் அதி​கா​ரி​க​ளின் அறிக்கை ஆகி​யவை இணைக்​கப்​பட்​டி​ருக்​க ​வேண்​டும் என்று ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.​

பழைய விதி​க​ளின்​படி என்​க​வுன்ட்​டர் சம்​ப​வம் நடந்த 6 மாதங்​க​ளுக்​குள் தேசிய மனித உரிமை ஆணை​யத்​துக்கு தக​வல் தெரி​வித்​தால் போதும்.​

பழைய விதி​மு​றை​க​ளின்​படி என்​க​வுன்ட்​டர் சம்​பவ அறிக்​கையை மாநில டிஜி​பிக்​கள்​தான் அனுப்​ப​வேண்​டும்.​

ஆனால் புதிய விதி​க​ளின்​படி மாவட்ட மூத்த போலீஸ் கண்​கா​ணிப்​பா​ளர் அல்​லது போலீஸ் கண்​கா​ணிப்​பா​ளர் அனுப்​பி​னாலே போது​மா​னது.​

பழைய விதி​க​ளின்​படி போலீ​ஸô​ருக்கு எதி​ராக எழுப்​பப்​ப​டும் என்​க​வுன்ட்​டர் வழக்​கு​களை குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் மட்​டுமே விசா​ரிக்​க​லாம்.​

ஆனால் புதிய விதி​க​ளின்​படி சிறப்பு விசா​ரணை ஏஜென்​சி​கள் இந்த வழக்​கு​களை விசா​ரிக்​க​லாம்.​ சிபி​சி​ஐடி அல்​லது ஏதா​வது ஒரு சிறப்பு விசா​ரணை அமைப்பு இந்த வழக்​கு​க​ளில் விசா​ரணை நடத்​த​லாம் என ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்லி ஜும்மா மசூதி அருகில் தைவான் சுற்றுலா பயணிகளை சுட்டது யார்? திக்கு முக்காடும் போலீஸ்

டெல்லி,அக்.25:டெல்லியில் ஜும்மா மசூதி எதிரில் தைவான் நாட்டு சுற்றுலா பயணிகளை சுட்டுவிட்டு தப்பிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து இதுவரை துப்புத் துலங்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. குற்றவாளிகளை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் போலீஸார் அறிவித்தனர்.

எனினும், குற்றவாளிகள் யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக 50-க்கு மேற்பட்டவர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களிடம் இருந்து எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் டெல்லி போலீஸார் திக்குமுக்காடுகின்றனர்.

கடந்த செப்டம்பரில் தில்லியில் உள்ள ஜும்மா மசூதி அருகே தைவானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

காமன்வெல்த் போட்டிகள் துவங்கும் தருவாயில் இந்த சம்பவம் நடந்ததால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டது. விளையாட்டு போட்டியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.

Sunday, October 24, 2010

ஈராக்கில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் -விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய போர் ஆவணங்கள்


நியூயார்க்/வாஷிங்டன்,அக்.24:கடுமையான மனித உரிமை மீறல்களும், சாதாரண மக்களின் கூட்டுப் படுகொலைகளையும் விவரிக்கும் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்றில் மிக அதிகமான போர் ரகசியங்களை உளவறிந்ததில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் 66 ஆயிரம் சாதாரண அப்பாவி மக்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளதை இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2004 ஆம் ஆண்டுமுதல் 2009 ஆம் ஆண்டுவரை ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கொலைகளின் புள்ளிவிபரங்கள் அதி ரகசியமான ஆவணங்களில் காணக் கிடைக்கின்றன.

அந்நிய ஆக்கிரமிப்புப் படையினரை எதிர்கொள்ள ஈராக் போராளிகளுக்கு ஈரான் உதவியதாக கூறும் ஆதாரங்களும் இந்த ரகசிய ஆவணங்களில் உள்ளன.

விக்கிலீக்ஸ் உளவறிந்த ஆவணங்களை முதன்முதலில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை(பெண்டகன்)யின் எச்சரிக்கையை மீறித்தான் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

66,081 சாதாரண அப்பாவி மக்கள், 23, 984 போராளிகள், 15,196 ஈராக் ராணுவ வீரர்கள், 3,711 அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் என 1,09,032 பேர் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா முன்பு கூறியதைவிட மிகக் கூடுதல் இந்த மரணங்களின் எண்ணிக்கை என ஆவணங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

வீடுகள், கட்டிடங்கள் இடிக்கப்பட்டதும், சிறைகைதிகளையும், சாதாரண அப்பாவி மக்களை கொடுமைப்படுத்தியதுத் தொடர்பான விபரங்களும் இந்த ஆவணங்களில் உள்ளன.

குஜராத் இனக் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார் -முன்னாள் உள்துறை அமைச்சர் வாக்குமூலம்


அகமதாபாத்,அக்.24:2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

வெட்ட வெளிச்சமானது ஆர்.எஸ்.எஸ் ன் உண்மை முகம்: காங்கிரஸ்

புதுடெல்லி,அக்.24:அஜ்மீர் குண்டுவெடிப்பு குற்றப்பத்திரிகையில் ஹிந்துத்துவா இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரை குற்றவாளியாக்கியதன் மூலம் அவ்வமைப்பின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என காங்கிரஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.

தேசத்தின் பன்முகத் தன்மைக்கும், மதசார்பற்ற கொள்கைகளுக்கு ஊறுவிளைவிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

தேசத்திற்கு அவசரமாக தேவைப்படும் மத நல்லிணக்கத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ் தகர்த்துள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.

அதேவேளையில், இந்திரேஷ்குமாரை அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் உட்படுத்தவில்லை என பா.ஜ.க கூறுகிறது.

இந்திரேஷ்குமாருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் ஒன்றுமில்லை எனவும், அரசு ஆர்.எஸ்.எஸ் போன்ற தேசியவாத(?) இயக்கங்களை குறிவைக்கிறது எனவும் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு: குற்றப்பத்திரிகையில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயர்




ஜெய்பூர்,அக்.24:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரும் ஆறு முக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான ரகசியக் கூட்டத்தில் பங்கெடுத்ததாக, அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐந்து ஆர்.எஸ்.எஸ், அபினவ் பாரத் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை குறிப்பிட்டுள்ளது.

இந்திரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்பில் தொடர்புக் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இவ்வழக்கில் அவரைகுற்றவாளியாக்கவில்லை எனவும் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஏ.டி.எஸ் கூறுகிறது.

2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தி விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசியக் கூட்டத்தில்தான் இந்திரேஷ் குமாரும், இதர ஆறு முக்கிய் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.

வெளியானது உண்மை மட்டுமே எனவும், இதனை அங்கீகரிக்க ஆர்.எஸ்.எஸ் தயாராக வேண்டுமெனவும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சிறிது காலம் கழிந்தால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பங்கும் பின்னணியும் வெளிவரும். சத்தியம் வெளிவரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அசோக்கெலாட் தெரிவித்தார்.

அதேவேளையில், தனது பெயர் அரசியல் தூண்டுதலின் காரணமாகவே குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திரேஷ்குமார் தெரிவிக்கிறார்.

தேசத்துரோகிகளை(?) பாதுகாக்கும் அரசு, தேச விசுவாசிகளூக்கெதிராக(?) போர் புரிகிறது. அநீதிக்கெதிராக நீதிமன்றத்தை அணுகுவோம் இவ்வாறு இந்திரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்திரேஷ்குமாரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. இத்தகையச் செய்திகளை சட்டரீதியாக எதிர்க் கொள்வோம் என ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவிக்கிறார்.முழுதாக மையப்படுத்து

'அவரை நிர்வாணமாக்கி தீவைத்துக் கொளுத்துவதை நான் கண்டேன்' - ஸாகியா ஜாஃப்ரியின் கண்ணீர் சாட்சியம்



புதுடெல்லி,அக்.24:தனது கணவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய் நிர்வாணமாக்கிய பிறகு அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்வதை தான் நேரடியாக கண்டதாக, குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா கண்ணீர் சாட்சி அளித்துள்ளார்.

குல்பர்கா சொசைட்டி கூட்டு இனப் படுகொலையில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும் பொழுதுதான் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தார் ஸாகியா. 2002 பிப்ரவரி 22 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.

ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்திருந்தது.

"கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து பந்த் அறிவிக்கப்பட்டதால் வன்முறைக்களமாக மாறியது சூழல். அதிகாலை முதல் அக்கம்பக்கத்து முஸ்லிம்கள் எங்கள் வீட்டை நோக்கி வரத் துவங்கினர்.

அவர்களை ஹிந்துத்துவாவாதிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க போலீஸை அழைக்க அவர்கள் ஜாஃப்ரியிடம் கோரினர்.

காலை 7.30 க்கு அவர்களை வீட்டிற்குள் அழைத்த ஜாஃப்ரி, ஒன்றாக இருக்கக் கூறியதுடன் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் எனக் கூறினார்.

இந்த நேரத்திலிருந்தே ஜாஃப்ரி தொலைபேசியில் பலரையும் அழைக்க ஆரம்பித்தார். 11.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் பி.ஸி.பாண்டே வீட்டிற்கு வந்து ஜாஃப்ரியை வெளியே அழைத்தார். இதர முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தனது காரில் ஜாஃப்ரியையும், குடும்பத்தினரையும் மட்டும் அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்தார் பாண்டே.

ஆனால், மிரண்டுபோன இதர முஸ்லிம்களை விட்டுச்செல்ல ஜாஃப்ரி மறுத்துவிட்டார். பாண்டே திரும்பிச் சென்றபிறகு, வன்முறையாளர்கள் சிறிய கேட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் வீட்டை நெருங்கிய பொழுது வீட்டின் மாடிக்கு செல்லுமாறு என்னிடம் கூறினார் ஜாஃப்ரி.

கோஷங்களை எழுப்பியவாறு வந்த ஆயுதங்கள் ஏந்திய கும்பல் ஜாஃப்ரியிடம் வெளியே வருமாறு கூறினர். தான் வெளியே வருவதாகவும், ஆனால் தனது வீட்டில் புகலிடம் தேடி வந்தவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் எனவும் ஜாஃப்ரி வன்முறையாளர்களிடம் கூறினார்.

வெளியேவந்த ஜாஃப்ரியை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆடைகளை கீறி எறிந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி எறிந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்தனர்." -இதனை சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி பி.யு.ஜோஷியின் முன்னால் ஸாகியா தெரிவித்தார்.

"ஆனால் போலீஸ் வந்தது மாலை 5.30 மணிக்காகும். வீட்டின் உள்ளே ஒழிந்திருந்த எங்களை வெளியேவருமாறு கூறினர். 18-19 உடல்கள் வீட்டின் வராந்தாவிலும் இதர இடங்களிலும் கிடந்தன. அதில் ஒன்று, தங்களுடைய அயல் வீட்டாரான கஸம்பாயின் கர்ப்பிணியான மருமகளாவார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்து சிசு வெளியே வந்திருந்தது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அக்கிரமக்காரர்கள்தான் இந்தக் கொலைகளை நடத்தினர்." இவ்வாறு ஸாக்கியா கூறினார்.

அதேவேளையில், குறுக்கு விசாரணையின்போது ஸாகியாவுக்கு மனித உரிமை ஆர்வலரான டீஸ்டா செடல்வாட், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார், வழக்கறிஞர் ஷொஹைல் திர்மிஜி, ரைஸ்கான் பத்தான் ஆகியோருடன் தொடர்பிருப்பதாக கூற முயன்றார் எதிர்தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன். ஆனால், ஸாகியா அதனை மறுத்தார்.

டீஸ்டா செடல்வாட்டிடமிருந்து ஒரு உதவியையும் தான் பெறவில்லை எனவும், பல காலமாக அவரை தான் காணக்கூட செய்யவில்லை எனவும் ஸாகியா தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஸாகியா கண்ட ஏதேனும் உடல் சேதமாக்கப்பட்ட இறந்துப்போன ஒருவரின் பெயரைக் கூற இயலுமா என எதிர் தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன் கேள்வி கேட்டபொழுது, தனது கணவரை கொலைச் செய்த பாதகர்களிடம்தான் இதனைக் கேட்கவேண்டும் என ஸாகியா பதிலளித்தார்.

Saturday, October 23, 2010

ஒரு ஷஹீதினுடைய தந்தையின் அனுதாபம்



உஸ்தாத் உமர் தில்மிஸானி கூறுகிறார்கள்: "இமாம் ஹஸனுல் பன்னா (றஹ்) அவர்கள், இந்தப் பரம்பரையினு டைய இளைஞர்களின் உள்ளங்களில் ஜிஹாதிய உணர்வை உயிர்ப்பித்திருந்தார்கள்.
அதனால், இமாமவர்களும் தாக்கமடைந்து இளைஞர்களும் தாக்கம் பெற்றிருந்தனர். அவர்களது பெற்றோர்களையும் அது பாதித்திருந்தது.

அந்த உருவாக்கத்தின் உருக்கமான ஒரு நிகழ்வு இது.

பலஸ்தீனப் போராட்டத்தில் இஹ்வானிய சகோதரர் ஒருவர் ஷஹீதா னார். இமாமவர்கள் அனுதாபம் தெரிவிப்ப தற்காக அந்த ஷஹீதின் தந்தையிடம் சென்றிருந்தார். எல்லோருக்கும் உருக்கமான பாட மொன்றை அது கற்றுக் கொடுத்தது.

அந்தத் தந்தை இமாமவர்களிடம் சொன்னார்; "நீங்கள் இங்கு எனக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக வந்திருந்தால் நீங்களும் உங்களுடன் வந்திருப்பவர்களும் திரும்பிச் சென்று விடுங்கள். மாறாக, என்னை வாழ்த்துவதற்காக நீங்கள் வந் திருந்தால் உங்களையும் உங்களுடன் வந்திருப்பவர்களை யும் நான் வரவேற்கிறேன்.

நீங்கள்தான் எங்களுக்கு ஜிஹாதைக் கற்றுத் தந்தீர்கள். இவ்வுலகிலே அதற்குக் கிடைக்கும் கண்ணியம், அந்தஸ்து, மறுமையில் கிடைக்கும் மகத்தான கூலி என்பவற்றையும் விளங்கப்படுத்தினீர்கள். உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

நான் பலமடங்கு கூலிகளைப் பெற ஆசை கொண்டிருக்கி றேன். இதோ! என் இரண்டாவது மகன். இவரை ஜிஹாதியக் களத்திற்கு அழைத்துச் செல்லுமாறு உங்களிடம் சத்தியம் செய்து ஒப்படைக்கி றேன்."

இதைக் கேட்ட இமாமவர்களுக்கு கண்ணீர் பிரவாகம் எடுத்தது. மெய் சிலிர்த்து மூச்சு வாங்கியது. இமாமவர்கள் அதிர்ந்துபோனார்கள்.

பாப்ரி மஸ்ஜித் வழக்கை நடத்த சிறப்பு கமிட்டியை உருவாக்க வேண்டும் -செய்யத் சகாபுதீன்

Syed Shahabudeen
அயோத்தி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் எல்லா முஸ்லிம் அமைப்பினரும் கட்சிதாரர்களாக இணையவேண்டும் என ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவராத்தின் தலைவர் செய்யத் ஷஹாபுத்தீன் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட நடவடிக்கைகளுக்கும், பாப்ரி மஸ்ஜிதின் புனர் நிர்மாணத்திற்காகவும் சிறப்பு கமிட்டியை உருவாக்கவேண்டும் என பாப்ரி மஸ்ஜித் மூவ்மெண்ட் கோ ஆர்டினேசன் கமிட்டியின் கண்வீனருமான ஷஹாபுத்தீன் கோரினார்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் லக்னோவில் கூட்டிய முஸ்லிம் அமைப்பினர்களின் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில்தான் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

முன்னர் முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் ஒய்.ஹெச்.முச்சாலா வெளியிட்ட சிறிய அறிக்கை போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் ஷஹாபுத்தீன் புதிய அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தார்.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பை அதிர்ச்சியோடுதான் தேசம் கிரகித்தது. வழக்கின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு ஹாஷிம் அன்சாரி போன்ற மனுதாரர்களை கட்சிதாரராக சேர்த்து உ.பி.சுன்னி வக்ஃப் போர்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்ய தீர்மானித்துள்ளது.

சட்டரீதியான போராட்டத்தின் மூலம் அனுகூலமான தீர்ப்பிற்காக முஸ்லிம் சமூகம் சிறப்புக் கவனத்தை செலுத்தவேண்டும். சிறிய மற்றும் பெரிய அமைப்புகளும், தனிநபர்களும் வழக்கில் கட்சிதாரராக இணைய வேண்டும். முஸ்லிம்களோடு அனுதாபம் காட்டுபவர்களையும் கட்சிதாரராக இணைக்க வேண்டும்.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான மஸ்ஜிதுகள் மற்றும் தர்காக்கள் மீது உரிமை கோரும் சூழலில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என ஷஹாபுத்தீன் சுட்டிக்காட்டினார்.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கெதிராக சட்டரீதியான போராட்டம் நடத்த பத்துகோடி நிதியை உருவாக்க முஸ்லிம் தனியார் சட்டவாரியம் உதவவேண்டுமென அறிக்கையில் கூறிய ஷஹாபுத்தீன் அந்த நிதிக்காக பத்துலட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பேன் என தெரிவித்தார்.

மத அமைப்புகளுடன் வழக்கறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், மதசார்பற்ற-முற்போக்கு பிரிவினர்கள் ஆகியோரையும் இவ்வழக்கில் கட்சிதாரராக ஆக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளைக் குறித்து லக்னோ கூட்டத்தில் அபிப்ராயம் நிலவியதாக ஷஹாபுத்தீன் தெரிவித்தார்.

ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர், ஜம்யத்துல் உலமாயே ஹிந்த் தலைவர், அமீரே ஜமாஅத் ஷரீஅத் பீகார் மற்றும் ஒரிசா, அமீரே இமாரத்தே ஷரீஅத் கர்நாடகா அமீர், தாருல் உலூம் நத்வத்துல் உலமா தலைவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள், ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் ஆகியோர் லக்னோ கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

கோரிக்கைகளைபரிசீலிக்காமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை-கிலானி

 
Ali Shah Geelani
 கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுதல், அரசியல் கைதிகளை விடுதலைச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை பரிசீலிக்காமல் தாங்கள் இனி பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி தெரிவித்துள்ளார்.

தங்களுடைய தேவைகளை அங்கீகரிக்காத அரசு நியமிக்கும் எக்குழுவினருடனும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாரில்லை. 150 பேச்சுவார்த்தைகள் இதுவரை நடந்த பிறகும் பலன் கிடைக்கவில்லை.

மத்திய அரசு நியமித்துள்ள 3 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் எனவும், நடுவர் குழுவினருக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடாது என கஷ்மீர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கிலானி தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று 'கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி' என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.

மேலும் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது: சுதந்திரத்திற்காக நெடுங்காலம் போராடிய இந்தியர்களிடம் சுதந்திரம் என்றால் என்ன என்பதுக் குறித்து விளக்கவேண்டிய அவசியம் இல்லை. கஷ்மீரிகளும் தற்பொழுது இதே கோரிக்கையை முன்வைக்கின்றனர். கஷ்மீருக்கு சுதந்திரம் என்றால் கஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் என்றுதான் பொருள்.

வரலாற்றில் ஏராளமான சிரமங்களை தாண்டி வந்தவர்கள் கஷ்மீரிகள். ஆயிரக்கணக்கான கஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் சிறையிலடைக்கப்பட்டனர்.ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. மனிதத் தன்மையற்ற இந்த நடவடிக்கைகளா தேசிய விருப்பம்? என கிலானி கேட்கிறார்.

கஷ்மீரில் எங்குப் பார்த்தாலும் ராணுவ முகாம்கள்தான். ஒரு கஷ்மீரிக்கு அவனுடைய சொந்த மண்ணில் வீட்டிலிருந்து வெளியே இறங்கி நடப்பதற்கு வங்காளத்தைச் சார்ந்த, உ.பியைச் சார்ந்த, பீகாரைச் சார்ந்த ராணுவ வீரர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். பெண்களை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை ராணுவம் மேற்க்கொண்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த மோதலில் மட்டும் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் கைதுச் செய்யப்பட்டனர். 3000 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 8080 பேர் சிகிட்சைப் பெற்று வருகின்றனர். 30 தலைவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக இந்திய மக்கள் குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு கிலானி தெரிவித்தார்.

கஷ்மீர் மற்றும் குஜராத் பிரச்சனைகள் மூலம் இந்தியா ஜனநாயக மதசார்பற்ற நாடு என்றுக் கூற தகுதியில்லை - அருந்ததிராய்

டெல்லி,அக்23.டெல்லியில் நேற்று ‘கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கில் 'யாருக்கேனும் ’ஷு’வை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்துக் கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையை துவக்கினார் பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை போராளியுமான அருந்ததிராய்.

மேலும் அவர் கூறியதாவது: கஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி அல்ல. கஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஐ.நாவில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரி முஸ்லிம்களை கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்றுக் கூற உரிமையில்லை.

குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுக்கூற தகுதியில்லை. வலுவான ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீரி இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பார்த்து சல்யூட் செய்யாமலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் உரை நிகழ்த்தினார்.

இக்கருத்தரங்கில் புரட்சிக் கவிஞர் வரவரரவ், மனித உரிமை ஆர்வலர்கள் ஷேக் ஷவ்கத் ஹுசைன், அமீத் பட்டாச்சார்யா, என்.வேணு, மாலெம், நஜீப் முபாரகி, சுஜாதோ பத்ரா, பேராசிரியர்கள் எஸ்.எ.ஆர் கிலானி மற்றும் ஜி.என்.ஸாயிபாபா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

Friday, October 22, 2010

செச்னியாவில் போருக்குமுற்றுப்புள்ளி இல்லை!

குரோஸ்னி,அக்.20:2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செச்னியாவில் யுத்தம் முடிவுக்கு வந்ததாகவும், போராளிகளை அழித்தொழித்ததாகவும் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்த போதிலும், அங்கு சுதந்திர தாகத்திற்கான போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதைத்தான் அங்கு நிகழும்
சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

200 வருடங்களுக்கு மேலாக தொடரும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் செச்னியா என்ற தேசத்தை உருக்குலைப்பதற்கு உதவினாலும், முற்றிலும் அந்த தேசத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது என்பதைத்தான் அங்கு நடைப்பெற்றுள்ள புதிய தாக்குதல்
நமக்கு உணர்த்துகிறது.

செச்னியா பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நேற்று இரண்டு போலீசாரும், ஒரு அரசு அதிகாரியும் கொல்லப்பட்டனர்.

செச்னியாவின் போராட்டம் 400 வருடங்களுக்கு முன்பாக பின்னோக்கி சென்றாலும், புதிய போராட்டங்களின் துவக்கம் ரஷ்யாவின்
வீழ்ச்சிக்குப் பிறகுதான் ஆரம்பித்தன.

1991 ஆம் ஆண்டு வடக்கு காக்கஸஸின் எண்ணெய் வளமிக்க பகுதியான செச்னியா இதர ரஷ்ய மாநிலங்களைப் போலவேசுதந்திர நாடாக பிரகடனம் செய்தது.

சுதந்திர செச்னியாவின் முதல் அதிபராக ஜவ்ஹர் துதயேவ் பதவியேற்றார். ஆனால், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்ஸின் இதனைஅங்கீகரிக்க மறுத்துவிட்டார். 1994 ஆம் ஆண்டு ரஷ்ய ராணுவம் செச்னியாவிற்கு எதிராக ராணுவ நடவடிக்கையை துவக்கியது. ஆனால், மிகப்பெரிய ராணுவ பலமும், நவீன ஆயுத பலமும், விமானப்படையும் கொண்ட ரஷ்யாவால் செச்னிய மக்களின் சுதந்திரத்திற்கான வீரியமிக்க போராட்டத்திற்கு முன்பு மண்டியிட நேர்ந்தது.

1996 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ரஷ்ய ராணுவம் செச்னியாவிலிருந்து வாபஸ் பெற்றது. மிக முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு காக்கஸஸின் மீதான மோகத்தை ரஷ்யாவால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை.

1999 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி ரஷ்ய ராணுவம் செச்னியாவின் மீது தாக்குதலைத் துவக்கியது. அஸ்லன் மஸ்கடோவ், ஷாமில் பஷயேவ், அஹ்மத் பகயேவ் போன்ற போராளி தலைவர்களையெல்லாம் பல்வேறு காலக் கட்டங்களில் ரஷ்ய ராணுவமும், உளவுத்துறையும் சதித்திட்டம் தீட்டி கொலைச் செய்தன.

லட்சக்கணக்கான செச்னிய மக்களை கொன்றொழித்து விட்டு தனது ஆதிக்கத்தை செச்னியாவின் மீது நிலைநாட்டியது ரஷ்யா. ஏகாதிபத்திய வெறி கொண்ட ரஷ்யாவினால் அழிக்கப்பட்ட செச்னிய மக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியாகும்.

2009 ஆம் ஆண்டு ராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் பொம்மை ஆட்சியாளரான ரம்ஸான் கதிரோவ் அதிபராக நியமிக்கப்பட்டார். பின்னர் பெரியதொரு போராட்டம் ரஷ்யாவிற்கெதிராக நடத்தப்படாவிட்டாலும் கூட சிறிய அளவிலான தாக்குதல்கள் செச்னிய மக்களின் சுதந்திரதாகத்தை முடக்கிவிடவில்லை என்பதை தெளிவுப்படுத்துகின்றன.

மூன்றில் ஒரு பகுதி மக்களை கொன்றொழித்து மீதியுள்ளவர்களை நாட்டைவிட்டு துரத்திய ஜோசப் ஸ்டாலினால் சாதிக்க முடியாததா நவீன ரஷ்ய ஆட்சியாளர்களால் சாதிக்க முடியும்? என்றதொரு கேள்வி எழுகிறது.

இமாம் ஷாமில், இமாம் காஸிமுல்லாஹ் ஆகிய சான்றோர்களால் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட செச்னிய மக்களை அடிமைகளாக்கிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவு ஒருபோதும் பலிக்காது என்பதுதான் உண்மை.

Friday, October 15, 2010

ஈரான் அதிபர் நஜாதிற்கு லெபனானில் உற்சாக வரவேற்பு

செய்தி :  பாலைவனத்தூது

இஷ்ரத் ஜஹான் - லஷ்கர் தற்கொலைப்படை போராளியா?

அஹ்மதாபாத்தில் வைத்து குஜராத் போலீஸாரின் போலி என்கவுண்டரில் அநியாயமாக கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் இளம்பெண் லஷ்கரே-இ-தய்யிபா என்ற பாகிஸ்தான் போராளி இயக்கத்தின் தற்கொலைப்படை தீவிரவாதி என்ற பிரச்சாரம் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. இது போலி என்கவுண்டர் படுகொலைகளுக்கு எதிராக போராடிவரும் மனித உரிமைப் போராளிகளை ஆசுவாசப்படுத்தியுள்ள செய்தியாகும்.

அமெரிக்காவின் இரட்டை ஏஜண்டும், மும்பை தாக்குதலுக்கு சூத்திரதாரியாக கருதப்படுபவருமான டேவிட் கோல்மான் ஹெட்லிக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு ஏஜன்சி இஷ்ரத்தைக் குறித்து எவ்வித விமர்சனத்தையும் மேற்கொள்ளவில்லை.

லஷ்கர்-இ-தய்யிபா என்ற பாகிஸ்தான் போராளி இயக்கத்தின் தற்கொலைப்படை தீவிரவாதிதான் இஷ்ரத் ஜஹான் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சில அதிகாரிகளும், சில தேசிய ஊடகங்களும் பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர்.

மும்பையில் கல்ஸா கல்லூரியின் மாணவியான இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரையும் சுட்டுக் கொன்றது, சொஹ்ரபுத்தீன் ஷேக்-கவ்ஸர்பீ போலி என்கவுண்டர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வன்சாரா தலைமையிலான குஜராத் போலீஸ் கும்பலாகும்.

முதல்வர் நரேந்திர மோடியை கொல்லவந்த அவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்த பொழுது தற்காப்பிற்காக சுட்டதில் 4 பேரும் மரணமடைந்ததாக குஜராத் போலீஸ் அவதூறாக பிரச்சாரம் செய்தது.

சூழ்நிலை ஆதாரங்கள் அனைத்தும் குஜராத் போலீஸிற்கெதிராக இருந்தபொழுதிலும், தொடர் நடவடிக்கை எடுக்க நரேந்திர மோடியின் அரசு தயாரில்லை. இஷ்ரத்தின் உறவினர்கள் நீதிக்கேட்டு நீதிமன்றத்தை அணுகிய பொழுதுதான் அப்பாவிகளான 4 பேரை வன்சார தலைமையிலான குஜராத் போலீஸ் கும்பல் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தமாங் தனது 243 பக்க தீர்ப்பில், நரேந்திரமோடியிடம் நல்லபெயர் வாங்கி, பதவி உயர்வு பெறுவதற்காக போலீஸ் அதிகாரிகள் போலி என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றியிருப்பது வெட்ட வெளிச்சமானது.

வன்சாரா உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள்தான் இந்த அநியாய படுகொலைகளின் பின்னணியில் செயல்பட்டவர்கள்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக்குழு இவ்வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் இஷ்ரத் லஷ்கர்-இ-தய்யிபாவின் தற்கொலைப்படை தீவிரவாதி என்ற பொய்ப் பிரச்சாரம் கிளப்பப்பட்டது.

இஷ்ரத் ஜஹான் உட்பட 4 அப்பாவிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியவுடனேயே டெல்லியில் உள்ள சில முக்கிய புள்ளிகள் இதனைக் குறித்து அறிந்திருந்தனர் என்ற சந்தேகத்தை சில மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டிருந்தனர்.

ஹெட்லி தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் இஷ்ரத்தைக் குறித்து லஷ்கர்-இ-தய்யிபாவின் தற்கொலைப்படை தீவிரவாதி என்று குறிப்பிட்டதாக வெளியான பொய்ப் பிரச்சாரத்தின் பின்னணியிலும் இவர்கள்தான் செயல்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் தற்பொழுது வலுவடைந்துள்ளது.

பாரபட்சமற்ற, நீதியின் அடிப்படையிலான விசாரணையை மேற்கொண்டு 4 அப்பாவிகளை அநியாயமாக படுகொலைச் செய்த குற்றவாளிகளை கைதுச் செய்து நீதிபீடத்தின் முன் ஆஜராக்கி தண்டிக்கப்படுவதன் மூலமாகத்தான் இத்தகைய அநியாயப் படுகொலைகளும், பொய்ப் பிரச்சாரங்களும் முடிவுக்கு வரும்.
செய்தி : பாலைவனத்தூது

கஷ்மீரில் மீண்டு ஊரடங்கு உத்தரவு

ஸ்ரீநகர்,அக்.13:கஷ்மீரில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்யத் அலிஷா கிலானியின் தலைமையிலான ஹுர்ரியத் மாநாட்டுக்கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து திங்கள் கிழமை இரவில் ஸ்ரீநகர் உள்ளிட்ட சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிலானியை வீட்டுக் காவலில் வைத்திருக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்ரீநகரில் ஹைதர் புராவில் அமைந்துள்ள அவருடைய வீட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக ஹுர்ரியத் அறிவித்துள்ளது.

செய்தி : பாலைவனத் தூது

Wednesday, October 13, 2010

இஷ்ரத் ஜஹான் லஷ்கர் போராளி என்ற தகவல் என்.ஐ.ஏவின் குற்றப்பத்திரிகையில் இல்லை

புதுடெல்லி,அக்.12:மும்பை தாக்குதலில் சூத்திரதாரி எனக் கருதப்படும் அமெரிக்க குடிமகன் டேவிட் ஹெட்லியின் மீது தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹானைக் குறித்த விமர்சனங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை.

இஷ்ரத் ஜஹான், லஷ்கர்-இ-தய்யிபாவின் தற்கொலைப் படைகளில் ஒருவர் என இந்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் முன்பு கூறியிருந்தனர்.

இத்தகவலை, இந்த ஆண்டு ஜூனில் சிகாக்கோவிற்கு சென்ற என்.ஐ.ஏ மற்றும் சட்டத்துறையின் நான்கு உறுப்பினர்களிடம் ஹெட்லி தெரிவித்ததாக உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

ஆனால், இரண்டு ராணுவ மேஜர்கள் உள்ளிட்ட ஐந்து பாகிஸ்தானி குடிமகன்களுக்கெதிராக என்.ஐ.ஏ இண்டர்போலின் கைது வாரண்டை கோரியிருந்தது. ஆனால் என்.ஐ.ஏ ஹெட்லியின் மீதான குற்றப்பத்திரிகையில் இஷ்ரத்தைக் குறித்து மெளனம் சாதிக்கிறது.

செய்தி : பாலைவனத் தூது

ஆஃப்கானில் தாக்குதலை பலப்படுத்த இத்தாலி ஆலோசனை

ரோம்,அக்.12:நேட்டோ கூட்டணிப் படையில் தங்களுடைய 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆஃப்கானில் தாக்குதலை வலுப்படுத்த இத்தாலி ஆலோசித்து வருகிறது.

ஆஃப்கானில் தற்பொழுது 3500 இத்தாலிய ராணுவ வீரர்கள் உள்ளனர். இவர்களில் இதுவரை 34 பேர் கொல்லப்பட்டனர். ஆஃப்கானிஸ்தானில் இத்தாலிப் படையினர் சிறிய பீரங்கிகள் மூலம் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதற்கு காரணம், சிவிலியன்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்கத்தான் என இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் இக்னேஷியா லா ருஸ்ஸா தெரிவிக்கிறார். இத்தாலியின் 4 வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிறிய பீரங்கிகளை வைத்து நடத்தும் தாக்குதல் முறையை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த லா ருஸ்ஸா அதற்கு இத்தாலி பாராளுமன்ற கமிஷனின் அங்கீகாரம் தேவை எனவும் குறிப்பிட்டார்.

செய்தி : பாலைவனத் தூது

இந்தியாவுடனிருப்பதே கஷ்மீரிகளின் விருப்பம் - ஜம்மியத்துல் உலமா

தேவ்பந்த்,அக்12:கஷ்மீர் மக்களின் விருப்பம் இந்தியாவுடன் இணைந்திருப்பதே என ஜம்மியத்துல் உலமாயே ஹிந்து கூறியுள்ளது. கஷ்மீர் மக்களை இந்திய முஸ்லிம் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்றும் திட்டவட்டமாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

பிரபல இஸ்லாமிய மார்க்க கல்வி கலாசாசலையான தேவ்பந்த் தாருல் உலூமின் மார்க்க அறிஞர்கள் தலைமை வகிக்கும் அமைப்பான ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தின் கஷ்மீர் பிரச்னை குறித்த மாநாடு உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேவ்பாண்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அம்மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:
கஷ்மீரில் அமைதியைக் காக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. சட்டம்,ஒழுங்கை நிலைநாட்டத் தவறியதால்தான் நிலைமை இந்த அளவு மோசமானது. நாம் எல்லாம் இந்தியப் பிரஜைகள் என்ற வகையில் உங்களது (கஷ்மீர் மக்கள்) வருத்தங்களையும் கவலையையும் பகிர்ந்து கொள்கிறோம். உங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அதே வேளையில் கஷ்மீர் மக்களின் நலன் பிற இந்திய முஸ்லிம்களின் நலன்களில் இருந்து வேறுபட்டது என்று ஒருபோதும் கருதக் கூடாது. இந்திய முஸ்லிம்களிலிருந்து கஷ்மீர் முஸ்லிம்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்ட கஷ்மீர் மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

ராணுவ சிறப்பு அதிகார சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

மக்கள் வசிக்குப் பகுதிகளில் தடைகள் நீக்கப்பட வேண்டும்.

கஷ்மீரில் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்கவும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணமல் போனது குறித்து விசாரிக்கவும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரிய குற்றம் இழைக்காத போராட்டக்காரர்களை உடனடியாக விடுவித்துவிட வேண்டும். அதுபோல் போராட்டக்காரர்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு கஷ்மீர் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண மத்திய அரசுடன் பேச்சு நடத்த கஷ்மீர் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று ஜமியத் உலாமா ஹிந்த் அமைப்பின் செயலர் நியாஸ் அகமது பாரூக்கி கூறினார்.

இந்த மாநாட்டுக்கு, ஹுரியத் மாநாட்டு கட்சி அழைக்கப்படவில்லை. ஆனால் வேறு சில கஷ்மீர் மார்க்க அறிஞர்கள் பங்கேற்றதாக நியாஸ் அஹ்மத் தெரிவித்தார்.

கஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசும் கஷ்மீர் தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் பாரூக்கி.

கஷ்மீர் பிரச்னை தொடர்பாக 2-வது மாநாடு டெல்லியில் வரும் அக்டோபர் 31-ம் தேதி நடத்தப்படும். காஷ்மீர் பிரச்னையை ஆராய்ந்து வர எங்கள் அமைப்பின் சார்பில் பிரதிநிதிகள் குழு கஷ்மீருக்கு அனுப்பப்படும் என்றார் அவர்.

அதேவேளையில், ஜம்மியத்துல் உலமாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஹூர்ரியத் மாநாட்டு கட்சியின் தலைவரான மீர்வாய்ஸ் ஃபாரூக்.

ஜம்மியத்தின் தீர்மானம் குறித்து அவர் கூறியதாவது: "கஷ்மீர் பிரச்சனை என்பது ஹிந்து-முஸ்லிம் பிரச்சனையில்லை, அது ஒரு அரசியல் பிரச்சனை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் கஷ்மீரின் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது.

பலரின் தூண்டுதல் காரணமாகவே ஜம்மியத் இத்தகையதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

கஷ்மீர் விவகாரத்தில் அவர்கள் தலையிடாமலிருப்பதுதான் நல்லது." இவ்வாறு மீர்வாய்ஸ் ஃபாரூக் கூறியுள்ளார்.

செய்தி : பாலைவனத் தூது

கோவையில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு தடை: போலீஸ் எச்சரிக்கை


கோவை,அக்.12:ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவக்கப்பட்ட நாளான விஜயதசமி நாளில் (வரும் 17ம் தேதி), கோவை நகரில் தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு நடத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறிய போலீசார், அனுமதி மறுத்துள்ளனர்.

இந்நிலையில், தடையை மீறி அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஆயத்த அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் செல்வபுரம், பனைமரத்தூர் பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கு சீருடையுடன் அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக சொக்கம்புதூரைச் சேர்ந்த மோகன்ராஜ்(33), சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த செல்வம்(38), கிருஷ்ணமூர்த்தி(35) ஆகியோரை கைது செய்தனர். அணிவகுப்பு பயிற்சிக் குழுவுக்கு தலைமை வகித்ததாக சபரி, ஜோதிராமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இது குறித்து, மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் சீருடை அணிவகுப்பு நடத்தினால், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அனுமதி மறுத்துள்ளோம். இது குறித்த நிராகரிப்பு நோட்டீஸ், அந்த அமைப்பினருக்கு முறைப்படி தரப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தும், தடையை மீறி அணிவகுப்பு நடத்தும் முயற்சியாக சீருடையுடன் பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்தே, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நாளில் தடையை மீறி அணிவகுப்பு நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே வேளையில், சாலையில் அல்லாமல், ஏதாவது ஒரு வளாகத்துக்குள் அணிவகுப்பு நடத்திக்கொள்ள அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும். இவ்வாறு போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளதை, அந்த அமைப்பு கண்டித்துள்ளது. கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாளர் ஸ்ரீராமன் கூறுகையில், "சாலையில் 500 தொண்டர்களுடன் சீருடை அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டோம்; போலீசார் மறுத்துள்ளனர். சட்டப்படி அனுமதி பெற, சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளோம். கோவை நகரில் இதற்கு முன், தி.மு.க., - டி.ஒய்.எப்.ஐ., உள்ளிட்ட கட்சிகள், அமைப்பினரின் பேரணிகள் முக்கிய சாலைகளில் நடந்துள்ளன. இதனால், எங்களுக்கும் அனுமதி தர வேண்டுமென கோர்ட்டில் முறையிட்டு, முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்; பல்வேறு இடங்களுக்கும் சென்று, பயிற்சியில் ஈடுபடக்கூடாது என தொண்டர்களை மிரட்டி வருகின்றனர்; இதை கண்டிக்கிறோம்" என்றார்.

SOURCE : பாலைவனத் தூது

Dua For Gaza