Monday, July 15, 2013

அஸ்ஸாமில் ரிஹாபின் 6-வது கட்ட நிவாரண பணிகள் துவக்கம்!

பொங்கைகான்:அஸ்ஸாமில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் துவக்கியுள்ளது. ரிஹாபின் 5-வது கட்ட நிவாரண பணிகளின் வருடாந்திர அறிக்கையை(2012-13) பொங்கைகான் மாவட்ட துயர்துடைப்பு துறை ப்ரொஜக்ட் ஆஃபீஸர் பங்கஜ் சவுத்ரியிடம் ஒப்படைத்துவிட்டு ரிஹாபின் சேர்மன் இ.அபூபக்கர் ஸாஹிப் 6-வது கட்டமாக இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை துவக்கி வைத்தார்.


கொக்ராஜர், பாடலிமாரி, சிரஞ்ச், ஜராகுரி ஆகிய நான்கு கிராமங்கள் ஐந்தாவது கட்ட நிவாரண பணிகளுக்கான முக்கிய பயனீட்டாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தற்போது ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் செயல் மண்டலங்கள் டெல்லி, ராஜஸ்தான், உ.பி, பீகார், அஸ்ஸாம், மேற்குவங்காளம், மணிப்பூர், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய ஒன்பது மாநிலங்களில் இயங்கி வருகின்றன. இயற்கை சீற்றம், கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை முன்மாதிரி கிராமங்களாக மாற்றுவதுதான் ரிஹாபின் நோக்கமாகும். 6-வது கட்ட நிவாரண பணிகளின் துவக்க நிகழ்ச்சியில் பங்கஜ் சவுத்ரி, அப்துல் பஷீர், ஃபெரூஜா பீகம் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ரிஹாபின் பொதுச் செயலாளர் அஃப்ஸல் சந்திரகாந்தி, செயலாளர்களான ஹாஃபிஸ் ராஷித் அஹ்மத் சவுத்ரி, ரெமீஸ் முஹம்மது ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza