Wednesday, July 31, 2013

அத்வானி கூட்டத்திற்கு கட்டுப்பாடு - இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை!

 சேலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பங்கேற்கும் கூட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில் படுகொலை செய்யப் பட்ட பா.ஜ.க. செயலர் ஆடிட்டர் ரமேஷ் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க அத்வானி சேலம் வருகிறார். இக்கூட்டம் வரும் ஆக-1 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக, கூடுதல் கட்டுப்பாடு விதித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை, சேலம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத், நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் மனு வழங்கியுள்ளனர்.

போலி என்கவுண்டருக்கு சி.பி.ஐ விசாரணை தொடங்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்


டில்லி: போலி போலி என்கவுண்டருக்கு வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் இல்யாஸ் தும்பே அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

"2009 ஏப்ரல் 1 முதல் பிப்ரவரி 15 வரையிலும் காவல்துறை (Police), பாதுகாப்புத் துறை (Defense) மற்றும் துணை இராணுவத்தினரால் (Paramilitary Forces) நடத்தப்பட்ட என்கவுண்டர்களில் 555 வழக்குகள் போலி என்கவுண்டர்கள் என தேசிய மனித உரிமை கழகம் (NHRC) பதிவு செய்துள்ளாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிர்ச்சி மற்றும் அதிருப்தி வெளிக்காட்டியுள்ளது.

ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை வாஷிங்டனில் துவக்கம்!



2010-ஆம் ஆண்டு முடங்கிய ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க உள்ளது. அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நேற்று இரவு காலதாமதமாக துவங்கிய பேச்சுவார்த்தையின் விபரங்கள் இன்று வெளியாகும் என கருதப்படுகிறது.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை - ஐ.ஜி குற்றச்சாட்டு

லக்னோ: நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று உத்தரப்பிரதேச காவல்துறை முன்னாள் தலைவர் எஸ்.ஆர். தாராபுரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் நிலை என்னவாயிற்று என்பது கூட அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்றும் அப்படி காணாமல் போனவர்கள் காவல்துறையினர் ரகசிய பாதுகாப்பில் எடுக்கப்பட்டு குண்டுவெடிப்பு தொடர்பான விசயங்களில் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள் என்றார்.

கல்லூரியில் வெடிகுண்டு வீசி தாக்குதல்- ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் கைது!



கேரள மாநிலம் திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான ஏபிவிபி மாணவர் அமைப்பினர் நாட்டு வெடிக்குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
கேரளாவில் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவ அமைப்புகள் அரசியல் நடத்த கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Monday, July 29, 2013

நீதிக்காக போராட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்


சென்னை: SDPI கட்சி மத்திய சென்னை மாவட்டம் சார்பாக 27.7.2013 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: "கண்ணியமும்,புண்ணியமும் பொருந்திய ரமலான் மாதத்திலே 1432 ஆம் ஆண்டு அசத்தியத்திற்கும்,சத்தியத்திற்கும் தீர்ப்பு வழங்கிய நாளான பத்ரு போர்க்களம் நடந்த தினத்திலே நாம் சங்கமித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் !

NWF நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!


சேலம்: சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.

“ஹிந்து தேசியம்” என்று பேசுவது, தேசத்திற்கு எதிரானது - கட்ஜு

நாக்பூர்: முதலில் இந்தியர்கள் என்று நாம் ஒன்று பட வேண்டும். அதுதான், இந்திய தேசியவாதிகளின் அடையலாம். ஹிந்து, முஸ்லிம், சீக்கியம் மற்றும் கிறிஸ்துவம் என்று பேசுவது தேசியத்திற்கு எதிரானது என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா சேர்மன் மார்கண்டேய கட்ஜு கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது ஊடகங்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு கேட்டு கொள்வது என்னவென்றால் இந்திய தேசியவாதத்தை ஊக்குவிக்கவேண்டும். மராத்தி டெய்லி லோக்மாத் என்ற பத்திரிகை ஏற்பாடு செய்த விழாவில் “இதழியலின் சிறப்பும், சமய, சார்பன்மையை ஊக்குவிப்பதில் மீடியாவின் பங்கும்” என்ற தலைப்பல் சிறப்புரையாற்றினார்.

Saturday, July 27, 2013

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்சி!ஏராளமானோர் பங்கேற்பு!

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக்  தலைமை தாங்கினார்.  எஸ்.டிபி.ஐ நகர் பொருளாளர் சித்திக் அலி  வரவேற்புரையாற்றினார் .

  எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபூபக்கர் சாகிபு, ஜமாஅத் துணைத் தலைவர் அமீர் ஷாஜஹான், ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். ஜகுபர் சாதிக், டாக்டர் ஜவாஹிர் உசைன்,கீழக்கரை முஜீப்,இன்ஞினியர் கபீர்,கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாஹீம் (ஸ்டேஷன் மாஸ்டர் - ஓய்வு),

Wednesday, July 24, 2013

இராமநாதபுரத்தில் மசூதிக்கு தீ வைப்பு; முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

 இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாசல் ஒன்று பள்ளி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த (22/07/2013) திங்கள் இரவு சமூக விரோதிகள் சிலர் உள்ளே புகுந்து சிறுநீர் கழித்து, இருந்த தொப்பி உள்ளிட்ட ஆவணங்களை எரித்து, வராண்டா பகுதியில் இருந்து மின்விசிறி மற்றும் ஒலி பெருக்கியை சேதப்படுத்தி தமது மத துவேசத்தை அரங்கேற்றிச் சென்றுள்ளனர்.

புத்த கயாவில் வெடித்த குண்டுகள் குஜராத்தில் தயாரிக்கப்பட்டவை - அதிகாரிகள் உறுதி

கடந்த சிலவாரங்களுக்கு முன்னால் புத்தர் கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அங்குஅதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்தியன் முஜாஹிதீன்கள் இதை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தது.
 ஆனால் புத்தர் கோவிலில் வைக்கப்பட்ட  வெடிகுண்டுகள் அனைத்தும் குஜராத்தில் தயாரிக்கப்பட்டதுதான் என வழக்கை விசாரணை செய்துவரும் விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பா.ஜ.க பந்த்: இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்!


சென்னை: சேலத்தில் பா.ஜ.க வின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று (22.7.2013) தமிழகத்தில் முழு கடையடைப்புக்கு அக்கட்சி அழைப்பு விடுத்தது. பா.ஜ.க. நடத்திய இந்த பந்த் தொல்வியை தழுவியது என்றாலும் பல இடங்களில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதும், வணிக நிர்வனங்கள் மீதும் பா.ஜ.க வினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றம் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tuesday, July 23, 2013

பந்த் என்னும் பெயரில் பா.ஜ.க வினர் வன்முறையாட்டம்! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

சென்னை: பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் (52) சேலத்தில் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக சார்பாக இன்று (22.07.2013 ) தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பிற்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது. பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பந்தில் தமிழகம் முழுவதும் பெரும்பான்யான பகுதிகளில் வன்முறை வெடித்தது. பாஜகவின் வன்முறை நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Monday, July 22, 2013

குஜராத்தில் குறைந்துபோன மக்களின் வாங்கும் சக்தி! - அம்பலமாகும் மோடியின் மோசடி!

டெல்லி: குஜராத் மாநிலத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் மக்களின் செலவிடும் சக்தி குறைந்து போயுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் அனைத்து மாநில கிராமப் புற மற்றும் நகர்ப் புற மக்களின் செலவிடும் சக்தி தொடர்பாக நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைஷேசன் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.

1999-2000ம் ஆண்டு முதல் 2011-12ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக மோடியால் மோசடியாக கூறப்படும் குஜராத் பின் தங்கியே இருக்கிறது. தேசிய அளவிலான தனிநபர் நுகர்வு செலவு சதவீதத்தை விட மிகக் குறைவாகவே குஜராத்தின் தனிநபர் நுகர்வு செலவு இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் ஆந்திர மாநிலம் வளர்ச்சி கண்டிருக்கிறது.

புர்கா: பிரான்சில் தொடரும் போராட்டம்!

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது இரவும் வன்முறைகள் நடந்துள்ளன. பிரான்ஸின் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை- புர்கா அங்கி அணிவதற்கு உள்ள தடையை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன. கார்களும் பஸ் தரிப்பிடங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்துவருகின்றனர்.

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!


சென்னை: வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் ஜமாத்தார்களை ஒருங்கினைக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

‘ஹிந்துத்துவாவின் அடிப்படையில் நாட்டை வலுப்படுத்த போகிறோம்!’ - மோகன் பகவத்!

இந்துத்துவத்தின் அடிப்படையில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம் என்று அதன் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் சிராவண பெளர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறும்போது:
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) குறிக்கோள்கள், செயல்பாடுகள் குறித்து அறியாததால் அந்த இயக்கத்தைப் பற்றி பல காரணங்களுக்காக பல தவறான கருத்துகள் நிலவிவருகிறது.
சமூகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்து, இந்தியாவை வலுவுள்ள நாடாக உருவாக்கும் பெரும் கடமையில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருக்கிறது. இந்துத்துவ அடிப்படையில் வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகளின் நோக்கம்.

Wednesday, July 17, 2013

எகிப்து:முர்ஸி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு! - 7 பேர் பலி!

கெய்ரோ: எகிப்தில் பதவி விலக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த இரவு நடந்த மோதல்களில் கெய்ரோவில் 7 பேர் கொல்லப்பட்டிருக்கிறார். தலைநகரில் ஒரு முக்கிய வீதியில் போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரார்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.

இஷ்ரத்தின் பெயரை ஹெட்லி கூறவில்லை - என்.ஐ.ஏ!

புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் லஷ்கர் - இ - தய்யிபா போராளி இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற ஐ.பி மற்றும் குஜராத் போலீஸின் கூற்று பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.இஷ்ரத்தின் பெயரை ஹெட்லி கூறவில்லை என்று குறிப்பிட்டு என்.ஐ.ஏ, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.ஐ.பி இதே வாதத்தை முன்னர் கூறியபோதும் அதனை என்.ஐ.ஏ மறுத்திருந்தது.

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு: அமித் ஷா சிக்குகிறார்! புதிய ஆதாரங்களுடன் சி.பி.ஐ!

புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் உள்ளிட நான்கு அப்பாவிகள் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியின் நம்பிக்கைக்குரியவருமான அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை சி.பி.ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கு தொடர்பாகவும், வழக்கை திசை திருப்பவும் அமித் ஷா, குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 2 பென் ட்ரைவ்களை சி.பி.ஐ குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் அளித்த புகாரில் ப்ரஸ் கவுன்சில் நடவடிக்கை! - ஐ.பி, என். ஐ.ஏவுக்கு நோட்டீஸ்!

புதுடெல்லி: நற்பெயரை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து 10 நாளிதழ்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் ஐ.பி மற்றும் என்.ஐ.ஏவுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.நேற்று டெல்லியில் நடந்த அமர்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் வாதம் கேட்டபிறகு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

தாங்கள் செய்தி வெளியிட்டது ஐ.பி அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் என்று சண்டே கார்டியன், டெக்கான் க்ரோனிக்கிள் ஆகிய பத்திரிகைகளும், என்.ஐ.ஏவிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதாக பயனீர் பத்திரிகையும் விளக்கம் அளித்ததை தொடர்ந்து மத்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையிலான ப்ரஸ் கவுன்சில் உத்தரவிட்டது. ஐந்து பத்திரிகைகளுக்கு எதிரான புகாரில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஆதரவான தீர்மானத்தை ப்ரஸ் கவுன்சில் எடுத்தது.எதிர்காலத்தில் இத்தகைய செய்திகளை வெளியிடக்கூடாது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ், இன்குலாப்(உருது), தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நவபாரத் டைம்ஸ்(ஹிந்தி), ஏசியன் ஏஜ் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிரான புகாரில் தீர்ப்பளித்து ப்ரஸ் கவுன்சில் உத்தரவிட்டது.

3.3 கோடி ரூபாய் பள்ளிக்கூட சாதனங்களை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்!

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ திட்டத்தில் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூல் கிட்டுக்களை (பள்ளிக்கூட சாதனங்கள்) வழங்கியுள்ளது. மொத்தம் 1,16, 595 ஸ்கூல் கிட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட வர்ணமயமான பேரணியுடன் இந்நிகழ்ச்சி துவங்கியது.கல்வி சர்வே, ஸ்கூல் கிட்டுகள் விநியோகம், மாணவர்க-பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு, சிறந்த மாணவர்களை ஊக்குவித்தல், பாதியில் படிப்பை நிறுத்திய மாணவர்களை மீண்டும் தேடிப்பிடித்து பள்ளியில் சேர்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் இந்த ஸ்கூல் சலோ பிரச்சாரத்தின் போது நடந்தேறின.ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உ.பி, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், மணிப்பூர், மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம், மஹராஷ்ட்ரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 15 மாநிலங்களில் ஸ்கூல் சலோ நிகழ்ச்சிகள் நடந்தன.

Monday, July 15, 2013

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி : இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ மற்றும் ஐபி-க்கு இடையே நடைபெறும் மோதலில் புதிய திருப்பமாக நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பை 26/11 தாக்குதல் ஆகியவற்றை இந்திய அரசே நடத்தியது என்று சிபிஐ அதிகாரி தெரிவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அரசின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சகத்தின் செயலர் மணி, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதலும் இந்திய அரசாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அஸ்ஸாமில் ரிஹாபின் 6-வது கட்ட நிவாரண பணிகள் துவக்கம்!

பொங்கைகான்:அஸ்ஸாமில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் துவக்கியுள்ளது. ரிஹாபின் 5-வது கட்ட நிவாரண பணிகளின் வருடாந்திர அறிக்கையை(2012-13) பொங்கைகான் மாவட்ட துயர்துடைப்பு துறை ப்ரொஜக்ட் ஆஃபீஸர் பங்கஜ் சவுத்ரியிடம் ஒப்படைத்துவிட்டு ரிஹாபின் சேர்மன் இ.அபூபக்கர் ஸாஹிப் 6-வது கட்டமாக இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை துவக்கி வைத்தார்.

பிரிட்டிஷ் படையில் தற்கொலை செய்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


பிரிட்டன் படையில் தற்கொலை செய்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பிபிசியின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சியில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது ஆப்கான் போரில் இறக்கும் பிரிட்டிஷ் வீரர்களின் எண்ணிக்கையை விட, தற்கொலை செய்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்- மாயாவதி

உ.பி யில் சாதி ரீதியான கூட்டம், ஊர்வலங்களுக்கு கோர்ட்டு தடை விதிக்கும்போது, ஏன் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளுக்கு தடை விதிக்கக்கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய்; ‘மாயாவதி ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இதனை மத்திய அரசு செய்ய தவறினால் மாயாவதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும்.

மோடியை கைது செய்ய கோரிக்கை மனு!

அண்மையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த நேர்காணல் ஒன்றில், குஜராத் 2002 இனப்படுகொலைகளை தன் வாகனத்தில் சிக்கிய நாய்க்குட்டி என்று ஒப்பிட்டிருந்தார்.
மோடியின் இந்த குரூரப் பேச்சுக்கு நாடெங்கும் எதிர்ப்பலைகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், மோடியை கைது செய்ய க் கோரி, ஹைதராபாத்தின் சந்தோஷ் நகர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் குலாம் ரப்பானி இருபக்க அளவில் மனு எழுதி முறையிட்டுள்ளார். 'இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்துஉள்நோக்கத்தில் நாய்க் குட்டி என்று கூறி இழிவுப்படுத்தும் விதமாக மோடி பேசியுள்ளார். இந்த[ பேச்சு இந்து - முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளதால் மோடியை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குலாம் ரப்பானி கூறியுள்ளார்.

கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு: எஸ்.பி ஈஸ்வரன் பதவியிறக்கம்!

நெல்லை: நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO). என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால், இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங், டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி கொலை வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Sunday, July 14, 2013

வயோதிகர்களுக்கு, நாள்பட்ட நோயாளிகளுக்கு ஹஜ், உம்ரா விசா அனுமதி இல்லை!

ரியாத்: வயோதிகர்களுக்கோ அல்லது நாள்பட்ட நோயாளிகளுக்கோ ஹஜ், உம்ரா விசாவிற்கு அனுமதி இல்லை என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது.
சவூதி உள்ளிட்ட வளைகுடாவில் பரவி வரும் மெர்ஸ் என்ற தொற்றுக் கிருமியால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் சவூதியில் கடந்த செப்டம்பர் முதல் இந்த கிறுமிக்கு 38 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 77 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே இவ்வருட உம்ரா ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகளுக்கு விசா அனுமதி வழங்குவதில் சில கடடுப்பாடுகளை சவூதி அரசு விதித்துள்ளது.

சிறையில் அப்பாவி முஸ்லிம்கள் - சிறுபான்மைத்துறை அமைச்சர் கோரிக்கை

டெல்லி - தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு படைப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரஹ்மான் கான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரசாங்கம் இவ்வாறான சிறப்புப்பிரிவினை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டியுள்ள சிறுபான்மைத் துறை அமைச்சர் ரஹ்மான் கான், இது சம்பந்தமாக பிரதமருக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதுவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு சிறப்புப் பிரிவு அமைத்து விசாரணை நடத்துவது சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறுவதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

குஜராத் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் மோடியின் பேச்சு: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

 முஸ்லிம் இனப்படுகொலை புகழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வெளிநாட்டு செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸுக்கு அளித்த நேர்காணலில் குஜராத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்ததை நியாயப்படுத்தியிருக்கின்றார். நரேந்திர மோடியின் இக்கருத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெவித்துள்ளது.

இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கடந்த 2002 ஆம் ஆண்டில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த கலவரத்தை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ குஜராத முதல்வர் நரேந்திர மோடி எவ்வித முயற்சி எதுவும் எடுக்கவில்லை, மாறாக காவல் துறை அதிகாரிகளுக்கு "ஹிந்துக்களின் கோபத்தை வெளிப்படுத்த விடுங்கள்" என்று ஆணை பிறப்பித்து படுகொலை நடத்த ஊக்கப்படுத்தினார்.

புத்த கயா குண்டுவெடிப்பு - புத்த மத துறவிகள் உடந்தையா?

பீகாரில் உள்ள மகாபோதி புத்த கோவிலில் கடந்த வாரம் 9 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் இரு புத்த மத துறவிகள் காயம் அடைந்தனர். புத்த கோவிலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு  தாங்கள் தான் நடத்தியதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பு டுவிட்டரில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின.
புத்த கோவில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப் பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பினர் கோவில்களில் வைக்கப் பட்டுள்ள சி சி டி வி கேமராவில் பதிவான காட்சிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களின் முகம் பதிவாகி இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையைத் துவக்கினர்.

Thursday, July 11, 2013

தக்வாவை குறிவைப்போம்! - A.S.இஸ்மாயில், மாநில தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட்.


அல்லாஹுவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்
தக்வாவை குறிவைப்போம் !

வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது.

மகத்துவம் வாய்ந்த அல்லாஹ் ஏற்படுத்திய ரமலான் மாத பயிற்சி பாசறையில் முகாமில் கலந்துகொள்வதற்கு அறிவார்ந்த வழிகள், ஒழுக்கம் நெறிகள் நிறைந்த, விஞ்ஞானப்பூர்வமான விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளான். நாம் நோன்பின் (பயிற்சி முகாமின்) விதிமுறைகளை சரியாக பேணவேண்டும்.

ரமலான் எதிர்பார்க்கும் இலட்சியம்!


'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படவேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்கவேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமலான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீளவேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

Monday, July 8, 2013

ஐ.பி மீது விசாரணை தொடர்ந்தால் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்கமாட்டோம்! - ஐ.பி மிரட்டல்

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில் புலனாய்வுத் துறை (ஐ.பி) சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் மீதான விசாரணை தொடர்ந்தால் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்கமாட்டோம் என்று இண்டலிஜன்ஸ் பீரோ மிரட்டல் விடுத்துள்ளது.
ராஜேந்தர் குமாரை கைது செய்தால் எதிர்காலத்தில் தீவிரவாத எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஐ.பி இயக்குநர் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளார்.

காவிரி கூட்டு குடிநீர் பைப்களை சீர் செய்யவும்,குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தவும் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!


கடும் வறட்சி நிலவுவதால் கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை இல்லை. ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை போன்ற நகராட்சி பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் பாதியளவே சப்ளை செய்யப்படுகிறது.சில நேரங்களில் முற்றிலுமாக விநியோகம் இல்லை அதனால் பெரும்பாலான மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் கீழக்கரை உள்ளிட்ட நகராட்சிகளில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

மேற்கத்திய நாடுகள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜன்சியின் படுக்கையறை பங்காளிகள்! - ஸ்நோடன்

தற்போது புகார் கூறிக்கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்துதான் அமெரிக்கா தனது உளவு வேலைகளை மேற்கொண்டது என்று அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பணியாளர் எட்வர்ட் ஸ்நோடென் கூறியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு ஏஜன்சியான என்.எஸ்.ஏ, பல்வேறு நாடுகளின் சைபர், டெலிகம்யூனிகேஷன் தகவல்களை திருடியது குறித்த விபரங்களை வெளியிடும் முன்பு ஸ்நோடன் அளித்த நேர்முகத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற புனித ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி!

மலேசிய இந்திய முஸ்லிம் மதரசா பேரவை (MIM) சார்பாக மலேசிய தலைநகர் கோலாலும்பூரில் நேற்று (6/7/13) "புனித ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி" நடைபெற்றது.

Saturday, July 6, 2013

ஜனாதிபதி முர்ஸி வெளியேற்றம் : அரபுலக ஜனநாயகத்திற்கு பின்னடைவு! - பாப்புலர் ஃப்ரண்ட்

எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்ட எகிப்து ஜனாதிபதியை இராணுவத்தைக் கொண்டு வெளியேற்றியது மிகவும் கவலைக்குரியது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தெவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில் "ஹாஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்டதிலிருந்து, அதிகாரத்தை மோசமான முறையில் தவறவிட்ட முபாரக்கின் விசுவாசிகளான இராணுவ தலைவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டமிட்ட சதி இது என்பதே உண்மை. ஜனாதிபதி முஹம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்ததும், அரசியலமைப்பை இடைநீக்கம் செய்ததும் எகிப்திற்கு மட்டுமல்ல அரபுலக ஜனநாயக முறைக்கே பின்னடைவாக அமைந்துள்ளது.

Friday, July 5, 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர்: CBI க்கு பாப்புலர் ஃப்ரண்ட் வாழ்த்து

 இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேருடைய போலி என்கவுண்டர் சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொண்டுவந்த சிபிஐக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



முஹம்மது முர்ஸி அவர்கள் பற்றி............................!

1.அரபுலகிலேயே தேர்தல் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.

2.இவர் இன்றைய அரபுலகில் சாதாரன குடிமானாக இருந்து அதிபராக பொறுப்புக்கு வந்த முதலாமர்.

3.இன்றைய அரபுலகில் முழு குர்ஆனையும் மனனம் செய்த முதல் அதிபராவார்.

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு : கூட்டமைப்பினர் கர்நாடக முதலமைச்சரிடம் கோரிக்கை


கர்நாடகா : முதல்வர் சித்தாரமையாவை இன்று (04.07.2013) தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகள் முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி பெங்களூர் மல்லேசுவரத்தில் நடைபெற்ற குண்டு வெடுப்பு வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 15 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பாவிகள். இந்த வழக்கிற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்நோக்கத்துடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை பல உண்மை அறியும் குழுக்களும் தெளிவுபடுத்தியுள்ளன. கைது செய்யப்பட்ட இளைஞர்களில் கிச்சான் புகாரி என்ற இளைஞர் உட்பட பலர் போலீஸ் காவலில் கடும் சித்ரவதைக்கும், தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டை ஏற்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

Thursday, July 4, 2013

2013 ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை திட்டம் அறிவித்தது பாப்புலர் ஃப்ரண்ட்


புதுடெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற "பள்ளி செல்வோம்" பிரச்சாரத்தின் இறுதியாக பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தடையில்லாமல் தொடர்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது..

2013-2014 வருடத்தில் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து மூன்றுவருடமாக பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படுத்தி வருகிறது.

இஷ்ரத் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர் போலியானது! சிபிஐ

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பது அம்மாநில போலீசாரும் ஐ.பி யும் இணைந்து நடத்திய ‘போலி என்கவுன்ட்டர்’ நடவடிக்கை என்று
சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து: முஹம்மது முர்ஸியை ராணுவம் ஆட்சியில் இருந்து நீக்கியது!

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்அதிபர் முஹம்மமது முர்ஸி தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
30 வருடங்கள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் அராஜகமான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தின் இறுதியில் எகிப்தில் முதன் முறையாக நடந்த ஜனநாயகரீதியான தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்ற முஹம்மது முர்ஸியை அந்நாட்டின் ராணுவம் ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது.

Wednesday, July 3, 2013

உத்தரகண்ட் நிவாரண நிதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ரூபாய் 10 லட்சம் உதவி

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர் இலட்சகணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீப் மற்றும் நிர்வாகிகள் உத்தரகண்ட் மாநிலத்திற்கு சென்று அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டேராடூன் மற்றும் ரிஷிகேஷ் பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.

புதுடெல்லியில் மரணத்தண்டனைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தர்ணா!


புதுடெல்லி : மரணத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரி சித்தரவதைக்கு ஆளானோருக்கு சர்வதேச ஆதரவு தினமான ஜூன் 26 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தர்ணா போராட்டம் நடத்தியது.

தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் பேசுகையில், ’பல வளர்ச்சியடைந்த நாடுகளும் மரணத்தண்டனையை ரத்துச் செய்துள்ளன.இந்தியாவில் மரணத் தண்டனையின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

Tuesday, July 2, 2013

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா

புதுவலசையில் அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளில்  கடந்த 2012-2013 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில்  சாதனை படித்த மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்று கிழமை (30.06.2013) மாலை 5 மணியளவில் நமதூர் மதரஸா வளாகத்தில் சிறப்பாக நடந்தது. மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதல் இவ்விழாவை முஸ்லிம் ஜமாஅத் தர்ம பரிபாலன சபையுடன், EPMA மற்றும் தாசின் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றன. அதே போல் இந்த ஆண்டும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

Monday, July 1, 2013

தலைவலி மற்றும் நீரிழிவு நோய்க்கான பிரபல மருந்துகளுக்கு அரசு தடை!

தலைவலிக்கு பயன்படுத்தும் அனால்ஜின் மாத்திரையால், உடலில் வெள்ளை அணுக்கள் குறைவது கண்டறியப்பட்டது. இதேபோல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் பியோகி லிடாஜோன் மாத்திரையால் வயிற்றில் புற்றுநோய் கிருமி ஏற்படுவது தெரிய வந்தது. இந்த மருந்தும் அதன் கூட்டு மருந்துகளும், நம் நாட்டில் ஆண்டிற்கு ரூ.600 கோடி மதிப்பிற்கு விற்பனையாகி வரும் சூழ்நிலையில் இந்த மருந்துகளுக்கு தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

மதுரா தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக வி.எச்.பி தலைவர் கைது

சென்ற மாதம் மதுராவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெகதிஷ் அனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 30 அன்று மதுராவில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் கோசிகலன் பகுதியில் 4 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.
இக்குண்டுகளை தயாரித்தது மற்றும் குண்டுகளை வைத்ததாக மதுரா விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெகதிஷ் அனந்த் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dua For Gaza