சேலம்: சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்கள் பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 26.07.2013 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சேலம் கோட்டை முஸ்லிம் கல்வி சங்கத்தில் (ஸ்டோக்ஸ் ஹால்) வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரி S.சஃபிய்யா, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் சகோதரி Dr.வாஹிதா பானு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பல நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி
0 கருத்துரைகள்:
Post a Comment