ரியாத்: வயோதிகர்களுக்கோ அல்லது நாள்பட்ட நோயாளிகளுக்கோ ஹஜ், உம்ரா விசாவிற்கு அனுமதி இல்லை என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது.
சவூதி உள்ளிட்ட வளைகுடாவில் பரவி வரும் மெர்ஸ் என்ற தொற்றுக் கிருமியால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் சவூதியில் கடந்த செப்டம்பர் முதல் இந்த கிறுமிக்கு 38 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 77 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே இவ்வருட உம்ரா ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகளுக்கு விசா அனுமதி வழங்குவதில் சில கடடுப்பாடுகளை சவூதி அரசு விதித்துள்ளது.
இதுகுறித்து நேற்று முன் தினம் சவூதி சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வருடம் ஹஜ், உம்ரா பயணம் மேற்கொள்ளவுள்ளவர்களுக்கு விசா அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. 'மெர்ஸ்' தொற்றுக் கிறுமியிலிருந்து பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டமான இடங்களுக்கு வரும் மக்களை இந்த நோய்த்தொற்று தாக்காதிருக்கும் வண்ணம், முகத்திரை (mask) அணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
மேலும் பொதுமக்களின் உடல் பாதுகாப்பு நலன் கருதி நீண்டகாலம் நோயினால் அவதிப்ப)டுபவர்கள், சர்கரை நோய், இருதய நோய், கிட்னி உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இவ்வருடம் விசா அனுமதி இல்லை என்றும், இவர்கள் தங்களுடைய புனிதப் பயணத்தைத் தள்ளிப்போடும்படியும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
மேலும் ஹஜ், உம்ரா பயணம் மேற்கொள்பவர்கள் தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும், இருமினாலோ தும்மினாலோ மறைத்துக் கொண்டும், தனிப்பட்ட முறையிலும் தங்களுடைய சுகாதாரத்தை காத்துக் கொள்ளும்படியும் அரசு யாத்ரிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் உணவு உண்பதிலும் வழங்குவதிலும் யாத்ரீகர்கள் மிகுந்த கவனம் மேற்கொள்ளுமாறும் சவூதி சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Info : inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment