Sunday, July 14, 2013

புத்த கயா குண்டுவெடிப்பு - புத்த மத துறவிகள் உடந்தையா?

பீகாரில் உள்ள மகாபோதி புத்த கோவிலில் கடந்த வாரம் 9 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் இரு புத்த மத துறவிகள் காயம் அடைந்தனர். புத்த கோவிலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு  தாங்கள் தான் நடத்தியதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பு டுவிட்டரில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின.
புத்த கோவில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப் பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பினர் கோவில்களில் வைக்கப் பட்டுள்ள சி சி டி வி கேமராவில் பதிவான காட்சிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களின் முகம் பதிவாகி இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையைத் துவக்கினர்.

வினோத் மிஸ்ரி உள்ளிட்ட 4 பேரைப் பிடித்து விசாரணை செய்து வந்தனர். இது வரையில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.
இது வரை நடைபெற்ற குண்டுவெடிப்புகள் போலல்லாது சேதம் குறைவாக இருக்கும் வகையில் சக்தி குறைந்த குண்டுகள் வெடிக்கப் பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு குண்டு 20 அடி உயரமுள்ள புத்தர் சிலையில் வைக்கப் பட்டுள்ளது. வெளியில் இருந்து உள்ளே வந்து குண்டு வைப்பவர்களால் இந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகச் செயல்பட முடியாது. கோவில் ஊழியர்கள் அல்லது புத்த மத துறவிகள் உதவியில்லாமல் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்க முடியாது என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
புத்தர் கோவிலை நிர்வகிப்பது யார் என்பதில் புத்த மத துறவிகளிடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் இதன் காரணமாகவும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்து இருக்கக் கூடும் என்ற கோணத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Info: inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza