உஸ்தாத் உமர் தில்மிஸானி கூறுகிறார்கள்: "இமாம் ஹஸனுல் பன்னா (றஹ்) அவர்கள், இந்தப் பரம்பரையினு டைய இளைஞர்களின் உள்ளங்களில் ஜிஹாதிய உணர்வை உயிர்ப்பித்திருந்தார்கள். அதனால், இமாமவர்களும் தாக்கமடைந்து இளைஞர்களும் தாக்கம் பெற்றிருந்தனர். அவர்களது பெற்றோர்களையும் அது பாதித்திருந்தது. அந்த உருவாக்கத்தின் உருக்கமான ஒரு நிகழ்வு இது. பலஸ்தீனப் போராட்டத்தில் இஹ்வானிய சகோதரர் ஒருவர் ஷஹீதா னார். இமாமவர்கள் அனுதாபம் தெரிவிப்ப தற்காக அந்த ஷஹீதின் தந்தையிடம் சென்றிருந்தார். எல்லோருக்கும் உருக்கமான பாட மொன்றை அது கற்றுக் கொடுத்தது. அந்தத் தந்தை இமாமவர்களிடம் சொன்னார்; "நீங்கள் இங்கு எனக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக வந்திருந்தால் நீங்களும் உங்களுடன் வந்திருப்பவர்களும் திரும்பிச் சென்று விடுங்கள். மாறாக, என்னை வாழ்த்துவதற்காக நீங்கள் வந் திருந்தால் உங்களையும் உங்களுடன் வந்திருப்பவர்களை யும் நான் வரவேற்கிறேன். நீங்கள்தான் எங்களுக்கு ஜிஹாதைக் கற்றுத் தந்தீர்கள். இவ்வுலகிலே அதற்குக் கிடைக்கும் கண்ணியம், அந்தஸ்து, மறுமையில் கிடைக்கும் மகத்தான கூலி என்பவற்றையும் விளங்கப்படுத்தினீர்கள். உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. நான் பலமடங்கு கூலிகளைப் பெற ஆசை கொண்டிருக்கி றேன். இதோ! என் இரண்டாவது மகன். இவரை ஜிஹாதியக் களத்திற்கு அழைத்துச் செல்லுமாறு உங்களிடம் சத்தியம் செய்து ஒப்படைக்கி றேன்." இதைக் கேட்ட இமாமவர்களுக்கு கண்ணீர் பிரவாகம் எடுத்தது. மெய் சிலிர்த்து மூச்சு வாங்கியது. இமாமவர்கள் அதிர்ந்துபோனார்கள். |
Saturday, October 23, 2010
ஒரு ஷஹீதினுடைய தந்தையின் அனுதாபம்
லேபிள்கள்:
இஸ்லாம்
0 கருத்துரைகள்:
Post a Comment